Tamil Star |
- ஒன்ராறியோ ஏரியில் காணாமல் போன நபரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர்
- மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனத்திற்கு காவல்த்துறை வலைவீச்சு
- கார் ஒன்று தலைகீழாக உருண்டு பள்ளத்தில் விழுந்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது
- Vaughan பகுதியில் கோர விபத்து சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு
- பிரம்டனில் தாக்குதல் மற்றும் கத்திக்குத்துக்கு உள்ளான நபர் மருத்துவமனையில்
- சுயாதீன ஆணைக்குழுக்களின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது
- ஆழ்ந்த தூக்கத்தை தரும் உணவுகள்!
| ஒன்ராறியோ ஏரியில் காணாமல் போன நபரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் Posted: 27 Sep 2015 08:55 PM PDT
அந்த சிறிய ரகப் படகு இன்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்ட நிலையிலேயே அந்த படகோட்டியை தேடும் பணிகள் முன்னெடுக்க்பபட்டுள்ளன. இந்த தேடுதல் பணியில் காவல்த்துறையினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொரன்ரோ காவல்த்துறையின் கடல்வளப் பிரிவினர் மற்றும் உலங்கு வான்னூர்தி தேடுதல் பிரிவினர் ஆகியோரும் இந்த தேடுதல் பணிக்கு தமது உதவிகளை வழங்கி வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. அதேவேளை தற்போது தேடுதல் பணிகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், இரவு இந்த தேடுதல் பணி நிறுத்தப்பட்டுள்ளதுடன், நாளை திங்கட்கிழமை காலை 7 மணிக்கு மீண்டும் தொடரப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். The post ஒன்ராறியோ ஏரியில் காணாமல் போன நபரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனத்திற்கு காவல்த்துறை வலைவீச்சு Posted: 27 Sep 2015 07:48 PM PDT
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் சந்திப்புப் பகுதி ஒன்றில் மிதிவண்டியைச் செலுத்திச் சென்ற பெண் ஓட்டுனர் ஒருவரை பேருந்து ஒன்று மோதித் தள்ளியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Annette மற்றும் Keele வீதி பகுதியில் அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனத்தால் மோதப்பட்ட அந்த பெண்ணின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவரை மோதித் தள்ளிய அந்த வாகனம் சம்பவ இடத்தில் தரித்து நிற்காது, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. விபத்துடன் தொடர்புடைய அந்த வாகனத்தை தேடிவரும் காவல்த்துறையினர், இந்த சம்பவம் தொடர்பில் சாட்சியாளர்கள் யாரும் இருந்தால் அவர்களை காவல்த்துறையினருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். The post மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனத்திற்கு காவல்த்துறை வலைவீச்சு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கார் ஒன்று தலைகீழாக உருண்டு பள்ளத்தில் விழுந்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது Posted: 27 Sep 2015 07:33 PM PDT
இந்த சம்பவம் இரவு இடம்பெற்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நள்ளிரவுக்கு சற்றுப் சற்றுப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை , Courtney Park Drive பகுதியின் நெடுஞ்சாலை410 இன் வடக்கு நோக்கிய தடத்திற்கு தாம் வரவழைக்கப்பட்டிருந்தாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அங்கு கார் ஒன்று தலைகீழாக உருண்டு பிரண்டு நெடுஞ்சாலை ஓராமாக இருந்த பள்ளத்தினுள் விழுந்து கிடந்ததாகவும், எனினும் அதிஸ்டவசமாக அதில் இருந்த பெண் காயங்கள் எதுவும் இன்றி காரில் இருந்து வெளியேறியிருந்தாகவும் காவல்த்துறையினர் விபரித்துள்ளனர். எனினும் சம்பவ இடத்தில் வைத்தே குறித்த காரைச் செலுத்திச் சென்ற பெண் கைது செய்யப்பட்டள்ளார். அத்துடன் விபத்துத் தொடர்பிலும் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். The post கார் ஒன்று தலைகீழாக உருண்டு பள்ளத்தில் விழுந்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Vaughan பகுதியில் கோர விபத்து சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு Posted: 27 Sep 2015 02:57 PM PDT
காயமடைந்த நால்வரில் ஒருவர் உயிராபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவனுக்கு ஒன்பது வயது என்றும், மற்றையவர் 65 வயது ஆண் நபர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Kleinburg அருகில் Kirby வீதி மற்றும் Kipling அவனியூச் சந்திப்புப் பகுதியில் இன்று பிற்பகல் 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், விபத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட வாகனங்கள் தொடர்புபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிற்றூர்தி,கறுப்பு நிற SUV என்பவற்றுடன் மற்றுமொரு வாகனம் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிற்றூர்தியில் மூன்று பிள்ளைகள் உட்பட நான்கு பேர் இருந்ததாகவும், விபத்தை அடுத்து பெரும் சவால்களை எதிர்கொண்டு தீயணைப்புப் படையினர் அதில் இருந்தவர்களை வெளியில் கொண்டு வந்திருந்தனர் என்றும் அதிகாரி ஒருவர் விபரித்துள்ளார். சம்பவ இடத்தில் காவல்த்துறையினர் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை நேரில் பார்த்தவர்கள் அது தொடர்பில் தங்களுக்கு தகவல்களைத் தெரிவிக்குமாறும் காவத்த்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். The post Vaughan பகுதியில் கோர விபத்து சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரம்டனில் தாக்குதல் மற்றும் கத்திக்குத்துக்கு உள்ளான நபர் மருத்துவமனையில் Posted: 27 Sep 2015 12:17 PM PDT
குறித்த நபர் இனம் தெரியாத நபர்கள் சிலரால் தாக்கப்பட்டார் என்றும், இந்த சம்பவம் பிரம்டனில் உள்ள Ridgefield Court இல் உள்ள அவரது விட்டில் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த நபர் 52 வயது ஆண் என்றும்,அவர் மீது அந்த இனம் தெரியாத நபர்கள் அடித்தும், கத்தியால் குத்தப்பட்டும் தாக்குதல் நடாத்தியுள்ளனர் என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த நபரை உடனடியாகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் பின்னர் உலங்கு வான்னூர்தி மூலம் மருத்துவ மையத்திற்கு கொண்டுசென்றிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மருத்தவமனையில் அவர் உயிராபத்தான நிலையிலேயே தொடர்ந்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவேளை இந்த சம்பவம் தொடர்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையான சந்தேக நபர்களைக் காவல்த்துறையினர் கைது செய்ய வேண்டிய நிலையில் உள்ளது என்றும், எனினும் காவல்த்துறையினர் இது தொடர்பில் தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. The post பிரம்டனில் தாக்குதல் மற்றும் கத்திக்குத்துக்கு உள்ளான நபர் மருத்துவமனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சுயாதீன ஆணைக்குழுக்களின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது Posted: 27 Sep 2015 12:10 PM PDT
தம்மால் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தின் செலவீனங்களுக்காக 146.5 பில்லியன் டொலர்களை எதிர்வரும் நான்கு வருடங்களில் தம்மால் ஏற்பாடு செய்யமுடியும் எனவும், அதேவேளை வரவு செலவுத் திட்டதினையும் சமப்படுத்த முடியும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் நான்காவது வருடத்தின் இறுதியில் நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் ஒரு மில்லியன் டொலர் உபரித் தொகையினை தம்மால் ஏற்படுத்த முடியும் எனவும் லிபரல் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவீனங்களை கட்டுப்படுத்துவதன் மூலமும், சில வரித் தடுப்பு விதிகளை நீக்குவதன் மூலமும், வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வதன் மூலமும் இந்த நிதிமூலத்தினை ஏற்படுத்த முடியும் எனவும் அது தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமது தம்முடைய இந்த திட்டங்கள் நிச்சயம் வெற்றியளிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள லிபரல் கட்சியின் பொருளாதார விமர்சகரும், வேட்பாளரும், முன்னாள் றோயல் வங்கி தலைமை பொருளியல் நிபுனருமான ஜோன் மக்கலம், தமமுடைய இந்த திட்டங்கள் அனைத்தும கனேடிய மத்திய வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் அண்மைய தகவல்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். The post சுயாதீன ஆணைக்குழுக்களின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆழ்ந்த தூக்கத்தை தரும் உணவுகள்! Posted: 27 Sep 2015 07:59 AM PDT
அலுவலகப்பிரச்சனை, வீட்டுக்கவலை என பல பிரச்சனைகளால் தூக்கம் பாதிக்கப்பட்டாலும், உணவுகளும் ஒருவகையில் காரணமாக அமையும். எனவே, இரவில் ஆழ்ந்த உறக்கத்தை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடுங்கள். பாதாம் பாதாமில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது நல்ல தூக்கத்தைப் பெறவும், தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யவும் உதவும். மேலும் இதில் உள்ள புரோட்டீன் தூக்கத்தின் போதும் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். எனவே இரவில் தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் 2-3 பாதாம் பருப்புகளை சாப்பிடுங்கள். முக்கியமாக இந்த பாதாம் உப்பு சேர்க்காததாக இருக்க வேண்டும். பால்பொருட்கள் பால் பொருட்களான சீஸ், பால் மற்றும் தயிர் போன்றவற்றில் தூக்கத்தை தூண்டும் ட்ரிப்டோபேன் உள்ளது. எனவே இதனை இரவில் சாப்பிட்டால், நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். முட்டை முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இதனை இரவில் சாப்பிட்டால், நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். மேலும் உங்களுக்கு உயர் கொலஸ்ட்ரால் இருந்தால் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது.
செர்ரி இரவில் படுக்கும் முன் ஒரு கையளவு செர்ரிப் பழங்களை சாப்பிட்டால், இரவில் இடையூறு இல்லாத தூக்கத்தைப் பெறலாம். ஏனெனில் செர்ரிப் பழங்களில் செரரோனின் உற்பத்தியை அதிகரிக்கும் கார்போஹைட்ரேட் உள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடலாம்.
The post ஆழ்ந்த தூக்கத்தை தரும் உணவுகள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

Ajax இற்கு அருகில் ஒன்ராறியோ ஏரியில் சிறிய ரக படகு ஒன்று கைப்பற்றப்பட்ட நிலையில், படகோட்டியை தேடும் பணியில் காவல்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மிதிவண்டி ஓட்டுனர் ஒருவரை மோதி விட்டுத் தப்பிச் சென்ற வாகனம் ஒன்றை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.
மிசிசாகா பகுதியில் நெடுஞ்சாலை 401 இல் கார் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரைக் கைது செய்திருப்பதாக ஒன்ராறியோக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Vaughan பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில் ஒரு சிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் நால்வர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரம்டனில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில், அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் செலவீனங்களுக்காகவும், வரவு செலவுத் திட்டத்தினை சமப்படுத்தும் வகையில் தம்மால் மேலதிகமாக 146 மில்லியன் டொலர் நிதியினை ஈட்டமுடியும் என லிபரல் கட்சி தெரிவித்துள்ளது.
இரவில் சரியாக தூங்கவில்லையென்றால் உடல் அசதி, கண்ணில் கருவளையம் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம்.

