Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தைவானை தாக்கிய 'சோடலர்' புயல்

Posted: 08 Aug 2015 03:36 PM PDT

தைபே: கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த தைவான் நாட்டை, 'சோடலர்' புயல் தாக்கியதில், நான்கு பேர் உயிரிழந்தனர். தைவானின் கிழக்கே, ஹிசிலின் நகரில் மையம் கொண்டிருந்த புயல், நேற்று அதிகாலை, 4:40க்கு கரையை கடந்தது. அப்போது, மணிக்கு, 237 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. கூடவே பெய்த கன மழையால், தாஹியான் கிராமத்தில நிலச்சரிவு ஏற்பட்டு, 10க்கும் மேற்பட்ட வீடுகள், மண்ணில் புதைந்தன. பயங்கரமாக வீசிய சூறாவளிக் காற்றை தாக்குப் பிடிக்க முடியாமல், ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன; மின் ...

'கொம்பன்' கார்த்திக் எந்த சமூகம்? கொலையில் முடிந்த திரைப்பட விவாதம்!

Posted: 08 Aug 2015 03:09 PM PDT

கொம்பன் படத்தில் கார்த்தி்க் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என இரண்டு வழக்கறிஞர்கள் இடையே நடந்த வாக்குவாதத்தால், வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திலே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மானாமதுரையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் ராம்நாத். இவர் மானாமதுரை மேற்கு ஒன்றிய ம.தி.மு.க வி்ன் ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார். இதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் பொன்முத்துராமலிங்கம். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ...

சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்

Posted: 08 Aug 2015 02:49 PM PDT

தமிழ்நாட்டில் எல்லோருடைய மனதிலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும், தமிழ்நாட்டின் வளத்தையே பாதிக்கும் ஒரு பிரச்சினைக்கு தீர்வுகாணும் முதல் நடவடிக்கைக்கான வாசலை மதுரையில் உள்ள ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் திறந்துவிட்டுள்ளனர். இது இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் மனதில் மட்டற்ற மகிழ்ச்சியை பெருக்கெடுத்து ஓடவைத்து விட்டது. தமிழ்நாடு முழுவதும் எங்கும் பயனில்லாமல் நீர்வளத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுத்துக் கொண்டிருக்கும் சீமை கருவேலமரம், சீமைஒடை, ...

தன் வினை தன்னை சுடும்போது ???????????? by Krishnaamma :)

Posted: 08 Aug 2015 02:42 PM PDT

புது டெல்லி கல்லூரி வளாகம், கொத்து கொத்தாக மாணவிகள் அவர்களின் பேச்சு சத்தமே எங்கும் நிறைந்து இருந்தது. அவர்களில் இந்த ஐந்து  பேரும்  - சுதா, கல்பனா, ஷில்பி, மானசி மற்றும் தான்யா - பள்ளிக் கூடத் திலிருந்தே ஒன்றாக படித்து வருபவர்கள். ஒரே காலேஜில் சேர விருப்பம் கொண்டு இங்கும் சேர்ந்து இருக்கிறார்கள். ஆச்சு இது கடைசி வருடம்.....இனி கல்யாணம் என்று ஆனால் எப்படி இருப்போமோ  என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் இருவருக்கு திருமண நிச்சய தார்த்தம் ஆகி இருந்தது. அதனால் அவர்களுக்கு பார்ட்டி ஒன்று தர ...

சிரித்து மகிழ செய்தித்தாள் படியுங்கள்

Posted: 08 Aug 2015 01:57 PM PDT

- காலையில் தூங்கி எழுந்து, பல் துலக்கி, காபி குடித்தவுடன் ஒரு வரி விடாமல் பத்திரிகை படிக்கும் வழக்கம் பலருக்கு உண்டு. சில செய்திகளைப் படித்தாலே ரத்தம் கொதிக்கும், உதாரணத்துக்கு, 'தங்கம் விலை மேலும் சரிவு: பவுன் ரூ.18,664-க்கு விற்பனை'. சம்பளமும் போதாமல், கையில் சேமிப்பும் இல்லாத நிலையில் இப்படி அநியாயமாக தங்கம் விலை குறைந்து கொண்டிருந்தால் ரத்தம் கொதிக்காமல் இருக்குமா? இதைப் பயன்படுத்திக்கொண்டு பலர் நகைக் கடைகளுக்குப் படையெடுத்துச் சென்று வாங்குகிறார்கள் என்று தொடர்ந்து அதே செய்தியில் ...

உதவ முடியுமா

Posted: 08 Aug 2015 01:10 PM PDT

என்னிடம் சில அருமையான புத்தகங்கள் உள்ளது.. அதை மின்னூலாக்கி ஈகரையில் தரவேற்றம் செய்வது எப்படி என சொல்ல முடியுமா..செயலிகள் கட்டாயம் என்றால் பெயர் குறிப்பிடவும்.. நன்றி உறவுகளே..

ரமணியின் கவிதைகள்

Posted: 08 Aug 2015 12:40 PM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

பொடி வெச்சு பேசறவங்களை பிடிக்காது..!

Posted: 08 Aug 2015 12:39 PM PDT

யார் என்ன சாப்பிட்டாலும் மாப்பிள்ளைதான் பில் கொடுப்பார்..! - பரவாயில்லையே, மாப்பிள்ளை என்னவா இருக்காரு? - ஓட்டல்ல சர்வரா இருக்காரு - ஆர்.ஜர்லின் ஜெயா - ----------------------------------------- - மன்னா! எதிரி நாட்டு மன்னன் தன் படைகளோடு வந்து சண்டையிட எல்லையில் காத்திருக்கானாம்...! - எனக்கு எதிர்ப்பு சக்தி இல்லேன்னு டாக்டர் சொல்லியிருப்பதை உடனே போய் சொல்லி விட்டு வா..! - மு.சுகாரா - ---------------------------------------------- - ஏங்க இப்படி பொம்பளை மாதிரி சீரியல் பார்த்து ...

முதலிரவில் ஆபாச வீடியோ எடுத்ததாக கணவர் மீது இளம்பெண் புகார்

Posted: 08 Aug 2015 11:57 AM PDT

நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்தவர் நிவேதாகுமாரி (வயது 20). இவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:– எனக்கும், களியக்காவிளை அருகே உள்ள மடிச்சலைச் சேர்ந்த சஜூவுக்கும் (29) கடந்த ஜூன் மாதம் 17–ந் தேதி திருமணம் நடந்தது. சஜூ வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். திருமணத்தின்போது நாங்கள் வரதட்சணையாக 25 பவுன் நகையும், ரூ.75 ஆயிரம் ரொக்கமும் கொடுத்தோம். திருமணத்தன்று இரவு சஜூவின் வீட்டில் எங்கள் முதலிரவு நடந்தது. அப்போது ...

தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

Posted: 08 Aug 2015 11:56 AM PDT

1. ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் – 236 அடி 2. திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு. 3. தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம் 4. ஆவுடையார் கோவில் – 200 அடி 5. தென்காசி – 178 அடி 6. கங்கைகொண்ட சோழபுரம் – 174 அடி 7. மதுரை – 170.8 அடி தெற்கு கோபுரம் 8. ஸ்ரீவில்லிப்புத்தூர் – 164 அடி வடபத்ர சாயி கோபுரம் 9. மன்னார்குடி – 154 அடி 10. குடந்தை சாரங்கபாணி கோவில் – 147 அடி 11. சிதம்பரம் – 140 அடி வடக்கு கோபுரம் 12. திருவானைக்காவல் – 135 அடி கீழ கோபுரம் 13. சுசீந்திரம் ...

புத்தகம் தேவை

Posted: 08 Aug 2015 11:20 AM PDT

தஸ்தாவயெஸ்கி யின் வெண்ணிற இரவுகள் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு (எஸ்.இராமகிருஷ்ணன்) பிடிஎப் வடிவில் கிடைக்குமா..

விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா..

Posted: 08 Aug 2015 09:46 AM PDT

ஈகரை உறவுகளே.. ஒரு சந்தேகம் கேட்க விரும்புகிறேன். தெரிந்தவர்கள் உதவுங்கள். என்னுடையது ஹெச்.பி நிறுவனத்தின் லேப்டாப். அதில் ஒரிஜினல் விண்டோஸ்7 ஹோம் பேசிக் உள்ளது. இப்போது புதிதாக வெளியான விண்டோஸ் 10 - ஐ நான் அப்கிரேடு செய்துவிட்டபிறகு. நான் ரீஸ்டோர் செய்ய வேண்டிவந்தால். ஏற்கனவே D டிரைவில் பேக்கப்பாக இருந்த விண்டோஸ் 7 மறுபடி கிடைக்குமா. அல்லது அந்த பேக்கப் விண்டோஸ் 10 ஆக மாறிவிடுமா. அப்படி விண்டோஸ் 7 மறுபடி கிடைத்தால் விண்டோஸ் 10 மறுபடி அப்கிரேடு செய்யவேண்டி வருமா. ரீஸ்டோர் செய்தாலும் அப்கிரேடு ...

அசுரகணம் - கா.ந. சுப்ரமண்யனின் மிக சிறந்த நாவல் .

Posted: 08 Aug 2015 08:30 AM PDT

க. நா. சு. நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அசுரகணம். அசுரகணங்களின் மீது மனித மனம் கொண்டிருக்கும் அலாதியான கவர்ச்சியை அற்புதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.இப்படைப்பில் புறநிகழ்வுகள் வெகு சொற்பம். மன நிகழ்வுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் நாவல். அசாதாரணமானவன், விசித்திரமானவன், சிந்தனையாளன் என்றெல்லாம் தன்னைக் கருதிக்கொள்ளும் ஒரு இளைஞனிடம் சுழித்துச் சுழன்றோடும் சுபாவமான எண்ண ஓட்டங்களில் இப்படைப்பு உருப்பெற்றிருக்கிறது. ஒரு நிகழ்வின் அடியாக ஓர் எண்ணம் எழுந்து, அது அதன் எல்லாப் பக்கங்களிலும் ...

ச்சீய் - சி.சரவணகார்த்திகேயன் நூலினை டவுன்லோட் செய்ய .

Posted: 08 Aug 2015 08:28 AM PDT

ச்சீய் பக்கங்கள் 2012 – 2013 ஆண்டுகளில் குங்குமம் வார இதழில் தொடராக வந்தது. மொத்தம் 25 அத்தியாயங்கள். அது போக பதிப்பக வேண்டுகோளுக்கு இணங்கி நூலாக்கத்துக்கென கலவி பற்றி ஓர் அத்தியாயம் எழுதிச் சேர்த்தேன். ஆக மொத்தம் 26 அத்தியாயங்கள். ஆனால் அதில் 22 அத்தியாயங்கள் மட்டுமே 2014ல் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பக வெளியீடாக வந்த வெட்கம் விட்டுப் பேசலாம் புத்தகத்தில் இடம் பெற்றது. மீதமிருக்கும் 4 அத்தியாயங்களையும் நூலுக்கு எழுதிய முன்னுரையையும் தொகுத்து, புத்தகத்துக்கு முன்பு தீர்மானித்திருந்த ச்சீய்… என்ற ...

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .

Posted: 08 Aug 2015 08:27 AM PDT

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ...

மதுபானம் கள்ளை விட நல்லவை என நிரூபிக்க வைகோவுக்கு 10 நாள் கெடு

Posted: 08 Aug 2015 07:48 AM PDT

ஈரோடு: மதுபானங்கள், கள்ளை விட, நல்லவை என்பதை நிரூபிக்க வைகோவுக்கு 10 நாள் அவகாசம் வழங்கி கள் இயக்கம் அளித்து சவால் விடுத்துள்ளது. தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: சேலத்தில், 7ம் தேதி, காந்தியவாதி சசிபெருமாளின் இறுதி சடங்கு நடந்தது. அஞ்சலி கூட்டத்தில் இரங்கல் உரையாற்றிய, ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ, "ம.தி.மு.க. ஒருபோதும் கள்ளை ஆதரிக்காது. பூரண மதுவிலக்கை பற்றி தான் பேச வேண்டும். கள் ஆதரவாளர்கள் வந்திருக்கிறார்கள். ...

தலை இல்லாதவன் தலையை சுமப்பவன்.-விடுகதைகள்

Posted: 08 Aug 2015 06:58 AM PDT

1. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன? - 2. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்ன? - 3. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன? - 4. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார்? - 5. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார்? - 6. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். யார்? - 7. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன? - 8. எண்ணெய் வேண்டா விளக்கு; ...

கவிக்கு கவி

Posted: 08 Aug 2015 06:47 AM PDT

உனை பற்றி எழுத நினைத்தேன்
வார்த்தைகள் இல்லை!!

உனை பற்றி பாட நினைத்தேன்
வரிகளும் ராகங்களும் இல்லை

உனை வரைய நினைத்தேன்
தூரிகையால் வரைய இயலவில்லை!!!

முட்டாள் நான்

உன்னை போல உலகில் ஒன்றும்
இல்லாதிருக்க
எப்படி இவையெல்லாம்
சாத்தியமாகும்??

ஒட்டிக்கொண்டதோ உன் கண்களாக ?

Posted: 08 Aug 2015 06:06 AM PDT

ஒட்டிக்கொண்டதோ உன் கண்களாக ? திரட்சி மிகு பழம் கையிலே மிரட்சி மிகு கண்கள் பார்வையிலே நா வறட்சி நீக்கும் பழம் , நீக்குமா உன் வரட்சி தனை . தட்டில் உள்ள பழங்களில் குறையும் ரெண்டு ஒட்டிக்கொண்டதோ உன் கண்களாக ? ரமணியன்

எனது கதைகள் --

Posted: 08 Aug 2015 05:55 AM PDT

ஓட்டைப் படகு. ============ காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று ...

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Posted: 08 Aug 2015 05:03 AM PDT

வணக்கம்.... எனக்கு இந்த திரைப்படங்களின் பாடல்கள் கிடைக்குமா.. ..நான் உங்கள் ரசிகன் ,,புதிழ சரித்திரம்.. ..அந்த வீட்டில் ஒருகோவில்.. ..தங்கச்சி.. அத்துடன் குருபானி கிந்தி,,பாடல்கள் ஒருகாலத்தில் தமிழில் அதே இச்சசமைப்போடு வெளிஜாகி இருந்தது அந்த பாடல்கள் கிடைக்க வாழ்ப்பு இருக்குமா.. இங்கு உள்ள நண்பர்கள் ஜாரிடமாவது இருக்கிந்தால் தந்து உதவுங்கள்..

கனவு

Posted: 08 Aug 2015 04:23 AM PDT

வெற்று காகிதத்தின் முன் சொல்லுக்காக காத்திருக்கும் கவிஞனை போல அந்த நடு நிசியில் உனக்காக காத்திருக்கிறேன்! நீண்ட மண் பாதை இலை உதிர்ந்த வாகை மரங்கள் கூடு திரும்பும் பறவைகள் மரங்களில் கவ்வி கொண்டு இருந்தது இருள் உனக்கு மட்டும் கேட்டுக்கும் உந்தன் கால் ஓசை எனக்கும் கேட்க நீ வருகிறாய் என்று அறிகிறேன்! என்னருகில் விழிக்கிறாய் முகம் தெரியாத இருளில் ஒருவரை ஒருவர் உணர்ந்து கொ‌ள்ளுகிறோம் திறந்த நம் விழிகளை இமை என மூடும் இருள்! உந்தன் கைகள் எனை மெதுவாக வருட எனக்குள் ...

tamil novel

Posted: 08 Aug 2015 02:02 AM PDT

ப விஜய் வழங்கிய அரண்மனை ரகசியம் நாவல் கிடைக்குமா
கணேஷ்

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Posted: 08 Aug 2015 12:55 AM PDT

கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மதுவிலக்கு கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் ஆளும் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.அதனால்தான் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் காவல்துறை அதிகாரிகளோடு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அவசர அவசரமாகக் கேட்டு அறிந்து இருக்கிறார். கோட்டையில் அவசர ஆலோசனை நடந்து கொண்டிருக்கும்போதே சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைமுன்பு திரண்டனர்.புத்தகத்தைப் படிக்கவா சாராயத்தைக் குடிக்கவா ...

அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் 20 அடி உயரத்தில் சிலை வைக்க முடிவு

Posted: 08 Aug 2015 12:32 AM PDT

ராமேசுவரத்தில் அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், மாணவ-மாணவிகள் அஞ்சலி செலுத்தி வரு கின்றனர். அப்துல் கலாமுக்கு பாம்பன் பாலம் அருகில் சிலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களின் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கடந்த மாதம் 27-ந்தேதி மேகாலயா மற்றும் ஷில்லாங் கில் நடந்த ஒரு கருத்தரங்கில் மாணவர்களிடையே பேசி கொண்டிந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந் தார். அப்துல் கலாம் இறந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. அவரது உடலுக்கு ...

சூனியக்காரிகள் என சந்தேகித்து 5 பெண்கள் நேற்றிரவு அடித்துக் கொலை

Posted: 08 Aug 2015 12:13 AM PDT

மூடநம்பிக்கைக்கு பேர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியம் வைப்பதாக சந்தேகித்து நேற்றிரவில் மட்டும் 5 பெண்களை உள்ளூர் மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் மாவட்டமான ராஞ்சியின் அருகாமையில் இருக்கும் கான்ஜியா கிராமத்தை சேர்ந்த ஒரு கும்பல் கைத்தடி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் நேற்று நள்ளிரவில் நடத்திய இந்த கொலைவெறி தாக்குதலில் படுகாயமடந்த 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இன்று காலை இதுபற்றிய தகவல் அறிந்து, அந்த கிராமத்துக்கு விரைந்துச் சென்ற ...

ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?

Posted: 08 Aug 2015 12:00 AM PDT

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001-ல் முதல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம். மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன்லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்" என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் ...

ஒரே ஒரு துரோகம் - சுஜாதா

Posted: 07 Aug 2015 10:48 PM PDT

"ஒரே ஒரு துரோகம்" 1983ல் 'சாவி' பத்திரிகையில் தொடர்-கதையாக வந்தது. உண்மைக்குப் பிரயத்தனப்படும் ஒரு பெண் பேராசிரியருக்குஇ சுவாசமே பொய்யாக வாழ்க்கை நடத்தும் டகல்பாஜி ஒருவன் கணவனாகிறான் என்பதில் தொடங்கும் முரண்பாடான சுவாரஸ்யமான கதைஇ 25 வருடங்களுக்குப் பிறகு இன்றும் இளமையாக சுஜாதாவின் எழுத்து வன்மையில் வசீகரிக்கிறது. http://www.mediafire.com/download/5oxg7ace78fn148/Ore+Oru+Thurogam.pdf என்றும் அன்புடன் செல்லா

திருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது: த்ரிஷா

Posted: 07 Aug 2015 07:52 PM PDT

---- திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெறுவதைக் காட்டிலும் லிவ் இன் உறவில் ஏற்படும் பிரிவு மேலானது என நடிகை த்ரிஷா கூறியுள்ளார். - இது தொடர்பாக ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: - லிவ் இன் உறவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் லிவ் இன் உறவு சரி என்று தோன்றினால், பிறகு அதில் வேறு எந்தப் பிரச்னையும் இருக்கக்கூடாது. திருமணம் செய்து, கருத்துவேறுபாடுகளால் விவாகரத்து பெறுவதைக் காட்டிலும் லிவ் இன் உறவில் இருந்து ...

ஆதரவு

Posted: 07 Aug 2015 07:36 PM PDT

ஆதரவு வானமாய் இருந்திடு வானவில்லாய் மறைந்திடாதே தாகம் தணிக்கும் ஓடையாய் இரு கானல் நீராய் மாறிடாதே நிழல் தரும் மரமாய் இரு பாதம் சுடும் மணலாய் மறுவிடாதே கலங்கரை விளக்கமாய் வழிகாட்டு விடிவெள்ளியாய் நின்றிடாதே முல்லைக்கு தேர் தந்த பாரியாய் இல்லாவிடினும் இச்சிறுகொடிக்கு ஒரு குச்சியாவது நட்டுவிடு ... --------------------------------------------------------- நீ .... நான் .... நாம் .... நம் நீ பேசாமல் போகலாம் பேசியது போகுமா? நாம் பழகாமல் போகலாம் பழகியது மாறுமோ? ...

மலேசியாவில் சாஹசம் பட பிரமாண்ட இசை வெளியீடு!

Posted: 07 Aug 2015 07:02 PM PDT

- பிரஷாந்த் நடித்துள்ள சாஹசம் படத்தின் இசை வெளியீடு மலேஷியாவில் பிரமாண்டமாய் வெளியாகிறது. ஆகஸ்ட் 8-ம் திகதி கோலாலம்பூரில் மாலை 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது. தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிராஷாந்துக்கு ஜோடியாக அமென்டா என்ற புதுமுக நடிகை நடித்துள்ளார். அருண்ராஜ் வர்மா இயக்கியுள்ளார். எஸ்எஸ் தமன் இசையில் அனைத்துப் பாடல்களையும் லட்சுமி மேனன், சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள் பாடியுள்ளனர். இசை வெளியீடு நிகழ்ச்சி கோலாலம்பூர் நகரில் உள்ள ப்ரிக்ஃபீல்ட் அரங்கில் வண்ணமயமாய் ...

நேபாளத்தில் மீண்டும் ஒரு நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு ? ஆய்வில் தகவல்

Posted: 07 Aug 2015 06:41 PM PDT

லாஸ் ஏஞ்சல்ஸ்: நேபாளம் இந்திய எல்லைப்பகுதியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதாக புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் நேபாளாத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 9 ஆயிரம் மக்கள் வரை பலியாயினர். நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானது. இதனை அடுத்து இப்பகுதியை தொடர்ந்து கண்காணித்து வரும் புவியியல் வல்லுநர்கள் தெரிவித்திருப்பதாவது: நேபாளம்-இந்தியா மீண்டும் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், ...

துளிப்பாக்கள் -முஹம்மத் ஸர்பான்

Posted: 07 Aug 2015 06:31 PM PDT

வெண் மேக மை எடுத்து இருள் மேகம் கை எடுத்து எழுதிய கவிதை நிலா..... ஏழையின் கண்ணீரில் இன்பம் செல்வன் சிரிப்பில் துன்பம் வாழ்க்கை இதுவே உணர்ந்தால்.. விழி எனும் வலையில் காதல் எனும் பிணியால் சிக்கித் தவிக்கும் சிலந்தி மனம் நாளை என்பது இறைவனிடம் இன்று என்பது உன் பையில் நல் வழியில் செலவு செய்..!!! பெற்றோர் பெயர் தெரியாது பிறந்த திகதி எழுதவில்லை நானும் உலகம் போல அனாதை

‘தொல்காப்பியக் கடலில் ஒரு துளி’ வெளியீட்டு விழா – அமைச்சர் சுப்ரா கலந்து சிறப்பிப்பார்!

Posted: 07 Aug 2015 04:24 PM PDT

- அமரர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது ------------- கோலாலம்பூர் – சனிக்கிழமை ஆகஸ்ட் 8-ம் தேதி, காலை 9.00 மணி முதல் 11.30 மணிவரை தலைநகர் துன் சம்பந்தனார் மாளிகையின் சோமா அரங்கில், அமரர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் படைப்புகளின், மின்-பதிவுகள் வெளியீட்டு விழா – 'நல்லார்க்கினியர் நற்பதிவுகள்' – எனும் பெயரில் – வெளியிடப்படும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அதே மண்டபத்தில், அவரது வானொலி உரைகள் அடங்கிய "தொல்காப்பியக் கடலில் ஒரு துளி" என்ற மின்பதிப்பு நூலின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™