Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இன்ஜி., கல்லூரியில் சேர நாடு முழுவதும் ஒரே தேர்வு:11 ஆயிரம் கல்வி நிலையங்களில் அமலாகிறது

Posted:

புதுடில்லி:'நாடு முழுவதும் உள்ள அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டின் கீழ், ஒரே நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்' என, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை அளித்துள்ளது.

தொழில்நுட்ப கல்வியை பலப்படுத்தவும், அதன் கட்டமைப்பை மாற்றி அமைக்கவும் தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, கடந்த, காங்., ஆட்சியின் போது ஒரு குழு அமைக்கப்பட்டது.
அறிக்கை தாக்கல்:
அப்போது, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த, காங்கிரசைச் சேர்ந்த கபில் சிபல், இந்த குழுவை ...

15 சதவீத வங்கி கிளைகளை பெண்கள் நிர்வகிக்க பரிந்துரை

Posted:

புதுடில்லி:பொதுத்துறை வங்கிகளில், குறைந்தபட்சம், 15 சதவீத கிளைகளை, அனைத்து பெண் ஊழியர் அலுவலகங்களாக மாற்றுமாறு, பார்லிமென்ட் குழு பரிந்துரைத்துள்ளது.

'பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் பெண்களின் நிலை' என்ற தலைப்பில், பார்லிமென்ட் குழு தயாரித்துள்ள அறிக்கையில் இடம்பெற்ற பரிந்துரைகள் விவரம்:நாடு முழுவதும், பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்சம், 15 சதவீத கிளைகளை, முழுவதும் பெண் ஊழியர்களால் இயக்கப்படும் அலுவலகங்களாக மாற்றுமாறு, நிதியமைச்சகம் உத்தரவிட வேண்டும். பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் அதிகமாக உள்ள பகுதிகளில், இதுபோன்ற கிளைகள் ...

திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு

Posted:

திருப்பதி:''திருமலையில், 'ஆனந்த நிலையம் அனந்த சொர்ணமயம்' என்ற, கோவில் முழுவதையும் தங்கமயமாக்கும் திட்டம் கைவிடப்படுகிறது,'' என, தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:திருமலையில், ஏழுமலையான் குடி கொண்டிருக்கும் கோவில் முழுவதையும் தங்கமயமாக்க, ஐந்து ஆண்டுகளுக்கு முன், அப்போதைய அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு நாயுடு முடிவு செய்தார். அதற்கு, 'ஆனந்த நிலையம் அனந்த சொர்ணமயம் திட்டம்' என, பெயர் சூட்டினார். அந்தத் திட்டத்திற்கு பலர் பணம், தங்கம் என, நன்கொடை வழங்கினர்.

'கோவில் முழுவதையும் தங்க மயம் ...

25 ஆண்டு காட்டாட்சி போதும்: பீகாரில் மோடி

Posted:

கயா:''பீகார் மக்கள், 25 ஆண்டுகளாக காட்டாட்சி அடக்குமுறையின் கீழ் வாழ்கின்றனர். இதில் இருந்து விடுபடுவதற்கும், பீகாரை வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றுவதற்கும், இந்த சட்டசபை தேர்தல் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது; இதை, மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ஐ.ஜ.த., ஆட்சி:
பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற சூழல் நிலவுகிறது. நிதிஷ் ...

கை கழுவும் பழக்கம் டாக்டர்களிடம் குறைவு

Posted:

புதுடில்லி:இந்திய மருத்துவர்களிடையே, கை கழுவுதல், துாய்மையாக இருத்தல் விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளதாக, ஆய்வில் தெரிய வந்துஉள்ளது.

'எய்ம்ஸ்' எனப்படும், அகில இந்திய விஞ்ஞானம் மற்றும் மருத்துவக் கழகம், டில்லி, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லுாரி இணைந்து, இந்திய மருத்துவர்களின் துாய்மை பழக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டன.
அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய மருத்துவர்களில் பெரும்பாலானோர், சோப்பால் கை கழுவினால் போதுமென நினைக்கின்றனர். ஆனால், நோய் கிருமிகளிலிருந்து பாதுகாக்க, ஏ.பி.எச்.ஆர்., எனப்படும், ...

யோகாசனம் 'காப்பி:' தடுக்க முயற்சி

Posted:

புதுடில்லி:இந்தியாவின் பாரம்பரிய யோகா கலையை, உலக நாடுகள் அனைத்தும் பின்பற்றி வருகையில், அதை பிற நாடுகள் உரிமை கொண்டாடாமல் தடுக்கும் வகையில், யோகாசன கலையின், 1,500பயிற்சிகளை, சர்வதேச அளவில் காப்புறுதி பெறும் முயற்சியில், மத்திய அரசு இறங்கி உள்ளது.

சொந்த கண்டுபிடிப்பு:
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து, ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா நாளாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல ஆண்டுகளாகவே, யோகாவை உலக நாடுகளில் ஏராளமானோர் விதவிதமாக செய்து வருகின்றனர். எனவே, அந்த பயிற்சியை தன் சொந்த கண்டுபிடிப்பு என அறிவித்து, ...

மதுவிலக்கை வலியுறுத்தி தொடரும் போராட்டங்களால் அரசுக்கு நிர்ப்பந்தம்: ஆளாளுக்கு அறிவிப்பு வெளியிட்டு ஆதாயம் தேட முயற்சி

Posted:

தமிழகத்தில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்கின்றன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு, அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும், ஆளாளுக்கு போராட்ட அறிவிப்பு வெளியிட்டு ஆதாயம் தேட முயற்சிப்பதால், இந்த விஷயத்தில், விரைவில் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 'டாஸ்மாக்' கடைகள் மூலம், மதுபான சில்லரை விற்பனை, சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் கிடைக்கும் வருவாய், அரசின் இலவச திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. ...

மகன் கொலை செய்யவில்லை: 'மாஜி' ராஜபக் ஷே அலறல்

Posted:

கொழும்பு: ''கடந்த 2012ல், சர்ச்சைக்குரிய வகையில், 'ரக்பி' விளையாட்டு வீரர் மரணம் அடைந்ததற்கும், என் மகனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை,'' என, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக் ஷே கூறியுள்ளார்.கடந்த 2012ல், இலங்கையில், தேசிய ரக்பி விளையாட்டு வீரர் வாசிம் தாஜுதீன், காரில் பிணமாக கிடந்தார். இதற்கு, சக ரக்பி வீரரும், முன்னாள் அதிபர் ராஜபக் ஷேயின் இரண்டாவது மகனுமான யோசிதா தான் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், வாசிம், விபத்தில் இறந்ததாக கூறிய போலீசார், உடலை அடக்கம் செய்து விட்டனர்.இந்நிலையில், வாசிம் மரணம் தொடர்பாக புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், ...

'தலைவர்கள் தேடி வருகின்றனர்': விஜயகாந்த் பேச்சு

Posted:

சென்னை: கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது. பல தலைவர்களும், நம்மை தேடி வருகின்றனர் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.சென்னை, கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. செயற்குழுவில், விஜயகாந்த் பேசியதாவது:கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது. பல தலைவர்களும், நம்மை தேடி வருகின்றனர். தே.மு.தி.க., செயல்களுக்கு ஆதரவு தருகின்றனர். இது தொடரும் வகையில், நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். கட்சி நிர்வாகிகளும், எம்.எல்.ஏ.,க்களும், மக்களுடன் நட்பை ...

5 ஆண்டுகளில் 153 மாணவர்கள் தற்கொலை: இளம் மனதை துரத்தும் எதிர்மறை எண்ணங்கள்

Posted:

கோவை: மாணவர்கள் மத்தியில், குறைந்து வரும் சகிப்புத்தன்மையால், எதிர்மறை எண்ணங்கள் அதிகளவில் தலைதுாக்கி வருகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும், கடந்த ஐந்து ஆண்டுகளில், 153 பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இன்றைய கல்விமுறையில் உள்ள குளறுபடிகளே, இதற்கு முக்கிய காரணமாவதாக கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இன்றைய கல்விமுறையை பொறுத்தவரையில், மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் பெறவும், வேலைவாய்ப்பு என்ற இரு கோணத்தில் மட்டுமே மாணவர்களை அழைத்துச்செல்கிறது. புதிய சிந்தனை, சகிப்புத்தன்மை, சமூக அக்கறை, பிரச்னைகளை எதிர்கொள்ளும் பக்குவம், ...

அமெரிக்க அதிபர் தேர்தல் இளம் வேட்பாளர் ஜிண்டால்

Posted:

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் குதித்துள்ள, 17 பேரில், மிகவும் வயது குறைந்தவர் என்ற பெருமையை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, பாபி ஜிண்டால், 44, பெற்றுள்ளார்.அமெரிக்க மாகாண கவர்னர்னராக பதவியேற்றவர்களில், இவர் தான் மிகவும் இளையவர். இவர், 36 வயதில், லுாசியானா மாகாண கவர்னராக பொறுப்பேற்றார்.அதிபர் தேர்தலுக்கான போட்டியில், இளையவர் என்ற பெருமையை இவர் பெற்றிருந்தாலும், ஒருவேளை வெற்றி பெற்று அதிபராகும் போது மிகவும் இளையவர் என்ற சிறப்பை பெற முடியாது.ஏற்கனவே, தியோடர் ரூஸ்வெல்ட், 42ம் வயதிலேயே அந்த சாதனையை படைத்துவிட்டார்.குடியரசு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™