Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு

Posted:

புதுடில்லி:''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மேற்கொண்டு வரும் செயல்பாடுகளை நிறுத்துமாறு, சீனாவிடம், இந்தியா வலியுறுத்தியுள்ளது,'' என, பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், லோக்சபாவில் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:கில்ஜித் - பல்டிஸ்தான் பிராந்தியம் உட்பட, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், சீனர்கள் நடமாட்டம் உள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசு, தன் கவலையை, சீனாவிற்கு தெரிவித்துஉள்ளது. மேலும், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செய்து வரும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறும், சீனாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல், இந்திய ...

பார்லி.,யில் நேற்று தமிழக எம்.பி.,க்கள்

Posted:

பார்லிமென்டில் தமிழக எம்.பி.,க்கள் தினமும், உள்ளூர் பிரச்னைகள் பற்றி குரல் கொடுக்கின்றனர்.

அவர்கள் பேசியதன் விவரம்:
ஹரி - அரக்கோணம்: வாசனைப் பொருட்கள் மற்றும் தேயிலை ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. ஆனாலும், கடந்த ஏழு மாதங்களாக இதில் சற்று சரிவு தெரிகிறது. எனவே, காயர் போர்டு மற்றும் டீ போர்டு போன்றவை இருப்பது போல, வாசனைப் பொருட்களுக்கு என்று தனியாக ஒரு வாரியத்தை மத்திய அரசு அமைத்து, இத்தொழிலின் உற்பத்தியையும், ஏற்றுமதியையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பரசுராமன் - தஞ்சாவூர்: 2,610 கோடி ரூபாய் செலவிலான, கல்லணை ...

லலித் மோடியிடம் சுஷ்மா பணம் வாங்கியதாக ராகுல் புகார் : நாடகம் ஆடுவதாக சோனியாவும் பகிரங்க குற்றச்சாட்டு

Posted:

புதுடில்லி:ஐ.பி.எல்., முன்னாள் கமிஷனர் லலித் மோடியின் மனைவிக்கு உதவி செய்ததாக, நேற்று முன்தினம் லோக்சபாவில் ஒப்புக் கொண்ட, ெவளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை, காங்கிரஸ் தலைவர் சோனியா, 'நாடகம் ஆடுகிறார்' என்றும், அவர் மகன் ராகுல், 'லலித் மோடியிடம் இருந்து சுஷ்மாவும், அவரின் கணவர் மற்றும் மகள்பணம் பெற்றுள்ளனர்' என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

லண்டனில் இருக்கும் லலித் மோடிக்கு, அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி செய்ததாக கூறி, பார்லிமென்டின் இரு சபைகளிலும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அவர்களில், அதிக அமளியில் ஈடுபட்ட, 25 ...

'போட்டு தள்ளுவேன்': பா.ஜ., - எம்.எல்.ஏ., மிரட்டல்

Posted:

போபால்:ம.பி.,யில், நிருபரின் கேள்விக்கு பதில் அளிக்க திணறிய பா.ஜ., - எம்.எல்.ஏ., ''நான் நினைத்தால், உன்னை 'என்கவுன்டரில்' போட்டுத் தள்ளுவேன்,'' என, மிரட்டியதால்

பரபரப்பு ஏற்பட்டது.
ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். தலைநகர் போபால் அருகே உள்ள கிராமத்தில் நேற்று, விவசாயிகள் தொடர்பான நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட பா.ஜ., - எம்.எல்.ஏ., வேல்சிங் பூரியாவிடம், கூட்டத்தினர் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அவர்களில் ஒருவராக நின்ற பத்திரிகை நிருபர், ''உள்ளூர் நிர்வாகத்தில், உங்களுக்கு யாரையாவது தெரியுமா?'' என, கேட்டார். ...

'கடைகளில்' பார்களுக்கு 'குட்பை': 500 'ரெஸ்டோ பார்'களை துவக்க தமிழக அரசு முடிவு

Posted:

முறைகேட்டை தடுக்க, 'டாஸ்மாக்' கடைகளில் உள்ள பார்களுக்கு பதில், 500 'ரெஸ்டோ பார்'களை துவக்க தமிழக அரசு, முடிவு செய்து உள்ளது.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 6,800 மதுக்கடைகள் உள்ளன. இதில், 4,000 கடைகளில் அரசு அனுமதியுடனும்; மற்ற கடைகளில் முறைகேடாகவும் பார்கள் செயல்படுகின்றன. போலி மது விற்பனைஅரசு அனுமதியுடன் செயல்படும் பார்களில், போலி மது விற்பனை; உரிமத் தொகை செலுத்தாதது; கூடுதல் விலைக்கு மது, நொறுக்கு தீனி விற்பனை போன்ற முறைகேடுகள் நடக்கின்றன.இதனால், 'குடி'மகன்கள், மது அருந்த அதிகம் செலவிடுவதுடன், சமூக பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இதையடுத்து, 'டாஸ்மாக்' ...

மோடி - ஜெ., சந்திப்பை தொடர்ந்து அரசியலில் பரபரப்பு ஆரம்பம்: தமிழக கட்சிகளிடையே மாறுகிறது கூட்டணி வியூகம்

Posted:

முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில், பிரதமர் மோடிக்கு, நேற்று அளிக்கப்பட்ட மதிய விருந்து, அதையொட்டி நடந்த, அவர்களின் பேச்சு ஆகியவை காரணமாக, தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஆரம்பமாகி உள்ளது. தமிழக கட்சிகள், தங்களுக்குள் போட்டு வைத்திருந்த கூட்டணி வியூகத்தை மாற்ற வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.பிரதமராக பொறுப்பேற்ற பின், அதிகாரப்பூர்வ முதல் பயணமாக, பா.ஜ., கட்சியைச் சேர்ந்த, மோடி, நேற்று காலை சென்னை வந்தார். அ.தி.மு.க., பொதுச் செயலரான, தமிழக முதல்வர் ஜெயலலிதா, விமான நிலையம் சென்று அவரை வரவேற்றார். மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், தன்னால் கலந்து ...

பழிக்குப் பழி வாங்க டைகர் மேமன் சபதம்

Posted:

மும்பை:மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு பழி வாங்கப்போவதாக, அவனுடைய மூத்த சகோதரன் டைகர் மேமன் சூளுரைத்துஉள்ளான்.

வெளிநாட்டில் இருக்கும், மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான டைகர் மேமன், 22 ஆண்டுகளுக்கு பின், மும்பையில் வசிக்கும், தன் தாயுடன் பேசிய உரையாடல், புலனாய்வு அமைப்புகளால், பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1993, மார்ச் 12, 13ல், மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில், 270 பேர் பலியாகினர். இதற்கு மூளையாக செயல்பட்ட டைகர் மேமனும், தாவூத் ...

தே.மு.தி.க.,வினர் கைது: கருணாநிதி கவலை

Posted:

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:அ.தி.மு.க., ஆட்சியில், மதுவிலக்கு பிரச்னைக்காக, மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குற்றமா... மனிதச் சங்கிலி என்பது, ஜனநாயகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள போராட்டங்களில் ஒன்று தானே?அதில் ஈடுபட்ட, தே.மு.தி.க.,வினரை கைது செய்ததும், அக்கட்சியின் மகளிரை மாலை, 6:00 மணிக்குப் பின்னரும், விடுதலை செய்யாமல் இருந்ததும், தே.மு.தி.க., தொண்டர்கள் மீது, காவல் துறையினர் கண்மூடித்தனமாகத் தடியடி நடத்தியதும் கண்டிக்கத்தக்கது.மதுவிலக்கு பிரச்னைக்காகக் குரல் கொடுத்த மாணவர்களையும், இந்த அரசின் காவல் துறையினர், கடுமையாகத் ...

தே.மு.தி.,வினர் மீது கொலைவெறி தாக்குதல்: போலீஸ் மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு

Posted:

சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னையில், அமைதியாக மனிதச் சங்கிலி போராட்டம் நடத்திய நான் உட்பட, 50 பேரை போலீசார் கைது செய்து, பேருந்தில் அழைத்துச் சென்றனர். அப்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பேருந்துக்குப் பின்னால் நடந்து வந்தனர். அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். அத்துடன், பேருந்துக்குள் இருந்தவர்களையும் கடுமையாக தாக்கினர்.அண்ணா நகரில், தே.மு.தி.க.,வினரை போலீசார் கைது செய்து, பஸ்சில் அழைத்துச் சென்ற போது, அ.தி.மு.க.,வினர், கும்பலாகச் சேர்ந்து, தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்; அப்போது தான், பேருந்து ...

'கைத்தறி துணி பயன்பாட்டை அதிகப்படுத்துங்கள்'

Posted:

சென்னை: ''பொதுமக்கள், கைத்தறி துணியை பயன்படுத்த முன் வர வேண்டும். திரையுலகினர், ஒரு படத்திலாவது, கைத்தறி துணிகளை அணிய முன் வர வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வேண்டு கோள் விடுத்துள்ளார்.சென்னை பல்கலைக்கழக, நுாற்றாண்டு விழா அரங்கில், தேசிய கைத்தறி தினம் துவக்க விழா, இந்திய கைத்தறி முத்திரை அறிமுகம், தேசிய கைத்தறி தின சிறப்பு மலர் வெளியீட்டு விழா, 'சந்த் கபீர்' விருது, தேசிய விருது பெற்ற நெசவாளர்களுக்கு, விருது வழங்கும் விழா, ஆகியவை நேற்று நடந்தன.

நெசவாளர்களுக்கு விருது:
விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, தேசிய கைத்தறி தினத்தை ...

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த சட்டம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted:

புதுடில்லி:'சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் அவதுாறு தகவல்களை கட்டுப்படுத்த, மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்உத்தரவிட்டு உள்ளது.நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், மூத்த வழக்கறிஞர், எல்.நாகேஸ்வர ராவ் தொடர்ந்த வழக்கில், 'சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களை கட்டுப்படுத்த சட்டம் வேண்டும்' என, கோரினார்.விசாரணையின் போது, ''சமீபத்தில், என்னைப் பற்றி அவதுாறான செய்தி, 'வாட்ஸ் ஆப்' வலைதளத்தில் உலா வந்தது. என் மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக அந்த ...

ஈராக்கில் 19 பெண்கள் கழுத்தறுத்து கொலை செய்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள்

Posted:

பாக்தாத்:ஐ.எஸ்., பயங்கரவாதிகள், செக்சுக்கு மறுத்த, 19 பெண்களை ஈவிரக்கமின்றி கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்து, 'இஸ்லாமிய தேசம்' என்ற பெயரில், ஐ.எஸ்., அமைப்பு, ஆட்சி நடத்தி வருகிறது.அங்கு, பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து, குர்திஷ் ஜனநாயக கட்சியின் செய்தி தொடர்பாளர், கூறிய தகவல்களை, லண்டனிலிருந்து வௌியாகும் 'டெய்லி மெயில்' பத்திரிகை, தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஐ.எஸ்., அமைப்பு, 'செக்ஸ் ஜிகாத்' என்ற பெயரில் நடத்தும் அட்டூழியங்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™