Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டதால் 25 எம்.பி.,க்கள் 'சஸ்பெண்ட்': சபாநாயகர் அதிரடியால் எதிர்க்கட்சிகள் கலக்கம்

Posted:

புதுடில்லி: லோக்சபாவில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, சபை நடவடிக்கைகளில் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்திய, காங்கிரஸ் எம்.பி.,க்களில், 25 பேர் நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அவர்களை, ஐந்து நாட்களுக்கு சபை நடவடிக்கையில் பங்கேற்க, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தடை விதித்தார்.

காங்., தலைமையில், அந்தகட்சி மற்றும் அதன் தோழமை கட்சிகளின் எம்.பி.,க்கள் ரகளையால், ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக, லோக்சபாவில் குறிப்பிடத்தக்க வகையில், எந்த அலுவலும் நடைபெறவில்லை. அந்த முட்டுக்கட்டையை போக்கும் வகையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டங்களிலும், ...

காங்கிரசின் எதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு: நில மசோதாவின் முக்கிய திருத்தங்கள் வாபஸ்

Posted:

புதுடில்லி: முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டம் - 2013ஐ, முக்கிய திருத்தங்கள் ஏதுமின்றி அப்படியே நிறைவேற்ற, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிய நில மசோதா நிறைவேற்றம் குறித்து அமைக்கப்பட்டுள்ள பார்லிமென்ட் குழு, லோக்சபாவில் நேற்று கொண்டு வந்த தீர்மானத்தின் படி, மோடி அரசின் திருத்தங்கள் வாபஸ் பெறப்பட்டு, முந்தைய காங்கிரஸ் அரசின் நில சட்டம், அப்படியே பின்பற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவது, மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் சிரமமாக ...

அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன?

Posted:

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடைசியாக பங்கேற்ற மேகாலயா, ஷில்லாங், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் கடைசியாக பேசியது குறித்து, மேகாலயா கவர்னர் சண்முகநாதன் நெகிழ்வுடன் கூறியதாவது: கடந்த, ஜூலை 27ம் தேதி, மாலை அப்துல் கலாம், மேகாலயா வந்தார். நான் அவரை வரவேற்றபோது, 'தமிழ் பூங்காற்று வீசுகிறது' என, வேடிக்கையாக கூறினார். எனது அறைக்கு அடுத்த அறையில் தங்கிய அவர், 'இரவு நாம் இணைந்து தோசை சாப்பிடலாம்' என, ஆசையுடன் குழந்தை போல கூறினார். பின், நாங்கள் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்., சென்றோம். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் தொடர்ந்து அங்கு ...

'பார்லி.,யை செயல்பட விட மாட்டோம்': சோனியா

Posted:

புதுடில்லி: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில், பார்லிமென்டின் இரு சபைகளிலும், காங்கிரசார் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கும் வகையில், கட்சியின் பார்லிமென்ட் குழு கூட்டத்தில், அக்குழுவின் தலைவரான சோனியா பேசும் போது, பிரதமர் மோடியை எந்த அளவுக்கு தாழ்த்தி பேச முடியுமோ, அந்த அளவுக்கு பேசியதோடு, பா.ஜ., அமைச்சர் உள்ளிட்ட மூவர் ராஜினாமா செய்யும் வரை, பார்லிமென்டை செயல்பட அனுமதிக்க மாட்டேன் என, உறுதியாகவும் கூறினார்.'பார்லிமென்டை சுமுகமாக செயல்பட அனுமதிக்க முடியாது' என தெரிவித்து, சோனியா பேசியதாவது: வெளிப்படையாகவே ...

மது ஆலைகளை நடத்துபவர்கள் யார்? கருணாநிதி புது தகவல்

Posted:

''மதுவிலக்கு கோரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு, தலைமை வகிக்கும் கட்சி ஆதரவு கேட்டால், பரிசீலிக்கப்படும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.நேற்று மாலை, கருணாநிதி அளித்த பேட்டி:மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தி.மு.க., சார்பில் வரும், 10ம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்திற்கு, பிற கட்சிகளின் ஆதரவு கேட்க மாட்டோம். அதேசமயம் மதுவிலக்கு கோரும் போராட்டத்திற்கு, பிற கட்சிகள் ஆதரவு அளித்தால், வரவேற்போம்.நாளை (இன்று) நடக்கும் மதுவிலக்கு கோரும், முழு அடைப்பு போராட்டத்திற்கு, தலைமை வகிக்கும் கட்சி ஆதரவு ...

மணக்குமா மகாமகம்? ஏற்பாட்டுக்கான அறிகுறியே காணோம்!

Posted:

சென்னை : பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத்திற்கான ஏற்பாடுகள் பக்தர்களுக்கு அதிருப்தி அளிப்பதால், முதல்வர் நேரிடையாக இதில் தலையிட, பக்தர்கள் கோரிக்கை வைத்துஉள்ளனர்.கும்பகோணம் மகாமகம் திருவிழா நடக்க, இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், அதற்கான எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல் இருப்பது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. முறையான பொறுப்பாளர்கள் இல்லாததால், மகாமக ஏற்பாடுகள் அனைத்தும் மந்தமாகவே நடைபெற்று வருவதாக, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது மகாமகம்:
இதுவரை இரண்டு மகாமகத்தை ...

நல்லாசிரியர் விருது வழங்குவதில் அரசியல் தலையீடு

Posted:

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்குவதில், அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது. விதிகளுக்கு முரணாக, அரசியல் கட்சி சார்பான ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தருவதாக புகார்கள் எழுந்துள்ளன.ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படும், செப்., 5ம் தேதி, தமிழகத்தில் சிறப்பாக கல்வி சேவை புரிந்த ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி:
பள்ளிக்கல்வி இயக்குனரகக் கட்டுப்பாட்டில் உள்ள, 67 கல்வி மாவட்டங்கள்; தொடக்கக் கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள, 140க்கும் மேற்பட்ட தொடக்கக் கல்வி மாவட்டங்கள்; மாவட்ட ஆசிரியர் பயிற்சி ...

பாகிஸ்தானில் பரிதவிக்கும் இந்திய பெண்

Posted:

கராச்சி: கற்பனைக் கதைகள், சில சமயம், உண்மைச் சம்பவங்களாக உருவெடுப்பது உண்டு. அண்மையில் வெளியான சல்மான் கானின், 'பஜ்ரங்கி பைஜான்' என்ற இந்திப் படத்தின் கதை போல், பாகிஸ்தானில் வசிக்கும் இந்திய பெண் கீதாவின் வாழ்க்கை உள்ளது. சல்மான் படத்தின், 'கிளைமேக்ஸ்' காட்சியில், பாகிஸ்தானில் இருந்து வழி தவறி இந்தியா வந்த, வாய் பேச முடியாத சிறுமியை, சல்மான், தாய்நாட்டில் சேர்க்கிறார். ஆனால், இந்தியாவில் இருந்து வழி தவறி பாகிஸ்தான் சென்ற கீதாவின் நிஜ வாழ்க்கையில், இன்னும் அந்த காட்சி வரவில்லை. காது கேளாத, வாய் பேச முடியாத பெண் கீதா. 13 ஆண்டுகளுக்கு முன், அவளை, ...

ஐ.எஸ்., அமைப்பில் 7 இந்தியர்கள்

Posted:

புதுடில்லி : சிரியாவில் உள்ள ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த, 13 இந்தியர்களில், 7 பேர் மட்டுமே உயிருடன் உள்ளதாக, புலனாய்வு அமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்த, 6 பேரில், 3 பேர், பாகிஸ்தான் சென்று, இந்திய முஜாகிதீன் அமைப்பு மூலம் சிரியா சென்றவர்கள். இருவர் மகாராஷ்டிராவில் இருந்தும், ஒருவர், தெலுங்கானாவில் இருந்தும் சென்று, உயிரை விட்டுள்ளனர். உயிருடன் உள்ளோரில், நான்கு பேர், தெலுங்கானா, பெங்களூரு, ஓமன் மற்றும் சிங்கப்பூரில் இருந்து சென்றவர்கள். தவிர, மும்பையின் கல்யாண் பகுதியில் இருந்து இருவரும், காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட ஒருவர், ...

சார்க் யாத்திரையை மாலத்தீவில் நிறைவு செய்தார் ஜெய்சங்கர்

Posted:

புதுடில்லி: இந்திய வெளியுறவு செயலர் எஸ்.ஜெய்சங்கர் தனது 5 மாத பயணமாக சார்க் யாத்திரையை மாலத்தீவு நாட்டில் நிறைவு செய்தார். சார்க் அமைப்பில் இந்தியா,வங்கதேசம், மாலத்தீவு, பாகிஸ்தான், நேபாள், இலங்கை, ஆப்கானிஸ்தான், பூட்டான் ஆகிய எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நாடுகளிடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நட்புறவு மேற்கொள்ள இந்திய வெளியுறவு செயலர் எஸ்.ஜெய்சங்கர், சார்க் யாத்திரை கடந்த மார்ச் மாதம் பூட்டான் நாட்டில் இருந்து துவக்கினார். தொடர்ந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை என எட்டு உறுப்பு நாடுகளும் ...

மேற்கு வங்கத்தில் கன மழை, வெள்ளம்: அலுவலகத்தில் தங்கி கண்காணித்த மம்தா

Posted:

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை கண்காணிக்க, இரவு முழுவதும் அலுவலகத்திலேயே தங்கிய, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தி, தேவையான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி, மேற்கு வங்கத்தில் நடக்கிறது. இம்மாநிலத்தில், கடந்த சனிக்கிழமை முதல் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, மாநிலத்தின், 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன; 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™