Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


விநாயகர் ஊர்வலத்தில் மக்களை கொன்று குவிக்க 2 ஆயிரம் பேர் ஊடுருவல்? வாட்ஸ்அப் தகவலால் போலீசார் கலக்கம்

Posted: 11 Sep 2015 11:23 PM PDT

ஐதராபாத் விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பெண் நேற்று கைது செய்யப்பட்டார். ஐதராபாத் போலிசிவிக் பகுதியைச் சேர்ந்த இவர் அபுதாகியில் தங்கி இருந்து இந்திய இளைஞர்கள் பலரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில்

மத்திய பிரதேசத்தில் ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 20 பேர் சாவு?

Posted: 11 Sep 2015 11:21 PM PDT

மத்தியபிரதேசம் மாநிலம் ஜபுபா மாவட்டத்தில் பெட்லபாத் என்ற இடம் உள்ளது. இங்குள்ள பஸ் நிலையம் அருகே ஓட்டல் ஒன்று செயல்பட்டு வந்தது. இன்று காலை ஏராளமானோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அருகே பஸ்நிலையம் இருப்பதால் ஓட்டல் அருகே ஏராளமானோர் கூடி நின்றனர். அப்போது ஓட்டலில் சமையலுக்கு பயன்படுத்த வைத்திருந்த கியாஸ் சிலிண்டர் ஒன்று பயங்கரமாக வெடித்தது.

பேஸ்புக்கில் நண்பராக பழகி 200 பெண்களின் நிர்வாண படங்களை சேகரித்து பணம் பறித்த கல்லூரி மாணவர்

Posted: 11 Sep 2015 11:14 PM PDT

ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத் (21). மலக்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 1½ வருடங்களாக 'பேஸ் புக்'கில் பெண்கள் பெயரில் போலி பக்கங்களை தொடங்கினார். பின்னர் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பணக்கார மாணவிகளை குறிவைத்து பழகினார். பலர் இவர் ஆண் என்பது தெரியாமல் பழகினார்கள்.

பெங்களூர் மாநகராட்சி மேயர் பதவி காங்.–ஜனதா தளம் (எஸ்) கூட்டணி கைப்பற்றியது

Posted: 11 Sep 2015 11:12 PM PDT

198 வார்டுகள் கொண்ட பெங்களூர் மாநகராட்சிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22–ந்தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜனதா 100 இடங்களிலும், காங்கிரஸ் 76 வார்டுகளிலும், ஜனதா தளம் (எஸ்) 14 இடங்களிலும் சுயேட்சைகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றனர். எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காததால் மேயர் பதவியை கைப்பற்றுவதில் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இழுபறி ஏற்பட்டது.

திருப்பதி கோவில் பிரமோற்சவம்: பக்தர்களுக்கு வழங்க கூடுதலாக 6 லட்சம் லட்டுகள் தயாரிப்பு

Posted: 11 Sep 2015 09:39 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் வருகிற 16–ந்தேதி தொடங்கி 24–ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் முழு வீச்சில் செய்து வருகிறது. பிரமோற்சவத்தின் போது பக்தர்கள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் ஹெலிகாப்டர் சேவையும் தொடங்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக 3

மெக்கா மசூதியில் விபத்து: கேரள பெண் பலி

Posted: 11 Sep 2015 09:39 PM PDT

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில், இவரது மனைவி மூமினா (வயது 33) ஆகியோரும் மெக்காவுக்கு புனித யாத்திரை சென்றிருந்தனர். இருவரும் நேற்று மெக்கா மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 11 Sep 2015 08:49 PM PDT

புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் குடி கொண்டுள்ள திருமலையில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா, வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. 24-ந் தேதி வரை விழா நடைபெறும். பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பதியில் உள்ள திருமலை- திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தேவஸ்தான செயல் அலுவலர் சாம்பசிவராவ் தலைமை தாங்கினார். துணை அதிகாரிகள் சீனிவாசராவ் (திருமலை), போலா பாஸ்கர் (திருப்பதி), பாதுகாப்பு அதிகாரி நாகேந்திரகுமார், கூடுதல் பாதுகாப்பு அதிகாரி சிவகுமார் ரெட்டி, திருப்பதி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாமி, ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்

விலை உயர்வை கட்டுப்படுத்த 15 ஆயிரம் டன் பருப்பு இறக்குமதி: மத்திய அரசு நடவடிக்கை

Posted: 11 Sep 2015 08:05 PM PDT

இந்தியாவில் பெரும்பாலான பருப்பு வகைகள் அனைத்தும் கிலோ ரூ.100-க்கு மேல் உயர்ந்துவிட்டது. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவை அதிகபட்சமாக கிலோ ரூ.155 வரை விற்கிறது. இதனால் பருப்பு விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளின்

கர்நாடகத்தில் ரெயில் கவிழ்ந்த விபத்தில் இருவர் பலி: 8 பேர் படுகாயம்

Posted: 11 Sep 2015 07:55 PM PDT

கர்நாடக மாநிலம், குல்பர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒன்பது பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி, தடம்புரண்டு கவிழ்ந்த விபத்தில் இருவர் பலியாகினர். ஆந்திர மாநிலம், செகந்திராபாத்தில் இருந்து மும்பை நோக்கி

ராஜஸ்தான் ஆம்புலன்சு ஊழல்: அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு

Posted: 11 Sep 2015 05:01 PM PDT

ராஜஸ்தானில் ஆம்புலன்சு ஊழல் விவகாரம் தொடர்பாக அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்டவர்கள் மீது மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2010-13 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் ஆம்புலன்சு சேவை வழங்குவதற்கு ஜிகித்ஸா சுகாதார நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டதிலும், திட்டத்தை செயல்படுத்தியதிலும், பில்களுக்கு பணம் வழங்கியதிலும் பெருமளவு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நியூயார்க் நகர இரட்டை கோபுர தகர்ப்பை நினைவு கூர்ந்த மோடி

Posted: 11 Sep 2015 04:02 PM PDT

2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகர 110 மாடி இரட்டை கோபுரங்களை, அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை கடத்திச்சென்று மோதி தகர்த்தனர். இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதன் 14-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டது. சண்டிகார் நகரில் நேற்று நடந்த மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவ மேற்படிப்பு நிறுவன பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட

உத்தம்பூர் தாக்குதல் வழக்கு: தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.39 லட்சம் பரிசு

Posted: 11 Sep 2015 03:31 PM PDT

காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் கடந்த மாதம் எல்லை பாதுகாப்பு படை மீதான தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய 6 தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.39 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் ஜம்மு பிராந்தியம் உத்தம்பூரில், கடந்த மாதம் 5-ந் தேதி எல்லை பாதுகாப்பு படையின் வாகன அணிவகுப்பு சென்று கொண்டிருந்தது. அதன் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய பள்ளி பிரின்சிபல் கைது

Posted: 11 Sep 2015 02:48 PM PDT

மும்பையின் அந்தேரி(கிழக்கு) பகுதியில் உள்ள செயிண்ட். சேவியர் பள்ளியின் பிரின்சிபல் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி இப்பள்ளியின் பிரின்சிபலான ரொசாரியோ அல்போன்சோ, அங்கு படிக்கும் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட சிறுமி மூலமாக வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, பெற்றோர்களும் பொதுமக்களும் அந்தப் பள்ளியின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

தகுதி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் இடம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 11 Sep 2015 02:31 PM PDT

தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவி எம்.பூஜாலட்சுமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழக அரசு கடைபிடிக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து 50 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் மேலும் சில இடங்களை உருவாக்கி தகுதி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு 2015-16-ம் கல்வி ஆண்டில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் முன்னிலையிலான அமர்வு முன்பு

சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பீகார் மாநில உள்துறை செயலாளர் அதிரடி மாற்றம்

Posted: 11 Sep 2015 11:55 AM PDT

பீகார் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பீகார் மாநில உள்துறை செயலாளரை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் பல ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு வருகிற அக்டோபர் 12–ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் ஓட்டுப் பதிவுக்கான

கங்கை நதி தூய்மை திட்டத்திற்காக ரூ.100 கோடிக்கான காசோலை வழங்கிய மாதா அமிர்தானந்தமயி

Posted: 11 Sep 2015 11:07 AM PDT

புனித நதியான கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக, மாதா அமிர்தானந்தமயி ரூ.100 கோடி வழங்குவதாக மாதாவின் ஆசிரமம் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள அமிர்தானந்தமயி ஆசிரமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் கங்கை நதி தூய்மை திட்டத்துக்காக ரூ.100

தற்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்கும் 200 ஊர்க்காவல் படை வீரர்கள்

Posted: 11 Sep 2015 08:05 AM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றும் சுமார் 200 ஊர்க்காவல் படை வீரர்கள், தங்களின் நீண்டகால கோரிக்கையை அரசு நிறைவேற்றாததால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து ஊர்க்காவல் படை வீரர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ரத்தோர் கூறியதாவது:-

இரண்டு வயது குழந்தை ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தது: மீட்பு பணிகள் தீவிரம்

Posted: 11 Sep 2015 06:34 AM PDT

உத்தர பிரதேச மாநிலத்தில் 100 அடி ஆழ ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிர்சாகஞ்ச் அருகே உள்ள கமார்பூர் பாய்ஜியா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 2 வயது ஆண் குழந்தை கிஷன், இன்று நிலத்தில்

தொழிற்சாலை உற்பத்தி குறியீடு அச்சத்தால் தடுமாற்றத்தில் முடிந்த சந்தைகள்: சென்செக்ஸ் லேசான சரிவு

Posted: 11 Sep 2015 06:24 AM PDT

சீன பொருளாதார மந்தநிலை, ஆசிய சந்தைகள் நிலவரம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த வாரம் கடும் சரிவு ஏற்பட்டது. இந்த வாரம் உலகளாவிய அளவில் சந்தைகள் ஏற்றம் பெற்றதாலும், இந்திய ரூபாய் மதிப்பில் முன்னேற்றம் காணப்பட்டதாலும் இந்திய சந்தைகளும் எழுச்சி பெற்றன.

புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம் 2-வது நாளாக நீடிப்பு

Posted: 11 Sep 2015 05:15 AM PDT

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரி ஆசிய அளவில் புகழ்பெற்றது. இந்த கல்லூரியின் புதிய தலைவராக பா.ஜனதாவை சேர்ந்தவரும், பிரபல டி.வி. நடிகருமான கஜேந்திர சவுகானை மத்திய அரசு நியமித்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™