Tamil Star |
- பிரம்டனில் விபத்து – இருவர் மருத்துவமனையில்
- Barrie பகுதியில் திருடப்பட்ட ஐஸ்கிறீம் வாகனம் Bracebridge பகுதியில் மீட்பு
- நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுவன்
- Brockton Village வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு தண்டம்
- ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களுக்கு பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்ட
- ரொரன்ரோ பெரும்பாகத்தில் பெருமளவிலான ஆசனங்களை எதிர்பாக்கும்
- வியர்வை வெளியேறுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
| பிரம்டனில் விபத்து – இருவர் மருத்துவமனையில் Posted: 26 Aug 2015 08:14 PM PDT
அவர்கள் இருவரும் பதின்ம வயதினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Gore வீதி மற்றும் நெடுஞ்சாலை 50 பகுதியில் அதிகாலை 5 மணிக்கு சற்றுப் முன்னராக இடம்பெற்றுள்ளது. விபத்துத் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post பிரம்டனில் விபத்து – இருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Barrie பகுதியில் திருடப்பட்ட ஐஸ்கிறீம் வாகனம் Bracebridge பகுதியில் மீட்பு Posted: 26 Aug 2015 08:08 PM PDT
செவ்வாய்கிழமை குறித்த ஐஸ்கிறீம் வாகனம் திருடப்பட்டப்பட்டதை அடுத்து காவல்த்துறையினர் தேடுதல் நடவக்கையில் ஈடபட்டிருந்தனர். இந்த நிலையில் புதன் கிழமை காலையில் Bracebridge பகுதியில் குறித்த வகனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தை திருடப்பட்ட இடத்தில் இருந்து 90 கிரோமீற்றர் தூரத்திலேயே வாகனம் கண்டுபிடிக்க்பபட்டுள்ளது. வாகனம் மீட்கப்படுவதற்கு முன்னர், வாகனம் குறிப்பிட்டளவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக காவல்த்துறையினர் கூறியுள்ளனர். வாகனத்தை திருடிச் சென்றிருந்த சந்தேக நபரை தொடர்ந்தும் தேடி வருவதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். The post Barrie பகுதியில் திருடப்பட்ட ஐஸ்கிறீம் வாகனம் Bracebridge பகுதியில் மீட்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுவன் Posted: 26 Aug 2015 03:39 PM PDT
Newcastle பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் புதன் கிழமை காலையில் இது தொடர்பான தகவலை வெளியிட்ட காவல்த்துறையினர், குறிப்பிட்ட எண்ணிக்கையானர்வர்கள் குறித்த அந்த வீட்டில் விருந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அதேநேரம், குறித்த சிறுவன் நீச்சல் தடாகத்தின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டதாக விபரித்துள்ளனர். அதனைக் கண்ட நபர் ஒருவர் உடனடியாக தடாகத்தினுள் குதித்து சிறுவனை மீட்டிருந்தாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர் உடனடியாக சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிக்ச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், உயிராபத்தான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த சிறுவன் தற்போது தேறி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், நீர் நிலை பகுதிகளில் பிள்ளைகள் சுற்றித் திரிவது தொடர்பில் பெற்றோர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். The post நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுவன் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Brockton Village வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு தண்டம் Posted: 26 Aug 2015 03:18 PM PDT
இரண்டு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற இந்த தீவிபத்துச் சம்பவத்தில் அடித்தளத்தில் தங்கியிருத பெண் வாகடகையாளர் ஒருவர் உயிரிழந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. College மற்றும் Dufferin வீதிகளிற்கு அருகில் 189 Sheridan அவனியூப் பகுதியில் அமைந்திருக்கும் குறித்த வீடு கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி அதிகாலையில் தீபற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அந்த வீட்டில் இருந்த எட்டுப்பேரில் ஏழுபேர் தப்பிவிட்டனர் என்றும், கீழ்த் தளத்தில் இந்த 23 வயதான பெண் அசைவற்ற நிலையில், தீக்காயங்ளுக்கு ஆளான நிலையில் மீட்கப்பட்டு பின்னர் அவரிற்கு எற்பட்டிருந்த காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த ரொரன்ரோ தீயணைப்புப் அதிகாரிகள் வீட்டின் பாதுகாப்புக் குறைபாடுகள் பலவற்றைக் கண்டுபிடித்து பட்டியல் இட்டுள்ளதுடன், வீட்டு உரிமையாளர் மீத குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியுள்ளனர். குறித்த வீட்டின் அறைகளை வாடகைக்க விடுவதற்கான சட்ட பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை என்றும்,அதனால் சட்ட விரோதமாகவே அறைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர். விசாரணைகளில் வீட்டு உரிமையாளர் மீதான இந்த குற்றசாசட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், விதிகளை மீறியதற்காக அவர் மீது 75,000 டொலர்கள் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. The post Brockton Village வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு தண்டம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களுக்கு பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்ட Posted: 26 Aug 2015 01:29 PM PDT
நேற்றைய தினம் பழமைவாதக் கட்சியின் ஆதரவினை பெற்ற ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களுக்கு பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர், அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியு்ளளார். ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான தற்போதய அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள பற்றாக்குறையுடன் கூடிய வரவு செலவுத் திட்டத்தினை நடப்பு நிதியாண்டின் இறுதி வரையிலும் கொண்டு செல்லவேண்டியிருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தம்மிடம் மிகச்சிறந்த அனுபவமுள்ள பல நிபுனர்கள் உள்ளதன் காரணமாக, தற்போதய அரசாங்கத்தினது பாதீடு போல அல்லாது தம்முடைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நிறைவானதாக காணப்படும் என்பதில் தாம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். The post ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களுக்கு பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்ட appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோ பெரும்பாகத்தில் பெருமளவிலான ஆசனங்களை எதிர்பாக்கும் Posted: 26 Aug 2015 12:23 PM PDT
லிபரல் கட்சியின் சார்பில் ரொரன்ரோவில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் நேற்றைய தினம் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ள அவர், ரொரன்ரோவில் மிகச்சிறந்த வேட்பாளர் குழாத்தினை கொண்டுள்ளமை குறித்து மிகுந்த மகிழ்ச்சி கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமூகங்களை பிரதிநிதிதுவப்படுத்துவது மட்டுமின்றி நாட்டுக்கு சேவையாற்றுவது தொடர்பிலும் சிறந்த புரிந்துணர்வைகக் கொண்ட மிகப்பலமான வேட்பாளர் குழு ஒன்று ரொரன்ரோவில் அமைந்துள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பெரும்பாலான வாக்காளர்களைக் கொண்டுள்ள ரொரன்ரோ பெரும்பாகத்தில் இருந்தே அதிக அளவு ஆசனங்களை பெற்றுக்கொள்ள அனைத்து பிரதான கட்சிகளும் நம்பிக்கை கொண்டுள்ள நிலையில், அங்கிருந்து லிபரல் கட்சி எத்தனை ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என்பது தொடர்பிலான எதிர்வுகூறல்கள் எதனையும் Justin Trudeau வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரமே நாட்டு மக்களின் தற்போதய முக்கிய கவலைக்குரிய விடயமாக உள்ள நிலையில், தமது கட்சியும் பதவிக்கு வருமானால் வரவு செலவுத் திட்டம் சமப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தினை லிபரல் கட்சித் தலைவரும் முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நடுத்தர வருமானம் பெறும் மக்களிடம் இருந்து வசூலிக்ப்படும் வரியினை குறைத்து, அதிக வருமானம் பெறுவோரிடம் பெறப்படும வரியின் அளவை அதிகரப்பதன் மூலம், செல்வந்தர்களிடம் இருந்து நடுத்தரக் குடும்பங்களுக்கு 3 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். The post ரொரன்ரோ பெரும்பாகத்தில் பெருமளவிலான ஆசனங்களை எதிர்பாக்கும் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வியர்வை வெளியேறுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? Posted: 26 Aug 2015 09:04 AM PDT
வியர்வை வெளியேற்றத்தின் போது, உடலில் மற்றும் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். உடற்பயிற்சி செய்து வியர்வை வெளியேறும் போது மனநிலையை மேம்படுத்தி, சந்தோஷமாக உணர வைக்கும் எண்டோர்பின் ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது. வியர்வை மூலம் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்படுவதால், உடல் சுத்தமாவதோடு, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளும் வெளியேறி சருமமும் பொலிவோடு இருக்கும். வியர்வை அதிகம் வெளியேறினால் சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கலாம். எப்படியெனில் வியர்வையின் மூலம் உடலில் உள்ள உப்புக்கள் வெளியேறி, எலும்புகளில் கால்சியம் தக்க வைக்கப்படும். இதன் மூலம் சிறுநீரகங்களில் உப்பு மற்றும் கால்சியம் படிந்து கற்களாக உருவாவதைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி வியர்வை அதிகம் வெளியேறினால், தண்ணீர் அதிகம் குடிக்க தோன்றும். இப்படி தண்ணீர் அதிகம் குடிப்பதால், சிறுநீரகங்களின் செயல்பாடும் மேம்படும். வியர்வையானது ஆன்டி-பயாடிக்ஸை உடல் முழுவதும் பரப்பி, நுண் கிருமிகளிடமிருந்து நல்ல பாதுகாப்பு அளிக்கிறது. வியர்வை வெளியேறுவதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக இருக்கும். The post வியர்வை வெளியேறுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

பிரம்டனில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Barrie பகுதியில் திருடப்பட்ட ஐஸ்கிறீம் வாகனம் ஒன்றை Bracebridge பகுதியில் இருந்து காவல்த்துறையினர் மீட்டுள்ளனர்.
நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 3 வயது சிறுவன் தற்போது தேறிவருவதாக டுர்ஹாம் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Brockton Village இல் உள்ள வீடு ஒன்று தீப்பற்றிக்கொண்ட சம்பவம் தொடர்பில் அந்த வீட்டின் உரிமையாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், 75,000 டொலார் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலல் புதிய சனநாயக கட்சி ஆட்சி அமைக்குமாக இருந்தால், தமது அரசாங்கம் துண்டுவிழும் தொகையுடன் கூடிய வரவு செலவுத் திட்டத்துடனான பொருளாதார உத்தரவாதங்களை முன்வைக்காது என புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair தெரிவித்துள்ளார்.
ரொரன்ரோ பெரும்பாகத்தில் பெருமளவிலான ஆசனங்களை கைப்பற்ற வேண்டும் என லிபரல் கட்சியின் தலைவர் Justin Trudeau எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
வியர்வை வெளியேறுவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன.