Tamil Star |
- மார்க்கம் பகுதியில் வீடுபுகுந்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நால்வருக்கு காவல்த்துறை வலைவீச்சு
- வடக்கு ஒன்ராறியோவில் உலங்குவானூர்தி விபத்து – இருவர் பலி
- Ajax பகுதியில் பேரூந்துடன் உந்துருளி மோதியதில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில்
- நெடுஞ்சாலை 404இல் விபத்து – ஒருவர் பலி
- இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக கனடா அறிவிப்பு
- என்றென்றும் இளமையுடன் இருக்க வேண்டுமா? இந்த பழத்தை கண்டிப்பா சாப்பிடுங்க
- இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக கனடா அறிவிப்பு
| மார்க்கம் பகுதியில் வீடுபுகுந்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நால்வருக்கு காவல்த்துறை வலைவீச்சு Posted: 11 Sep 2015 09:06 PM PDT
16ஆவது அவனியூவிற்கு அருகில் உள்ள Bur Oak அவனியூப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனித்து ஒருவர் இருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். மதியம் சுமார் 12.55 மணியளவில் தமது வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டதாக அந்த வீட்டின் இருந்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் கதவைத் தள்ளிக்கொண்டு வீட்டினுள் நுளைந்த அவர்கள் வீட்டில் இருந்த அந்த ஆண் நபரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் என்றும், அச்சுறுத்தப்பட்ட அந்த நபர் சிறிய காயங்களுக்கு ஆளான நிலையில் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ள காவல்த்துறையினர், சந்தேக நபர்கள் நால்வரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்த்துறையினரை அல்லது குற்றத் தடுப்புப் பிரிவினரை தொடர்புகொள்ளுமாறு காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். The post மார்க்கம் பகுதியில் வீடுபுகுந்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நால்வருக்கு காவல்த்துறை வலைவீச்சு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடக்கு ஒன்ராறியோவில் உலங்குவானூர்தி விபத்து – இருவர் பலி Posted: 11 Sep 2015 08:52 PM PDT
விபத்துக்குள்ளான Apex International இற்கு சொந்தமான அந்த உலங்கு வான்னூர்தியானது தெற்கு Foleye பகுதியில் உள்ள அடந்த காட்டில் இன்று வெள்ளிக்கிழமை பின்நேரம் அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை Horwood Lake முகாமில் இருந்து இருவருடன் இந்த உலங்குவானூர்தி புறப்பட்டிருந்தாகவும், மறுநாள் அது காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே விமானம் விபத்துக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் என்பது பிரேத பரிசோதனை நடைபெறும் வரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்று காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற இடத்திற்கு கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு சபை அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பிராந்திய விசாரணையாளர்களும் உரிய விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர். விபத்து இடம்பெற்ற இடமான Foleyet தென்மேற்கு Timmins இல் இருந்த ஏறக்குறைய 100 கிரோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. The post வடக்கு ஒன்ராறியோவில் உலங்குவானூர்தி விபத்து – இருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Ajax பகுதியில் பேரூந்துடன் உந்துருளி மோதியதில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் Posted: 11 Sep 2015 11:47 AM PDT
நேற்று இரவு பத்து மணியளிவில் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி ஓட்டுனர் உடனடியாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். Harwood Avenue மற்றும் Kings Crescent பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் விபத்து சம்பவித்தமைக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை. உந்துருளியின் ஓட்டுனர் மிகவும் பாரதூரமான நிலையிலேயே சம்பவ இடத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்ட போதிலும், தற்போதய அவரது உடல்நிலை தொடர்பிலான விபரங்கள் அறியக்கிடைக்வில்லை. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் டூர்ஹாம் காவல்த்துறையினர், இந்த சம்பவத்தில் வேறு எவரும் காயமடையவில்லை என்பதனையும் உறுதிப்படுத்தியுள்ளனர். The post Ajax பகுதியில் பேரூந்துடன் உந்துருளி மோதியதில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நெடுஞ்சாலை 404இல் விபத்து – ஒருவர் பலி Posted: 11 Sep 2015 11:07 AM PDT
நெடுஞ்சாலை 407ற்கு அருகே இரவு 10.30 அளவில் இந்த விபத்து சம்பவித்ததனை ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விபத்தில் ஒரு வாகனம் மட்டுமே தொடர்பு பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள போதிலும், விபத்து சம்பவித்தமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. விபத்தில் உயிரிழந்தவர் ஆணா பெண்ணா என்ற விபரங்களோ அவரின் பெயர் வயது உள்ளிட்ட விபரங்களோ உடனடியாக வெளியிடப்படவில்லை. The post நெடுஞ்சாலை 404இல் விபத்து – ஒருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக கனடா அறிவிப்பு Posted: 11 Sep 2015 11:00 AM PDT
கனடாவிற்கான புதிய இலங்கை உயர்ஸ்தானிகர் அஹமட் ஜவாட், கனேடிய ஆளுனர் நாயகம் டேவிட் ஜொன்ஸ்டனை சந்தித்த போது ஆளுநர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கம் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக ஆளுநர் நாயகம் இலங்கை தூதரிடம் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் உயர்ஸ்தானிகர் ஜவாட், ஆளுனர் நாயகம் டேவிட் ஜொன்ஸ்டனுக்கு தெளிவுபடுத்தியுள்ளார். வரலாற்று ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையில் மிகச் சிறந்த தொடர்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். The post இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக கனடா அறிவிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| என்றென்றும் இளமையுடன் இருக்க வேண்டுமா? இந்த பழத்தை கண்டிப்பா சாப்பிடுங்க Posted: 11 Sep 2015 07:25 AM PDT
இப்பழத்தில் கால்சியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்றவை உள்ளது. மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. அழகான மற்றும் மென்மையான சருமம் கிடைப்பதோடு, இளமையையும் தக்க வைக்கலாம். உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது, 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. எனவே செரிமானம் மேம்படுவதுடன் மலச்சிக்கல் பிரச்னையும் இருக்காது. ஒரு உலர்ந்த அத்திப்பழமானது அன்றாடம் தேவைப்படும் கால்சியத்தில் 3 சதவீதத்தை வழங்குகிறது. இதனை தினமும் உட்கொண்டு வந்தால், எலும்புகள் வலிமையுடன் இருக்கும். உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளதால், இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும். The post என்றென்றும் இளமையுடன் இருக்க வேண்டுமா? இந்த பழத்தை கண்டிப்பா சாப்பிடுங்க appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக கனடா அறிவிப்பு Posted: 10 Sep 2015 11:37 PM PDT
இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்துசெயற்பட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளது. இரு நாடுகளுக்கம் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. கனடாவிற்கான புதிய இலங்கை உயர்ஸ்தானிகர் அஹமட் ஜவாட், கனேடிய ஆளுனர் நாயகம் டேவிட் ஜொன்ஸ்டனை சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையில் மிகச் சிறந்த தொடர்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். The post இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக கனடா அறிவிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

மார்க்கம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் அளவில் வீடுபுகுந்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபரை யோர்க் பிராந்தியக் காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.
ஒன்றாரியோவின் வட பிராந்தியத்தில் உலங்குவானூர்தி ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்த மாகாணக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.



பழங்களிலேயே அதிகளவு சத்துக்களை கொண்ட அத்திப் பழத்தை தினசரி உட்கொண்டு வந்தால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம்.
இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக கனடா அறிவித்துள்ளது.