Tamil News | Online Tamil News |
- வங்கிகளில் நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நெருக்கடி: தங்கம் விலை சரிவால் உடனே பணம் கட்ட நிர்ப்பந்தம்
- அமித் ஷாவை மாற்றிய 'மிஸ்டு கால்'
- அடுத்த ஆண்டு காலியாகும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் பதவி: பா.ஜ., குறி
- பீகார், இமாச்சல் மாநிலங்களுக்கு புது கவர்னர்கள் நியமனம்: கலந்து ஆலோசிக்கவில்லை என்கிறார் நிதிஷ்
- மதுவிலக்குக்கு புதிய சட்டம் வருமா? கவர்னர் பதிலால் தி.மு.க., அதிருப்தி
- பிரமோஸ் ஏவுகணைக்கு அப்துல் கலாம் பெயர்
- மேகதாது அணை விவகாரத்தில் சித்தராமையா உறுதி: அணை கட்டியே தீருவோம் என கொக்கரிப்பு
- 'தூய்மை இந்தியா' திட்டத்தில் திருச்சி 2ம் இடம் பிடித்து சாதனை
- பயங்கரவாதி நவீத் வீடு கண்டுபிடிப்பு: பாகிஸ்தான் 'புளுகு' அம்பலம்
- அப்துல் கலாம் திடீர் மரணத்தைப் பற்றி சில உண்மைகள்
- பாகிஸ்தான் பயங்கரவாதியிடம் புலனாய்வு அமைப்புகள் விசாரணை
| வங்கிகளில் நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நெருக்கடி: தங்கம் விலை சரிவால் உடனே பணம் கட்ட நிர்ப்பந்தம் Posted: தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ளவர் களுக்கு, வட்டி தவணைத் தொகை செலுத்த கோரி, 'நோட்டீஸ்' அனுப்பி வங்கிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. நகைகள் ஏலம் போகாமல் இருக்க, தனியார் நிறுவனங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுக்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிதி நிறுவனங்கள், கூடுதல் வட்டியை, அடகு வைப்பவர்கள் மீது திணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேசிய வங்கிகள், தனி யார் வங்கிகள், கிராமப்புற கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், தங்கத்தை ஈடு பொருளாக வைத்து, பொதுமக்களுக்கு கடன் ... |
| அமித் ஷாவை மாற்றிய 'மிஸ்டு கால்' Posted: அ.தி.மு.க,விடம் இருந்து, 90 'சீட்'களை பெற்று, சட்டசபை தேர்தலை சந்திக்கும் முனைப்பில், பா.ஜ., இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில், 60 ஆயிரம் பூத் கமிட்டிகள் உள்ளதால், ஒரு பூத் கமிட்டிக்கு, 100 பேர் வீதம், 60 லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார். ஆனால், 45 லட்சம் பேர், 'மிஸ்டு கால்' திட்டத்தின் மூலம் இணைந்தனர். 6 லட்சம் பேர்...: 'இந்த உறுப்பினர்கள் அனைவரும், இரண்டாவது தடவை, 'மிஸ்டு கால்' கொடுத்து, அதன்மூலம் தங்கள் பெயரை பதிவு செய்தால் தான், உறுப்பினர் சேர்க்கை, உறுதி செய்யப்படும்' என, கட்சி ... |
| அடுத்த ஆண்டு காலியாகும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் பதவி: பா.ஜ., குறி Posted: சென்னை:தமிழகத்தைச் சேர்ந்த, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவி காலம், அடுத்த ஆண்டு முடிவு பெறுகிறது. அதில் குறைந்தது, மூன்று இடங்களை கைப்பற்ற, பா.ஜ., வியூகம் அமைத்துள்ளது. தமிழக ராஜ்யசபா எம்.பி.,க்களில், தி.மு.க.,வை சேர்ந்த ராமலிங்கம், தங்க வேலு; அ.தி.மு.க.,வை சேர்ந்த நவநீத கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ரபி பெர்னான்ட்; காங்கிரசைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், ஆகியோரின் பதவி காலம், 2016 ஜூன், 29ம் தேதி, நிறைவு பெறுகிறது. அடுத்த ஆண்டு, மே மாதத்திற்கு முன், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், அதிக இடங்களை கைப்பற்றும் கட்சி, ராஜ்யசபா எம்.பி., பதவியை ... |
| பீகார், இமாச்சல் மாநிலங்களுக்கு புது கவர்னர்கள் நியமனம்: கலந்து ஆலோசிக்கவில்லை என்கிறார் நிதிஷ் Posted: புதுடில்லி:பீகார் சட்டசபைத் தேர்தல், இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அந்த மாநிலத்தின் கவர்னராக, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.,யுமான, ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசத்துக்கு, கல்வியாளர், தேவ் விரத் ஆச்சார்யா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதி, பீகார் மாநில கவர்னராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். ராஜஸ்தான் மாநில கவர்னர் கல்யாண் சிங், இமாச்சல பிரதேச மாநில கவர்னராகவும் கூடுதல் பொறுப்பு ... |
| மதுவிலக்குக்கு புதிய சட்டம் வருமா? கவர்னர் பதிலால் தி.மு.க., அதிருப்தி Posted: தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில், எ.வ.வேலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஜெ.அன்பழகன் ஆகியோர், நேற்று முன்தினம், சென்னையில் கவர்னர் ரோசய்யாவை சந்தித்தனர். அப்போது, 'மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர, சட்ட சபையைக் கூட்ட வேண்டும்' என வலியுறுத்தி, மனு கொடுத்தனர். மனுவில், 'காந்தியவாதி சசிபெருமாள் மரணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும்; மாணவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்; மாணவர்கள் மீது தடியடி நடத்தியது குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என, மேலும் கூறப்பட்டிருந்தது.பின், மனுவில் உள்ள கோரிக்கைகள் குறித்து ... |
| பிரமோஸ் ஏவுகணைக்கு அப்துல் கலாம் பெயர் Posted: பெங்களுரு: அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும், 'ஹைப்பர்சோனிக்' ஏவுகணைக்கு, மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று, பிரமோஸ் திட்ட தலைமை செயல் அதிகாரி சுதிர்குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:அப்துல் கலாமின் தொலைநோக்கு பார்வைதான், பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பிற்கும், அதன் வெற்றிக்கும் காரணம்.அடுத்து, 'பிரமோஸ் ஏவுகணை வகைகளில், அடுத்த தலைமுறைக்கான, 'ஹைபர்சோனிக்' எனப்படும் மிக அதிகவே ஏவுகணைகளை, இந்தியா தயாரிக்க வேண்டும்' என்று அவர் விரும்பினார்.அதற்கான பணிகள் தொடங்கி விட்டன. ஏவுகணை, வரைபட ... |
| மேகதாது அணை விவகாரத்தில் சித்தராமையா உறுதி: அணை கட்டியே தீருவோம் என கொக்கரிப்பு Posted: பெங்களூரு: ''மேகதாது அணையை திட்டமிட்டபடி கட்டியே தீருவோம்,'' என, கர்நாடகா முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையா மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில், மேகதாது என்ற இடத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட, அம்மாநில அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், 'காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மேகதாது அணை கட்டுவது, தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்' என, தமிழக அரசு தெரிவித்து வருகிறது. 'கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கை, காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது' என்றும், தமிழக ... |
| 'தூய்மை இந்தியா' திட்டத்தில் திருச்சி 2ம் இடம் பிடித்து சாதனை Posted: புதுடில்லி: நாட்டில், 'துாய்மை இந்தியா' திட்டத்தை அமல்படுத்துவதில், மைசூரூ நகரம் முதலிடத்தையும், திருச்சி, இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன.பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணப்படி, 'துாய்மை இந்தியா' திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை, திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுத்தல் போன்றவற்றின் அடிப்படையில், நாடு முழுவதும், 476 நகரங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள நகரங்களில் மட்டுமே, கணக்கெடுப்பு நடந்தது. இதன்படி, கர்நாடகாவின் மைசூரு, முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் திருச்சி, ... |
| பயங்கரவாதி நவீத் வீடு கண்டுபிடிப்பு: பாகிஸ்தான் 'புளுகு' அம்பலம் Posted: புதுடில்லி : இந்தியாவிடம் பிடிபட்ட பயங்கரவாதி முகமது நவீத், பாகிஸ்தானைச் சேர்ந்தவன் அல்ல என்று அந்நாடு மறுத்துள்ள நிலையில், அவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் தான் என்பதற்கு, அசைக்க முடியாத ஆதாரங்கள் கிடைத்துள்ளன.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் உதம்பூரில், கடந்த, 5ம் தேதி, எல்லை பாதுகாப்பு படையினரை தாக்கிய, முகமது நவீத், உள்ளுர் மக்களின் ஒத்துழைப்பில் கைது செய்யப்பட்டான்.விசாரணையில், 'இந்தியாவில் நுழைவதற்கு, 45 நாட்களுக்கு முன், பாகிஸ்தானில், லஷ்கர் -இ- தொய்பா முகாமில் பயிற்சி பெற்றேன்' என்று, நவீத் தெரிவித்தான்.அவன் அளித்த வாக்குமூலம், 'இந்தியாவின் அமைதியை ... |
| அப்துல் கலாம் திடீர் மரணத்தைப் பற்றி சில உண்மைகள் Posted: புறநானுாறில் கணியன் பூங்குன்றனார் கூறியது போல, இந்த உலகத்தையே தன் வீடாக்கி, உலக மக்கள் அனைவரையும் தன் சகோதரர் போல நினைத்து வாழ்ந்தவர், முன்னாள் ஜனாதிபதி டாக்டர், அப்துல் கலாம்!தமிழக மாநிலம் ராமேஸ்வரத்தில் பிறந்து, தமிழகத்திலேயே படித்து வளர்ந்து, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள, 'தும்பா' ராக்கெட் மையத்தில், ஏவுகணை ஆய்வு செய்து, 20 ஆண்டுகள் அங்கேயே பணிபுரிந்து, ஆந்திர மாநிலம், ஐதராபாத் பாதுகாப்பு மையத்தில் பணியாற்றி, அணுகுண்டு ஆய்வு செய்து, பல ராக்கெட்டுகளை விண்ணில் விட்டார்; ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணுகுண்டு சோதனையில் வெற்றி கண்டார். ... |
| பாகிஸ்தான் பயங்கரவாதியிடம் புலனாய்வு அமைப்புகள் விசாரணை Posted: ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில் பிடிபட்ட, பாக்., பயங்கரவாதியிடம், என்.ஐ.ஏ., புலனாய்வு அமைப்பு, காஷ்மீர் போலீஸ் ஆகியவை, கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றன.பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கும்பல், சில வாரங்களுக்கு முன், ஜம்மு - காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியது. பின், இரு குழுக்களாக, அவர்கள் பிரிந்தனர். ஒரு குழு, குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தாக்குதல் நடத்தியது.மற்றொரு குழு, கடந்த 3ம் தேதி, உதம்பூரில், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில், இரு வீரர்கள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 09,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |