Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


டவுன்ரவுண் உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூன்றாவது நபர் கைது

Posted: 18 Aug 2015 08:13 PM PDT

hj

hjடவுன்ரவுண் உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூன்றாவது நபர் ஒருவரைக் கைது செய்திருப்பதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்றிருந்ததாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு பேர் காயமடைந்தனர் என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மிசிசாகாவைச் சேர்ந்த 31வயதான Tariq Mohammed என்பவரே 153 Dundas St. W.பகுதியில் உள்ள அந்த உணவகத்தில் வைத்து நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு சற்று முன்னர் சுடப்பட்டிருந்தார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போது அந்த உணவத்தில் 60இற்கும் அதிகமானவர்கள் இருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

hj

பின்னர் காவல்த்துறையினர் இது தொடர்பில் எடுக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகளை அடுத்து கடந்த ஜனவரி மாதம் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர்.

இந்த நிலையில் அந்த சம்பவம் தொடர்பில் மூன்றாவது சந்தேக நபரையும் கைது செய்துவிட்டதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், நாளை புதன் கிழமை இந்த மூன்றாவது சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

The post டவுன்ரவுண் உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூன்றாவது நபர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சுற்றுலா பயணத்துறை விருத்தி செய்யப்படும்

Posted: 18 Aug 2015 07:10 PM PDT

ghg

ghgகனடாவுக்கான சுற்றுலா பயணத்துறையினை விருத்தி செய்யும் வகையில் தாம் 30 மில்லியன் டொலர்களை செலவு செய்யவுள்ளதாக புதிய சனநாயக கட்சித் தலைவர் Tom Mulcair தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பொதுத் தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர், அமெரிகாவில் இருந்து கனடாவுக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பிலான தமது கட்சியின் திட்டத்தினை விபரிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

நயாகரா பகுதியில் இடம்பெற்ற கொள்கை பரப்பு நிகழ்வின் போது இதனைத் தெரிவித்துள்ள அவர், கனடாவின் நான்கு பருவகாலங்களின் போதும் சுற்றுலா பயணிகளை உள்வாங்கும் வகையிலான திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ghg

அந்த வகையில் நாட்டின் சுற்றுலா துறையினை மேம்படுத்துவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை விடவும் மேலதிகமாக 30 மில்லியன் டொலர்களை செலவிடவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.

பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் சுற்றுலா துறைக்கான ஒதுக்கீட்டில் 24 மில்லியன் டொலர்களை குறைப்பு செய்ததையும், அதே காலப்பகுதியில் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டதையும் Tom Mulcair சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமரின் இவ்வாறான நடவடிக்கைகள் எந்தவித அர்தமும் அற்ற செயற்பாடுகள் எனவும் விமர்சனம் வெளியிட்டுள்ள அவர், சுற்றுலா துறையில் ஏற்பட்டுள்ள இவ்வாறான பின்னடைவுகளை நிவர்த்தி செய்து, முன்னை நாட்களை விடவும் மேம்பட்ட சுற்றுலா சூழ்நிலையினை தாம் உருவாக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post சுற்றுலா பயணத்துறை விருத்தி செய்யப்படும் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சமூக வலைத்தளத்தில் காவல்த்துறையினருக்கு அச்சுறுத்தல் விடுத்த Oshawa நபர்

Posted: 18 Aug 2015 06:45 PM PDT

g

gசமூக வலைத்தளத்தில் காவல்த்துறையினருக்கு அச்சுறுத்தல் விடுத்த Oshawa நபர் ஒருவரைக் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த 23 வயது நபர் காவல்த்துறையினரைக் கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தியிருந்தார் என டுர்ஹாம் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஓகஸ்ட் மாதம் 3 மற்றும் 15 ஆம் திகதிகளுக்கு இடையில் குறித்த இளைஞர் இணையத்தளத்தில் காவல்த்துறையினரை அச்சுறுத்தி செய்தி வெளியிட்டதாக காவல்த்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையிலேயே குறித்த நபரைத் தாம் கைது செய்திருப்பதாக இன்று செவ்வாய்க்கிழமை காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் தமது வீட்டில் இருந்து வெளியேறத் தயாரான போது திங்கட்கிழமை அவரைக் கைது செய்ததாகவும், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளை இந்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்த்துறையினரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post சமூக வலைத்தளத்தில் காவல்த்துறையினருக்கு அச்சுறுத்தல் விடுத்த Oshawa நபர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோ துப்பாக்கிச் சூடு – இருவர் மருத்துவமனையில்

Posted: 18 Aug 2015 03:35 PM PDT

ரொரன்ரோவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவுக்கு பின்னர் Bishop Tutu Boulevard பகுதியில் துப்பர்ககிச் சூட்டுச் சத்தம் கேட்பதாக தமக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்ததாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனை அடுது்து தாம் Lakeshore Boulevard மற்றும் Bathurst Street பகுதிக்கு விரைந்த போது அங்கே இரண்டு ஆண்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட இருவருமே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், […]

The post ரொரன்ரோ துப்பாக்கிச் சூடு – இருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

த.தே.கூட்டமைப்பின் வெற்றிக்குக் கனடியத் தமிழர் பேரவை வாழ்த்து!

Posted: 18 Aug 2015 03:19 PM PDT

ki

kiவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிகப் பெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றமைக்காக மதிப்புக்குரிய இரா. சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குக் கனடியத் தமிழர் பேரவை வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அதன் தலைவர் திரு. இரா. சம்பந்தன் அவர்களுக்கும் தமிழ்மக்கள் அரசியற் தீர்வொன்றை எட்டுவதற்கான ஆணையை வழங்கியுள்ளனர்.

அத்தோடு சிறி லங்கா அரசுக்கும் பன்னாட்டுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தங்கள் தலைமை என்பதை உறுதிபடக் கூறியுள்ளனர். நீண்டகாலத் தமிழர் சிக்கல்களுக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க ஓர் தீர்வு முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இது தெளிவுபடுத்துகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நீண்ட காலமாக இணைந்து செயற்படும் அமைப்பாகக் கனடியத் தமிழர் பேரவை இருந்து வருகிறது. இந்த வகையிற் தமிழ்மக்களுக்கான அரசியற் தீர்வொன்றைப் பெற்றுத் தருவதிற் பன்னாட்டுக் குமுகம் குறிப்பாக இந்தியா முழுமையான உதவிகளை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.

சிறிலங்கா மக்கள் மீண்டுமொரு முறை நல்ல மாற்றத்திற்கு வாக்களித்துள்ளனர். இது இவ்வாண்டு சனவரியில் நடந்த அதிபர் (சனாதிபதி) தேர்தலுடன் தொடங்கியது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் திரு. இரணில் விக்கிரமசிக்க மற்றும் சிறி லங்கா அதிபர் திரு. சிறிசேன ஆகியோரை வாழ்த்துவதோடு கடந்த எட்டு மாதங்களாக இடம்பெற்றுவரும் முன்னேற்றப் பணிகளை தொடரவேண்டுமெனக் கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது.

எப்போதும் போல் கனடியத் தமிழர் பேரவை தமிழ் மக்களின் விருப்புகளை ஏற்றுக்கொள்வதோடு அவற்றிற்கு மதிப்பளிப்பளிக்கிறது. தமிழ் மக்கள் மதிப்போடும் அமைதியோடும் சமாதானத்தோடும் சமஉரிமையோடும் வாழும் நிலையை உருவாக்குவதற்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதும் அதன் மதிப்புக்குரிய தலைவர் இரா. சம்பந்தனதும் நெடும் பயணத்துக்கு கனடியத் தமிழர் பேரவை தோள் கொடுத்து நிற்கிறது.

The post த.தே.கூட்டமைப்பின் வெற்றிக்குக் கனடியத் தமிழர் பேரவை வாழ்த்து! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோர்த் யோர்க்கில் விபத்து – காயமடைந்தவர் மருத்தவமனையில்

Posted: 18 Aug 2015 03:08 PM PDT

l

lநோர்த் யோர்க்கில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை இரவு 9.15 மணியளவில் இந்த விபத்து சம்பவதித்துள்ளது.

கிழக்கு Lawrence Avenue மற்றும் Don Valley Parkway பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் இரண்டு நபர்கள் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

எனினும் உயிராபத்தான காயங்களுக்கு உள்ளான ஒருவரை உடனடியாக மருத்துவமனையில் சோத்துள்ளதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.l

The post நோர்த் யோர்க்கில் விபத்து – காயமடைந்தவர் மருத்தவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கூட்டணி அமைத்துக் கொள்ளும் கருத்தினை லிபரல் கட்சித் தலைவர் நிராகரிப்பு

Posted: 18 Aug 2015 12:05 PM PDT

gfhnfgn

gfhnfgnநடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெறத் தவறும் சந்தர்ப்பத்தில், பழமைவாதக் கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதனை தடுக்கும் பொருட்டு லிபரல் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளும் கருத்தினை லிபரல் கட்சித் தலைவர் Justin Trudeau நிராகரித்துள்ளார்.

அவ்வாறான ஒரு கூட்டணி சாத்தியமாகும் என தாம் நம்பவில்லை என Justin Trudeau நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.

எனினும் லிபரல் கட்சி எப்போதும் போலவே, கனேடியர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு ஏனைய கட்சிகளுக்கு உதவிகரமாக செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.gfhnfgn

நாட்டின் மத்தியதர மக்கள் தற்போது எதிர்நோக்கிவரும் பொருளாதார சுமைகளை தீர்க்கும் தமது திட்டங்கள் தொடர்பில் பரப்புரைக் கூட்டங்களில் விளக்கமளித்துவரும் அவர், புதிய சனநாயக கட்சி அவ்வாறான பொருளதார திட்டங்களை கொண்டிருக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் திரைமறைவில் கட்சித் தலைவர்களுக்கிடையே இவ்வாறான இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் தாம் நம்பிக்கை கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக கனேடியர்கள் தமக்கு சிறந்த திட்டத்தினை முன்வைக்கக்கூடிய பிரதிநிதிகளை மிகப் பெரிய பலத்துடன் தேர்வு செய்வது சிறந்ததாக அமையும் எனவும் லிபரல் கட்சித் தலைவர் Justin Trudeau மேலும் தெரிவித்துள்ளார்.

The post கூட்டணி அமைத்துக் கொள்ளும் கருத்தினை லிபரல் கட்சித் தலைவர் நிராகரிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆரோக்கியமான முறையில் அழகை அள்ளிக் கொடுக்கும் ரோஸ் வாட்டர்

Posted: 18 Aug 2015 07:25 AM PDT

ju

juஉங்கள் சரும அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க பயன்படும் பொருட்களில் ஒன்று ரோஸ் வாட்டர்.

இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் சரும பிரச்சனைகளை தீர்க்கிறது. அதுமட்டுமல்ல முடியின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதை முறையாக பயன்படுத்தி வரும் போது சருமத்தில் உள்ள எரிச்சல், அதிகப்படியான எண்ணெய், வறட்சி, கருமை ஆகியவை நீங்கி சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

ரோஸ் வாட்டர் மூலம் அழகை அதிகரிக்கும் வழிமுறைகள்:-

1) தினமும் குளிக்கும் போது நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

2) வறட்சியான சருமம் உள்ளவர்கள், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சியின்றி, மென்மையோடு அழகாக இருக்கும்.

3) ரோஸ் வாட்டர் உள்ள பாட்டிலை அரை மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின் அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்களில் உள்ள வீக்கம் குறைந்து, கண்கள் அழகாக மாறும்.ju

4) இரவில் படுக்கும் போது ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால் மேக்கப் நீங்குவதோடு சருமமும் மென்மையோடு இருக்கும்.

5) ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். இது சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையாக வெளிக்காட்டும்.

6) பொதுவாக வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுங்கள். இதனால் முகத்தில் அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.

7) கோடையில் முகம் விரைவில் சோர்ந்து, பொலிவிழந்து காணப்படும். அப்போது ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால் முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

The post ஆரோக்கியமான முறையில் அழகை அள்ளிக் கொடுக்கும் ரோஸ் வாட்டர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™