Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இன்று உலக பழங்குடிகள் தினம் பழங்குடி மக்கள் வாழ்வு மேம்படுத்தப்படுமா

Posted: 08 Aug 2015 01:08 PM PDT

உலக பழங்குடிகள் தினத்தை ஆகஸ்ட் 9 ஆம் தேதி கடைப்பிடிக்கும் நிலையில் குமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென்று சமூக நல ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.

பிரதமர், முதல்வர் சந்திப்பு: தமிழகத்துக்கு நல்ல பலனைத் தரும்: பொன். ராதாகிருஷ்ணன்

Posted: 08 Aug 2015 01:07 PM PDT

பிரதமர், தமிழக முதல்வரின் சந்திப்பு தமிழகத்துக்கு நல்ல பலனைத் தரும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

முந்திரி ஆலை தொழிலாளர் போனஸ் பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை

Posted: 08 Aug 2015 01:05 PM PDT

முந்திரி ஆலைத் தொழிலாளர்களின் போனஸ் கோரிக்கையை விரைந்து தீர்க்க வேண்டும் என சிஐடியூ வலியுறுத்தியுள்ளது.

ஐஏஎஸ் தேர்வில் படந்தாலுமூடு மாணவி தேர்ச்சி

Posted: 08 Aug 2015 01:04 PM PDT

படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தக்கலையில் அதிமுக தெருமுனைப் பிரசாரக் கூட்டம்

Posted: 08 Aug 2015 01:02 PM PDT

தக்கலையில் அதிமுக தெருமுனைப் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில்

Posted: 08 Aug 2015 01:00 PM PDT

குமரியில் உயர்கோபுர மின்விளக்குகள் திறப்பு

Posted: 08 Aug 2015 12:59 PM PDT

கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட 3 இடங்களில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான உயர்கோபுர மின்விளக்குகளை பேரூராட்சித் தலைவர் பிரபா வின்ஸ்டன் இயக்கிவைத்தார்.

மாணவர் தற்கொலை

Posted: 08 Aug 2015 12:57 PM PDT

விளாத்திகுளம் அருகே குளத்தூரில் பள்ளி மாணவர் காட்டுப்பகுதியில் உள்ள மரக்கிளையில் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோழிப்போர்விளை டாஸ்மாக் கடையை மாற்றக் கோரி முற்றுகை: 122 பேர் கைது

Posted: 08 Aug 2015 12:56 PM PDT

தக்கலை அருகே கோழிப்போர்விளை சந்திப்பிலுள்ள டாஸ்மாக் கடையை மாற்றக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட  118 பெண்கள் உள்பட 122 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

பிரம்மபுரத்தில் பயங்கரவாத எதிர்ப்பு தினம் கடைப்பிடிப்பு

Posted: 08 Aug 2015 12:55 PM PDT

தக்கலை அருகே பிரம்மபுரத்தில் முன்னாள் இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் குமரி பாலனின் நினைவு தினம், பயங்கரவாத எதிர்ப்பு தினமாக  சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை விழா

Posted: 08 Aug 2015 12:51 PM PDT

ஆடிக் கிருத்திகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றன.

திமுக பொதுக் கூட்டம்

Posted: 08 Aug 2015 12:49 PM PDT

தி கேட்கும் பேரணி விளக்கப் பொதுக் கூட்டம் வந்தவாசி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஓசூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டுத

Posted: 08 Aug 2015 12:48 PM PDT

திருவண்ணாமலை அருகே தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஆடி சேல் போடறதேயில்லை..!

Posted: 08 Aug 2015 12:43 PM PDT

ஆடி சேல் போடறதேயில்லை..!

நாடு உயர சமுதாய மாற்றம் அவசியம்:தருண் விஜய்

Posted: 08 Aug 2015 12:38 PM PDT

நாடு உயர சமுதாய மாற்றம் அவசியம் என்றார் மாநிலங்களவை உறுப்பினரும், திருவள்ளுவர் மாணவர் இளைஞர் மன்றங்களின் தேசியத் தலைவருமான தருண் விஜய்.

என்எல்சி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

Posted: 08 Aug 2015 12:38 PM PDT

என்எல்சி தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் நெய்வேலியில் சனிக்கிழமை நடைபெற்றது.

நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதல்:கர்ப்பிணி உள்பட இருவர் சாவு

Posted: 08 Aug 2015 12:37 PM PDT

தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது 108 ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் கர்ப்பிணி உள்பட இருவர் உயிரிழந்தனர்.

முதல்வரை பிரதமர் சந்தித்தது அரசியல் நாகரிகமே:தமிழிசை

Posted: 08 Aug 2015 12:37 PM PDT

முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியது, அரசியல் நாகரிகம் தவிர வேறொன்றும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஒசூரில் இருவேறு சாலை விபத்துகளில் 3 பேர் சாவு

Posted: 08 Aug 2015 12:36 PM PDT

ஒசூரில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 3 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.

தேமுதிக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது

Posted: 08 Aug 2015 12:36 PM PDT

தேமுதிக செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

மது விலக்கை படிப்படியாக அமல்படுத்தினால் பயனில்லை:வைகோ

Posted: 08 Aug 2015 12:35 PM PDT

மது விலக்கை படிப்படியாக அமல்படுத்தினால் பயனில்லை, முழு மதுவிலக்கை அமல்படுத்துவது தான் சிறந்தது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

திருமூலர் கணக்கு உயிரின் வடிவம் :

Posted: 08 Aug 2015 12:34 PM PDT

உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தைச் சொல்ல வந்த திருமூலர் ஓர் அதிசயமான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இந்திய அரசர்களின் நடமாடும் அரண்கள்!

Posted: 08 Aug 2015 12:29 PM PDT

யானைகளுக்கு அதன் உருவ அமைப்பை வைத்தும், உடல் உறுப்புகளை வைத்தும் தமிழில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெயர்கள் வழங்கப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் பெரிதும் இடம் பெற்றுள்ள விலங்கு யானை. மதில்களைப் பிளக்கவும்,

சொல் அறிவோம்

Posted: 08 Aug 2015 12:28 PM PDT

சொல் அறிவோம்

இந்தவாரம் கலாரசிகன்

Posted: 08 Aug 2015 12:26 PM PDT

இந்தவாரம் கலாரசிகன்

சொல் தேடல் -20

Posted: 08 Aug 2015 12:25 PM PDT

உயிர் வகைகள் எண்பத்து நான்கு இலட்சம் என்று நம் முன்னோர்கள் எவ்வாறோ கண்டறிந்துள்ளனர். திருஞானசம்பந்தர், திருவீழிமிழலையைப் பாடும்போது,

"ஒரு நாள்' ஆசிரியர் ஆகிறார் பிரணாப் முகர்ஜி!

Posted: 08 Aug 2015 12:20 PM PDT

ஆசியர் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி "ஒரு நாள்' ஆசிரியராகி, தில்லி அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

தில்லியில் பிகார் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தகராறு

Posted: 08 Aug 2015 12:20 PM PDT

பிகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் தில்லியில் சனிக்கிழமை பங்கேற்ற நிகழ்ச்சியில் சிலர் திடீரென கோஷமிட்டு தகராறு செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாநில தலைமைத் தகவல் ஆணையராக கே.ராமானுஜம் இன்று பொறுப்பேற்பு

Posted: 08 Aug 2015 12:19 PM PDT

மாநில தலைமைத் தகவல் ஆணையராக முன்னாள் டி.ஜி.பி. கே.ராமானுஜம், ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்கிறார். இவருடன் தட்சிணாமூர்த்தி, முருகன் ஆகிய இரண்டு பேரும் தகவல் ஆணையர்களாக பதவியேற்கின்றனர்.

நாடாளுமன்ற விவாதத்தில் இருந்து நழுவுகிறது காங்கிரஸ்

Posted: 08 Aug 2015 12:18 PM PDT

நாடாளுமன்ற விவாதத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி நழுவுவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

21-இல் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

Posted: 08 Aug 2015 12:17 PM PDT

திருவண்ணாமலையில் ஆகஸ்ட் மாதத்துக்கான மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தலைமையில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

யமுனையை தூய்மையாக்கும் திட்டம்:கேஜரிவாலுடன் உமா பாரதி ஆலோசனை

Posted: 08 Aug 2015 12:17 PM PDT

தலைநகர் தில்லியில் ஓடும் ஜீவநதியான யமுனையைத் தூய்மையாக்கும் திட்டம் குறித்து தில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

சீர்மிகு நகரம் உருவாக்கம் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்

Posted: 08 Aug 2015 12:16 PM PDT

கோவையை சீர்மிகு நகரமாக உருவாக்க ஏதுவாக அதற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மக்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் லோக் அதாலத் :ஒரே நாளில் 28,000 வழக்குகளுக்குத் தீர்வு

Posted: 08 Aug 2015 12:16 PM PDT

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்ட மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலம் 28,457 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் முறையீட்டாளர்களுக்கு ரூ. 355.42 கோடி மதிப்பிலான தீர்வுத் தொகை பெற்றுத் தரப்பட்டது.

நீச்சல் போட்டி: அரசுப் பள்ளி சிறப்பிடம்

Posted: 08 Aug 2015 12:16 PM PDT

வேலூர் மண்டல அளவிலான நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில், தண்டராம்பட்டு அருகேயுள்ள தரடாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

யாகூப் மேமன் தொடர்பான கருத்துகள்: 3 தொலைக்காட்சிகளுக்கு நோட்டீஸ்

Posted: 08 Aug 2015 12:15 PM PDT

மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது தொடர்பாக சர்ச்சைக்குரிய நபர்களின் கருத்துகளை வெளியிட்ட 3 தொலைக்காட்சிகளுக்கு மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிளாஸ்டிக் தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு

Posted: 08 Aug 2015 12:15 PM PDT

பிளாஸ்டிக் பயன்படுத்தாத பேரூராட்சியாக செங்கத்தை மாற்றுவது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது,

நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு குண்டு துளைக்காத கார்:மத்திய உள்துறை உத்தரவு

Posted: 08 Aug 2015 12:15 PM PDT

மும்பை தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பயங்கரவாதி யாகூப் மேமன் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு குண்டு துளைக்காத காரும், மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) பாதுகாப்பும் வழங்க மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

தானியங்கி விதை வழங்கும் கருவி இயக்கி வைப்பு

Posted: 08 Aug 2015 12:15 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தானியங்கி விதை வழங்கும் கருவி சனிக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.

சென்னையில் ரூ. 237 கோடியில் சிறு, குறு தொழில் தொடங்க ஒப்பந்தம்

Posted: 08 Aug 2015 12:14 PM PDT

சென்னையில் ரூ. 237.27 கோடி மதிப்பிலான குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான 103 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சனிக்கிழமை கையெழுத்தாகின.

சூரிய ஒளி மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்

Posted: 08 Aug 2015 12:13 PM PDT

சூரிய ஒளி மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சூலூர் படைத் தளத்தில் விமானக் கண்காட்சி

Posted: 08 Aug 2015 12:12 PM PDT

கோவை சூலூர் விமானப் படைத் தளத்தில் விமானக் கண்காட்சி, ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

பூரண மதுவிலக்கு: திமுக போராடுவது வேடிக்கையானது

Posted: 08 Aug 2015 12:11 PM PDT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டுமென திமுக போராடுவது வேடிக்கையானது என்று,மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சித்த மருத்துவத்துக்குப் பயன்படும் மான் கொம்பு, ஆமை ஓடு மத்திய அரசின் தடையால் மருந்து தயாரிப்பு பாதிப்பு

Posted: 08 Aug 2015 12:10 PM PDT

சித்த மருத்துவத்தில் மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் மான் கொம்பு, ஆமை ஓடு உள்ளிட்ட பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் மருந்து தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் செப். 27, 28-இல் கரும்பு விவசாயிகளின் அகில இந்திய மாநாடு

Posted: 08 Aug 2015 12:10 PM PDT

கரும்பு விவசாயிகளின் முதல் அகில இந்திய மாநாடு மதுரையில் வரும் செப்டம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

மாவோயிஸ்ட் ரூபேஷ் விவகாரம்:கேரள உள்துறைக்கு மனு

Posted: 08 Aug 2015 12:09 PM PDT

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் ரூபேஷ் சார்பில் கேரள உள்துறைக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

தனியாகப் போராட்டங்களை நடத்துவோம்:காந்திய மக்கள் கட்சி அறிவிப்பு

Posted: 08 Aug 2015 12:09 PM PDT

இடதுசாரி இயக்கத்துடன் இல்லாமல், மக்கள் பிரச்னைகளுக்காக தனியாக போராட்டங்களை நடத்துவோம் என்று காந்திய மக்கள் கட்சி கூறியுள்ளது.

கடலோரக் காவல் படை விமான விபத்து:3 விமானிகள் இறந்தது உறுதியானது

Posted: 08 Aug 2015 12:09 PM PDT

கடலூர் அருகே விழுந்து விபத்துக்குள்ளான கடலோரக் காவல் படையின் டோர்னியர் விமானத்தில் பயணம் செய்த 3 விமானிகளும் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தங்கம்: பவுனுக்கு ரூ. 32 உயர்வு

Posted: 08 Aug 2015 12:08 PM PDT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 32 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 18 ஆயிரத்து 912-க்கு சனிக்கிழமை விற்கப்பட்டது.

பயங்கரவாதம் இல்லாத இந்தியா உருவாக வேண்டும்:ஆர்எஸ்எஸ் ஆதரவு உலமாக்கள் மாநாட்டில் வலியுறுத்தல்

Posted: 08 Aug 2015 12:07 PM PDT

பயங்கரவாதம், கலவரங்கள் இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட உலமாக்கள் (முஸ்லிம் மத குருமார்கள்) மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

நாடாளுமன்ற முடக்கத்துக்கு சோனியாவும், ராகுலும்தான் காரணம்

Posted: 08 Aug 2015 12:06 PM PDT

""நாடாளுமன்ற முடக்கத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும்தான் காரணம்'' என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர் குற்றம்சாட்டினார்.

"நிலம் கையக மசோதா மீது ஒருமித்த கருத்து'

Posted: 08 Aug 2015 12:05 PM PDT

நிலம் கையக மசோதாவை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களிடையே சில அம்சங்கள் தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.

கல்வி சமுதாயத்துக்கும் பயன்பட வேண்டும்: திருவள்ளுவர் பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பேச்சு

Posted: 08 Aug 2015 12:05 PM PDT

நாம் கற்ற கல்வி நமக்கும், சமுதாயத்துக்கும் பயன்பட வேண்டும் என  திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அசோகன் கூறினார்.

பெண்கள் பாதுகாப்பு: சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட மக்களவைத் தலைவரிடம் மாலிவால் கோரிக்கை

Posted: 08 Aug 2015 12:04 PM PDT

பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம்

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும்

Posted: 08 Aug 2015 12:04 PM PDT

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி இம்மாத இறுதியில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை கூறினார்.

11 பேருக்கு ரூ.19.50 லட்சம் பொது நிவாரண நிதி

Posted: 08 Aug 2015 12:03 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை விபத்து, இடி மின்னலால் பாதித்து உயிரிழந்தவர்கள் உள்ளிட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த 11 பேருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியாக மொத்தம் ரூ.19.50 லட்சம் தொகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

முசாஃபர்நகர் கலவரம்:மேலும் 2 மாதங்கள் அவகாசம் கோருகிறது விசாரணைக் குழு

Posted: 08 Aug 2015 12:03 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நிகழ்ந்த முசாஃபர்நகர் கலவரத்தை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் குழு, தனது அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு மேலும் 2 மாத அவகாசத்தைக் கோரியுள்ளது.

பிகார் தேர்தல் நவ.29க்குள் நடத்தி முடிக்கப்படும்:தலைமைத் தேர்தல் ஆணையர்

Posted: 08 Aug 2015 12:03 PM PDT

பிகார் மாநிலத்தில் நிகழாண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி தெரிவித்தார்.

முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை விழா

Posted: 08 Aug 2015 12:02 PM PDT

ஆடிக் கிருத்திகையையொட்டி, வேலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

நாகா ஒப்பந்தம் பற்றி வடகிழக்கு மாநிலங்களுடன் விவாதிப்போம்:பிரதமர் உறுதி

Posted: 08 Aug 2015 12:01 PM PDT

நாகாலாந்து அமைதி ஒப்பந்தத்தை இறுதிசெய்யும்போது, வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் விரிவாக விவாதிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

கல்லூரி முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

Posted: 08 Aug 2015 12:01 PM PDT

திருப்பத்தூர் பொதிகை பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

சர்ச்சைக்குரிய ஒடிஸா சாமியார் சாரதி பாபா கைது

Posted: 08 Aug 2015 12:01 PM PDT

மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய ஒடிஸா சாமியார் சாரதி பாபாவை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் சுமார் 14 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

மருத்துவர் வீட்டில் நகை,  ரொக்கம் திருட்டு

Posted: 08 Aug 2015 12:01 PM PDT

நெமிலி அருகே ஆயுர்வேத மருத்துவர் வீட்டில் ரூ.2.80 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரொக்கம் ஆகியன திருடு போயின.

பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 08 Aug 2015 12:00 PM PDT

வாணியம்பாடியில் பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஜவுளித் துறையில் இந்தியா உச்சம் தொட நடவடிக்கை:மத்திய இணை அமைச்சர்

Posted: 08 Aug 2015 12:00 PM PDT

ஜவுளித் துறையில் இந்தியா உயர்ந்த இடத்தைப் பிடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்தார்.

இளம்பெண் தற்கொலை

Posted: 08 Aug 2015 12:00 PM PDT

குடியாத்தம் பரதராமியை அடுத்த ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஆறுமுகம் மனைவி பிரியா (25), தற்கொலை செய்துகொண்டார்.

பாகிஸ்தான் மீனவர்கள் 9 பேரை விடுவித்தது இந்தியா

Posted: 08 Aug 2015 12:00 PM PDT

நல்லெண்ண நடவடிக்கையாக, பாகிஸ்தான் மீனவர்கள் 9 பேரை இந்தியா சனிக்கிழமை விடுதலை செய்தது.

மோடியின் கயை வருகையை முன்னிட்டு சுவரொட்டிப் போரில் பாஜக - ஜேடியூ

Posted: 08 Aug 2015 12:00 PM PDT

பிகார் மாநிலம், கயை நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு மாநிலத்தை ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் (ஜேடியூ), எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே சுவரொட்டிப் போர் மூண்டுள்ளது.

விபத்தில் ஒருவர் சாவு

Posted: 08 Aug 2015 11:59 AM PDT

ஆம்பூர் நடராஜபுரத்தைச் சேர்ந்த சேகர் (48), விபத்தில் இறந்தார்.

வெந்நீரில் தவறி விழுந்த சிறுவன் சாவு

Posted: 08 Aug 2015 11:59 AM PDT

குடியாத்தம் செதுக்கரை ஆர்.எஸ். சாலையைச் சேர்ந்த தொழிலாளி தரணி மகன் குகன் (2), வெந்நீரில் தவறி விழுந்து இறந்தார்.

நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் கைது

Posted: 08 Aug 2015 11:59 AM PDT

நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் சிலர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஹிமாசலப் பிரதேசத்தில் மழைக்கு 4 பேர் பலி?

Posted: 08 Aug 2015 11:58 AM PDT

ஹிமாசலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட நான்கு பேர் திடீர் வெள்ளத்துக்கு பலியாகி விட்டதாக அஞ்சப்படுகிறது.

விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

Posted: 08 Aug 2015 11:58 AM PDT

காவேரிப்பாக்கம் வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

காஷ்மீர்: லஷ்கர் பயங்கரவாதிக்கு உதவியதாக 2 பேர் கைது:மேலும் 3 பேரிடம் விசாரணை

Posted: 08 Aug 2015 11:58 AM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூர் அருகே எல்லைப் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி முகமது நவீது யாகூபுக்கு உதவியதாக 2

பாமக பொதுக் கூட்டம்

Posted: 08 Aug 2015 11:58 AM PDT

ஆற்காடு நகர பாமக சார்பில் பொதுக் கூட்டம் புதன்கிழமை  நடைபெற்றது.

பிரிட்டன், பிரான்ஸ் மலையேற்ற வீரர்களை மீட்ட இந்திய விமானப் படை

Posted: 08 Aug 2015 11:58 AM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக் பகுதியில் பெய்த பலத்த மழையில் சிக்கித் தவித்த பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்களை இந்திய விமானப் படை மீட்டது.

ஈரான் மீதான தடையை நீட்டித்தால் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்

Posted: 08 Aug 2015 11:57 AM PDT

"ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதால், இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இந்தத் தடையை மேலும் நீட்டித்தால், இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

"தூய்மை இந்தியா' திட்டத்தில் திருச்சி இரண்டாமிடம்

Posted: 08 Aug 2015 11:57 AM PDT

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் தரவரிசையில் திருச்சி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

உத்தரகண்ட் மாநில சிறப்பு அந்தஸ்து பறிப்பு:மத்திய அரசு மீது ராவத் குற்றச்சாட்டு

Posted: 08 Aug 2015 11:57 AM PDT

உத்தரகண்ட் மாநிலத்திடம் இருந்து சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அமைதியாக திரும்பப் பெற்றுவிட்டது என்று அந்த மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் காமத் நேரடியாக முறைகேடுகளில் ஈடுபட்டார்:கோவா மாநில காவல் துறை

Posted: 08 Aug 2015 11:56 AM PDT

"கோவா மாநில முன்னாள் முதல்வர் திகம்பர காமத் நேரடியாக முறைகேடுகளில் ஈடுபட்டார்; முறைகேடுகள் செய்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்' என்று அந்த மாநில குற்றவியல் போலீஸார் மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Posted: 08 Aug 2015 11:56 AM PDT

வேலூர் அரசு முத்துரங்கம் கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 25-ஆவது ஆண்டாக சனிக்கிழமை சந்தித்து உரையாடினர்.

42 இந்திய மீனவர்கள்வங்கதேச கடற்படையால் கைது

Posted: 08 Aug 2015 11:56 AM PDT

இந்திய மீனவர்கள் 42 பேரை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, வங்கதேச கடற்படை கைது செய்துள்ளது. அவர்களுக்குச் சொந்தமான 3 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

பதிவாளர் அலுவலகத்தில் தனி இடம்: பத்திர எழுத்தர்கள் வலியுறுத்தல்

Posted: 08 Aug 2015 11:56 AM PDT

ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர எழுத்தர்களுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என அரக்கோணம் பத்திர எழுத்தர்கள் சங்க நிர்வாகி நரசிம்மன் வலியுறுத்தினார்.

பசுவதையை முகலாயர்கள் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை:ராஜ்நாத் சிங்

Posted: 08 Aug 2015 11:55 AM PDT

இந்தியாவை தொடர்ந்து ஆட்சி புரிய வேண்டுமானால், பசுவதையை வெளிப்படையாக ஆதரிக்கக் கூடாது என்பதை முகலாய அரசர்களும் தெரிந்து வைத்திருந்தனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.

கார் மோதியதில் குழந்தை சாவு: 3 பேர் காயம்

Posted: 08 Aug 2015 11:55 AM PDT

ஆம்பூர் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. மேலும் மூவர் காயமடைந்தனர். விபத்து நேரிட்ட பகுதிக்கு தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸின் கண்ணாடிகளை உடைத்தனர்.  

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

Posted: 08 Aug 2015 11:54 AM PDT

வாணியம்பாடி இந்து மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

மகாராஷ்டிரத்தில் ரூ.32,000 கோடி முதலீடு: ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஒப்பந்தம்

Posted: 08 Aug 2015 11:53 AM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 32,000 கோடி) முதலீட்டில் ஆலை, ஆராய்ச்சிக் கூடம் அமைக்க அந்த மாநில அரசுக்கும் தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

வெடிபொருளுடன் வந்த தபால் 3 தனிப்படைகள் அமைப்பு

Posted: 08 Aug 2015 11:53 AM PDT

வேலூர் மாவட்ட ஆட்சியர் பெயருக்கு வந்த தபாலில் வெடிபொருள்கள் இருந்த சம்பவம் தொடர்பாக, அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஈவுத்தொகை ரூ. 366 கோடி: அரசுக்கு அளித்தது பஞ்சாப் நேஷனல் வங்கி

Posted: 08 Aug 2015 11:53 AM PDT

கடந்த 2014-2015 நிதி ஆண்டுக்கான ஈவுத்தொகையாக ரூ. 366.32 கோடியை மத்திய அரசுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்தது.

பாலாற்றைப் பாதுகாக்க வலியுறுத்தி 800 கி.மீ. தொலைவுக்கு பிரசாரம்: மார்க்சிஸ்ட் அறிவிப்பு

Posted: 08 Aug 2015 11:52 AM PDT

பாலாற்றை பாதுகாக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 800 கி.மீ. தொலைவுக்கு இரு சக்கர வாகனப் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது என மாவட்டச் செயலர் எஸ்.தயாநிதி தெரிவித்தார்.

பயன்பாட்டுக்கு வந்தது சோமலாபுரம் புதிய மின் மாற்றி

Posted: 08 Aug 2015 11:52 AM PDT

ஆம்பூர் அருகே சோமலாபுரம் துணை மின் நிலையத்தில் ரூ.65 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 10 மெகா வோல்ட் மின்திறன் கொண்ட மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது.

ரிலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மீது ரூ. 85 லட்சம் அபராதம்

Posted: 08 Aug 2015 11:52 AM PDT

விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக ரிலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 85 லட்சம் அபராதத்தை இந்திய காப்பீட்டு ஒழுங்காற்றுதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் விதித்தது.

அமெரிக்காவில் ஆய்வுக் கூடம்:லூபின் மருந்து நிறுவனம் அமைப்பு

Posted: 08 Aug 2015 11:51 AM PDT

லூபின் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கூடம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

விஐடி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி

Posted: 08 Aug 2015 11:51 AM PDT

வேலூர் விஐடி விடுதி மாணவிகள் 800 பேருக்கு தற்காப்புக் கலை பயிற்சி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

அப்துல் கலாம் சகோதரருக்கு ஆம்பூர் எம்எல்ஏ ஆறுதல்

Posted: 08 Aug 2015 11:51 AM PDT

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மறைவையடுத்து அவரது சகோதரரை ஆம்பூர் எம்எல்ஏ அஸ்லம் பாஷா வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடற்படை விமானத் தளத்தை அத்துமீறி விடியோ எடுத்த 4 பேர்: மத்திய உளவுத் துறை தீவிர விசாரணை

Posted: 08 Aug 2015 11:50 AM PDT

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள கடற்படை விமானத் தளமான ஐஎன்எஸ் ராஜாளியை அத்துமீறி விடியோ எடுத்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இருவர் உள்பட 4 பேரிடம் காவல் துறை உயர் அதிகாரிகளும், மத்திய அரசின் உளவுத் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தைவானில் புயல்: 4 பேர் பலி; 4 பேர் மாயம்:அடுத்து சீனாவுக்கும் அச்சுறுத்தல்

Posted: 08 Aug 2015 11:50 AM PDT

தைவான் நாட்டைக் கடுமையாகத் தாக்கிய "செளடிலார்' புயல் காரணமாக 4 பேர் உயிரிழந்தனர்; 4 பேரைக் காணவில்லை.

வங்கதேச வலைதளக் கட்டுரையாளர் படுகொலை: 4 பேர் மீது வழக்குப் பதிவு

Posted: 08 Aug 2015 11:50 AM PDT

வங்கதேசத்தில் மதச்சார்பற்ற வலைதளக் கட்டுரையாளர் நிலோய் நீல் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக 4 பேர் மீது அந்த நாட்டுப் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

மாலி உணவு விடுதித் தாக்குதலில் 13 பேர் சாவு :4 பிணைக் கைதிகள் விடுவிப்பு

Posted: 08 Aug 2015 11:49 AM PDT

மாலியில் உணவு விடுதிக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 5 ராணுவத்தினர், 3 பயங்கரவாதிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

ஈரான் அணு ஆயுதத் திறன் பெறாமல் தடுக்க எதையும் செய்வோம்

Posted: 08 Aug 2015 11:49 AM PDT

ஈரான் நாடு அணு ஆயுதத் திறன் பெறுவதைத் தடுக்க எந்த வழிமுறையையும் பின்பற்றுவோம் என இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மோஷே யாலோன் கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™