Tamil Star |
- டண்டாஸ் பகுதியில் சுட்டுக் கொல்லப்ட்டவரின் விபரங்களை வெளியிட்டது காவல்த்துறை
- Maple Leaf குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
- சிறுவர் பாலியல குற்றச்சாட்டில் சிக்கிய பீல் காவல்த்துறை புலனாய்வு அதிகாரி
- சுதந்திரம் தொடர்பிலான புதிய ஆய்வு ஒன்றில் கனடாவிற்கு 6ஆவது இடம்
- தூய்மைப்படுத்தல் தொழில்நுட்ப முனைப்புக்களுக்கு பாரிய அளவில் முதலீடு
- மிசிசாகா பகுதியில் நவீனரக துப்பாக்கிகள் மீட்பு –
| டண்டாஸ் பகுதியில் சுட்டுக் கொல்லப்ட்டவரின் விபரங்களை வெளியிட்டது காவல்த்துறை Posted: 19 Aug 2015 08:17 PM PDT
Dundas வீதி மற்றும் Sherbourne வீதிப் பகுதியில் இன்று நள்ளிரவுக்கு சற்று பின்பாக துப்பாக்கிச் சூட்டுக் சத்தங்கள் கேட்பதாக கிடைக்கப்பபெற்ற பல்வேறு முறைப்பாடுகளை தொடர்ந்து காவல்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அவசர மருத்துவ பிரிவினர் சம்பவ இடத்தினை சென்றடைந்த போது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்கானவர், சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரழந்து விட்டமை பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 36 வயதான Shaka Reid என அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அந்த பகுதியில் உள்ள வீதிச் சந்துக்குள் ஒரு குழு இளைஞர்கள் நுளைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அங்கு துப்பபாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாகவும், சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த வேளையில் அங்கே ஒருவர் துப்பர்ககிச் சூட்டுக் காயங்களுடன் வீழ்ந்து கிடந்ததாகவும் சம்வத்தினை நேரில் பார்த்தோர் தெரிவித்துள்ளனர். அவரை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு தான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அந்த நபர் தனது கைகளிலேயே உயிர் பிரிந்ததாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவருக்கு உதவ முன்வந்த பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்த்துறையினர், அந்த பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரங்களை பரிசோதித்து வருகின்றனர். The post டண்டாஸ் பகுதியில் சுட்டுக் கொல்லப்ட்டவரின் விபரங்களை வெளியிட்டது காவல்த்துறை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Maple Leaf குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி Posted: 19 Aug 2015 07:48 PM PDT
Jane Street மற்றும் Maple Leaf Drive பகுதிக்கு வடகிழக்கே, Rustic வீதியில் இன்று மாலை 6.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணங்கள் இன்னமும் புலனாகவில்லை என்று காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானவர் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், தன்னால் முடிந்த அளவுக்கு அவருக்கு உதவி செய்ய முயன்றதாகவும், சம்பவ இடத்தில் இருந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட அவர் தான் சாக விரும்பவில்லை என்பதை திரும்பத் திரும்ப கூறியவாறு இருந்ததாகவும், காவல்த்துறையை அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள போதிலும், சந்தேக நபர் தொடர்பிலான விபரங்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. The post Maple Leaf குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிறுவர் பாலியல குற்றச்சாட்டில் சிக்கிய பீல் காவல்த்துறை புலனாய்வு அதிகாரி Posted: 19 Aug 2015 03:18 PM PDT
குறித்த அந்த உத்தியோகத்தர் மீது விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பீல் பிராந்திய காவல்த்துறை தலைமை அதிகாரி பிறப்பித்துள்ள உத்தரவு குறித்த அறிவிப்பு இன்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அந்த உத்தியோகத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துவந்த காவல்த்துறையினர், இன்று காலையில் அவரைக் கைது செய்துள்ளனர். இவ்வாறான குற்றச் செயல்களை தாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என பீல் பிராந்திய காவல்த்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ள குறித்த அந்த அதிகாரி மீது சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்தமை, 5,000 டொலர்களுக்கு அதிகமான ஊழல் புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. The post சிறுவர் பாலியல குற்றச்சாட்டில் சிக்கிய பீல் காவல்த்துறை புலனாய்வு அதிகாரி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சுதந்திரம் தொடர்பிலான புதிய ஆய்வு ஒன்றில் கனடாவிற்கு 6ஆவது இடம் Posted: 19 Aug 2015 12:12 PM PDT
யேர்மனி மற்றும் அமெரிக்காவைத் தளமாக கொண்ட நிபுனர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், தனிமனித சுதந்திரம், சிவில் மற்றும் பொருளாதார சுதந்திரம் உள்ளிட்ட 76 விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான குறிகாட்டிகளின் அடிப்படையில், சீன பிரர்நதியத்திற்கு உட்பட்ட தனி அதிகாரத்தினை கொண்டுள்ள ஹொங்கொங் சுதந்திரத்தில் முதலாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக முறையே சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து, டென்மார்க், நியூசிலாந்து ஆகிய நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதனை அடுத்து ஆறாவது நிலையில் கனடாவும், ஏழாவது நிலையில் அவுஸ்திரேலியாவும், 9ஆவது நிலையில் பிரித்தானியாவும், 12ஆவது நிலையில் யோர்மனியும், 20ஆவது இடத்தில் அமெரிக்காவும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 152 நாடுகளில், கொங்கோ, மியான்மார், சிம்பாவே, யேமன் ஆகிய நாடுகள் இறுதி நிலையில தரப்படுத்தப்பட்டுள்ளன. The post சுதந்திரம் தொடர்பிலான புதிய ஆய்வு ஒன்றில் கனடாவிற்கு 6ஆவது இடம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தூய்மைப்படுத்தல் தொழில்நுட்ப முனைப்புக்களுக்கு பாரிய அளவில் முதலீடு Posted: 19 Aug 2015 12:06 PM PDT
ஒன்ராறியோவின் வட பிரந்தியங்களில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுவரும் அவர், நேற்றைய தினம் லோறன்சன்(Laurentian) பல்கலைக்கழத்தின் ஆய்வு பிரிவினர் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். வனவளத் துறை, மீன்பிடித் துறை, சுரங்கத் தொழில்துறை, சக்திவளத்துறை மற்றும் விவசாயம் ஆகியவற்றுக்கான தூய்மைப்படுத்தல் தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்வதற்காக லிபரல் கட்சி அரசாங்கம் 200 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யும் என அவர் உறுதியளித்துள்ளார். இதனால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச் சூழலும் மேம்பாடு காணும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பொருளாதாரமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை எனவும், ஒன்றினை விடுத்து மற்றொன்றின் வளர்ச்சியை மட்டும் சிந்தித்து பார்க்க முடியாது எனவும் அவர் விபரித்துள்ளார்.. The post தூய்மைப்படுத்தல் தொழில்நுட்ப முனைப்புக்களுக்கு பாரிய அளவில் முதலீடு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிசிசாகா பகுதியில் நவீனரக துப்பாக்கிகள் மீட்பு – Posted: 19 Aug 2015 11:58 AM PDT
மசிசாகாவின் பிரிட்டானியா வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சண்டை நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.20 அளவில் தாம் அங்கு விரைந்ததாக பீல் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அங்கு மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மிசிசாகாவைச் சேர்ந்த 25 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், ரொரன்ரோவைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் காயங்கள் காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த மேலதிக தகவல்களை அடுத்து, வாகனம் ஒன்றும், மிசிசாகா பகுதியில் உள்ள இரண்டு வீடுகளும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. தேடுதல்களின் போது அதிநவீன ரக தாக்குதல் துப்பாக்கி, மிகச் சிறிய ரக கைத்துப்பாக்கி உள்ளிட்ட எட்டு துப்பாக்கிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்த்துறையினர், தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் The post மிசிசாகா பகுதியில் நவீனரக துப்பாக்கிகள் மீட்பு – appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

இன்று காலையில் ரொரன்ரோவின் Garden District பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் பெயர் விபரங்களை காவல்த்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
ரொரன்ரோவின் Maple Leaf குடியிருப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
30 வருட அனுபவங்ளை கொண்ட பீல் பிராந்திய காவல்த்துறை புலனாய்வு அதிகாரி ஒருவர் சிறுவர் ஆபாசப்பட விவகாரத்தில் சிக்குண்டுள்ளார்.

