Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பீகார் தேர்தல் முடிந்ததும் மத்திய மந்திரிசபையில் மாற்றம்: பிரதமர் மோடி திட்டம்

Posted: 27 Sep 2015 11:19 PM PDT

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு கடந்த ஆண்டு மே மாதம் 26–ந்தேதி பதவி ஏற்றது. மோடி மந்திரி சபையில் மிக குறைவான அமைச்சர்களே இடம் பெற்றுள்ளனர். சில மூத்த அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்களை கவனித்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தன் மந்திரிகளை அழைத்து பேசி,

ஹஜ் யாத்திரை முடித்து திரும்பியபோது படகு வெடித்தது: மாலத்தீவு அதிபர் உயிர் தப்பினார் - மனைவி காயம்

Posted: 27 Sep 2015 11:04 PM PDT

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் வந்த படகு திடீரென்று கடலில் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினா நகரங்களுக்கு சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றிய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் தனது மனைவியுடன் விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தார்.

திருப்பதியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

Posted: 27 Sep 2015 10:14 PM PDT

திருப்பதி திருமலையில் கபிலதீர்த்த நீர்வீழ்ச்சி மேல் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வருபவர்கள் இங்குள்ள தடாகத்தில் குளிப்பது உண்டு. மேலும் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் இளைஞர்கள் இந்த தடாகத்தில் நீச்சல்

கோழிக்கோடு அருகே 6 பேரால் கற்பழிக்கப்பட்ட பெண் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி

Posted: 27 Sep 2015 10:13 PM PDT

வங்காள தேசத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மே மாதம் 28–ந்தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோழிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை கற்பழித்த 6 பேரை கைது செய்தனர்.

கேரள அரசு இணையதளம் முடக்கம்: சைபர் குற்றங்களை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை - ரமேஷ்சென்னிதலா தகவல்

Posted: 27 Sep 2015 10:09 PM PDT

கேரள மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளம் திடீரென்று முடங்கியது. அதன் முகப்பு பக்கத்தில் இந்திய தேசிய கொடி எரிந்துகொண்டிருப்பது போலவும், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷங்கள் எழுப்பப்படுவது போலவும் படங்கள் காணப்பட்டன.

ஆந்திராவில் விவசாயிகள் தற்கொலைக்கான காரணம் அறிய அதிகாரிகள் குழு: சந்திரபாபு நாயுடு உத்தரவு

Posted: 27 Sep 2015 10:03 PM PDT

ஆந்திராவில் கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். கடந்த வாரம் மட்டும் 5 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்வதற்கான உண்மையான காரணத்தை

வங்கியில் இருப்பு இருக்கும்போது வீரபத்ரசிங் பங்களாவை சீரமைக்க ரூ.6 கோடி கடன் வாங்கியது ஏன்? சி.பி.ஐ. கேள்வி

Posted: 27 Sep 2015 10:02 PM PDT

இமாச்சலபிரதேச முதல்– மந்திரியாக பதவி வகித்து வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான வீரபத்ரசிங், கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் மத்திய மந்திரியாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.6 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆந்திரா அருகே மணப்பெண் விஷம் குடித்து தற்கொலை

Posted: 27 Sep 2015 09:18 PM PDT

ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த ஒந்தலவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பத்ரா. விவசாயி. இவருடைய மகள் வசந்தா (வயது 24). இவர், எம்.பி.ஏ. படித்து விட்டு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

பீகார் சட்டசபை தேர்தல் ஏற்பாடு: தலைமை தேர்தல் கமிஷனர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

Posted: 27 Sep 2015 08:55 PM PDT

பீகார் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 12-ந்தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பீகார் மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நேற்று 2 நாள் பயணமாக பீகார் சென்றார்.

சி.பி.ஐ. அதிரடி சோதனை: என்னிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை - வீரபத்ரசிங் அறிவிப்பு

Posted: 27 Sep 2015 08:51 PM PDT

இமாச்சலபிரதேச முதல்-மந்திரியான வீரபத்ர சிங், முன்பு மத்திய மந்திரியாக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது மகளின் திருமணம் நடந்தது.

கேரளாவில் சுகாதார திட்டத்துக்கு ரூ.100 கோடி - மாதா அமிர்தானந்தமயி வழங்கினார்

Posted: 27 Sep 2015 08:26 PM PDT

கேரள மாநிலம் கொல்லம் அருகே வள்ளிக்காவு என்ற இடத்தில் மாதா அமிர்தானந்தமயி 62-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது. அப்போது அவர் கேரளாவில் கழிவறை கட்டவும், சுகாதார திட்டங்களுக்கும் ரூ.100 கோடி அளிக்கும் உறுதி சான்றிதழை முதல்-மந்திரி உம்மன் சாண்டியிடம் அமிர்தானந்தமயி வழங்கினார்.

துடைப்பத்தை வைத்து நாடகம் நடத்தும் கெஜ்ரிவாலுக்கு யதார்த்தம் தெரியவில்லை: பா.ஜ.க. கடும் தாக்கு

Posted: 27 Sep 2015 08:22 PM PDT

போஸ்டர்களிலும், போட்டோக்களிலும் போஸ் கொடுத்து கொண்டு, துடைப்பத்தை வைத்து நாடகம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவால் முதலில் இந்த மனநிலையை விட்டு வெளியேவந்து பின்னர் யதார்த்தத்தை பற்றி விமர்சிக்கட்டும் என மத்திய கலாசாரத்துறை மந்திரி மகேஷ் ஷர்மா கூறியுள்ளார்.

அக்டோபர் 1-ந்தேதி முதல் வேலை நிறுத்தம்: உள்துறை மந்திரியுடன் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சந்திப்பு

Posted: 27 Sep 2015 07:41 PM PDT

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என லாரி, பஸ், கார் உள்ளிட்ட வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை: இந்தியா-இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி

Posted: 27 Sep 2015 07:34 PM PDT

இந்தியா-இலங்கை இடையேயான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பயிற்சி யுக்திகளை பரிமாறிக் கொள்ளும் வகையிலும் இரு நாடுகளும் பங்கேற்கும் கூட்டு ராணுவ பயிற்சி நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 2 வாரங்கள் நடைபெறுகிறது. புனேயில் உள்ள ஆந்த் ராணுவ முகாமில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.

எம்.பி.க்கள் சம்பளத்தை உயர்த்த 3 நபர்கள் சம்பள கமிஷன்: மத்திய அரசு திட்டம்

Posted: 27 Sep 2015 07:27 PM PDT

அரசியல் சாசனத்தின் பிரிவு 106-ன் கீழ், நமது நாட்டில் எம்.பி.க்கள் சம்பளம் 1954-ம் ஆண்டு இயற்றப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம், படிகள், ஓய்வூதிய சட்டத்தின்படி நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது எம்.பி.க்களுக்கு அடிப்படை சம்பளமாக மாதம் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.

நேதாஜி தொடர்பான ஆவணங்களை உடனே வெளியிடுங்கள்: பிரதமர் மோடிக்கு நேதாஜியின் மகள் வேண்டுகோள்

Posted: 27 Sep 2015 07:21 PM PDT

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியவருமான நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் மரணம் தொடர்பாக இன்றளவும் மர்மம் நீடித்து வருகிறது. 1945-ம் ஆண்டு தைவானில் ஏற்பட்ட விமான விபத்தில் அவர் உயிரிழந்தார் என கூறப்பட்டது. எனினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

கேரள அரசு இணையதளம் முடக்கம்: பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் கைவரிசை

Posted: 27 Sep 2015 03:46 PM PDT

பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் கேரள அரசு இணையதளத்தை ஹேக் செய்து முடக்கியுள்ளனர். நேற்று இரவு பாக்கிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்களால் 'www.keralagov.in' என்ற கேரள அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் முக்கப்பட்டுள்ளது. அதை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமாநில

ஜம்மு-காஷ்மீரில் இணையதள சேவைக்கான தடை நீக்கம் - அரசு நடவடிக்கை

Posted: 27 Sep 2015 02:10 PM PDT

ஜம்மூ-காஷ்மீரில் சமூக விரோத குழுக்கள் பொது மக்கள் மத்தியில் வன்முறையை பரப்பலாம் என்ற காரணத்தால் கடந்த இரண்டு நாட்களாக முடக்கப்பட்ட இணையதள சேவை நேற்று இரவு முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததுள்ளது. தற்போது பி.எஸ்.என்.எல். பிராட் பிராண்ட் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில்

புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது - மத்திய அரசுடன் செப். 29-ல் பேச்சுவார்த்தை

Posted: 27 Sep 2015 12:39 PM PDT

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரி ஆசிய அளவில் புகழ்பெற்றது. இந்த கல்லூரியின் புதிய தலைவராக மோடியின் தீவிர ஆதரவளாரும் பா.ஜனதாவை சேர்ந்தவருமான டி.வி. நடிகருமான கஜேந்திர சவுகானை மத்திய அரசு நியமித்தது.

மினா நெரிசலில் சிக்கி பலியான யாத்ரீகர்களின் எண்ணிக்கை 1090 ஆக உயர்வு: சுஷ்மா சுவராஜ்

Posted: 27 Sep 2015 10:31 AM PDT

ஹஜ் யாத்திரையின் நிறைவுக்கட்டமாக மினா நகரில் சாத்தான் மீது கல் எறியும் சம்பிரதாயத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்திய யாத்ரீகர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™