Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Woodbridge café துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபர் கைது

Posted: 14 Aug 2015 07:05 PM PDT

fh

fhஇருவர் கொலை செய்யப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரைக் யோர்க் பிராந்தியக் காவல்த்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

Islington Avenue மற்றும் நெடுஞ்சாலை 7 என்பவற்றிற்கு அருகில் அமைந்துள்ள Woodbridge café இல் கடந்த யூன் மாதம் 24 ஆம் திகதி காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதில் Vaughanஐ சேர்ந்த 47 வயதுடைய Maria Voci என்பவரும், 24 வயதுடைய Christopher Desimone என்பவரும் மோசமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளான நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவர்களுடன் மேலும் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், பாதுகாப்புப் காரணங்களுக்காக விபரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

fh

சம்பவம் இடம்பெற்ற சில நாட்களின் பின்னர் காவல்த்துறையினர் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபரின் புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்டிருந்ததுடன், அவரை தேடும் நடவடிக்கையையும் முடுக்கிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் தேடப்பட்டு வந்த மிசிசாகாவைச் சேர்ந்த 27 வயதான Jason Hay என்பவரை காவல்த்துறையினர் இன்று பிற்பகல் அளவில் கைது செய்துள்ளதாகவும், அவரை தவிர மற்றொரு சந்தேக நபரையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும் நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்றும் காவல்த்துறையினர் கூறியுள்ளனர்.

தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்த்துறையினர், இந்த விசாரணைகளில் திருப்பங்கள் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளதுடன், இந்த சம்பவம் தொடபில் தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post Woodbridge café துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒன்ராறியோவின் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களும் பேச்சுக்களுக்கு இணக்கம்

Posted: 14 Aug 2015 04:36 PM PDT

uiuy

uiuyமாகாண அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதற்கு ஒன்ராறியோவின் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கமும் இணக்கம் தெரிவித்துள்ளது.

புதிய பாடசாலை ஆண்டு அடுத்த மாதத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபடுவதனை தடுப்பதற்கான பேச்சுவார்த்தை முனைப்புகள் அண்மைய நாட்களில் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஒன்ராறியோ ஆங்கில கத்தோலிக்க பாடசாலை ஆசிரியர்கள் சங்கம், மற்றும் இடைநிலை பாடசாலை ஆசிரியர்கள் சங்கம் ஆகியன மாகாண கல்வி அமைச்சுடன் பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான இணக்கப்பாடுகள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளன.uiuy

இவ்வாறான நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி பேச்சுவார்தை மேசைக்கு திரும்புவதற்கு ஒன்ராறியே ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் சங்கமும் தற்போது இணக்கம் வெளியிட்டுள்ளது.

ஒன்ராறியோ ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் சங்கத்தில் சுமார் 76,000 ஆசிரியர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

The post ஒன்ராறியோவின் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களும் பேச்சுக்களுக்கு இணக்கம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரிட்டிஸ் கொலம்பியாவில் காட்டுத் தீ – 25 சதுரக் கிலோமீற்றர் தூரம் பரவியிருப்பதாக தகவல்

Posted: 14 Aug 2015 03:27 PM PDT

hj

hjபிரிட்டிஸ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சுமார் 25 சதுரக் கிலே மீற்றர் பரப்பிற்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rock Creek பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் அளவில் காட்டுத் தீ ஏற்பட்டது.

காட்டுத்தீ அந்த பகுதியில் பரவத்தொடங்கியதை அடுத்து அங்கிருந்த சுமார் 200 இற்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர்.

Kettle River Provincial Park இல் இருந்த ஏறக்குறைய 200 பேரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் என்றும், அவர்கள் தங்களது உடமைகள் வாகனங்கள் என்பவற்றை கைவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

hj

ஏற்பட்டுள்ள அந்த காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் இரவு பூராகவும் தீயணைப்புப் பணியாளர்கள் போராடி வருவதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த காட்டுத் தீ ஏற்பட்டதற்காக காரணம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

The post பிரிட்டிஸ் கொலம்பியாவில் காட்டுத் தீ – 25 சதுரக் கிலோமீற்றர் தூரம் பரவியிருப்பதாக தகவல் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாக்காளர் மத்தியில் முன்னிலையில் புதிய சனநாயக கட்சி

Posted: 14 Aug 2015 03:21 PM PDT

uj

ujபொதுத் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், தற்போதய நிலவரப்படி புதிய சனநாயக கட்சியே வாக்காளர் மத்தியில் முன்னிலை வகிப்பதாக அண்மைய கருத்துக்கணிபபு முடிவுகள் காட்டுகின்றன.

Forum Research அமைப்பு நேற்றைய தினம் வெளியிட்டுள்ள இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளின் பிரகாரம், பிரதான கட்சிகளான பழமைவாதக் கட்சி மற்றும் லிபரல் கட்சி ஆகியவற்றைக் காட்டிலும் புதிய சனநாயக கட்சி அதிக அளவிலான மக்கள் ஆதரவினை பெற்றுள்ளதாக காணப்படுகிறது.

எதிர்வரும் தேர்தலில் தாம் புதிய சனநாயக கட்சிக்கே வாக்களிக்கப் போவதாக, கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரில் மூன்றில் ஒரு பங்கினர் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் புதிய சனநாயக கட்சிக்கு 34 சதவீதம் மக்களும், பழமைவாதக் கட்சிக்கு 28 சதவீதமானோரும், லிபரல் கட்சிக்கு 27 சதவீதமான மக்களும் ஆதரவு வெளிப்படுத்தியுள்ளனர்.

எனினும் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பிறிதொரு கருத்துக் கணிப்பில் 39 சதவீத ஆதரவினை பதிவு செய்திருந்த புதிய சனநாயக கட்சிக்கு, தற்போது ஆதரவு குறைவடைந்துள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

The post வாக்காளர் மத்தியில் முன்னிலையில் புதிய சனநாயக கட்சி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மிசிசாகாவில் கட்டுமானப் பகுதி ஒன்றில் விபத்து

Posted: 14 Aug 2015 03:18 PM PDT

hy

hyமிசிசாகாவின் கட்டுமானப் பகுதியில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொழில் இட விபத்தில் 38வயது பணியாளர் ஒருவர் காயமடைந்ததாகவும், உயிராபத்தான நிலையில் இருந்த அவரை அவசர வானூர்த்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கீழ் கட்டுமானப் பகுதியில் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

hy

Queen Elizabeth Way மற்றும் Dixie வீதி என்பவற்றிற்கு அருகில் உள்ள Cormack Crescent இன் வேலைத்தளப் பகுதியில் மதியம் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு தொழிலாளர் துறை அமைச்சு அங்கு வரவழைக்க்பபட்டதாகவும் கூறப்படுகிறது.

The post மிசிசாகாவில் கட்டுமானப் பகுதி ஒன்றில் விபத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்ததோனேசிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனேடி ஆசிரியர் விடுதலை

Posted: 14 Aug 2015 10:23 AM PDT

GJFGHFHGH

GJFGHFHGHஇந்ததோனேசிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனேடி ஆசிரியர் இன்று வெள்ளிக்கிழமை விடுதலையாகியுள்ளார்.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்தாவில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கனேடியர் உள்ளிட்ட இருவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் இவர்கள் இருவருக்கும் பத்தாண்டு சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

ஆனால் அவர்கள் இருவருமே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர். இந்த வழக்கில் பெரும் சட்டக்குழப்பம் இருப்பதாக இருவரது ஆதரவாளர்களும் தெரிவித்துவந்தனர்.GJFGHFHGH

போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அவர்களது வழக்கறிஞர் ஏற்கனவே தெரிவித்தார்.

அத்துடன் ஜகார்த்தா இன்டர்கல்ச்சுரல் ஸ்கூல் என்ற அந்தப் பள்ளிக்கூடம் ஆரம்பம் முதலே இந்த இருவரையும் ஆதரித்துவந்திருந்ததுடன், இப்போது அவர்களை விடுதலை செய்து வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை அப்பள்ளி வரவேற்றுள்ளது.

The post இந்ததோனேசிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனேடி ஆசிரியர் விடுதலை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Posted: 14 Aug 2015 07:59 AM PDT

u

uவெண்பூசணிக்காயில் மறைந்திருக்கும் ஏராளமான சத்துக்கள் உடல் நலத்திற்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது.

பூசணிக்காய் திருஷ்டி கழிப்பதற்கு மட்டுமல்ல, திடமான உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம்.

வெண்பூசணியின் மருத்துவ குணங்கள்

வெண்பூசணியின் முற்றிய காய்கள் தலைவலி, நெஞ்சு சளி, இறைப்பு நோய் ஆகியவற்றுக்கு மருந்தாவதோடு சிறுநீரக மற்றும் இன உறுப்புகளில் ஏற்படும் நோய்களையும் போக்கவல்லது.

வெண் பூசணிப் பூவை மஞ்சள் காமாலை நோயைப் போக்கவும், சீதபேதி மற்றும் இருமலைப் போக்கவும் பயன்படுத்துகின்றனர்.

வெண்பூசணி வேரை, மஞ்சள் காமாலை மற்றும் சிறுநீர் பையின் கீழ்பகுதியில் அடைப்போ அல்லது எரிச்சலோ ஏற்பட்டு கடுமையான வலியையும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வையும் ஏற்படுத்துகிற நிலையில் உபயோகப்படுத்துகின்றனர்.

வெண்பூசணிக் கொடியின் தண்டு, வெந்நீரினாலோ நீரின் ஆவியினாலோ ஏற்பட்ட கொப்புளங்களை ஆற்றுவதற்குப் பயன்படுகிறது.

இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் சத்துக்கள் புதிய செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

உடல் எடையை குறைக்கும் வெண்பூசணி சாறு

l

தேவையான பொருட்கள்

பூசணிக்காய் - அரை கிலோ

தேன் - 2 தேக்கரண்டி

தண்ணீர் - 300 மி.லி

செய்முறை

வெண்பூசணியின் மேல் தோலை நீக்கி விட்டு சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து தண்ணீர் கலந்து வடிகட்டவும்.

அதில் தேன் கலந்து பருக வேண்டும்.

u

பயன்கள்

இந்த பூசணி சாறு உடலில் உள்ள அமிலத்தன்மையை நீக்கும். உடல் சூட்டாலும், பித்தத்தாலும் உண்டாகும் வயிற்று புண், வாய்ப்புண், மூலம், சிறுநீர் சம்பந்தமான நோய்கள், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவைகளுக்கு சிறந்த மருந்து.

இந்த சாறு ரத்தத்தில் காரத்தன்மையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலை 200 மி.லி வெண்பூசணி சாறு பருகலாம்.

புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள் இந்த சாறு பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். உடல் சூடு குறையும். உடலில் உள்ள திசுக்கள் புத்துணர்ச்சி பெறும்.

சர்க்கரை நோயாளிகள் இந்த சாற்றில் உப்பு மற்றும் சீரகத்தூள் கலந்து பருக வேண்டும்.g

The post வெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™