Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Morningside பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில்

Posted: 22 Sep 2015 08:55 PM PDT

fg

fgMorningside குடியிருப்பு பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரவு பத்து மணியளவில் Military Trail பகுதியில், Neilson வீதியில் வாகனம் ஒன்றினுள் குறித்த அந்த நபர் கத்திக் குத்துக் காயங்களுடன் காணப்பட்டதாக அவசர மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தினை உறுதிப்படுத்தியுள்ள காவல்த்துறையினர், கத்திக்குத்துக்கு இலக்கான அந்த நபருக்கு சுமார் 30 வயது இருக்கலாம் எனவும், அவரது உடலின் மேல் பகுதியில் கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.fg

இந்த கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் காவல்த்துறையினர் ஈடுபட்டு வருகன்றனர்.

சந்தேக நபர்கள் தொடர்பிலான விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

The post Morningside பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோ Woodbine பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் மருத்துவமனையில்

Posted: 22 Sep 2015 08:50 PM PDT

k

kரொரன்ரோவின் Woodbine-Lumsden குடியிருப்பு வட்டாரத்தில் இன்று மாலை இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Danforth அவனியூ மற்றம் Woodbine அவனியூ பகுதியில், Keystone அவனியூவில் இன்று மாலை 5.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கத்திக் குத்துக்கு இலக்கானவரின் நெஞ்சுப் பகுதி உட்பட உடலின் பல்வேறு பகுதிகளில் கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டதாக அவசர மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மோசமான காயங்களுடன் உடனடியாகவே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவரின் தற்போதய உடல்நிலை தொடர்பிலான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவல்த்துறையினர் ஆரம்பித்துள்ள போதிலும், கத்திக் குத்துக் இடம்பெற்றமைக்கான காரணங்களோ, சந்தேக நபர் தொடர்பிலான விபரங்களோ உடனடியாக வெளியிடப்படவில்லை.

The post ரொரன்ரோ Woodbine பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்று காலை 3 பெண்கள் படுகொலை – சந்தேக நபர் ஒட்டாவாவில் கைது

Posted: 22 Sep 2015 08:44 PM PDT

hj

hjமூன்று பெண்கள் படுகொலை செய்யப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர், தேடுதல்களின் பின்னர் சந்தேக நபரை ஒட்டாவாவில் கைது செய்துள்ளனர்.

ஒன்ராறியோவின் கிழக்கு பகுதியில் உள்ள Wilno எனப்படும் சிறிய கிராமத்தில் இன்று காலை ஒன்பது மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அசம்பாவித சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அங்கு விரைந்த காவல்த்துறையிர், வீடு ஒன்றில் பெண் ஒருவரின் சடலத்தை கண்டதாகவும், பின்னர் பிறிதொரு வீட்டில் மற்றுமொரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் 11.10 அளவில் Wilnoவிலிருந்து சுமார் அரைமணி நேர பயண தூரத்தில் மேலும் ஒரு வீட்டில் மூன்றாவது பெண் ஒருவரும் இவ்வாறு சடலமாக காணப்பட்டுள்ளார்.

அதனை அடுத்து அந்த பகுதி முழுவதிலும் விழிப்பு நிலையினை ஏற்படுத்தி அதிகாரிகள் சேதனைகளை மேற்கொண்டனர்.hj

தீவிர விசாரணைகள் மற்றும் தேடுதல்களின் பயனாக சந்தேக நபர் ஒட்டாவின் மேற்குபிரதேசமான Kinburn எனும் இடத்தில் வைத்து பிற்பகல் 2.30 க்கு கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 57 வயது ஆணிடம் அதிகாரிகள் தொடர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது.

இன்று காலை இடம்பெற்ற இந்த மூன்று பெண்களின் படுகொலை சம்பவம் அந்த கிராமத்தில் வாழும் சுமார் 300 பேரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post இன்று காலை 3 பெண்கள் படுகொலை – சந்தேக நபர் ஒட்டாவாவில் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தினமும் ரசத்தை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்

Posted: 22 Sep 2015 04:38 PM PDT

n

nஉணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ரசம், ஜீரண சக்தியை எளிதாக்குகிறது.

ரசங்களில் பல வகைகள் இருந்தாலும், பூண்டு, பெருங்காயம், மிளகு- சீரகம் உட்பட பல்வேறு பொருட்கள் சேர்வது ரசத்தில் தான்.

ஜீரணத்தை எளிதாக்கும் ரசம், பல வைட்டமின் குறைபாடுகளையும், தாது உப்புக் குறைபாடுகளையும் போக்கிவிடுகிறது.

அதுமட்டுமின்றி பசியின்மை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன சரியாகும்.

உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.n

ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது.

வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது.

வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.

The post தினமும் ரசத்தை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சர்ச்சைக்குரிய C-51 தொடர்பான கருத்து கணிப்பு

Posted: 22 Sep 2015 10:36 AM PDT

referendum_-_922

referendum_-_922பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தலையிலான பழமைவாதக் கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

C-51 எனப்படும் அந்த சட்டத்திற்கு 41 சதவீத்தினர் ஆதரவு தெரிவித்துள்ள அதேவேளை, 37 சதவீதத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 20 சதவீதம் பேர், இந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் தாம் எத்தகைய முடிவையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

அட்லான்டிக் கனடா, பிரிட்டிஸ் கொலம்பியா ஆகிய மாகாணங்களில் சுமார் 50 சதவீதத்தினரும், கியூபெக்கில் 30 சதவீதத்தினரும் இந்த சட்டத்தினை எதிர்ப்பதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக இளைஞர் சமூகம், ஆண்கள் மற்றும் ஓரளவு வசதியாக வாழும் சமூகத்தினரே இந்த சட்டத்தை எதிர்ப்பதாக கூறியுள்ளனர் என்பதையும் அந்த கருத்துக் கணிப்பில் இருந்து அறியமுடிந்துள்ளது.referendum_-_922

பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தலையிலான பழமைவாதக் கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய பயங்கரவாதத் தடைச் சட்டம் பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த அண்மைய கருத்துக் கணிப்பில் சட்டத்தை ஆதரிப்பவர்கள் 41 சதவீதமாகவும், எதிர்ப்பவர்கள் 37 சதவீதமாகவும் உள்ள நிலையில், இரண்டுக்கும் இடையிலான சதவீதத்தில் பெரியளவிலான வேறுபாடுகள் இல்லை என்பது புலனாகின்றது.

இந்த குறைந்த சதவீத வித்தியாசமானது, சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கான ஆதரவு நிலைப்பாடு தற்போது பிளவுபட்டுப் போயுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது

The post சர்ச்சைக்குரிய C-51 தொடர்பான கருத்து கணிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிலிப்பீன்சில் கனேடியர்கள் ஆயுததாரிகளால் கடத்தல்

Posted: 22 Sep 2015 10:21 AM PDT

abducted_in_Philippine

abducted_in_Philippineபிலிப்பின்சில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் இரண்டு கனேடியர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடியர்கள் இருவர் கடத்தப்பட்டிருப்பதை பிலிப்பின்ஸ் இராணுவமும் காவல்த்துறையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இரண்டு கனேடியர்களுடன் மேலும் இருவர் கடத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஒருவர் நோர்வே நாட்டைச் சேர்ந்தவர் எனவும், மற்றையவர் பிலிப்பீன்சைச் சேர்ந்த பெண் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நால்வரும் பிலிப்பின்சின் தலைநகர் மணிலாவில் இருந்து சுமார் 975 கிலோமீடடர் தென்கிழக்கே உள்ள சிறிய தீவு ஒன்றில் வைத்து நேற்று நள்ளிவு கடத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட கனேடியர்கள் John Ridsel மற்றும் Robert Hall ஆகியோர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிலிப்பின்சில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கனேடியர்கள் இருவர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து தாமும் அறிந்துள்ளதாக கனேடிய வெளியுறவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.abducted_in_Philippine

இது தொடர்பில் தேவையான அனைத்து தரப்பினருடனும் பேசி வருவதாகவும், மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முயன்று வருவதாகவும் கனேடிய வெளியுறவுத் திணைக்களம் விபரம் வெளியிட்டுள்ளது.

ஆயுததாரிகளால் இலக்கு வைக்கப்பட்டே இந்த நால்வரும் கடத்தப்பட்டுள்ளனர் என தோன்றுவதாக பிலிப்பின்ஸ் நாட்டு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த கடத்தல் நடவடிக்கையில் குறைந்தது 11 ஆயுததாரிகள் ஈடுபட்டதாக கூறப்படுகின்ற நிலையில்குறித்த அந்த இடத்தில் படகு ஒன்றில் இருந்த மேலும் ஒரு வெளிநாட்டு தம்பதியினரையும் அவர்கள் கடத்த முயன்றிருந்தனர் என்றும், அவர்கள் படகிலிருந்து குதித்து தப்பித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

The post பிலிப்பீன்சில் கனேடியர்கள் ஆயுததாரிகளால் கடத்தல் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நெடுஞ்சாலை 401 இல் வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு

Posted: 22 Sep 2015 10:04 AM PDT

h

hநெடுஞ்சாலை 401 இல் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மிசிசாகாவைச் சேர்ந்த 27 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெடுஞ்சாலை 401 இன் மேற்கு நோக்கிய வழித்தடத்தில், நெடுஞ்சாலை 410க்கு வெளியேறும் பகுதியில் நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துகுக்குள்ளான அந்த வாகனத்தை அதிக வேகத்துடன் அதன் ஓட்டுனர் செலுத்தி வந்திருந்தார் என்றும், குறித்த அந்த வீதிப் பகுதியில் ஓட்டுநர் வாகனத்தின் வேகக் கட்டுப்பாடை இழந்திருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாகனத்தை செலுத்தி வந்த நபர் விபத்தின் போது வாகனத்திற்கு வெளியில் தூக்கி வீசப்பட்டிருந்த நிலையில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.h

இதேவேளை இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் தங்கள் விசாரணைக்கு உதவுமாறு குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post நெடுஞ்சாலை 401 இல் வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Oakville பெண் கொலையின் தொடர்பில் ஒருவர் கைது

Posted: 22 Sep 2015 09:28 AM PDT

Police_line-1606

Police_line-1606Oakville பகுதியில் உள்ள வசிப்பிடம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் Oakvilleஇன் குடியிருப்புப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இறந்து கிடக்க காணப்பட்டார் என கூறப்படுகிறது.

Third Line மற்றும் Queen Elizabeth Way பகுதிக்கு அருகில் Sheldon அவனியூவில் நேற்று இரவு 8.30 மணியளவில் குறித்த பெண் இறந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் அந்த பெண் எவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பன உள்ளிட்ட சம்பவ இடத்தின் மேலதிக தகவல்கள் எதனையும் காவல்த்துறையினர் வெளியிடவில்லை.

அதேவேளை சம்பவ இடத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்ததை காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.Police_line-1606

இந்த கொலை சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர் இறந்து கிடந்த பெண்ணின் மகன் என்றும்,அவரே காவல்த்துறையினரை அழைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.

உயிரிழந்த அந்த பெண்ணிற்கு 62 வயது என்றும், மகனிற்கு 39 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

The post Oakville பெண் கொலையின் தொடர்பில் ஒருவர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™