Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மது விலக்கு கோரும் போராட்டத்தால் ஊழியர் கொலை: 'டாஸ்மாக்' கடையை நள்ளிரவு தீ வைத்து எரித்த கும்பல்

Posted:

வாழப்பாடி : மது விலக்கு கோரி நடந்து வரும் போராட்டத்தின் திடீர் திருப்பமாக, வாழப்பாடியில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 'டாஸ்மாக்' கடைக்கு மர்ம கும்பல் தீ வைத்தது. தீயில் சிக்கி, விற்பனையாளர் ஒருவர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.அமைதி வழியில் நடந்து வந்த போராட்டம், கடந்த சில தினங்களாக, 'டாஸ்மாக்' கடையை சூறையாடுவதும், தீ வைப்பதும் நடந்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம், வாழப்பாடி, புதுப்பாளையத்தில் உள்ள, 'டாஸ்மாக்' கடைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணி அளவில், மர்ம கும்பல் தீ வைத்து, தப்பி உள்ளது. தீ பரவி, கடைமுழுவதும் பற்றி ...

'மதுவிலக்கை ஒத்தி தான் வைத்தோம்': கருணாநிதி விளக்கம்

Posted:

சென்னை : 'மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே,அ.தி.மு.க., அரசின் புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதிவலியுறுத்தி இருக்கிறார்.அவரது அறிக்கை:தி.மு.க., முதன் முதலாக, தமிழகத்தில், மது விலக்கு கொள்கையை தளர்த்தியது என்பதே, தவறான பிரசாரம். கடந்த 1971ல், மது விலக்கு கொள்கையை, ஒத்திவைத்த தி.மு.க., அரசு, 1974ல், மீண்டும் நடைமுறைப்படுத்தி விட்டது.அதற்கு பின் வந்த அ.தி.மு.க., ஆட்சியில் தான், மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது என்பதையும், மது தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு, அவர்கள் ஆட்சி யில் தான், அனுமதி வழங்கப்பட்டது என்பதையும், எல்லாரும் தெளிவாக ...

இரண்டு ரயில்கள் கவிழ்ந்து 31 பேர் பலி

Posted:

ஹார்டா: மத்திய பிரதேசத்தில், ெவள்ளம் பெருக்கெடுத்து ஓடிய ஆற்றுப்பாலத்தில், எதிரெதிராக இரு தண்டவாளங்களில் வந்து கொண்டிருந்த இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள், கவிழ்ந்து விழுந்ததில், 31 பேர் இறந்தனர்; 100 பேர் படுகாயம் அடைந்தனர்; 300 பேர் மீட்கப்பட்டனர்.பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, ம.பி.,யின், ஹர்தா என்ற இடத்தின் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:30 மணியளவில், இந்த பயங்கர விபத்து நிகழ்ந்தது.மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து, உ.பி.,யின் வாரணாசி சென்று கொண்டிருந்த காமயானி எக்ஸ்பிரஸ் ரயிலும், எதிர் திசையில், பீகாரின் ராஜேந்திர ...

ஆள்மாறாட்டம்: சிக்குகிறார் சத்தீஸ்கர் மாநில கல்வி அமைச்சர்

Posted:

ராய்ப்பூர்,: மனைவிக்கு பதில், வேறொரு பெண்ணை, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்த பிரச்னையில், சத்தீஸ்கர் மாநில கல்வி அமைச்சர் சிக்குகிறார்.சத்தீஸ்கர் மாநிலத்தில், பா.ஜ., கட்சியை சேர்ந்த, ராமன் சிங் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் கல்வி அமைச்சர் கேதார் கஷ்யப்; இவரது மனைவி சாந்தி கஷ்யப். இவர், பிலாஸ்பூரில் உள்ள, பண்டிட் சுந்தர்லால் சர்மா திறந்த ெவளி பல்கலையில், எம்.ஏ., இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த செவ்வாய் கிழமை, ஆங்கில தேர்வு நடந்தது. ஒரு பெண் பதற்றத்துடன் தேர்வு எழுதிக் கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த மேற்பார்வையாளர், அவருடைய ...

தாக்குதல் நடத்திய பாக்., பயங்கரவாதி சிக்கினான்: மற்றொருவன் சுட்டு கொலை

Posted:

உதம்பூர்: ஜம்மு - காஷ்மீரில், எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய, பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் ஒருவன், வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான்; மற்றொருவன் உயிருடன் பிடிபட்டான். பயங்கரவாதிகளின் தாக்குதலை எதிர்கொண்ட வீரர்களில் இருவர், வீர மரணம் அடைந்தனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஸ்ரீநகர் பகுதியில், உள்ளூர் பிரிவினைவாதிகள் ஆதரவுடன், பயங்கரவாதிகள், அவ்வப்போது தாக்குதல் நடத்துவது வழக்கம். ஆனால், இந்துக்கள் அதிகம் வாழும் உதம்பூரில், பயங்கரவாதிகள் தாக்குதல், கடந்த, 10 ஆண்டுகளாக இல்லை.

நுழைந்தனர்:
அங்கு, அமைதியை ...

பற்றி எரிவதை வேடிக்கை பார்க்கும் அ.தி.மு.க.,: பிற கட்சிகளின் எம்.பி.,க்கள் கடும் அதிருப்தி

Posted:

பார்லி.,யில், எம்.பி.,க்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட விவகாரத்தில், அனைத்து கட்சிகளும், வேறுபாடுகளை மூட்டை கட்டி வைத்து, ஒன்று சேர்ந்துள்ளன. ஆனால், இவ்விஷயத்தில், கருத்து சொல்லாமல் அமைதி காக்கும், மூன்றாவது பெரிய கட்சியான, அ.தி.மு.க., மீது, பிற கட்சிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.கடந்த மாதம், 21ம் தேதி துவங்கிய, பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில், உருப்படியாக எந்த ஒரு அலுவலுமே நடக்கவில்லை. லலித் மோடி விவகாரம், வியாபம் ஊழல் ஆகிய பிரச்னைகளை முன்வைத்து, காங்கிரஸ் இரு சபைகளையுமே முடக்கி வருகிறது. இதன் உச்சகட்டமாக, லோக்சபாவில், இரு தினங்களுக்கு முன், 25 ...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெ., தேர்தல் செலவு ரூ.10.37 லட்சம்

Posted:

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் செலவு, 10.37 லட்சம் ரூபாய் எனவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மகேந்திரன் தேர்தல் செலவு, 4.86 லட்சம் ரூபாய் எனவும், இறுதி செலவு கணக்கு அறிக்கை, மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, கடந்த, ஜூன் 27ல், இடைத்தேர்தல் நடந்தது. முதல்வர் ஜெயலலிதா, மகேந்திரன் உட்பட பலர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், வேட்பாளர்கள் சார்பில், தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கப்பட்ட செலவு கணக்கு விவரங்களும், தேர்தல் கமிஷனால் பராமரிக்கப்பட்ட, நிழல் செலவு கணக்கு ...

அ.தி.மு.க.,- - தி.மு.க.,வால் முடியாது: அடித்து சொல்கிறார் விஜயகாந்த்

Posted:

சென்னை : ''அ.தி.மு.க., மட்டுமின்றி தி.மு.க.,வாலும், மதுவிலக்கை அமல்படுத்த முடியாது,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறி உள்ளார்.சென்னை, சேப்பாக்கத்தில், மாற்றுத்திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், மதுவிலக்கை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையிலும், அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. நேற்று காலை, அங்கு சென்ற தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், போராட்டத்திற்கு ஆதரவுதெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு போர்வை, உடை வழங்கினார். பின், அவர் அளித்த பேட்டி:உண்ணாவிரதம் இருந்த மாற்றுத்திறனாளிகளை, ...

செக்ஸ் குற்றவாளிகளின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட திட்டம்

Posted:

அமெரிக்கா, பிரிட்டனில் இருப்பதைப் போல, பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டை தயாரித்து, அதை இணையதளத்தில் இடம்பெறச் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

போராட்டம்:
கடந்த 2013ல், டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி, கொடூர கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, மரணம் அடைந்ததை அடுத்து, நாடு முழுவதும் பாலியல் கொடுமைக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அச்சமயத்தில், அமெரிக்கா, பிரிட்டனில் உள்ளதைப் போன்று, பாலியல் குற்றவாளிகளின் பதிவேடு தயாரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின், அடுத்த கட்டத்துக்கு செல்லாமல், அத்திட்டம் முடங்கியது. ...

பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க டிஜிட்டல் நூலகம்

Posted:

பாக்தாத்: ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து, புத்தகங்களை பாதுகாக்க, அவற்றை டிஜிட்டல்மயமாக்கும் பணியில், ஈராக் அரசு ஈடுபட்டுள்ளது.கடந்த, 1920ம் ஆண்டு, ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்ட, பாக்தாத் தேசிய நுாலகத்தில், ஈராக்கின் வரலாற்றை கூறும், புத்தகங்கள் ஏராளமாக உள்ளன. நுாலகத்தின் பின்பகுதியில், மங்கிய ஒளியில், விலை மதிப்பற்ற, கையெழுத்து பிரதிகள் வைக்கப்பட்டுள்ளன. துவக்கத்தில், இந்த நுாலகத்தை கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர், கவனித்து வந்தார்.புத்தகங்களை விரோதியாக பாவிக்கும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், இந்நுாலகத்தை தீ வைத்து கொளுத்த ...

இந்திய பெருங்கடலில் கிடைத்தது எம்.எச்., 370 விமானத்தின் பாகங்கள் தான்: மலேசிய பிரதமர் உறுதி

Posted:

கோலாலம்பூர்: 2014-ம் ஆண்டு நடுவானில் மாயமான விமானத்தின் சேதமடைந்த பாகங்கள் , மலேசியாவின் எம்.எச். 370 விமானம் தான் அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியன்று மலேசிய தலைநகர், கோலாலம்பூரிலிருந்து, "மலேசியன் ஏர்லைன்ஸ்' பயணிகள் விமானம், 239 பேருடன், சீன தலைநகர், பீஜிங் புறப்பட்டது. புறப்பட்ட அடுத்த, இரண்டு மணி நேரத்திற்கு பின், இந்திய பெருங்கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் திடீரென்று தொடர்பு துண்டிக்கப்பட்டு, மாயமானது.காணாமல் போன விமானத்தை தேடும் பணியில், மலேசியா, ஆஸ்திரேலியா, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™