Tamil Star |
- இளம் பெண் துப்பாக்கி முனையில் கடத்தல் – இருவர் கைது
- ரொரன்ரோவில் வங்கிக் கொள்ளையர் ஏற்படுத்திய வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம்
- பிரம்டன் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
- ஈராக்கில் கனேடிய போர் விமானங்கள் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை அறிக்கை
- கழக விளையாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அரசாங்க நிதி உதவியை எதிர்பார்க்க முடியாது
- Christine Elliot மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு
- மிசிசாகாவில் விபத்து ஒருவர் பலி
| இளம் பெண் துப்பாக்கி முனையில் கடத்தல் – இருவர் கைது Posted: 29 Aug 2015 09:41 PM PDT
Barrie நகர மத்திய பகுதியில், Dunlop Street East இல் உள்ள Metzger Studio வில் இன்று முற்பகல் 11.50 அளவில் இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கிருந்த 18 வயதுக்கும் குறைவான இளம் பெண் ஒருவரை ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து கடத்தியதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொட்பில் விசாரணைகளையும் தேடுதல்களையும் மேற்கொண்டு வந்த காவல்த்துறையினர், கடத்தப்பட்ட பெண்ணை பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும், சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாகவும் இன்று பிற்பகல் 4.30 அளவில் அறிவித்துள்ளனர். The post இளம் பெண் துப்பாக்கி முனையில் கடத்தல் – இருவர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோவில் வங்கிக் கொள்ளையர் ஏற்படுத்திய வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம் Posted: 29 Aug 2015 08:31 PM PDT
Wincott Drive மற்றும் Eglinton Avenue West பகுதியில் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொள்ளை முயற்சி தொடர்பில் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்த்துறையினர் சந்தேக நபரை கைது செய்த போதே அந்த நபர் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்ததாக கூறப்படுகிறது. உடனடியாகவே முற்பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த வங்கிக் கிளை இருந்த கட்டிடத் தொகுதியில் இந்த அனைவரையும் வெளியேற்றிய காவல்த்துறையினர், அங்கு வெடிகுண்டு இல்லை என்பதனை உறுதிப்படுத்தும் வரையிலும் அந்த பகுதியைச் சுற்றி பாதுகாப்பு தடுப்புக்களை அமைத்திருந்தனர். தீவிர சோதனைகளை மேற்கொண்ட சிறப்பு படையினர் அங்கு அவ்வாறு வெடிகுண்டுகள் எவையும் இல்லை என்பதனை மாலை ஏழு மணியளவில் உறுதிப்படுத்தினர். The post ரொரன்ரோவில் வங்கிக் கொள்ளையர் ஏற்படுத்திய வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரம்டன் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர் மருத்துவமனையில் அனுமதி Posted: 29 Aug 2015 08:26 PM PDT
Kennedy Road North மற்றும் Queen Street East பகுதியில் இந்த சமபவம் இடம்பெற்றதாக பீல் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். கத்திக் குத்துக்கு இலக்கான 26 வயது ஆண் ஒருவர் ஆபத்தான காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதனை பீல் பிராந்திய அவசர மருத்துவ பிரிவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என நம்பப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்த்துறையினர் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். The post பிரம்டன் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈராக்கில் கனேடிய போர் விமானங்கள் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை அறிக்கை Posted: 29 Aug 2015 11:03 AM PDT
மத்திய கிழக்க நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான மேற்குலக நாடுகளின் தாக்குதல்களில் பொதுமக்களும் பலியாகி வருவதான குற்றச்சாட்டுகள் வலுத்துவருகின்றனமை குறிப்பிடத்தக்கது. ஈராக் மற்றும் சிரியாவில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கும் அமெரிக்கா இவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. அந்த விசாரணைகளின் பிரகாரம், கனடாவின் CF-18 ரக போர் விமானங்கள் ஈராக்கில் மேற்கொண்ட பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளின் போதும், அந்த பகுதியில் பொதுமக்கள் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒரு தினத்தில் ஈராக்கின் மோசூல் பகுதியில் மட்டும் பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் இணைந்து 19 குண்டுவீச்சு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அந்த விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மோசூல் பகுதியில் யூன் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குல்களில் பொதுமக்களும் உயிரிழந்துள்ளமை குறித்து கனேடிய இராணுவத் தரப்புக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அமெரிக்காவி்ன் கூட்டு நடவடி்க்கை பணியகம் தெரிவித்துள்ளது. ஈராக்கிய படைகளுக்கும், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெற்றுவந்த வேளையிலேயே இந்த குண்டுவீச்சு தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ள போதிலும், கனடாவை தவிர்த்து வேறு எந்த நாடுகள் இந்த குண்டுவீச்சில் தொடர்பு பட்டுள்ளன என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் அந்த தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் ஈடுபடவில்லை எனவும் அமெரிக்க கூட்டு நடவடிக்கை தலைமை பணியகத்தின் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார். The post ஈராக்கில் கனேடிய போர் விமானங்கள் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை அறிக்கை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கழக விளையாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அரசாங்க நிதி உதவியை எதிர்பார்க்க முடியாது Posted: 29 Aug 2015 10:53 AM PDT
கனடாவில் இன்னமும் பல சிறுவர்கள் வறுமையை எதிர்நோக்கியுள்ள நிலையில், இவ்வாறான கழக விளையாட்டுகளுக்கு மக்களின் வரிப்பணத்தினை செலவிட முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார். கியூபெக் நகரம் மற்றும் மொன்றியல் ஆகிய பகுதிகளில் செயற்பட்டுவந்த பாரிய விளையாட்டு கழகங்களை மீண்டும் சிறந்த நிலைக்கு கொண்டுவருவது தொடர்பிலான விவாதங்கள் தற்போது கியூபெக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், Tom Mulcair இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். கியூபெக்கிற்கான தேர்தல் பரப்புரை பயணத்தின் போது இதனைத் தெரிவித்துள்ள அவர், விளையாட்டு ஆர்வலர்கள் இவ்வாறான திட்டங்களுக்கான நிதி உதவியை மத்திய அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க கூடாது என குறிப்பிட்டுள்ளார். தனியார் துறைகள் ஒன்றிணைந்து அந்தந்த நகரங்களுக்கான திறன்வாய்ந்த விளையாட்டுக் குழுக்களை உருவாக்குவதே சிறந்த வினைத்திறனுள்ள நடவடிக்கையாக இருக்கும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார். நாட்டில் இன்னமும் பல ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பசியுடன் பாடசாலைக்கு செல்லும் நிலையில், பல பில்லியன் டொலர்கள் பெறுமானமுள்ள விளையாட்டு கழகங்களுக்கான வரிப்பணத்தினை செலவிடுவது நியாயமானதாக இருக்காது எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். The post கழக விளையாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அரசாங்க நிதி உதவியை எதிர்பார்க்க முடியாது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Christine Elliot மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு Posted: 29 Aug 2015 10:36 AM PDT
கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிட்ட அவர், கடந்த மூன்று மாதங்களின் முன்னர் அதற்கான தேர்தலில் தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது. அந்த தோல்வியின் பின்னர் மாகாணசபை அமர்வுகளிலும் கலந்துகொள்ளாத அவர், தற்போது ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் துறப்பதாக அறிவித்துள்ளார். ஒன்ராறியோவின் Whitby-Oshawa தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராக இருந்துவந்த அவர், அந்த பதவியில் இருந்து விலகுவதான முடிவினை அறிக்கை ஒன்றின் வாயிலாக வெளியிட்டுள்ளார். கட்சியினை தலைமைதாங்குவதற்கு தான் முடிவு செய்திருந்த போதிலும், கட்சி உறுப்பினர்கள் வேறுவிதமான தேர்வினை மேற்கொண்டுள்ளதாகவும், கட்சி உறுப்பினனர்களின் முடிவினை தான் முற்றுமுழுதாக மதிப்பதாகவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். தனது பதவி விலகல் உடனடியாகவே நடப்புக்கு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், இவ்வாறு பதவி விலகுவது என்ற முடிவு இலகுவானது இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 2006ஆம் ஆண்டில் இடம்பெற்ற இடைத் தேர்தலின் மூலம் சட்டமன்றத்தினுள் பிரவேசித்த அவர், கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற கட்சித் தலைமைக்கான போட்டியிலும் மூன்றாவது இடத்தினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. The post Christine Elliot மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிசிசாகாவில் விபத்து ஒருவர் பலி Posted: 29 Aug 2015 01:31 AM PDT
இன்று பிற்பகல் 3.45 மணியளவில் Traders Boulevard மற்றும் Brunel வீதிகளுக்க இடையில் Hurontario வீதிப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எனினும் விபத்து தொடர்பான மோலதிக தகவல்களை சம்பவ இடத்தில் இருந்து பெறமுடியவில்லை. ஒரு வாகத்தை ஓட்டிச் சென்ற ஆண் ஓட்டுநர் மோசமான காயத்திற்கு உள்ளான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையிலேயே அங்கு உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் விபத்துக்குள்ளான மற்றைய வாகனத்தை செலுத்திச் சென்றவர் என்று கூறப்படுகிறது. Hurontario வீதியின் இரண்டு பகுதிகளும் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்ததுடன், விபத்து நடந்த இடத்தில் காவல்த்துறையினர் விசாரணைகளை நடத்தி வந்திருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post மிசிசாகாவில் விபத்து ஒருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஒன்ராறியோவின் Barrie பகுதியில் இளம் பெண் ஒருவர் துப்பாகி முனையில் கடத்தப்படட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.

இன்று இரவு பிரம்டன் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்கான ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



மிசிசாகாவில் இன்று பிற்பகல் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும், மோசமான காயங்களுக்கு ஆளான பெண் ஒருவரை மருத்துமனையில் சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.