Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருவனந்தபுரத்தில் பிரபல விபசார புரோக்கர் கைது

Posted: 26 Aug 2015 11:02 PM PDT

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து ஹைடெக் விபசாரம் நடப்பதாக பத்தினம்திட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜித் தலைமையிலான போலீசார் அந்த பகுதியை கண்காணித்து வந்தனர். இதில் திருவனந்தபுரம் டெக்னோ பார்க் பகுதியில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் என கூறி விபசாரம் நடப்பது

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காததால் ஓட்டல் தொழிலாளி தீக்குளிப்பு

Posted: 26 Aug 2015 10:50 PM PDT

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது என மத்திய அரசு கைவிரித்து விட்டது. இந்த அறிவிப்பு ஆந்திர மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஓட்டல் தொழிலாளி ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது பெயர் துர்கா பிரசாத் (வயது 50). தைகரம் கிராமத்தை சேர்ந்த

பங்குச்சந்தைகள் ஏற்றம்: வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வு

Posted: 26 Aug 2015 10:12 PM PDT

சீன பங்குச்சந்தைகள் வீழ்ச்சி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்ட காரணங்களால் பங்குவர்த்தகம் அதலபாதாளத்திற்கு சென்றது. நேற்று முன்தினம் சற்று எழுச்சியடைந்த சந்தைகள், நேற்று மீண்டும் சரிவைச் சந்தித்தன. இந்நிலையில்

கொச்சியில் படகு உடைந்து 6 பேர் பலி: மீன்பிடி படகின் டிரைவர் கைது

Posted: 26 Aug 2015 10:04 PM PDT

கேரளாவில் உள்ள காயல்களில் நீர்வழி போக்குவரத்து நடக்கிறது. கொச்சியில் இருந்து போர்ட் கொச்சிக்கு நேற்று பகல் ஒரு பயணிகள் படகு புறப்பட்டது. இதில் 30–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். படகு புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த வழியாக ஒரு மீன்பிடி படகு வந்தது. அதிவேகமாக வந்த மீன்பிடி படகு மின்னல் வேகத்தில் பயணிகள் படகின் மீது மோதியது.

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பச்சிளம் குழந்தை எலி கடித்து சாவு: 3 மருத்துவ அதிகாரிகள் சஸ்பெண்டு

Posted: 26 Aug 2015 10:00 PM PDT

ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் கிருஷ்ணா லங்கா கிராமத்தை சேர்ந்தவர் நாகா. இவரது மனைவி லட்சுமி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லட்சுமிக்கு கடந்த 17–ந்தேதி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று

திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது: 3 மணி நேரத்தில் தரிசனம்

Posted: 26 Aug 2015 09:57 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை 39,139 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன் பிறகு 6 கம்பார்ட்டுமெண்டுகளில் மட்டுமே பக்தர்கள் காத்து இருந்தனர். இவர்கள் 3

அரியானாவில் தேசிய மல்யுத்த வீரர் படுகொலை: உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசிய கும்பலுக்கு போலீஸ் வலை

Posted: 26 Aug 2015 09:46 PM PDT

அரியானா மாநிலம் சோனிபட் அருகே தேசிய மல்யுத்த வீரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்று வந்த ஹன்ஸ்ராஜ் (வயது 21), திங்கட்கிழமை வழக்கம்போல் காலையில் நடைபயிற்சிக்குச்

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: சென்னை–பெங்களூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

Posted: 26 Aug 2015 09:42 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரு பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. அதையொட்டி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, முதன்மை பாதுகாப்பு படை அதிகாரி நாகேந்திரராவ், என்ஜினீயர்கள் சந்திரசேகர்ரெட்டி, ராமச்சந்திராரெட்டி, கோவில் துணை அதிகாரி சின்னம்காரி ரமணா ஆகியோர் திருமலையில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முறையற்ற காதலால் மகளை கொன்று காட்டில் வீசிய தனியார் தொலைக்காட்சி பெண் நிறுவனர் கைது

Posted: 26 Aug 2015 08:57 PM PDT

'ஸ்டார் இந்தியா' தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜி. இவருடைய மனைவி இந்திராணி (வயது 43). இவர் '9 எக்ஸ் மீடியா' என்ற தனியார் தொலைக்காட்சியின் நிறுவனர்.

வேலைநிறுத்தத்தை கைவிட தொழிற்சங்கங்கள் மறுப்பு: மத்திய மந்திரிகள் பேச்சுவார்த்தை இன்றும் தொடருகிறது

Posted: 26 Aug 2015 07:43 PM PDT

தொழிலாளர்கள் சீர்திருத்தம் தொடர்பாக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 2-ந் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. இந்த போராட்டத்தை தவிர்ப்பதற்காக நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் மத்திய

நடுவர் மன்ற தீர்ப்புக்கு காலவரையறை: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Posted: 26 Aug 2015 03:34 PM PDT

நடுவர் மன்ற வழக்குகளில் தீர்ப்பு அளிக்க குறிப்பிட்ட காலவரையறை நிர்ணயிக்க வேண்டும் என்றும், தாமதத்துக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சட்ட கமிஷன் சிபாரிசு செய்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய மந்திரிசபை கூட்டத்தில், இந்த சிபாரிசு பற்றி பரிசீலிக்கப்பட்டது.

படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை: முக்கிய ரெயில்கள் ரத்து

Posted: 26 Aug 2015 01:14 PM PDT

குஜராத் மாநிலத்தில் இடஒதுக்கீடு கேட்டு படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டம் வன்முறையாகவும், சாதி கலவரமாகவும் மாறியதில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ள நிலையில் குஜராத்திலிருந்து கிளம்பும், குஜராத் வரை செல்லும் பல முக்கிய ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொச்சி துறைமுக பகுதியில் 2 படகுகள் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

Posted: 26 Aug 2015 01:02 PM PDT

கொச்சி துறைமுகத்தில் இருந்து வியாபின் பகுதிக்கு கொச்சி மாநகராட்சி பயணிகள் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. நேற்று கொச்சி துறைமுகத்தை நோக்கி பயணிகள் படகு கடல் முகத்துவாரம் அருகே வந்து கொண்டிருந்தது. அந்த படகில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

காஷ்மீரில் கல்லூரி பேராசிரியர் சுட்டுக்கொலை

Posted: 26 Aug 2015 12:21 PM PDT

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காந்திபோரா கிராமத்தை சேர்ந்தவர் ஜாவித் அகமது. அவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் ஒப்பந்த பேராசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவில் ஜாவித் அகமது வீட்டில் இருந்த போது மர்மநபர்கள் சிலர் உள்ளே

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் ஆயுள் நீட்டிப்பு: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Posted: 26 Aug 2015 11:51 AM PDT

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகியவற்றை மாற்றி அமைக்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி, 7-வது சம்பள கமிஷனை அமைத்தது. நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான இந்த கமிஷன், அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு அறிக்கையை தாக்கல்

கொல்கத்தாவில் அன்னை தெரசாவின் 105-வது பிறந்தநாள் விழா: சிறப்பு பிரார்த்தனை

Posted: 26 Aug 2015 11:16 AM PDT

யுகோஸ்லேவியாவில் உள்ள ஸ்கோபில்ஜி என்ற இடத்தில் அல்பேனிய பெற்றோர்க்கு மகளாக 1910ம் ஆண்டு இதே நாளில் தான் அன்னை தெரசா பிறந்தார். 1929ல் இந்தியா வந்து டார்ஜிலிங்கில் துறவறம் பூணும் நிலையினருக்கான பயிற்சியை ஆரம்பித்தார். பின்னர் தன்னலம் என்ற

படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

Posted: 26 Aug 2015 10:12 AM PDT

குஜராத் மாநிலத்தில் இடஒதுக்கீடு கேட்டு படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டம் வன்முறையாகவும், சாதி கலவரமாகவும் மாறியதில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேபாளம் போன்று டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் 90 சதவீதம் மக்கள் பலியாவார்கள்: உயர்நீதி மன்றம் எச்சரிக்கை

Posted: 26 Aug 2015 09:33 AM PDT

சில மாதங்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்டது போன்று டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் 90 சதவீதம் மக்கள் கொல்லப்படுவார்கள் என உயர்நீதி மன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், உயர்நீதி மன்றம் இந்திய தலைநகரின் பாதுகாப்பு

உதம்பூர் தாக்குதல்: பாகிஸ்தான் தீவிரவாதி நவீத் யாகூப் கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம்

Posted: 26 Aug 2015 09:28 AM PDT

காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள சாம்ரோலி அருகே கடந்த 5-ந்தேதி இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய தீவிரவாதிகளில் 20 வயது முகமது நவீத் யாகூப் என்பவன் மட்டும் உயிருடன் சிக்கினான். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அவனிடம் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

வன்முறைக்கு காரணம் போலீஸ்தான்: ஹர்தீக் படேல் குற்றச்சாட்டு

Posted: 26 Aug 2015 08:16 AM PDT

படேல் சமூகத்தினர் குஜராத் மக்கள் தொகையில் சுமார் 12 சதவீதம் உள்ளனர். மேலும் அந்த சமூகம் ஆளும் பா.ஜ.க. கட்சிக்கு மிகவும் விசுவாசமான ஆதரவாளர்களாக இருந்து வருகிறார்கள். ஆனால் தற்போது அவர்கள், வேலை வாய்ப்பு மற்றும் பல்கலைக்கழக இடங்களுக்காக தாழ்ந்த சாதியினருடன் போட்டியிட வேண்டியுள்ளது. எனவே தங்களை ஓ.பி.சி. பிரிவில் சேர்த்து அதிக இடஒதுக்கீடு தரவேண்டும் என ஹர்தீக் படேல் என்ற 21 வயது இளைஞரின்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™