Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவரை பூட்ஸ் காலால் மிதித்த போலீசார்

Posted: 29 Aug 2015 11:03 PM PDT

ஆந்திராவில் தனியார் பல்கலைக்கழகம் தொடங்க முதல்–மந்திரி சந்திரபாபு முடிவு செய்து உள்ளார். விஜயவாடாவில் உள்ள முதல்–மந்திரி அலுவலகத்தில் நேற்று சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு

2–வது கணவருடன் தொடர்பை அம்பலப்படுத்துவதாக இந்திராணியை மிரட்டியதால் ஷீனா கொல்லப்பட்டாரா?

Posted: 29 Aug 2015 10:52 PM PDT

மும்பையைச் சேர்ந்த டி.வி. பெண் அதிபர் இந்திராணி தான் பெற்ற மகளான ஷீனாவை 2–வது கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் சேர்ந்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் தினமும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த

கள்ளக்காதலி, மகளை வெட்டி, துண்டுத்துண்டாக சூட்கேஸ்களில் அடைத்து, ஆற்றில் வீசிய வங்கி மானேஜர் பிடிபட்டார்

Posted: 29 Aug 2015 10:49 PM PDT

மேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சியோராபுலி நகரின் அருகே பாயும் ஹூக்ளி ஆற்றில் சென்றுகொண்டிருந்த ஒரு படகில் இருந்து ஒருவர் சூட்கேஸ்களை தூக்கி ஆற்றுநீரில் போட்டுக் கொண்டிருப்பதை கண்டு சந்தேகப்பட்ட சிலர் அவரை மடக்கிப் பிடித்தனர்.

நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் 13 சட்டங்களை இணைத்து புதிய உத்தரவு: காங்கிரஸ் எதிர்ப்பு

Posted: 29 Aug 2015 08:11 PM PDT

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு கைவிட்டது. 13 சட்டங்களை இணைத்து புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஒன்றை 2013-ம் ஆண்டு கொண்டு

இன்று காலை 11 மணிக்கு வானொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

Posted: 29 Aug 2015 07:50 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுகிழமைகளில் வானொலி மூலமாக 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றி வருகிறார். இம்மாத மன் கி பாத் நிகழ்ச்சி இன்று (30-ம் தேதி) காலை 11 மணிக்கு ஒலிபரப்பாக

வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்புள்ளது: ரகுராம் ராஜன்

Posted: 29 Aug 2015 05:14 PM PDT

வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் மூன்று முறை குறைக்கப்பட்டுள்ளது, இது மேலும் குறைக்கவும் வாய்ப்புள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், மிசோரி மாகாணத்தில் ஒரு கருத்தரங்கில் பங்கேற்க சென்றுள்ள ரகுராம் ராஜன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து 2 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: யோகேந்திர யாதவ் கடும் எதிர்ப்பு

Posted: 29 Aug 2015 05:01 PM PDT

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களான தரமவீர காந்தி, ஹரீந்தர் சிங் கல்சா ஆகியோர், கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான

ஒடிசாவில் பச்சிளங்குழந்தைகள் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு

Posted: 29 Aug 2015 04:53 PM PDT

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தைகளில் மேலும் 5 பேர் பலியானதால், இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

நிதீஷ் குமார், லாலுவுடன் இணைந்து சோனியா காந்தி இன்று பிரசாரம்

Posted: 29 Aug 2015 04:36 PM PDT

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாட்னாவில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவரும் முதல்வருமான நிதீஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ஆகியோருடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் எதிரொலி: இந்திய எல்லையில் பதற்றம் நீடிப்பு - கிராம மக்கள் கோவில்களில் தஞ்சம்

Posted: 29 Aug 2015 04:25 PM PDT

காஷ்மீர் மாநில எல்லையோர பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ நிலைகள் மீதும், எல்லையோர கிராமங்கள் மீதும் குறி வைத்து தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளது. தீவிரவாதிகளை காஷ்மீருக்குள்

ஒடிசாவில் நாத்திகர்களின் வளர்ச்சி 280 சதவீதம் - மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுவாரசியம்

Posted: 29 Aug 2015 03:54 PM PDT

சில நாட்களுக்கு முன் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், 2011ம் ஆண்டு மத அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டது. இதில், இந்தியாவின் மக்கள் தொகை 121.09 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு ஆந்திராவில் முழு அடைப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 29 Aug 2015 03:26 PM PDT

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த கட்சித்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்திருந்தார்.

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் கோரி தொடர் உண்ணாவிரதம்: மேலும் ஒரு முன்னாள் ராணுவ வீரர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 29 Aug 2015 02:35 PM PDT

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் ராணுவத்தினர் நடத்தி வரும் போராட்டம் நேற்று 76-வது நாளை எட்டியது. டெல்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வந்த முன்னாள் ராணுவத்தினர் 4 பேரின் நிலைமை மோசமானதால் ஏற்கனவே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாகாலாந்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

Posted: 29 Aug 2015 02:16 PM PDT

நாகாலாந்து மற்றும் அதன் பக்கத்து மாநிலமான மணிப்பூரில் நாகாலாந்து தேசிய சமூக கவுன்சில்(கப்லாங்) என்ற தீவிரவாத பிரிவினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு எல்லையோரத்தில் உள்ள மியான்மர் நாட்டின் காடுகளுக்குள் சென்று பதுங்கிக் கொள்வது வழக்கம்.

படேல் சமூகத்தினர் குஜராத் மந்திரியுடன் சந்திப்பு

Posted: 29 Aug 2015 12:52 PM PDT

குஜராத் மாநிலத்தில் இடஒதுக்கீடு கேட்டு படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டம் வன்முறையாகவும், சாதி கலவரமாகவும் மாறியதில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. தங்களை ஓ.பி.சி. பிரிவில் சேர்த்து அதிக இடஒதுக்கீடு தரவேண்டும் என ஹார்தீக் படேல் என்ற 21

ஷீனா போரா வழக்கு: மிக்கேல் போராவை கொல்ல திட்டமிட்டது உண்மைதான் என குற்றவாளி ஒப்புதல்

Posted: 29 Aug 2015 10:31 AM PDT

'ஸ்டார் இந்தியா' தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜி. இவருடைய மனைவி இந்திராணி (வயது 43). இவர் '9 எக்ஸ் மீடியா' என்ற தனியார் தொலைக்காட்சியின் நிறுவனர்.

டெல்லி அவுரங்சீப் சாலைக்கு பெயர் மாற்றியது போல அவுரங்காபாத் நகரின் பெயரையும் மாற்ற வேண்டும்: உத்தவ் தாக்கரே

Posted: 29 Aug 2015 10:03 AM PDT

தேசிய தலைநகரான புதுடெல்லியில் உள்ள அவுரங்சீப் சாலைக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் பெயரை சூட்டியதை போல மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத்தின் பெயரை சாம்பாஜி நகர் என மாற்ற வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

ஒரு பதவி ஒரு பென்சன் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும்: போராடும் முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கை

Posted: 29 Aug 2015 08:47 AM PDT

ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தை விரைவில் அமல்படுத்த வலியுறுத்தி டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் ராணுவத்தினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர் நடத்தி வரும் முன்னாள் ராணுவ

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து 2 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

Posted: 29 Aug 2015 07:55 AM PDT

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களான தரமவீர காந்தி, ஹரீந்தர் சிங் கல்சா

சாலை விபத்தில் வாலிபர் இறந்ததால் போலீசாரை தாக்கி காவல் நிலையத்திற்கு தீ வைத்த பொதுமக்கள்

Posted: 29 Aug 2015 07:18 AM PDT

உத்தர பிரதேச மாநிலத்தில், சாலை விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் புறக்காவல் நிலையத்திற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டியோரியா மாவட்டம் ராம்பூர் கர்கானா பகுதியைச் சேர்ந்த வினய் துபே


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™