மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- முறைகேடாக நுழைவுத் தேர்வு: வியாபம் ஊழலில் மேலும் 200 பேர் சிக்கினர் - 10 பிரிவுகளில் வழக்கு
- தீவிரவாதியை போல என்னை கைது செய்வதா? சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகை ரோஜா கண்டனம்
- 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
- திருப்பதி கோவில் மேல் தாழ்வாக பறந்த விமானம்: நாட்டுக்கு கேடு ஏற்படும்- அர்ச்சகர்கள்
- யானை தந்தம் வேட்டை கும்பல் சித்ரவதை: வனத்துறை அதிகாரி தம்பதி மீது வழக்கு
- ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கோவா முதல்– மந்திரியின் மைத்துனர் கைது
- சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
- கார்பைடு பயன்படுத்தி காய்களை பழுக்க வைப்பது தீவிரவாதத்தை விட மோசமானது: ஆந்திர ஐகோர்ட்டு கருத்து
- 323 கிலோ மீட்டர் தொலைவுக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளிடமும் பேச தயார்: வெங்கையா நாயுடு
- காஷ்மீர் எல்லையில் தொடரும் அத்துமீறல்: மக்கள் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல்
- இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
- பஞ்சாப், அரியானா மாநில ஐகோர்ட்டு நீதிபதிகளை குண்டுவைத்து கொல்வோம்: மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு
- பிரபல இந்தி பாடகரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்: மும்பை தாதா கும்பல் அட்டூழியம்
- புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கைது செய்ததற்கு ராகுல், கெஜ்ரிவால் கண்டனம்
- மனைவியின் இறுதிச்சடங்குகள் முடிந்தவுடன் அலுவலக பணிகளை தொடங்கினார், ஜனாதிபதி
- கேரளாவில் ஓணம் விழா தொடங்கியது: பள்ளி-கல்லூரிகளில் மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ச்சி
- வியக்க வைக்கும் செவ்வாய் கிரகத்தின் முப்பரிமாண படங்கள்: மங்கள்யான் அனுப்பியதை இஸ்ரோ வெளியிட்டது
- வாழைப்பழ சிகிச்சை மூலம் திருடன் விழுங்கிய நகை வெளியேற்றம்
- நகரியில் 144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்த சென்ற நடிகை ரோஜா கைது
| முறைகேடாக நுழைவுத் தேர்வு: வியாபம் ஊழலில் மேலும் 200 பேர் சிக்கினர் - 10 பிரிவுகளில் வழக்கு Posted: 19 Aug 2015 11:06 PM PDT மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த தொழில் கல்வி நுழைவு தேர்வு (வியாபம்) ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதில் முறைகேடாக தேர்வு எழுதிய ஆயிரக் கணக்கானோர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| தீவிரவாதியை போல என்னை கைது செய்வதா? சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகை ரோஜா கண்டனம் Posted: 19 Aug 2015 10:41 PM PDT ஆந்திர மாநிலம் நகரி நகராட்சி ஆணையர் பாலாஜி நாத் யாதவ் தாக்கப்பட்டது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகராட்சி தலைவர் சாந்தி கிருஷ்ணனின் கணவர் குமார், அவரது மகன் சுரேஷ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். |
| 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு Posted: 19 Aug 2015 10:17 PM PDT 2ஜி அலைக்கற்றை முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| திருப்பதி கோவில் மேல் தாழ்வாக பறந்த விமானம்: நாட்டுக்கு கேடு ஏற்படும்- அர்ச்சகர்கள் Posted: 19 Aug 2015 10:14 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். மேலும் கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து உள்ளது. |
| யானை தந்தம் வேட்டை கும்பல் சித்ரவதை: வனத்துறை அதிகாரி தம்பதி மீது வழக்கு Posted: 19 Aug 2015 09:54 PM PDT திருவனந்தபுரத்தில் கேரள வனத்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு தலைமையக துணை வன அதிகாரியாக பணியாற்றி வருபவர் கமலாகர். அவரது மனைவி உமா. இவர் திருவனந்தபுரம் கோட்ட வன அதிகாரியாக பணியாற்றி வருகிறார். |
| ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கோவா முதல்– மந்திரியின் மைத்துனர் கைது Posted: 19 Aug 2015 09:54 PM PDT கோவாவில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்–மந்திரியாக லட்சுமிகாந்த் பர்சேகர் இருக்கிறார். இவரது மைத்துனர் திலிப் மல்வங்கர், உறவினர் அஜித் கவுனேகர் ஆகியோர் லஞ்சப் புகாரில் சிக்கியுள்ளனர். |
| சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் Posted: 19 Aug 2015 09:40 PM PDT பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக கடந்த 16–ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. நாளை (21–ந்தேதி) வரை கோவில் நடை திறந்து இருக்கும். சபரிமலையில் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்தனர். |
| கார்பைடு பயன்படுத்தி காய்களை பழுக்க வைப்பது தீவிரவாதத்தை விட மோசமானது: ஆந்திர ஐகோர்ட்டு கருத்து Posted: 19 Aug 2015 09:38 PM PDT காய்களை பழுக்க வைக்க கார்பைடு என்ற ரசாயன பொருள் பயன்படுத்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர ஐகோர்ட்டு நேற்று அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:– காய்களை உடனடியாக பழுக்க வைக்க 'கார்பைடு' என்ற ரசாயன பொருள் |
| 323 கிலோ மீட்டர் தொலைவுக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் Posted: 19 Aug 2015 09:25 PM PDT நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திரிபுராவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 323 கிலோ மீட்டர் தொலைவுக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. |
| சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளிடமும் பேச தயார்: வெங்கையா நாயுடு Posted: 19 Aug 2015 08:40 PM PDT நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை தாக்கல் செய்யும் முனைப்பில் மத்திய அரசு இருந்தது. ஆனால் மேல்-சபையில் லலித் மோடி விவகாரத்தை கிளப்பி அந்த மசோதாவை தாக்கல் செய்ய விடாமல் காங்கிரஸ் பாராளுமன்றத்தை |
| Posted: 19 Aug 2015 08:19 PM PDT காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மற்றும் கிராம பகுதிகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். |
| இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு Posted: 19 Aug 2015 08:12 PM PDT இமாச்சல பிரதேசம், மாண்டியில் நேற்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. நள்ளிரவு 12:48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. |
| பஞ்சாப், அரியானா மாநில ஐகோர்ட்டு நீதிபதிகளை குண்டுவைத்து கொல்வோம்: மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு Posted: 19 Aug 2015 08:06 PM PDT பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்திற்கு நேற்று முன்தினம் மர்ம கடிதம் ஒன்று வந்தது. அதில், 'நாளை (21-ந் தேதி) பஞ்சாப் அரசுக்கு கருப்பு நாள். பஞ்சாப் மற்றும் அரியானா மாநில ஐகோர்ட்டு நீதிபதிகள் 21 பேரை குண்டு வைத்து கொல்லப்போகிறோம். முடிந்தால் தடுத்துப்பாருங்கள்' என்று கூறப்பட்டு இருந்தது. |
| பிரபல இந்தி பாடகரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்: மும்பை தாதா கும்பல் அட்டூழியம் Posted: 19 Aug 2015 07:56 PM PDT இந்தி திரையுலகினரை மும்பை தாதாக்கள் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் பல வருடங்களாக நடக்கிறது. முன்னணி கதாநாயகர்களும், கதாநாயகிகளும் இந்த கும்பல் பிடியில் சிக்கி பல கோடிகளை இழந்துள்ளனர். உயிருக்கு பயந்து போலீசில் அவர்கள் புகார் அளிப்பதில்லை. |
| புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கைது செய்ததற்கு ராகுல், கெஜ்ரிவால் கண்டனம் Posted: 19 Aug 2015 07:52 PM PDT மராட்டிய மாநிலம் புனே நகரில் உள்ள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரி ஆசிய அளவில் புகழ்பெற்றது. இந்த கல்லூரியின் புதிய தலைவராக பா.ஜனதாவை சேர்ந்தவரும், பிரபல டி.வி. நடிகருமான கஜேந்திர சவுகானை மத்திய அரசு நியமித்தது. |
| மனைவியின் இறுதிச்சடங்குகள் முடிந்தவுடன் அலுவலக பணிகளை தொடங்கினார், ஜனாதிபதி Posted: 19 Aug 2015 07:46 PM PDT ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜி நேற்று முன்தினம் காலமானார். நேற்று அவரது உடல், பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜியின் டெல்லி வீட்டில் இருந்து லோதி ரோடு மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. |
| கேரளாவில் ஓணம் விழா தொடங்கியது: பள்ளி-கல்லூரிகளில் மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ச்சி Posted: 19 Aug 2015 07:46 PM PDT கேரளாவில் ஓணம் பண்டிகை 28-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 10 நாள் விழா நேற்று 'அஸ்தம்' முதல் நாளில் தொடங்கியது. வீடுகள், தெருக்கள், வணிக மையங்கள், அரசு, தனியார் நிறுவனங்கள், தொழில் மையங்கள் உள்பட மக்கள் கூடும் பகுதிகள் மட்டுமின்றி, பள்ளிகள், கல்லூரிகளில் வண்ண வண்ண பூக்களால் அழகு பூக்கோலமான அத்தப்பூ |
| வியக்க வைக்கும் செவ்வாய் கிரகத்தின் முப்பரிமாண படங்கள்: மங்கள்யான் அனுப்பியதை இஸ்ரோ வெளியிட்டது Posted: 19 Aug 2015 07:40 PM PDT செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு 74 மில்லியன் டாலர் (சுமார் ரூ.475 கோடி) பட்ஜெட்டில், மங்கள்யான் என்ற விண்கலத்தை கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி இந்தியா விண்வெளிக்கு அனுப்பியது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ந் |
| வாழைப்பழ சிகிச்சை மூலம் திருடன் விழுங்கிய நகை வெளியேற்றம் Posted: 19 Aug 2015 07:31 PM PDT ஐதராபாத் நகரில் உள்ள சித்தபல்முண்டி ரெயில் நிலைய தண்டவாளம் அருகே கடந்த 15-ந் தேதி இரவு நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் ஒரு திருடன், 5 பவுன் தங்க நெக்லஸை பறித்துக் கொண்டு தப்பினான். இருப்பினும், அடுத்த 2 மணி நேரங்களில், அவனை போலீசார் பிடித்தனர். |
| நகரியில் 144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்த சென்ற நடிகை ரோஜா கைது Posted: 19 Aug 2015 07:24 PM PDT ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் பாலாஜிநாத் யாதவ். இவருக்கும், நகராட்சி முன்னாள் தலைவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் சுரேஷ் என்பவருக்கும் இடையே நகராட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக கடந்த 14-ந் தேதி தகராறு ஏற்பட்டது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |