Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


வீட்டு பாடம் செய்யும் மாணவர்களுக்கு மாதம் ரூ.60 பரிசு தரும் திட்டம்: ராஜஸ்தானில் அறிமுகம்

Posted: 18 Aug 2015 11:41 PM PDT

ராஜஸ்தான் மாநில அரசு மாணவ–மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. வீட்டுப்பாடங்களை முழுமையாக செய்து முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.60 பரிசு வழங்கப்படும் என்பதே அந்த திட்டமாகும்.

காங்கிரசின் வருமானம் ரூ.598 கோடியாக உயர்வு

Posted: 18 Aug 2015 11:36 PM PDT

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களுக்கு ரூ.20 ஆயிரத்துக்கு மேல் வரும் நன்கொடைகளுக்கு உரிய கணக்கு காட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 2013–14–ம் ஆண்டு எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு வருவாய் கிடைத்தது என்ற விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி ரூ.598 கோடி வருமானத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்துக்கள் மனித வெடிகுண்டுகளாக மாறி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: சிவசேனா

Posted: 18 Aug 2015 10:54 PM PDT

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்றால், இந்துக்கள் மனித வெடி குண்டாகவும் மாற வேண்டும் என்று இந்து அமைப்பான சிவசேனா தெரிவித்துள்ளது. மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேயை விமர்சித்து சமீபத்தில் வார இதழ் ஒன்றில் கட்டுரை வெளியானது. இது சிவசேனா தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து,

டெல்லி வந்தடைந்த வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனா மனைவியை இழந்த ஜனாதிபதிக்கு ஆறுதல் கூறினார்

Posted: 18 Aug 2015 10:36 PM PDT

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக டெல்லி வந்தடைந்த வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆறுதல் கூறினார். ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருந்த சவ்ராவுக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 7–ந்தேதி அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

4 சகோதரர்களால் கற்பழித்து, கொல்லப்பட்ட பெண்ணைப் பற்றி முலாயம்சிங் பேச்சால் சர்ச்சை

Posted: 18 Aug 2015 10:28 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அரசின் எலக்ட்ரிக் ரிக்க்ஷா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ''உத்தரபிரதேச மாநிலம் பதானில் 4

அமர்நாத் யாத்திரை: 38 பேர் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது

Posted: 18 Aug 2015 10:27 PM PDT

அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 38 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 2-ஆம் தேதி தொடங்கியது.

டெல்லிக்கு வாருங்கள்: புனே திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு உத்வேகமளிக்கும் கெஜ்ரிவால்

Posted: 18 Aug 2015 10:00 PM PDT

புனே திரைப்பட கல்லூரிக்குள் நேற்று நள்ளிரவு புகுந்த போலீசார், 5 மாணவர்களைக் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மனித உரிமை கமிஷனில் நடிகை ரோஜா புகார்: போலீசார் அராஜகமாக நடப்பதாக குற்றச்சாட்டு

Posted: 18 Aug 2015 09:52 PM PDT

ஆந்திர மாநிலம் நகரி நகர சபை தலைவி சாந்திகுமார். கடந்த மாதம் நகரசபை ஊழியர் ஒருவரை சாந்திகுமாரின் மகன் சுரேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுரேசை நகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ்,

பெற்ற மகளை இருமுறை கர்ப்பிணியாக்கிய தந்தை - உடந்தையாக இருந்த மனைவி கைது

Posted: 18 Aug 2015 09:50 PM PDT

பெற்ற மகள் என்றும் கருதாமல் கடந்த 16 ஆண்டுகளாக தன்னை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி, இருமுறை கர்ப்பிணியாக்கிய தந்தை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் மீது 22 வயது இளம்பெண் அளித்த புகாரையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மராட்டிய மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி நகரத்தை சேர்ந்த அந்தப் பெண் இதுதொடர்பாக மாவட்ட போலீசில் சூப்பிரண்ட்டை நேரில் சந்தித்து

ஹ்ரித்திக் ரோஷனுடன் ரொமாண்ட்டிக் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக ஏமாற்றிய கோகோ-கோலா மீது பெண் வழக்கு

Posted: 18 Aug 2015 09:41 PM PDT

கோகோ-கோலா தனது குளிர்பானத்தை எப்படியாவது சந்தைப்படுத்த அதன் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக பல்வேறு வாக்குறுதிகளை வாடிக்கையாளர்களுக்கு ஆரம்ப காலத்தில் வழங்கி வந்தது. சம்பந்தப்பட்ட பிரபலத்திடம் முறையாக இதற்கான அனுமதி பெற வேண்டும். இல்லையெனில், அது வெறும் போலி விளம்பரத் தந்திரமாகவே அறியப்படும்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே லட்டு டோக்கன்களை கூடுதல் விலைக்கு விற்றதாக 24 பேர் கைது

Posted: 18 Aug 2015 09:19 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் சாதாரண பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் சலுகை விலையில் 2 லட்டுக்கான 20 ரூபாய் டோக்கனும், கூடுதல் லட்டு தேவைப்படுவோருக்கு 4 லட்டுக்கான 100 ரூபாய் டோக்கனும் வழங்கப்படுகிறது. அந்த லட்டு டோக்கன்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சிலேயே பக்தர்களுக்கு

திருப்பதி கோவிலில் கட்டணசேவை தரிசனத்துக்கு 5000 டிக்கெட்டுகள் தயார்

Posted: 18 Aug 2015 09:17 PM PDT

திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சனை சேவை, சுப்ரபாத சேவை, அபிஷேக சேவை உள்ளிட்ட கட்டண சேவையில் பங்கேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கடந்த 7–ந்தேதி 25 ஆயிரத்து 577 டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்காக ஒதுக்கப்பட்டன.

இப்படியும் சில ஜென்மங்கள்: கட்டிய மனைவியையே சாமியாருக்கு காணிக்கையாக்க துடித்த புதுமாப்பிள்ளை

Posted: 18 Aug 2015 09:12 PM PDT

கடவுளின் மீதுள்ள நம்பிக்கையால் தன்னைத்தானே வதைத்துக் கொள்பவர்கள் மூட நம்பிக்கையாளர்கள் என பகுத்தறிவாளர்கள் கூறிவரும் நிலையில், கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் சாமியாருக்கு, கட்டிய மனைவியையே காணிக்கையாக்க துடித்த ஜென்மத்தை என்னவென்று

கோவா-வேளாங்கண்ணி இடையே 6 சிறப்பு ரெயில்கள்: கொங்கன் ரெயில்வே அறிவிப்பு

Posted: 18 Aug 2015 08:58 PM PDT

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆராக்கியமாதா பேராலய திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள வசதியாக மும்பையில் இருந்து மேற்கு ரெயில்வே இரு சிறப்பு

கேரளா கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகளை பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 18 Aug 2015 08:53 PM PDT

மதம் சார்ந்த நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், பொதுவிழாக்கள் ஆகியவற்றில் யானைகளை பயன்படுத்த தடை செய்யக்கோரி பெங்களூரில் இயங்கும் வனவிலங்குகள் மீட்பு- மறுவாழ்வு மையம் மற்றும் பிற பிராணிகள் நலச்சங்கங்கள் பொதுநல மனு ஒன்றை

கடத்தல்காரர்களை போலீசில் சிக்க வைத்து தப்பிய சிறுவன் - பரபரப்பு தகவல்கள்

Posted: 18 Aug 2015 08:36 PM PDT

பால்கர் மாவட்டம் வசாய் பகுதியை சேர்ந்தவர் உத்தம். நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு ராகுல் (வயது15) என்ற மகன் இருக்கிறான். இவன் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த ஒருவர், உனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. உனக்கு பாதுகாப்பாக உனது

எம்.பி. மகனிடம் கத்தி முனையில் ரூ.1½ லட்சம் கொள்ளை

Posted: 18 Aug 2015 08:16 PM PDT

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய 40 வயது மகன் மும்பை வந்திருந்தார். சாந்தாகுருஸ் பகுதிக்கு வந்த அவர், தனக்கு விபசார அழகி ஒருவருடைய சேவை தேவை என்று ஏஜெண்டு ஒருவரை அணுகினார். ஏஜெண்டும் விபசார அழகி ஒருவரை ஏற்பாடு செய்தார். அதன்படி அந்த அழகி காரில் வந்தார்.

மேற்கு வங்காளத்தில் மார்க்.கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரசார் மோதல்: தொழிற்சங்க நிர்வாகி அடித்துக்கொலை

Posted: 18 Aug 2015 08:05 PM PDT

மேற்கு வங்காள மாநிலம், ஜமுரியாவில் சுரங்கத்தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்க அமைப்பான சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்றுமுன்தினம் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் திடீரென போராட்டத்தில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

கூகுள், யாகூ இணையதளங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Posted: 18 Aug 2015 07:57 PM PDT

கூகுள் இந்தியா, யாகூ இந்தியா, மைக்ரோசாப்ட் கார்ப்பரேசன் இந்தியா ஆகிய இணையதளங்களுக்கு எதிராக சாபு மாத்யூ ஜார்ஜ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கருவில் இருக்கும் குழந்தை, ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் சோதனை

ஜார்கண்ட் மாநிலத்தில் துப்பாக்கி சண்டை: போலீஸ்காரர், மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை

Posted: 18 Aug 2015 07:39 PM PDT

ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் துல்மி கிராமத்தில், மாவோயிஸ்டு உள்ளூர் தளபதி சந்தன் என்பவர் தலைமையில் மாவோயிஸ்டுகள் குவிந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராஞ்சி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரபாத் குமார் தலைமையில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™