Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பீகார் சட்டசபை தேர்தல்: முலாயம்சிங்கின் 3–வது அணியால் நிதீஷ்குமார் –லல்லுபிரசாத் கலக்கம்

Posted: 22 Sep 2015 10:59 PM PDT

பீகார் மாநில சட்டசபைக்கு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கும், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், முதல் – மந்திரியுமான நிதீஷ்குமார், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பதினெட்டாம் படிக்கு தகடு பதிக்கும் பணி: 41 நாட்களில் முடிக்க ஏற்பாடு

Posted: 22 Sep 2015 10:51 PM PDT

சபரிமலை அய்யப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு செல்லும் பக்தர்கள் 18–ம் படி ஏறி அய்யப்பனை தரிசிப்பார்கள். இதன் ஒவ்வொரு படியிலும் தெய்வங்கள் குடி கொண்டு இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த படிகள் கற்களால் அமைந்திருந்தன. 1958–ம் ஆண்டு இப்படிகளின் மீது பஞ்சலோக தகடு பதிக்கப்பட்டது. பல ஆண்

பிரம்மோற்சவ 8–ம் நாள் விழா: திருப்பதியில் தேரோட்டம்

Posted: 22 Sep 2015 10:46 PM PDT

திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7–வது நாளான நேற்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி வலம் வந்தார். பட்டு வஸ்திரங்கள் தரித்து விலை உயர்ந்த தங்க, வைர நகைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த ஏழுமலையான் 4 மாட வீதிகளிலும் உலா வந்தார். யானைகளும் குதிரைகளும அணி வகுத்து வந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் 2 மணிக்கு கோவிலில் உள்ள திருமலை நாயர் மண்

மேற்கு வங்காளத்தில் ஹவுரா–செகந்திராபாத் ரெயிலில் வெடிகுண்டு: நாசவேலை சதி முறியடிப்பு

Posted: 22 Sep 2015 10:42 PM PDT

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகில் உள்ள ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் செகந்திரபாத்துக்கு இன்று காலை 7.25 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாராக இருந்தது. ரெயில்வே போலீசார் அந்த ரெயிலின் பெட்டிகளில் ஏறி வழக்கமான சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெட்டியில் கேட்பாரற்று 3 பைகள் கிடந்தன.

சந்திரகிரி பகுதியில் காரில் கடத்திய ரூ.30 லட்சம் செம்மரம் பறிமுதல்: 2 பேர் கைது

Posted: 22 Sep 2015 10:12 PM PDT

சந்திரகிரி அருகே சிறப்பு அதிரடிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சொகுசுகாருடன் 22 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலத்தில் செம்மரகட்டைகள் கடத்தலை தடுக்க வனத்துறையினருடன் சிறப்பு அதிரடிப்படை போலீசாரும்

ஒடிசாவில் பரபரப்பு: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கழுத்தை அறுத்து மர்ம கொலை

Posted: 22 Sep 2015 08:43 PM PDT

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற பள்ளி ஆய்வாளர், அவரது மனைவி மற்றும் அவர்களின் இரு பெண் குழந்தைகள் கழுத்தை அறுத்து மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாசிக்கில் பன்றி காய்ச்சலுக்கு வங்கி ஊழியர் பலி

Posted: 22 Sep 2015 08:29 PM PDT

நாசிக் ரோடு பகுதியை சேர்ந்த 45 வயது வங்கி ஊழியர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம்

Posted: 22 Sep 2015 08:15 PM PDT

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழக அரசு, மத்திய அரசுக்கு சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதியது. இதையடுத்து மத்திய நீர்பாசனத்துறை, கர்நாடக அரசுக்கு நோட்டீசு அனுப்பியது. இதனால் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக விவசாயிகள் தற்போது மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் 3 நாட்கள் தண்ணீர் திறந்

அயர்லாந்து, அமெரிக்காவில் ஒரு வார சுற்றுப்பயணம்: பிரதமர் மோடி டப்ளின் புறப்பட்டு சென்றார்

Posted: 22 Sep 2015 08:06 PM PDT

அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு 7 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். டப்ளின் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

இந்து கடவுளை அவமதிக்கும் எழுத்தாளர்களின் நாக்கை அறுப்போம் - ஸ்ரீ ராம் சேனா

Posted: 22 Sep 2015 05:11 PM PDT

இந்து கடவுளை அவமதிக்கும் எழுத்தாளர்களின் நாக்கை அறுப்போம் என்று சர்ச்சைக்குரிய ஸ்ரீ ராம் சேனா அமைப்பை சேர்ந்த இந்துத்துவ தலைவர் ஒருவர் கூறியுள்ளார். தேசிய வார இதழ் ஒன்றில் இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, கர்நாடக மாநில ஸ்ரீ ராம சேனா இந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்

சென்னை ஐகோர்ட்டில் தமிழை உடனடியாக வழக்காடு மொழியாக அமல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பேட்டி

Posted: 22 Sep 2015 05:02 PM PDT

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, டெல்லியில் நமது நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரும் தமிழக வக்கீல்களின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்.

கருப்பு பண விவரத்தை அளிக்க காலக்கெடு நீட்டிப்பு இல்லை: அனந்தராஜன்

Posted: 22 Sep 2015 04:29 PM PDT

டெல்லியில் கருப்பு பணம் தொடர்பான இந்திய வர்த்தக கூட்டமைப்பு மாநாடு நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு மத்திய அரசின் நேரடி வரிகள் வாரிய இணை செயலாளர் அனந்தராஜன் பேசியதாவது:-

மேற்கு வங்காள பா.ஜனதா தலைவரின் சர்ச்சை பேச்சு: அமித் ஷாவிடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் கமிஷன்

Posted: 22 Sep 2015 04:11 PM PDT

மேற்கு வங்காள மாநில பா.ஜனதா மூத்த தலைவர் ஜோய் பானர்ஜி, கடந்த 20-ந் தேதி பிர்பும் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, தங்கள் கட்சியின் கட்டுப்பாட்டில் தேர்தல் கமிஷன் இருப்பதாகவும், அடுத்த ஆண்டில் மேற்கு வங்காள சட்டசபை தேர்தலுக்கு கூடுதல் மத்திய படைகளை நிறுத்திவைப்போம் என்றும் அவர் பேசினார்.

ராணுவ பயன்பாட்டுக்காக இஸ்ரேலில் இருந்து ரூ.2,500 கோடிக்கு ஆள் இல்லாத விமானங்களை வாங்க இந்தியா முடிவு

Posted: 22 Sep 2015 03:47 PM PDT

பாகிஸ்தான், ஏமன், சிரியா உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு 'டிரோன்' எனப்படும் ஆள் இல்லாத சிறிய ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் தீவிரவாதிகள் பதில் தாக்குதல் நடத்தினாலும் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படுவதில்லை.

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டவருக்கு ஆண்மை பரிசோதனை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 22 Sep 2015 02:11 PM PDT

சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த கணவன்- மனைவி இருவருக்கு இடையில் நிகழ்ந்த வழக்கு ஒன்றில், கணவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் உறவு இருந்ததை மனைவியே ஒப்புக்கொண்டதாகவும், தன் மனைவிக்கு பிறந்த இரு பிள்ளைகளும் தனக்கு பிறந்தவை அல்ல

எல்லை தாண்டி வந்த 3 பாகிஸ்தான் சிறுவர்களைக் கைது செய்த பாதுகாப்பு படையினர்

Posted: 22 Sep 2015 01:45 PM PDT

பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த 3 சிறுவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். 12 முதல் 14 வயதிற்குட்பட்ட சலிம், சஜன் சாவல் என்ற அந்த 3 சிறுவர்களும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள

சூனியக்காரி என்ற சந்தேகத்தில் பெண் வெட்டிக்கொலை

Posted: 22 Sep 2015 01:27 PM PDT

அசாம் மாநிலத்தின் சோனிட்பூர் மாவட்டத்தில் சூனியக்காரி என்று நினைத்து பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மந்திர சடங்குகளில் ஈடுபடும் 50 வயதான அந்த பெண்ணை, நேற்று

குஜராத் இன்டர்நெட் தடையால் குமுறும் மின்னணு வர்த்தக நிறுவனங்கள்

Posted: 22 Sep 2015 12:39 PM PDT

குஜராத் மாநிலத்தில், ஹர்திக் படேல் தலைமையிலான போராட்டத்தின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில், இன்டர்நெட் சேவைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. போராட்டத்தின் முடிவில், ஹர்திக் படேலும் கைது செய்யப்பட்டு பின் பெயிலில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, விரைவில் இன்டர்நெட் சேவை துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட

சி.பி.ஐ. விசாரணை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: மாயாவதி குற்றச்சாட்டு

Posted: 22 Sep 2015 12:36 PM PDT

உத்தர பிரதேசத்தில் கடந்த 2007 முதல் 2012-ம் ஆண்டு வரை மாயாவதி முதல்-மந்திரியாக இருந்த போது தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் சி.பி.ஐ. விசாரணைக்கு வருமாறு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.

இந்தியாவின் பெருநகரங்களில் புறநகர் ரெயில் சேவையை அதிகரிக்க உலக வங்கி நிதியுதவி

Posted: 22 Sep 2015 11:53 AM PDT

இந்தியாவின் பெருநகரங்களில் புறநகர் ரெயில் சேவைகளை அதிகப்படுத்த உலக வங்கி நிதியுதவி வழங்குகிறது. மேலும், புறநகர் ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™