Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


குன்றில் இருந்து விழுந்து 21 வயது யுவதி உயிரிழப்பு

Posted: 22 Aug 2015 09:07 PM PDT

yhiol

yhiolகுன்று ஒன்றிலிருந்து தவறுதலாக விழுந்த 21 வயதான பெண் ஒருவர் உயிரிழந்து விட்டதாக Newfoundland காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாலையேறும் ஒரு குழுவினா கடந்த வெள்ளிக்கிழமை Flatrock, N.L.பகுதியில் உள்ள குன்று ஒன்றில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த துன்பகரமான சம்பவம் இடம்பெற்றதாக அந்த பகுதியில் இருந்த அரச காவல்ப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு பிற்பகல் 5 மணியளவில் தகவல் கிடைத்திருந்ததாகவும், குறித்த மலையேறும் குழுவில் இருந்து தவறுதலாக விழுந்த யுவதி ஒருவர் ஆபத்தான காயங்களிற்கு ஆளாகியுள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டதாகவும் காவல்த்துறையினர் கூறியுள்ளனர்.yhiol

எனினும் பின்னர் அந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவத் துறையினரால் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

இந்த தகவலை வெளியிடுகையில் காவல்த்துறையினர் குறித்த யுவதி யார் என்பதை உறுதி செய்யவில்லை எனினும் Newfoundland இன் St. John's குடியிருப்புவாசி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post குன்றில் இருந்து விழுந்து 21 வயது யுவதி உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

டவுண்ரவுனில் கத்திக்குத்து ஒருவர் தடுத்துவைப்பு

Posted: 22 Aug 2015 08:43 PM PDT

jh

jhரொரன்ரோவின் டவுன்ரவுண் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற கத்திக்குத்தில் காயமடைந்த 26 வயதான நபர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

York மற்றும் Wellington வீதியில் அதிகாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை தாம் தடுத்து வைத்திருப்பதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.jh

எனினும் பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

அதேவேனை கத்திக்குத்துக்கு ஆளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் முழுமையாக குணமடைந்து விடுவார் என எதிர்பாக்கப்படுவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post டவுண்ரவுனில் கத்திக்குத்து ஒருவர் தடுத்துவைப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோவிற்கு பயணித்த ஏயார் கனடா விமானம் இடையில் அவசர தரையிறக்கம்

Posted: 22 Aug 2015 08:02 PM PDT

it

it200 பயணிகளை எற்றிக்கொண்டு சென்ற ஏயார் கனடா பயணிகள் விவானம் ஒன்று Belfast இல் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டதாக ஏயார் கனடா நிறுவனம் இன்று சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

நெதர்லாந்தின் Amsterdam இல் இருந்து ரொரன்ரோ நோக்கி பயணித்துக்கொண்டிருந்த AC825 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்ப்டது.

விமானம் ஐக்கிய இராச்சியத்தின் Belfast அனைத்துலக விமான நிலையத்தில தரையிறக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அந்த விமானநிலையத்தின் பேச்சாளர் விமானத்தின் கோளாறு தொடர்பில் உடனடியாக எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.it

இருப்பினும், விமானத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தமையாலேயே விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளாா.

இதேவேளை விமானத்தில் வழமைக்கு மாறான நாற்றம் ஏற்பட்டதன் காரணமாகவே விமானம் தரையிரக்கப்பட்டதாக ஏயார் கனடா தெரிவித்துள்ளது.

The post ரொரன்ரோவிற்கு பயணித்த ஏயார் கனடா விமானம் இடையில் அவசர தரையிறக்கம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரிட்டிஷ் கொலம்பியாவின் எல்லையைத் தொட்டுள்ள காட்டுத் தீ

Posted: 22 Aug 2015 03:31 PM PDT

i;i

i;iஅமெரிக்காவின் வோசிங்டன் மாநிலத்தில் ஏற்பட்டு பரவிவரும் காட்டுத் தீ கனடாவின் தென் பிராந்தியமான பிரிட்டிஷ் கொலம்பியாவின் எல்லையினை தொட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக் கூடும் என அதிகாரிக்ள எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வோசிங்டனில் ஏற்கனவே 168 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவினை சூழ்ந்துள்ள தீ, கனேடிய அமெரிக்க எல்லைப் பகுதியிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவு வரை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை அடுத்து குறித்த அந்த எல்லைப் பகுதி குடியிருப்பு மக்களை சந்தித்துள்ள கனேடிய அதிகாரிகள், அவசரகா நடைவடிக்கைகள் தொட்பிலும், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளனர்.

i;i

எனினும் கனேடிய தீயணைப்பு வீரர்கள் தீப் பரவலை தமது குடியிருப்பு வரையில் பரவாது காப்பாற்றுவார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அந்த பிராந்திய மக்கள், வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய தேவை ஏற்படாது என்ற நம்பிக்கையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

எனினும் சிலர் தேவையான பொருட்களை பொதி செய்ய ஆரம்பித்துள்ளதாகவும், வீடுகளை விட்டு வெளியேற தயாராகி வருவதாகவும் அந்த பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post பிரிட்டிஷ் கொலம்பியாவின் எல்லையைத் தொட்டுள்ள காட்டுத் தீ appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒன்ராறியோ மாகாண ஆசிரியர்களுக்கும், மாகாண அரசாங்கத்தற்கும் இடையே தற்காலிக உடன்படிக்கை

Posted: 22 Aug 2015 02:23 PM PDT

uiluy

uiluyஒன்ராறியோ மாகாண உயர்நிலை பாடசாலை ஆசிரியர்களுக்கும், மாகாண அரசாங்கத்திற்கும் இடையே தற்காலிக உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒன்ராறியோவின் சுமார் 60,000 உயர்நிலை பாடசாலை ஆசிரியர்களை பிரதிநிதித்துப்ப்படுத்தும் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவந்த சிக்கல் நிறைந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக, ஒன்ராறியோ அரசாங்க பாடசாலை சபைகளின் கூட்டமைப்பு மற்றும் மாநில கல்வி அமைச்சுடன், குறிப்பிடத்தக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ இடைநிலை பாடசாலை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

uiluy

இந்த இணக்கப்பாட்டில் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வீத சம்பள அதிகரிப்பு, வகுப்பறைகளின் அளவுகளில் மாற்றம் மேற்கொள்ளாமை உள்ளிட்ட மேலும் சில உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், அனைத்துவித தொழிற்சங்க நடவடிக்கைகளும் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அடுத்த கல்வி ஆண்டு விரையில் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆசிரியர்கள் தொடர்ந்தும் பணிப் புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடுவார்களோ என்ற நிலை நிலவிவந்தமை குறிப்பிடத்தக்கது.

The post ஒன்ராறியோ மாகாண ஆசிரியர்களுக்கும், மாகாண அரசாங்கத்தற்கும் இடையே தற்காலிக உடன்படிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

துப்பாக்கி திருடப்பட்ட சம்பவம் – பத்திற்கும் அதிகமானோர் கைது

Posted: 22 Aug 2015 02:18 PM PDT

gf

gfபிரம்டன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரம்டனின் Myna Court பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று காலை 6 மணிக்கும் 7 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஐந்து தாக்குதல் துப்பாக்கிகள், நான்கு கைத்துப்பாக்கிகள் என மொத்தமாக ஒன்பது துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளன.

திருடப்பட்ட ஆயுதங்களில் ஒன்று மட்டுமே மீட்கப்பட்டு, மீதி ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்படாத நிலையில், அது பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் காவல்த்துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

gf

இந்த கடத்தல் தொடர்பில் யாராவது தகவல் அறிந்தால், அல்லது சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களை கண்காணித்திருந்தால் தம்மைத் தொடர்பு கொண்டு தகவல் தருமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை பத்திலிருந்து 12 பேர் வரையில் கைது செய்துள்ள காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post துப்பாக்கி திருடப்பட்ட சம்பவம் – பத்திற்கும் அதிகமானோர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தினம் ஒரு நெல்லிக்காய்.. நன்மைகளோ ஏராளம்!

Posted: 22 Aug 2015 09:05 AM PDT

hj

hjநெல்லிக்காயில் உடல்நலப் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

இதில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவைகள் வளமாக நிறைந்துள்ளது.

இவை சரும பிரச்சனை, முடிப் பிரச்சனை மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்க்கிறது. மேலும், ரத்த சோகை, ஞாபக மறதி போன்றவற்றையும் நீக்குகிறது.

நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:-

1) நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

2) தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத்தலாம்.

3) உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் தினமும் நெல்லிக்காய் சாப்பிடலாம். இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி உடல் எடையைக் குறைக்க உதவும்.

4) நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது தீர்வாக அமைகிறது.hj

5) நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். நெல்லி பொடியை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

6) நெல்லிக்காயில் வைட்டமின் சி வளமாக இருப்பதால் கண் பார்வை மேம்படும். இதில் உள்ள ஆன்டி- ஆக்சிடண்ட் கண் ரெட்டினாவை பாதுகாக்கிறது.

7) நெல்லிக்காய் இரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

8) 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

9) நெல்லிக்காயில் உள்ள இரும்புச்சத்து புதிய இரத்த செல்களை உருவாக்கி, மறைமுக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும்.

10) உலகின் பல்வேறு பகுதிகளில் கல்லீரல் பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

The post தினம் ஒரு நெல்லிக்காய்.. நன்மைகளோ ஏராளம்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Yonge-Dundas சதுக்கப் பகுதியில் துப்பாக்கிச் சூடு – யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை

Posted: 21 Aug 2015 03:19 PM PDT

oi

oiYonge-Dundas சதுக்கப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மோசமாக காயமடைந்த நபர் ஒருவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் Dundas வீதியின் வடக்காக இருக்கும் Yonge வீதியில் உள்ள உணவுவகம் ஒன்றில் இடம்பெற்றதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உணவகத்திற்குள் இரண்டு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், உணவகத்தினுள் ஏற்பட்ட அந்த வாக்குவாதம் நடைபாதைவரையில் தொடர்ந்ததாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அப்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபரின் தரப்பில் இருந்த ஒருவர் வாதத்தில் ஈடபட்டிருந்த குறித்த சந்தேக நபரிடம் கைத்துப்பாக்கி ஒன்றை வழங்க, சந்தேக நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்ததாக கூறும் காவல்த்துறையினர், பின்னர் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து Yonge வீதியின் வடக்கு தடத்தின் ஊடாக குறித்த சந்தேக நபர் தப்பி ஓடிவிட்டதாக விபரித்துள்ளனர்.

அதேவேளை இன்று அதிகாலை 12.40 இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை உணவத்தில் இருந்த பலர் பார்த்திருந்தனர் என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் துப்பாக்கிப்ப பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பி ஓடியதாக சந்தேகிக்கப்படும் நபரின் குறிப்பான அடையாளங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

The post Yonge-Dundas சதுக்கப் பகுதியில் துப்பாக்கிச் சூடு – யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நியூமார்க்கட் பகுதியில் துப்பாக்கி முனையில் கொள்ளையிட முனைந்தவர் கைது –

Posted: 21 Aug 2015 03:13 PM PDT

juio

juioதுப்பாக்கி முனையில் கொள்ளையிட முயன்ற 21 வயது இளைஞர் ஒருவர், கொள்ளை முயற்சி தோல்வியில் முடிவடைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Davis Drive மற்றும் Leslie Street பகுதியில் கடந்த புதன்கிழமை இந்த கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது.

வங்கி ஒன்றுக்கு சென்ற 58 வயது ஆண் ஒருவர், அங்கிருந்து திரும்பிவந்து வர்த்தக வளாகத்தின் வாகனத் தரிப்பிடத்திற்கு சென்ற வேளையில், குறித்த அந்த சந்தேக நபர் அங்கு வந்ததாக யோர்க் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வங்கியில் இருந்து வந்தவர் முன்பாக துப்பாக்கியை நீட்டி சந்தேக நபர் பணம் கொடுக்குமாறு மிரட்டிய போதிலும், வங்கியில் இருந்து வந்த நபர் பதிலேதும் கூறாது தனது பயணத் திசையை மாற்றிக்கொண்டு வேறு வழியில் சென்றதனை அடுத்து, துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல்களை நடாத்திய காவல்த்துறையினர், சந்தேக நபரை தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நியூமார்க்கட்டைச் சேர்ந்த 21 வயதான Nicholas Coborn எனப்படும் அந்த இளைஞரை கைது செய்துள்ள காவல்த்துறையினர், அவர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்து இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்த்துறையினர் வேணடுகோள் விடுத்துள்ளனர்.

The post நியூமார்க்கட் பகுதியில் துப்பாக்கி முனையில் கொள்ளையிட முனைந்தவர் கைது – appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™