Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கையில் மோசமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளமை ஐ.நா. விசாரணைகளில் தெரிய வந்துள்ளது: சையத் அல் ஹூசைன்

Posted:

இலங்கை இறுதி மோதல்களின் போது மோசமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ரஜினிகாந்த் கருத்துக்கு கருணாநிதி வரவேற்பு

Posted:

நீதிமன்றம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.


Read more ...

தமிழக மக்களுக்காக என்னையே அர்ப்பணிக்க பாக்கியம் செய்துள்ளேன் - ஜெயலலிதா

Posted:

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

ஐ.நா. அறிக்கைக்கு இலங்கை ஐந்து நாட்களில் பதில்!

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் விசாரணை அறிக்கைக்கு, இன்னும் ஐந்து நாட்களில் இலங்கை அரசாங்கம் எழுத்து மூலம் பதிலளிக்கவுள்ளது. 


Read more ...

சர்வதேச பொறிமுறையொன்று அவசியம்; ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு இரா.சம்பந்தன் கடிதம்!

Posted:

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கடிதமொன்றை எழுதியுள்ளார். 


Read more ...

ரணில் இன்று இந்தியா பயணம்: உள்ளக விசாரணைக்கு மோடியிடம் ஆதரவு கோருவார்!

Posted:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமை இந்தியா செல்கின்றார். 


Read more ...

ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்: மங்கள உரை; த.தே.கூ சார்பில் மாவை, சுமந்திரன் பங்கேற்பு!

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30வது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பிக்கின்றது. இந்தக் கூட்டத் தொடர்பில் ஒக்டோடர் 02ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றது. 


Read more ...

அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ஒரு வாரத்துக்கு பொதுக்கூட்டங்கள்

Posted:

அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ஒரு வாரத்துக்கு பொதுக்கூட்டங்கள் அங்காங்கே நடைப்பெறும் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Read more ...

சிரிய விடயத்தில் ரஷ்யாவின் தலையீடு குறித்து நேட்டோ அமைப்பு அதிருப்தி!

Posted:

அண்மையில் சிரியாவைச் சென்றடைந்த இரு ரஷ்யக் கார்கோ விமானங்கள் குறித்து நேட்டோ அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.


Read more ...

காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல் விடிய விடிய காத்திருந்த சகாயம் ஐஏஎஸ்.

Posted:

காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல் விடிய விடிய காத்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்தார் சகாயம் ஐஏஎஸ்.


Read more ...

செய்து முடிக்கப் படுவது!

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu

மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு


Read more ...

சந்திரனின் இருண்ட பகுதிக்கு விண்கலங்களைச் செலுத்தும் திட்டத்தில் நாசாவும் சீனாவும்..

Posted:

சந்திரனின் மிகத் தூரத்திலுள்ள பூமிக்குத் தென்படாத இருண்ட பக்கத்துக்கு விண்கலங்களைச் செலுத்தும் திட்டத்தில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமும் சீன விண்வெளி ஆய்வு மையமும் உள்ளன. 2020 ஆம் ஆண்டுக்குள் Chang'e 4 என்ற விண்கலத்தை சந்திரனின் இருண்ட பகுதிக்கு சீனா செலுத்தவுள்ளது. சந்திரனின் மிகத் தொலைவிலுள்ள இருண்ட பகுதியின் நிலவியல் கூறுகளை (geology)ஆராய்வதற்கும் வருங்காலத்தில் விண்வெளியை மிகத் தெளிவான இடத்தில் இருந்து (வளி மண்டலம் அற்ற) அவதானிக்கக் கூடிய ரேடியோ தொலைக் காட்டி ஒன்றை நிலவில் நிறுவுவதை நோக்கமாகக் கொண்டே சீனாவின் இச்செயற்திட்டம் அமையவுள்ளது.

இதேவேளை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமானது SLS (Space Launch System) என அழைக்கப் படும் மிகப் பெரிய ராக்கெட் ஒன்றை பரிசோதனை முயற்சியாக சந்திரனின் மிகத் தொலைவிலுள்ள பக்கத்துக்கு 2018 நவம்பரில் செலுத்தவுள்ளது. சுமார் 22 நாட்களுக்கு நீடிக்கவுள்ள SLS பரிசோதனைத் திட்டம் வருங்காலத்தில் சந்திரனில் இருந்து ஏனைய கிரகங்களுக்கு மனிதன் செல்வதற்கான வாய்ப்புக்களை ஆராயவுள்ளது. இது வெற்றியளிக்கும் பட்சத்தில் முதற்கட்டமாக 2020 அளவில் சந்திரனில் இருந்து விண்கல் ஒன்றுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவது குறித்துத் தீர்மானிக்கப் படும். மேலும் இச்செயற்திட்டங்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் காலடி எடுத்து வைக்கும் இலட்சியத்துக்கும் இட்டுச் செல்லவுள்ளன.

2018 இல் கென்னெடி ஏவுதளத்தில் இருந்து ஏவப்படவுள்ள ஒரியன் என்ற 70 மெட்ரிக் டான் உடைய SLS இன் மிகப் பெரிய பரிசோதனை ராக்கெட் இதற்கு முன் பயணித்த அப்பொலோவை விட 30 000 மைல் அதிகமாக சுமார் 275 000 மைல்கள் பயணித்து சந்திரனின் மறுபக்கத்தை அடைந்து தனது ஆய்வை 22 நாட்களுக்கு மேற்கொள்ளவுள்ளது. மறுபுறம் பூமியில் மனிதன் வசமுள்ள பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதமான அணுவாயுதங்களை செவ்வாய்க் கிரகத்தில் பிரயோகிப்பதன் மூலம் அதன் தரை மேற்பரப்பு வெப்பநிலையானது பூமிக்கு இணையாகச் சற்று அதிகரிக்கும் எனவும் இதன் மூலம் அங்கு உயிர் வாழ்க்கை ஏற்படுவதற்கான சாதகமான சூழல் ஒன்றை உருவாக்க முடியும் என SpaceX நிறுவனத்தின் CEO எலொன் முஸ்க் புரட்சிகர கருத்தைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு: Mail Online


Read more ...

எகிப்தில் அரசு கலைக்கப் பட்டதைத் தொடர்ந்து புதிய கேபினெட் நியமனம்!

Posted:

சமீபத்தில் எகிப்தில் அரசாங்கம் கலைக்கப் பட்டதைத் தொடர்ந்து இன்னமும் 1 கிழமைக்குள் புதிய கேபினெட் ஒன்றை அமைக்குமாறு எண்ணெய் வள அமைச்சர் ஷெரீஃப் இஸ்மாயிலிடம் எகிப்து அதிபர் அப்டெல் ஃபட்டாஹ் அல் சிசி சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

வாக்கெடுப்பின் மூலம் ஐ.நா தலைமையகத்தில் பாலஸ்தீனக் கொடி பறக்க விடப்பட முடிவு

Posted:

சமீபத்தில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலைமைச் செயலகத்தில் பாலஸ்தீனத்தின் கொடியினையும் பறக்க விட சம்மதமா என்ற வாக்கெடுப்பு ஐ.நா பாதுகாப்புச் சபையில் நடைபெற்றது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™