Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அருணாச்சல பிரதேச முதல்–மந்திரி மீது ஊழல் வழக்கு: சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவு

Posted: 22 Aug 2015 10:58 PM PDT

அருணாச்சல பிரதேச முதல்–மந்திரி மீது ஊழல் வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக இருக்கும் நபம் துகி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி வீட்டுக் காவலில் அடைப்பு

Posted: 22 Aug 2015 10:04 PM PDT

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை தனி நாடாக பிரித்து, பாகிஸ்தானோடு இணைந்து செல்லும் நோக்கில் அங்குள்ள மக்களை தூண்டி, போராட்டத்துக்கு வித்திட்டுவரும் ஹுரியத் எனப்படும் பிரிவினைவாத இயக்கத்தின் மூத்த தலைவர் சையத் அலி ஷா கிலானி இன்று கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இந்தியா–பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான 2 நாள் பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க

திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரி ஆபரேஷன் தியேட்டரில் நடந்த ஓணம் விருந்து: விசாரணை நடத்த மந்திரி உத்தரவு

Posted: 22 Aug 2015 09:32 PM PDT

திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். ஓணம் பண்டிகையின் சிறப்பு அம்சமான அத்தப்பூ கோலமும் பிரம்மாண்டமாக போடப்பட்டிருந்தது. மேலும் ஓணம் விருந்தும் களைகட்டியது. ஆனால் அத்தப்பூ கோலம் ஆபரேஷன் தியேட்டரின் உள்புறம் போடப்பட்டிருந்ததும் ஆபரேஷன் தியேட்டரிலேயே ஓணம் விருந்து

மரண தண்டனையை தொடர்வதா?, ஒழிப்பதா?: சட்ட ஆணைய அறிக்கை அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

Posted: 22 Aug 2015 09:08 PM PDT

இந்தியாவில் நடைமுறையில் இருந்துவரும் மரண தண்டனையை தொடர்வதா?, ஒழிப்பதா? என்பது தொடர்பாக பரிந்துரைக்கும் சட்ட ஆணையக்குழுவின் ஆய்வு அறிக்கை அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உள்ளிட்ட பல்துறை பிரபலங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இந்தியாவில் நடைமுறையில் இருந்துவரும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

Posted: 22 Aug 2015 08:17 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகின்றது. எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தொடர் அத்துமீறல், இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு, எல்லை வழியாக ஊடுருவத் துடிக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதி வேலை ஆகியவற்றை முறியடிப்பதற்காக கடுமையாக போராடிவரும் இந்திய ராணுவ வீரர்கள் காஷ்மீரில் ரகசியமாக இயங்கிவரும் உள்நாட்டு தீவிரவாதிகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பாக். அரசின் பிடிவாதத்தால் இந்தியா - பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை ரத்து

Posted: 22 Aug 2015 08:08 PM PDT

பாகிஸ்தானுடன் தீவிரவாதம் தவிர்த்து வேறு எதைப்பற்றியும் பேச முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்த நிலையில் பாகிஸ்தானோ, காஷ்மீர் பிரச்சனையை விலக்கிவிட்டு பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று அறிவித்து விட்டதால் இன்று டெல்லியில் நடைபெறவிருந்த இரு நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வருங்கால மனைவியிடம் நிர்வாண செல்பி கேட்ட வாலிபர்: ஆவேசம் அடைந்த பெண் திருமணத்தை நிறுத்தினார்

Posted: 22 Aug 2015 07:58 PM PDT

வருங்கால கணவர் நிர்வாணமாக செல்பி எடுத்து அனுப்புமாறு கூறிய ஆத்திரத்தில் நடக்க இருந்த திருமணத்தை இளம்பெண் தடுத்து நிறுத்தினார். தானே மாவட்டம் கல்யாண் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், கால்செண்டரில் பணிபுரிந்து வரும் 33 வயது வாலிபருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்த நாளில் இருந்து 2 பேரும் தினந்தோறும் மணிக்கணக்கில் செல்போனில் காதல் மொழி பேசி வந்தனர். மேலும் சமூக வலைதளங்களிலும் அரட்டை அடித்தனர். தாங்கள் எடுத்து கொண்ட புகைப்படங்களை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர்.

எம்.பி. மகனிடம் கத்தி முனையில் ரூ.1½ லட்சம் கொள்ளையடித்த எஸ்கார்ட் அழகி கைது

Posted: 22 Aug 2015 07:42 PM PDT

எம்.பி மகனிடம் கத்தி முனையில் ரூ.1½ லட்சம் கொள்ளையடித்த எஸ்கார்ட் அழகியை விராரில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். மும்பை சாந்தாகுரூஸ் கலினா பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகர் பகுதியை சேர்ந்த எம்.பி.யின் மகன் மேகர் சிங் என்பவர் தங்கி இருந்தார். அப்போது பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்ட அவர், தரகர் ஒருவரை தொடர்பு கொண்டார். தரகரின் ஏற்பாட்டின் பேரில் அங்கு விபசார அழகி ஒருவர் காரில் வந்தார்.

மத்திய அரசு விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்கக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Posted: 22 Aug 2015 07:19 PM PDT

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி சிக்கமகளூரு தரிகெரேவில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்கக்கோரி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சீனிவாஸ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஜெயப்பிரகாஷ் ஹெக்டே ஆகியோர் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் 26-ந் தேதி நடைதிறப்பு

Posted: 22 Aug 2015 04:24 PM PDT

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந் தேதி திறக்கப்பட்டது. படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கடந்த 21-ந் தேதி நடை சாத்தப்பட்டது. தற்போது, புகழ்பெற்ற பண்டிகையான ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன்

பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது: மத்திய அரசு

Posted: 22 Aug 2015 02:51 PM PDT

பாகிஸ்தானுடன் காஷ்மீர் பிரச்சினை பற்றி பேச முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்ததையடுத்து, இரு நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சத்தீஷ்காரில் நடந்த நக்சலைட்டு தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படை அதிகாரி சாவு - மற்றொருவர் காயம்

Posted: 22 Aug 2015 02:14 PM PDT

சத்தீஷ்காரின் பஸ்தார் மாவட்டம் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி ஆகும். இந்த மாவட்டத்தின் டோடபோரா கிராமத்துக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் மரங்களை வெட்டிப்போட்டு நக்சலைட்டுகள் போக்குவரத்தை தடை செய்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று அதிகாலையில் தகவல் கிடைத்தது.

வேலை வாங்கி தருவதாக அழைத்து செல்லப்பட்டு உகாண்டாவில் சிக்கி தவித்த 23 இந்தியர்கள் மும்பை திரும்பினர்

Posted: 22 Aug 2015 01:50 PM PDT

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் இணையதள வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஜெயயேஷ் துமாலியா என்

பிரதமர் மோடிக்கு 1 லட்சம் ராக்கிகளை அனுப்பி வைத்த குஜராத் பா.ஜ.க மகளிர் அணியினர்

Posted: 22 Aug 2015 01:12 PM PDT

ஆண் பெண் சகோதரத்துவத்தை போற்றும் 'ரக்‌ஷா பந்தன்' விழா வருகிற 29-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், குஜராத்தில் பா.ஜ.கவைச் சேர்ந்த மகளிர் அமைப்பினர் 1 லட்சம் ராக்கிகளை பிரதமர் மோடிக்கு நேற்று அனுப்பி வைத்தனர்.

ஹரியத் மாநாட்டு உறுப்பினர் பிலால் லோன் உட்பட 4 பிரிவினைவாதிகள் டெல்லியில் கைது

Posted: 22 Aug 2015 10:36 AM PDT

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், பிரிவினைவாத தலைவர்களுடனான சந்திப்பில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளதால் பேச்சுவார்த்தை நடப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

முத்தலாக் முறைக்கு எதிராக இந்திய முஸ்லீம் பெண்கள்: ஆய்வில் தகவல்

Posted: 22 Aug 2015 10:13 AM PDT

இந்தியாவில் உள்ள பெருவாரியான திருமணமான முஸ்லீம் பெண்கள் முஸ்லீம் தனி நபர் சட்டத்தில் திருத்தம் செய்ய விரும்புவது சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆந்திர தலைநகருக்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து 26-ம் தேதி ஜெகன் மோகன் தர்ணா

Posted: 22 Aug 2015 09:07 AM PDT

ஆந்திர மாநில அரசு, புதிய தலைநகரை அமைப்பதற்காக விஜயவாடா-குண்டூர் பிராந்தியத்தில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வரும் 26-ம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளார்.

பீகார் தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? - லாலு நாளை அறிவிக்கிறார்

Posted: 22 Aug 2015 08:42 AM PDT

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா கட்சியை வாஷ்அவுட் செய்வதற்காக ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துள்ளன. இதில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் தலா 100 தொகுதிகளில்

சந்திப்பை ரத்து செய்யாவிட்டால் சர்தாஸ் அஜிஸ் நிச்சயம் இந்தியா செல்வார்: பாகிஸ்தான் அமைச்சர்

Posted: 22 Aug 2015 07:21 AM PDT

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், பிரிவினைவாத தலைவர்களுடனான சந்திப்பில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளதால் பேச்சுவார்த்தை நடப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

வேறு நபருடன் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தினார்: ராதே மா மீது டிவி நடிகை பரபரப்பு புகார்

Posted: 22 Aug 2015 06:39 AM PDT

மும்பை போரிவிலி பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் பெண் சாமியார் ராதே மா. நடிகையைப் போல வலம் வந்த சாமியார் ராதே மாவின் ஆட்சேபகரமான படங்கள் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக பெண் ஒருவர் வரதட்சணை கொடுமை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™