Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Milton பகுதியில் வாகன விபத்து: படுகாயமடைந்த பெண் ஆகாய மார்க்கமாக மீட்பு

Posted: 13 Sep 2015 07:13 PM PDT

ol9

ol9Milton பகுதியில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து அங்கு சுயநினைவின்றி கிடந்த ஒன்ராறியோவைச் சேர்ந்த 17 வயதான சிறுமி உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Milton 5th lineஇன் 20 Sideroad eastஇல் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
அந்த வழியாக வாகனம் ஒன்றில் சென்றுகொண்டிந்த தந்தை ஒருவரும் இரண்டு மகன்களும், வீதி ஓரத்தில் வாகனம் ஒன்று கவிழ்ந்து கிடந்ததை அவதானித்ததை அடுத்து, தமது வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று பார்த போது, அங்கே பெண் ஒருவர் கவிழ்ந்த வாகனத்தினுள் சிக்குண்டு உணர்விழந்து கிடப்பதை கண்டுள்ளனர்.ol9

அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஹலட்டன் பிராந்திய காவல்த்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் அவசர மருத்துவ பிரிவினர், வாகனத்தினை வெட்டி காயமடைந்த பெண்ணை வெளியே எடுத்து, உலங்குவானூர்தி மூலம் ரொரன்ரோ தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து சம்பவித்த வேளையில் குறித்த அந்த வீதிப் பகுதி ஈரமாக இருந்துள்ள போதிலும், விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை

The post Milton பகுதியில் வாகன விபத்து: படுகாயமடைந்த பெண் ஆகாய மார்க்கமாக மீட்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோ மத்திய பகுதியில் கத்திக் குத்து: மூவர் மருத்துவமனையில்

Posted: 13 Sep 2015 07:08 PM PDT

iol

iolரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று ஆண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

King street மற்றும் Brant street பகுதியில் அமைந்துள்ள இரவுக் கேளிக்கை விடுதி ஒன்றில் இன்று அதிகாலை 2.40 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கேளிக்கை விடுதியினுள் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே கத்திக் குத்தில் முடிவடைந்துள்ளதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த அவசர மருத்துவ பிரிவினர் காயடடைந்த மூவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், ஒருவர் உயிராபத்தான நிலையில் இருப்பதாகவும், மற்றைய இருவருக்கும் உயிராபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

iol

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்ளும், கத்தியால் குத்தியவர்களும் ஒருவரை ஒருவர் முன்னரே தெரிந்தவர்களா என்ப விபரங்கள் எவையும் உடனடியாக தெரியவரவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், இந்த சம்பவத்தினை நேரில் பார்த்த சாட்சிகள் அல்லது தகவல் அறிந்தோரை தாம் சந்திக்க விரும்புவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post ரொரன்ரோ மத்திய பகுதியில் கத்திக் குத்து: மூவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரம்டனில் கத்திச் சண்டை: இருவர் கைது

Posted: 13 Sep 2015 02:59 PM PDT

l

lநேற்று இரவு பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற கத்திச் சண்டை தொடர்பில் 19 வயது இளைஞர் ஒருவரும், 16 வயது சிறுவன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Queen Street East மற்றும் Dixie வீதிப் பகுதியில் அமைந்துள்ள Bramalea City Centreஇல் நேற்று இரவு 7.25 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்த்துறையினர், அங்கு 19 வயது இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டு, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் தேடுதல்களை மேற்கொண்ட காவல்த்துறையினர், கத்திக் குத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து சிறிது தொலைவில், சம்பவத்துடன் தொடர்புடைய 16 வயது சிறுவனை கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளை அடுத்து, கைது செய்யப்பட்ட சிறுவன் மட்டுமல்லாது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post பிரம்டனில் கத்திச் சண்டை: இருவர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

$10.5M உதவி: சிரிய அகதிகளுக்காக அறிவித்தது ஒன்ராறியோ

Posted: 13 Sep 2015 10:59 AM PDT

n

nசிரிய நாட்டு அகதிகளுக்கான உதவி நிதியாக 10.5 மில்லியன் டொலர்களை ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை நேற்று வெறியிட்டுள்ள ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் பத்தாயிரம் சிரிய அகதிகளை ஒன்ராறியோவில் குடியமர்த்த தாம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் வெளிநாட்டு அகதிகளை குடியமர்த்தும் அதிகாரம் மாநில அரசாங்கங்களிடம் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.

அகதிகளை பொறுப்பெடுக்கும் விடயத்தில் மாநில அரசாங்கம் நேரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்ற போதிலும், அகதிகளை உள்வாங்கும் விடயத்தினை துரிதப்படுத்துமாறு மத்திய அரசாங்கத்திற்கு தாம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும அவர் குறிபபிட்டுள்ளார்.

தமது அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள உதவி நிதியில் இரண்டு மில்லியன் டொலர்கள், உடனடியாக கனடாவுக்கு வெளியே அல்லலுறும் சிரிய அகதிகளின் நிவாரண உதவிக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும், மீதி தொகை எதிர்வரும் இரண்டரை வருடங்களில் ஒன்ராறியோவில் குடியேற வரும் சிரிய அகதிகளின் தேவைகளுக்கான பயன்படுத்தப்படும் எனவும் அவர் விபரித்துள்ளார்.

தம்மால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிதி தனி நபர்கள், நம்பிக்கை அடிப்படையிலான குழுக்கள், சமூக அமைப்புகளின் ஊடாக பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.n

புதிய குடிவரவாளர்கள் மற்றும் அகதிகளை தனிப்பட்ட ரீதியில் பொறுப்பேற்க தயாராக உள்ள அமைப்புகளின் தலைவர்களுடன் நேற்று நடாத்தப்பட்ட கலந்துரையாடலை தொடர்ந்தே ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் இந்த நிதி உதவி அறிவிப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post $10.5M உதவி: சிரிய அகதிகளுக்காக அறிவித்தது ஒன்ராறியோ appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரிய அகதிகளுக்காக மேலும் $100M: கனடா

Posted: 13 Sep 2015 10:36 AM PDT

Canada-Syria

Canada-Syriaஅகதி முகாம்களில் அல்லலுளும் சிரிய நாட்டு அகதிகளுக்காக மேலும் 100 மில்லியன் டொலர்களை கனேடிய அரசாங்கம் வழங்கும் என பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அறிவித்துள்ளார்.

சிரிய நாட்டு அகதிகளுக்கு கனடா அதிக அக்கறை காட்டவேண்டும் என்ற அழுத்தங்கள் கடந்த இரண்டு வாரங்களாக பிரயோகிக்கப்பட்டுவந்த நிலையில், மத்திய அரசாங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அத்துடன் சிரிய அகதிகளை கனடாவுக்குள் கொண்டுவரும் நடைமுறைகளில் எதிர்நோக்கப்படும் தாமதங்களை களைந்து, அவற்றை விரைவு படுத்தும் வகையிலான இரண்டாவது அறிவிப்பும் எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து சிரியாவில் இடம்பெறும் கொடிய போர் காரணமாக இதுவரை நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சிரியாவை விட்டு வெளியேறியுள்ள போதிலும், கடந்த இரண்டாம் திகதி சிரிய சிறுவன் ஒருவர் துருக்கிய கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் காணப்படும் ஒளிப்படம் வெளியானதை தொடர்ந்தே சிரிய அகதிகள் மீது கனடாவின் பார்வை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Canada-Syria

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கிவரும் நிலையில், அதற்கான பரப்புரைகளில் சிரிய விவகாரத்தில் கனடாவின் நிலைப்பாடு பல்வேறு சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியுள்ளமை இந்த விவகாரம் மீதான கவனத்தினை மேலும் அதிகரித்துள்ளது.

சிரிய அகதிகள் விவகாரத்தில் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரின் இறுக்கமான நிலைப்பாடு கனேடியர்கள் மற்றும் உலக மக்களின் பார்வையில் கனடாவை வெட்கித் தலைகுணிய வைத்துள்ளது என முன்னாள் பிரதமரான லிபரல் கட்சியின் ஜோன் கார்டியனும் (Jean Chretien) தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

The post சிரிய அகதிகளுக்காக மேலும் $100M: கனடா appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோ விமான நிலையத்தை மூடிய வெண்நுரை

Posted: 13 Sep 2015 10:25 AM PDT

foam_at_Pearson_Airport

foam_at_Pearson_Airportரொரன்ரோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்திவைக்கும் பகுதி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்பு சாதனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விமான நிலையத்தின் பெரும் பகுதி நேற்று வெண் நுரைகளால் மூடப்பட்டது.

குளிர்கால பனிப்பொழிவின் போது தரையெங்கும் பனி மூடியிருப்பது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்திய இந்த சம்பவத்தினால், விமான நிலைய இயல்பு நடவடிக்கைகளில் சிரமங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மிசிசாகா பகுதியின் Derry வீதியில் அமைந்துள்ள இந்த விமான நிறுத்தும் பகுதியில் நேற்று முற்பகல் ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பீல் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விமான எரிபொருள் தீப்பற்றி தீப் பரவல் ஏற்பட்டால் அதனை மூடி அணைப்பதற்கான பொறிமுறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த இரசாயன வெண்நுரை உருவாக்க பொறிமுறையில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக இந்த விபரீதம் சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.foam_at_Pearson_Airport

எனினம் இந்த சம்பவத்தினால் வர்த்தக விமானப் போக்குவரத்துகள் எவையும் பாதிக்கப்படவில்லை எனவும், எவரும் காயமடையவில்லை என்றும் பியர்சன் விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ரொரன்ரோ விமான நிலையத்தை மூடிய வெண்நுரை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

புற்றுநோய்க்கு மருந்தாகும் புதினா

Posted: 13 Sep 2015 08:02 AM PDT

gj

gjஉணவில் வாசனைக்காக மட்டுமே சேர்த்து வரும் புதினா, ஓர் மருத்துவ மூலிகையாகும்.

புதினாவில் உயிர்ச்சத்துக்கள் ஏ,பி, சி, யுடன் துத்தநாகம், கந்தகம், மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து, புரதம் மற்றும் நீர் அடங்கியுள்ளது.

இதில் உள்ள "ஆன்டி ஆக்ஸிடென்ட்" பெருங்குடல் புற்றுநோயை தீர்க்கும்.

புதினா பல நோய்களுக்கு அருமருந்தாகிறது. பத்து புதினா இலைகளைக் கழுவித் தின்றாலோ அல்லது இலைகளை கொதிக்க வைத்து, ஆறிய நீரை அருந்தினாலோ அஜீரணம், வயிற்று பொருமல், வாயுத்தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு நோய்கள் அகலும். வயிற்றுப் பசி உண்டாகும்.

இதன் தண்டுகளும், இலைகளும் கொதிக்க வைத்த நீரில் தேன், எலுமிச்சைச் சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்துவர, வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள், வயிற்றுவலி, காய்ச்சல், நீர்க்கடுப்பு அகலும்.gj

புதினாத் துவையல் வாந்தி, குமட்டலை தீர்க்கும். புதினாவுடன் எலுமிச்சை ஜூஸ் சேர்த்த தேநீர் குடித்தால் நன்கு ஜீரணமாகும்.

புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.

முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் நிற்க, புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.

The post புற்றுநோய்க்கு மருந்தாகும் புதினா appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™