Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஆறு பேருடன் சென்ற கடல் விமானம் விபத்து

Posted: 24 Aug 2015 02:22 PM PDT

7u

7uஆறு பேருடன் சென்ற கடல் விமானம் ஒன்று கியூபெக்கின் வட பிராந்திய காட்டுப் பகுதியில் வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேர்கறோனஸ்(Bergeronnes) எனப்படும் குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இந்த விமானம் வீழ்ந்ததாக கியூபெக் மாகாண காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்தஅந்த விமானம் காணாமல் போனதான தகவல் தமக்கு நேற்று மாலையில் கிடைத்ததாகவும், மாகாண விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படும் போதிலும், இந்த விபத்தினால் ஏற்பட்ட சேதார விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.7u

விமானம் வீழ்ந்த இடத்தினை சென்றடைவதற்கு தரை மார்க்க வீதிகள் எவையும் கிடையாது எனவும், கனேடிய விமானப் படையின் வான்குடை வீரர்களின் உதவியுடனேயே சம்பவ இடம் இனங்காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனேடிய போக்குவரத்து பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், விமானம் வீழ்ந்த இடத்துக்கு அதிகாரிகள் சென்றடைவதற்கான உதவிகளை விமானப்படையினரும், இராணுவத்தினரும் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
விமானத்தில் பயணித்த ஆறு பேரில் நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போயுள்ள இருவரைத் தேடும் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆறு பேருடன் சென்ற கடல் விமானம் விபத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரம்டனில் உள்ள ஏரியில் வீழ்ந்த நபர் சடலமாக மீட்பு

Posted: 24 Aug 2015 12:16 PM PDT

hj

hjபிரம்டனில் உள்ள சிறிய ஏரி ஒன்றினுள் நேற்று இரவு தவறி வீழ்ந்து மூழ்கிய நபர் ஒருவரை பீல் பிராந்திய காவல்த்துறையினர் தொடர்ந்து தேடி வந்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரம்டன் சிவிக் மருத்துவமனைக்கு தெற்கே உள்ள Professor's Lake இல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு நபர்கள் ஏரி ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த வேளையில், ஒருவர் தவறுதலாக ஏரியினுள் வீழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவருக்குமே நீச்சல் தெரியாது எனவும், கரையில் இருந்த மற்றையவர் நீரினுள் வீழ்ந்தவரை மீட்க முடியாத நிலையில் 911 அவசர சேவைக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.hj

அதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்த்துறையினரும் மீட்பு படையினரும் நேற்று இரவு முழுவதும் தேடுதல்களில் ஈடுபட்டதுடன், இன்றும் தேடுதல்களை தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையிலேயே நீரினுள் வீழ்ந்து காணாமல் போன குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவர் பிரம்டன் பகுதியில் வசித்துவரும் 22 வயதான Satvir Singh என்பவர் எனவும், அவர் சர்வதேச பாடசாலை மாணவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரம்டனில் உள்ள ஏரியில் வீழ்ந்த நபர் சடலமாக மீட்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோவின் Fairbank பகுதியில் இன்று காலையில் கொள்ளைச் சம்பவம்

Posted: 24 Aug 2015 12:11 PM PDT

yh

yhரொரன்ரோவின் Fairbank பகுதியில் உள்ள தொடரூந்து நிலைய வர்த்தக மையம் ஒன்றில் இன்று காலையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Dufferin Street ற்கு கிழக்காக, இலக்கம் 1763 Eglinton Avenue Westஇல் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நள்ளிரவுக்கு பின்னர் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டினை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரொரன்ரோ காவல்த்துறையினர், இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.yh

கொள்ளையர்கள் கத்தி முறையிலேயே இந்த குற்றச் செயலை புரிந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

கொள்ளையிடப்படட பொருட்கள் அல்லது பணம் தொடர்பிலோ அல்லது, கைது செய்யப்படட சந்தேக நபர்கள் தொடர்பிலோ மேலதிக விபரங்கள் எவையும் காவல்த்துறையினரால் உடனடியாக வெளியிடப்படவில்லை.

The post ரொரன்ரோவின் Fairbank பகுதியில் இன்று காலையில் கொள்ளைச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தோல்பிரச்சனைகளுக்கு மருந்தாகும் உணவுகள்

Posted: 24 Aug 2015 08:24 AM PDT

ytu

ytuசத்துக்குறைபாடுகள், சுத்தமின்மை, மற்றும் பரம்பரைக் காரணங்களால் தோல் நோய் ஏற்படலாம்.

தேமல் போன்ற பிரச்சனைகளுக்கு விட்டமின் குறைபாடே காரணம். ஆரஞ்சுத் தோல், வெள்ளரி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை தடவிக் கொள்வதன் மூலம் தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

எலுமிச்சை சாறு, முட்டைக்கோஸ் இலை, ஆரஞ்சு, தக்காளி, வெள்ளரி, ஆப்பிள் சாறு, அரைக்கீரை சாறு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தோல் பகுதியிலும் தடவலாம். விட்டமின் பி2 குறைபாட்டின் காரணமாக தோலில் கரும்புள்ளிகள் தோன்றும். விட்டமின் பி6 குறைபாட்டால் தேமல், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

நைசின் சத்துக் குறைபாட்டினால் முகப்பருக்கள் ஏற்படும். அயோடின், கோபால்ட், பி 12 குறைபாட்டால் தோலில் பல பிரச்சனைகள் உண்டாகிறது.ytu

உணவில் ரவை, சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்பவர்களையும் அதிகளவில் பாதிக்கிறது.

ரத்த ஓட்டம் குறைந்தால் தோல் வறட்சி உண்டாகும். இது போன்ற பிரச்சனைகளைத் தடுக்க முழு தானியங்கள், உலர்ந்த பருப்புகள், பழங்கள் மற்றும் காய்கள், பால் எடுத்துக்கொள்ளலாம்.

வெஜிடபிள் ஆயில் மற்றும் கடலை எண்ணெய், புரூட் கேசரி,பிரெட் சப்பாத்தி,அரைக்கீரை கூட்டு ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம்.

விட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தோல் பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.

The post தோல்பிரச்சனைகளுக்கு மருந்தாகும் உணவுகள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோர்த் யோர்க் குடியிருப்புப் பகுதியில் தீ சம்பவம்

Posted: 23 Aug 2015 03:11 PM PDT

j

jநோர்த் யோர்க் குடியிருப்புப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீ சம்பவத்தினால் வீடு ஒன்று பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

Yonge வீதி மற்றும் நெடுஞ்சாலை 401 இற்க அருகில் உள்ள Franklin அவனியூப் பகுதியில் உள்ள வீடு ஒன்றே அவ்வாறு சேதமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

தீப்பற்றியதை அடுத்து குறித்த அந்த வீட்டிற்கு பிற்பகல் 5.30 மணியளவில் தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் விவேகமாக செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர் என்றும், எனினும் பெரும்பகுதிக்கு பரவியிந்த தீயினால் வீடு பாரிய சேதத்திற்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.j

இந்த தீயணைப்பு நடவடிக்கைக்காக சுமார் 20 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்தாகவும், தீயணைப்பி்ற்கு பெருமளவு நீர் பயன்படுத்தப்பட்டதாகவும் அதற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டில் குழாய்கள் பொருத்தும் வேலை நடைபெற்றுக்கொடிந்த போதே வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ பற்ற ஆரம்பித்ததாகவும், பின்னர் அந்த தீ விரைவாக மாடப்பகுதி வரையில் வியாபித்து பரந்து விட்டது என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை தீயணைப்புப் படையினர் தீ சம்பவம் இடம்பெற்ற அந்த வீட்டின் பகுதியை இரவு முழுவதும் கண்காணிக்கவுள்ளனர்.

The post நோர்த் யோர்க் குடியிருப்புப் பகுதியில் தீ சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™