Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மது விலக்கு கோரி நடந்த போராட்டங்கள்...திசை மாறியது:அரசியல் கட்சிகள் ஆளாளுக்கு 'பஞ்சாயத்து'

Posted:

மது விலக்கு கோரி, தமிழக கட்சிகள் நடத்திய போராட்டப் பாதை, திசை மாறிஉள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காக, அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும், ஆளாளுக்கு, 'பஞ்சாயத்து' செய்யும் காட்சிகள் அரங்கேறத் துவங்கி உள்ளன.

மது ஒழிப்பு பிரசாரத்தில், நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த, காந்தியவாதி சசிபெருமாள், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது இறந்ததை அடுத்து, மாநிலம் முழுவதும், மதுவுக்கு எதிரான அலை வீசியது.குறிப்பாக, பெண்களும், மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். அரசியல் கட்சிகள் ஆதரவு குரல்அவர்களுடன் நேரடியாக களத்தில் இறங்க விரும்பாத ...

தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம் வனத்துறை அமைச்சராகிறார் ஆனந்தன்

Posted:

மே மாதம் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்ற போது அமைச்சரவையில் இருந்து கழற்றி விடப்பட்ட ஆனந்தனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டு உள்ளது. அவர் வனத்துறை அமைச்சராக வரும் 9ம் தேதி பதவியேற்க உள்ளார்.அ.தி.மு.க., அரசு 2011 மே மாதம் பொறுப்பேற்றது முதல் தமிழக அமைச்சரவை அவ்வப்போது மாற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி 16வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கப்பட்டு ரமணா புதிய அமைச்சராக பொறுப்பேற்றார்.அதே மாதம் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை ...

வீட்டு வேலையாட்களுக்கு சமூக பாதுகாப்பு...கட்டாயம் : பணி, சம்பளம், சலுகைகளுக்கு புதிய சட்டம்

Posted:

புதுடில்லி:நாடு முழுவதும், வீட்டு வேலை செய்யும், மூன்று கோடி பேரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையில், தேசிய அளவிலான கொள்கை வகுக்க, மத்திய தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் படி, வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்தும் போது, சட்டப்படி வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர சலுகைகள் கட்டாயமாகியுள்ளன.இப்போதுள்ள நடைமுறைப்படி, வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்தும் போது பின்பற்றப்படும் சாதாரண நடைமுறைகள், விரைவில் காலாவதியாக உள்ளன. வீட்டு வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும், அவர்களுக்கும், பிற தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போன்ற சம்பளம், இதர ...

'லலித் மோடி மனைவிக்கு தான் உதவினேன்'

Posted:

புதுடில்லி:''லலித் மோடிக்கு எந்த உதவியும் செய்யவில்லை; புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரின் மனைவிக்கு, மனிதாபிமான ரீதியில் உதவி செய்தேன். அதற்காக எந்த தண்டனையையும் ஏற்க தயாராக உள்ளேன்,'' என, வெளியுறவுத்துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் கூறினார்.ஐ.பி.எல்., முன்னாள் கமிஷனர் லலித் மோடிக்கு, உதவி செய்ததாக குற்றம் சாட்டப்படும், சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் தலைமையில், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நடத்தி வரும் அமளியால், இரண்டு வாரங்களுக்கும் மேலாக, பார்லிமென்டின் இரு சபைகளும் ஸ்தம்பித்துள்ளன.வாய்ப்பு ...

மோடி அரசு ஆணவம்: சோனியா ஆவேசம்

Posted:

புதுடில்லி:''நாகா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக, மற்ற வட கிழக்கு மாநில முதல்வர்களுடன், மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை. மோடி அரசின், ஆணவத்துக்கு இதுவே சிறந்த உதாரணம்,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார். வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் தீவிரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. நாடு, சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, இந்த தீவிரவாத அமைப்புகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இந்த நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் என்ற அமைப்புடன், சமீபத்தில், மத்திய அரசு, வரலாற்று ...

இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி! போயஸ் கார்டனில் ஜெ.,யுடன் பேசப்போவது என்ன?

Posted:

தேசிய கைத்தறி தின துவக்க விழாவில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். அவர் போயஸ் கார்டன் சென்று, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க திட்டமிட்டுள்ளது, அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரதமர் மோடி வருகையை ஒட்டி, சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து, விழா நடைபெறும் சென்னை பல்கலை கழகம் வரையிலும், முதல்வர் வீடு உள்ள, போயஸ் கார்டன் பகுதி முழுவதும், உளவுத்துறை போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது.சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் பிரச்னைக்குரிய இடங்களை, ...

ஊழல் மிகுந்த தமிழகம்: மதுரையில் அமித்ஷா கவலை

Posted:

மதுரை:''தமிழ்நாட்டில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் நன்கு வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருந்தாலும் ஊழல் மிகுந்ததாகவும் உள்ளது. ஊழலை ஒழிக்க அனைத்து சமுதாய இளைஞர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும்,'' என பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.மதுரையில் தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை மற்றும் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் இணைந்து 'தேவேந்திரர் குல வேளாளர்' என்ற பெயரை அரசு ஆணையாக பெறுவதற்கான பிரதிநிதிகள் மாநாட்டை நடத்தியது.இதில் பங்கேற்று அமித்ஷா பேசியதாவது: இறைவன் அருளால் மரியாதைக்குரிய இந்த மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. எனக்கும், ...

'அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?'

Posted:

சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:கன்னியாகுமரி மாவட்டத்தில் துவங்கிய மது விலக்கு பிரச்னை, இப்போது தமிழகம் முழுவதும் தீயாகப் பரவியுள்ளது. இதன் விளைவு என்ன தெரியுமா.நாடெங்கும் நடைபெறும் போராட்டம் காரணமாக, வாழப்பாடியில், 'டாஸ்மாக்' ஊழியர் செல்வம் இறந்த சம்பவத்திற்கு, முழு பொறுப்பும் அரசு தான். இந்த ஆட்சியின் அலட்சியம் காரணமாக, மறைந்த செல்வத்தின் குடும்பத்தினருக்கு, என் ஆழ்ந்த இரங்கல்.இதற்கெல்லாம் பொறுப்பு ஏற்க வேண்டியது யார்? இந்த துறைக்கென, ஒரு அமைச்சர் இருக்கிறாரா... இல்லையா... எதிர்கட்சிகளை எல்லாம் தாக்கி அறிக்கை விடுவது தான், ...

தடையை மீறிய விஜயகாந்த் கைது செய்யப்பட்டு விடுதலை!

Posted:

சென்னை:'மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, சென்னை, கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகம் முதல் தலைமைச் செயலகம் உள்ள கோட்டை வரை, மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்' என, தே.மு.தி.க., தலைமை அறிவித்தது; ஆனால், இதற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை.இதையடுத்து, உயர் நீதிமன்றம் மூலம், அனுமதி பெற முயற்சிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, கோயம்பேட்டில் மனித சங்கிலி போராட்டம் துவங்கியது.கட்சியின் தலைவர் விஜயகாந்த், போராட்டத்தை துவக்கி வைத்தார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.தயாராக இருந்த மாநகர ...

'மேகி' நூடுல்ஸ் விரைவில் விற்பனைக்கு வருமாம்!

Posted:

புதுடில்லி :''நெஸ்லே நிறுவனத்தின், 'மேகி' நுாடுல்சுக்கு நற்சான்று கிடைத்துள்ளதால், அதன் மீதான தடை நீங்க வாய்ப்புள்ளது,'' என, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். டில்லியில், 'அசோசெம்' அமைப்பின் கருத்தரங்கில், அவர் மேலும் பேசியதாவது:மைசூரில் உள்ள, மத்திய உணவு தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் சமீபத்திய ஆய்வறிக்கையில், 'மேகி நுாடுல்ஸ் பாதுகாப்பானது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அது விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன். மேகி நுாடுல்சுக்கு தடை விதிக்கப்பட்ட பின், மக்களின் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™