Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மதுவிலக்கு போராட்டம் வலுத்த பிறகும் சரக்கு விற்பனை குறையவில்லை: 'டாஸ்மாக்' கடைகளில் வழக்கம் போல அமோக 'சேல்ஸ்'

Posted:

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, பல்வேறு தரப்பினரும் தீவிர போராட்டம் நடத்தி வரும் நிலையிலும், 'டாஸ்மாக்' கடைகளில், மது விற்பனை அமோகமாக உள்ளது.

தமிழகத்தில், மதுவினால் உயிரிழப்பு அதிகரித்து வருவதால், அவற்றை மூடக்கோரி, பா.ஜ., - பா.ம.க., போன்ற கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வந்தன. இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தார். மதுவிலக்கிற்கு எதிராக, உண்ணாவிரதம் உட்பட, தொடர் போராட்டங்களை

நடத்தி வந்தவர், காந்தியவாதி சசிபெருமாள்; இவர், கன்னியாகுமரி ...

ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது: சோனியா

Posted:

புதுடில்லி: லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டதற்காக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள, காங்கிரஸ் எம்.பி.,க்கள், 25 பேருக்கு ஆதரவாக, பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் நடவடிக்கையை கண்டித்து, கறுப்புச் சட்டை மற்றும் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்த காங்கிரசார் மத்தியில், ''ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது,'' என, சோனியா கருத்து தெரிவித்தார்.அதன்பின் நடைபெற்ற, லோக்சபா கூட்டத்தில், காங்., - ...

'மாஜி' விசாரணை அதிகாரி பாகிஸ்தானை 'போட்டுக் கொடுத்தார்': மும்பை தாக்குதல் அட்டூழியம் அம்பலம்

Posted:

இஸ்லாமாபாத்: 'கடந்த 2008ல், மும்பையில் நான்கு நாட்கள் பயங்கர தாக்குதல் நடத்தி, 166 அப்பாவிகளை கொன்று குவித்தது, பாகிஸ்தானில் இருந்து சென்ற பயங்கரவாதிகள் தான். பாகிஸ்தான், இதை இனியும் மறைக்காமல், உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும்' என, மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்த, பாகிஸ்தான் பெடரல் விசாரணை அமைப்பின் முன்னாள் தலைவர் தாரிக் கோசா, அந்நாட்டு பத்திரிகை ஒன்றில் எழுதி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால், மும்பை தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என, தெரிவித்து வரும் பாகிஸ்தான் அரசுக்கு, தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தானின் பிரபல ஆங்கில ...

பார்லி., குழு பரிந்துரையை ஏற்போம்: நில மசோதா விவகாரத்தில் அரசு முடிவு

Posted:

புதுடில்லி: ''நில மசோதா குறித்து, பார்லிமென்ட் குழு அளிக்கும் பரிந்துரையை அப்படியே ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது; அதற்காக, அரசு பின்வாங்கி விட்டது என கருதக்கூடாது,'' என, மத்திய, கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரேந்தர் சிங் கூறினார்.முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், 2013ல் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் அம்சங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளவும், கொண்டு வந்த திருத்தங்களை வாபஸ் பெறவும், பா.ஜ., முடிவு செய்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர், எஸ்.எஸ்.அலுவாலியா தலைமையிலான, நில மசோதா தொடர்பான பார்லிமென்ட், ...

முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள்: பாஜ., - எம்.பி.,க்கள் தீர்மானம்

Posted:

புதுடில்லி: 'பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ராஜினாமா செய்யும் வரை, பார்லிமென்டை செயல்பட அனுமதிக்க மாட்டோம்' என, நேற்று முன்தினம், காங்கிரஸ் எம்.பி.,க்கள் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், 'மூவரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள்; முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்' என, பா.ஜ., - எம்.பி.,க்கள், நேற்று தீர்மானம் நிறைவேற்றி, காங்கிரசுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது; அதில், பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து ...

மதுவிலக்கிற்காக பாடுபடும் கட்சிகளுக்கு ஒரு சின்ன ஆலோசனை- ஆண்டியப்பன் -

Posted:

மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை ஆர்வத்துடன் நிர்ணயித்து, முடிந்தளவு பிரசாரம் செய்வது பெரும்பாலான இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த செயல்.

கடனாளிகள் :
தனிநபர்களும், சமூகங்களும், மாட்டு இறைச்சி சாப்பிடலாமா, பன்றி இறைச்சி சாப்பிடலாமா, வலைதளங்களில் நிர்வாண படங்களை பார்க்கலாமா, மது அருந்தலாமா, ஆண்களுடன் ஆண்களும், பெண்களுடன் பெண்களும் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா, அவ்வாறு திருமணம் செய்து கொள்ளலாமா என்பதெல்லாம் தான், நம்மாட்களுக்கு மிகவும் கவலையளித்து, உணர்ச்சிகளை எளிதில் துாண்டும் விஷயங்களாக உள்ளன. 'நம் நாட்டில், ...

புறக்கணிக்கப்படும் கலாமின் கண்டுபிடிப்பு:அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Posted:

இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு, குறைந்த செலவில் தரமான சிகிச்சை கிடைப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், பிரபல டாக்டர் ராஜுவுடன் இணைந்து, 'ஸ்டென்ட்' கருவியை கண்டுபிடித்தார்.

குற்றச்சாட்டு:
எனினும், கமிஷன் ஆதாயத்திற்காக, தனியார் மருத்துவமனைகள் மட்டு மின்றி, அரசு மருத்துவ மனைகளிலும் இந்த கருவிகள் பயன்படுத்தப்படாததால், அவரின் கண்டுபிடிப்பு, ஏழைகளுக்கு பயனின்றி வீணாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, மருத்துவத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:அறிவியல் துறையில் அதீத ஞானமுடைய முன்னாள் ஜனாதிபதி அப்துல் ...

'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' பயன்படுத்த இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தடை?

Posted:

மாணவர்களிடம் தவறான தகவல் பரவுவதைத் தடுக்கவும், கல்வித் தரம் பாதிக்காமல் இருக்கவும், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' பயன்பாட்டுக்குத் தடை விதிக்க, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. மாணவர்கள், தொழில்நுட்பம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில், அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்த, அண்ணா பல்கலை வளாகத்தில், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மொபைல் போன் கொண்டு வர, முதலில் தடை இருந்தது. சில ஆண்டுகளாக, மொபைல் போன் கொண்டு வரலாம்; ஆனால், வகுப்பு நேரங்களில் பயன்படுத்தக் கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

தனித்தனியே...:
அண்ணா பல்கலை ...

போதையில் 'மட்டையான' தந்தை: குழந்தைகள் கதறி துடித்த பரிதாபம்

Posted:

மேட்டூர்: மேட்டூர் பேருந்து நிலையத்தில், லாரி ஓட்டுனர், குடிபோதை தலைக்கேறிய நிலையில், கீழே விழுந்து, 'மட்டை'யானதால், அவரது இரு குழந்தைகளும் கதறித் துடித்த காட்சி, பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியது.

லாரி ஓட்டுனர்:
சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, பண்ணவாடி, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த முருகன், 30; லாரி ஓட்டுனர்; இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.தம்பதியருக்கு, தனஸ்ரீ, 4, அழகிரி, 2, என்ற மகள், மகன் உள்ளனர். முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு; அவ்வப்போது, மது அருந்திவிட்டு, மனைவியிடம் தகராறு ...

'பயங்கரவாதிகள் தொந்தரவு செய்யவில்லை'

Posted:

ஐதராபாத்: ''ஐ.எஸ்., பயங்கரவாதிகள், எங்களை மரியாதையுடன் நடத்தினர்; எந்த தொந்தவுரம் செய்யவில்லை,'' என, லிபியாவில் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பேராசிரியர் லட்சுமிகாந்த் கூறியுள்ளார். லிபியாவில் பேராசியர்களாக பணியாற்றி வந்த, இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர், ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் சமீபத்தில் கடத்திச் செல்லப்பட்டனர். மத்திய அரசின் முயற்சியால், அவர்களில் இருவர் மட்டும் விடுவிக்கப்பட்டனர். இவர்களில், லட்சுமிகாந்த், நேற்று ஐதராபாத்துக்கு வந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடத்தப்பட்ட எங்கள் நால்வரையுமே, ஒரே இடத்தில் தான், ...

ம.பி.,யில் அதிகாலையில் அடுத்தடுத்து ரயில்கள் தடம்புரண்டு விபத்து!

Posted:

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் காமயானி எக்ஸ்பிரஸ் ரயில் ஆற்றுப்பாலத்தை கடந்து சென்றுகொண்டிருந்த போது தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 10 பெட்டிகள் ஆற்றில் விழுந்தன. அதே பாதையில் மற்றொரு பயணிகள் ரயிலும் தடம் புரண்டு 5 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து காமயானி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு, மத்திய பிரதேச மாநிலம்வழியாக, உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி நோக்கி சென்றுகொண்டிருந்தது. மத்திய பிரதேச மாநிலத்தின் ஹார்டா மாவட்டத்தின் குடாவா ரயில் நிலையம் வந்தது. சிறிது ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™