Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்

Posted: 03 Aug 2015 03:26 PM PDT

- கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடும் போது தங்கம் விலை குறைந்திருப்பதால் தங்க நகைகளை அவசியத்துக்காக வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. - அதே சமயம், முதலீடு என்ற வகையில் தங்கம் வாங்குபவர்கள் இன்னும் சில காலம் காத்திருக்கலாம் என்றும், தங்கம் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சரியாக கணக்கிட்டு தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து யோசிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். - சில சமயம், தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். - தினமணி

அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும்

Posted: 03 Aug 2015 03:02 PM PDT


-
அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும்
என்று 'பாயும் புலி' இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து
பேசினார்.
-


ஆடிப் பெருக்கு...!!

Posted: 03 Aug 2015 02:53 PM PDT

அனைவருக்கும்
ஆடிப்பெருக்கு
நல்வாழ்த்துக்கள்.
*
காவிரித் துள்ளிப் பாய்ந்து வரும்
கழனியெலாம் செழித்து வரும்
உணவு பொருள் விளைச்சல் தரும்
உழவுத் தொழில் நடந்து வரும்.
*
மங்களம் தேடி வரும்
மனசுப் பொங்கி வரும்
அகல்விளக்கு ஏற்றி விடு
அலைகளிலே படகு விடு.
*
ஆசைகள் சொல்லி விடு
ஆனந்தம் பகிர்ந்து விடு
ஆடிப் பெருக்கு நாளிலே
அன்னையிடம் வேண்டி விடு.
*

திருவாசகம்

Posted: 03 Aug 2015 02:42 PM PDT

1. சிவபுராணம் (திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்) நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10 ஈசன் அடிபோற்றி ...

பீகாரில் பரபரப்பு... சட்டசபை தேர்தலில் போட்டியில்லை- முதல்வர் வேட்பாளர் நிதிஷ் திடீர் அறிவிப்பு

Posted: 03 Aug 2015 02:41 PM PDT

பாட்னா: பீகாரில் புதிய திருப்பமாக ஆளும் கட்சியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ்குமார் தாம் சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று திடீரென அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - பீகார் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார். - பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு களத்தில் ...

மியான்மரில் உள்ள தங்கப்பாறை

Posted: 03 Aug 2015 02:39 PM PDT

மலைச்சரிவில் சாய்ந்து நிற்கும் ஓர் உருண்டையான பாறை மேல் மற்றொரு உருண்டையான பாறை அதுவும் ஒரு விளிம்பில் நிற்க முடியுமா? ஆம்!……இயற்கையால் முடியும்? இப்படி ஓர் அதிசயப் பாறை மியான்மரில் "கியாய்க் டியோ' மலையில் அமைந்துள்ளது! அதை தங்கப்பாறை (THE GOLDEND ROCK) என்று அழைக்கிறார்கள்! மான்ஸ்டேட் மியான்மரில் இது ஒரு முக்கியமான புத்த புனிதத் தலங்களுள் ஒன்றாகும்! இங்கு புத்தர் கோயிலை "பகோடா' என்று அழைக்கிறார்கள்! இதன் உயரம் 7.3மீட்டர்! ஒரு சிறிய இரும்புப் பாலத்தைக் கடந்தே இந்தப் பாறையை அடைய முடியும்! ...

கலாமின் சொத்துகள்--உயில்

Posted: 03 Aug 2015 02:35 PM PDT

கலாமின் சொத்துகள்--உயில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சொத்துகள், அவரது கடைசி காலத்தில் அவரது வங்கி இருப்பு, கலாம் உயில் எழுதி வைத்திருந்தாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து கலாமின் உதவியாளர் பொன்ராஜ் `தி இந்து'விடம் கூறியதாவது: கலாம் தன் சம்பாத்தியத்தில் வாங்கிய பெங்களூரு வீடு அவரது காலத்திலேயே விற்கப்பட்டுவிட்டது. தற்போது ராமேசுவரத்தில் உள்ள பூர்வீக வீடு கலாமுக்காக அவரது தந்தை ஜெயினுலாபுதீன் விட்டுச் சென்றது. அந்த வீட்டை அவரது உடன் பிறந்த சகோதரர் ...

ஒரு கரத்தில் கீதை, மறு கரத்தில் அணுகுண்டு!

Posted: 03 Aug 2015 02:29 PM PDT

'கடந்த பல்லாயிரம் ஆண்டுகளில் இந்தியா தனது எல்லைகளை விரிவாக்கவோ, பிற நாடுகளிடையே ஆதிக்கம் செலுத்தவோ முயற்சிக்காதது ஏன் என்ற கேள்வியை நாம் அடிக்கடி கேட்டுக் கொள்கிறோம். இதற்குக் காரணமாக, நமது சகிப்புத்தன்மை, கட்டுப்பாடின்மை, திருப்பித் தாக்குவதில் ஆர்வமின்மை, வெளிநாட்டவரை வரவேற்கும் பரந்த மனம், பாரம்பரியக் கலாசாரத்தைப் பேணும் பண்பு, தனிமனிதப் பாதுகாப்பைப் பேணும் தன்மை ஆகியவற்றை இந்திய மனநிலையை ஆராயும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.'' இந்த வாசகத்தை, ஒய்.எஸ். ராஜனுடன் இணைந்து எழுதிய "இந்தியா-2020: ...

படிப்புகளும் அதன் தமிழ்ப் பெயர்களும்..! (Ology)

Posted: 03 Aug 2015 02:26 PM PDT

1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல் 2. Archaeology - தொல்பொருளியல் 3. Astrology - சோதிடவியல் (சோதிடம்) 4. Astrology - வான்குறியியல் 5. Bacteriology பற்றுயிரியல் 6. Biology - உயிரியல் 7. Biotechnology - உயிரித்தொழில்நுட்பவியல் 6. Climatology - காலநிலையியல் 7. Cosmology - பிரபஞ்சவியல் 8. Criminology - குற்றவியல் 9. Cytology - உயிரணுவியல்/ குழியவியல் 10. Dendrology - மரவியல் 11. Desmology - என்பிழையவியல் 12. Dermatology - தோலியல் 13. Ecology - உயிர்ச்சூழலியல் 14. Embryology ...

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!

Posted: 03 Aug 2015 02:24 PM PDT

கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மதுவிலக்கு கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் ஆளும் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.அதனால்தான் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் காவல்துறை அதிகாரிகளோடு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அவசர அவசரமாகக் கேட்டு அறிந்து இருக்கிறார். கோட்டையில் அவசர ஆலோசனை நடந்து கொண்டிருக்கும்போதே சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைமுன்பு திரண்டனர்.புத்தகத்தைப் படிக்கவா சாராயத்தைக் குடிக்கவா ...

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

Posted: 03 Aug 2015 02:19 PM PDT

நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது... நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்... நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. ...

மூளைக்குணவு

Posted: 03 Aug 2015 01:49 PM PDT

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்

Posted: 03 Aug 2015 01:17 PM PDT

http://www.mediafire.com/download/rcmsd6cslqu3z9k/Urupasi%282%29.pdf என்றும் அன்புடன் செல்லா

குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி

Posted: 03 Aug 2015 01:16 PM PDT

தஞ்சாவூர்: தஞ்சையில் நேற்று, குடிபோதையில் இளம்பெண் ஒருவர், சாலையில் ரகளையில் ஈடுபட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். - தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், 18 வயது குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்ற விதிமுறை உள்ள போதிலும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். - 'டார்லிங்...': - சமீபத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில், 4 வயது சிறுவனுக்கு, அவனது உறவினரே மது ஊற்றிக் கொடுத்த சம்பவம் நடந்தது. அதேபோல், கோவை பள்ளி மாணவி ஒருவர், ...

மக்கள் கல்வி

Posted: 03 Aug 2015 01:07 PM PDT

பெயர்:
சொந்த ஊர்:
ஆண்/பெண்:
ஈகரையை அறிந்த விதம்:
பொழுதுபோக்கு:
தொழில்:
மேலும் என்னைப் பற்றி

சொக்கலிங்கம் கமு.கல்மு(வயது80)
அறங்கோட்டை
ஆண்
104 அழைப்பின் வழி
இணையம்,புத்தகம் புத்தகம் படித்தல்
ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியன்(தமிழ்)
அறிந்த செய்திகளை சமூகத்திற்குக்கொடுத்தல்
மக்களுக்கு அறிவுரை வழங்கல்.

உங்கள் லைசென்சின் செல்வாக்கு என்ன?

Posted: 03 Aug 2015 01:05 PM PDT

உங்கள் லைசென்சின் செல்வாக்கு என்ன? அடையாளம் காட்டும் இணையதளம்! உங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) எந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது அந்த உரிமம் உள்ளூரில் செல்லுபடி ஆவது தவிர, உலக நாடுகளில் வேறு எங்கெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது சுவாரஸ்யமான கேள்வி மட்டுமல்ல; அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு அந்த நாடுகளில் தங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் செல்லுபடியாகுமா? என தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இந்த விவரங்களை எல்லாம் ...

கல்லீரல் மாற்று சிகிச்சை

Posted: 03 Aug 2015 01:02 PM PDT

50 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. எனினும் இந்தியாவில் சில மருத்துவமனைகளில் மட்டுமே கல்லீரல் மாற்றுச் சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிக்கலான அறுவைச் சிகிச்சையின் வெற்றியில் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யும் நிபுணரின் அனுபவம் மற்றும் சிக்கலான நேரங்களில் செயலாற்றும் திறன் ஆகியவை முக்கியப் பங்கினை வகிக்கிறது. எனினும், அறுவைச் சிகிச்சை அறை, தொழில்நுட்பம், அறுவைச் சிகிச்சை மற்றும் உணர்வகற்றியல் (மயக்க மருத்துவம்) தொழில்நுட்பங்களில் ...

ஜீவா, ஹன்சிகா நடிக்கும் புதியபடம் இன்று தொடக்கம்!

Posted: 03 Aug 2015 01:01 PM PDT

- தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ்ராயப்பா இயக்கும் படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். முதன்முறை ஜீவா ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். - ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்கிறார். - இன்று படத்தொடக்கவிழாவுடன் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. சில நாட்களில் முழுமையான படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.

நீ முன்பே சொல்லியிருந்தால்

Posted: 03 Aug 2015 01:00 PM PDT

- — நான் ஒரு பெண்ணுடன் நட்புடன் பழகி வந்தேன். அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமானபின் மூக்குத்தி அணிய தொடங்கினாள். அதுவரை நான் பார்த்த அவளுக்கும் மூக்குத்தியுடன்பார்த்த அவளுக்கும் நிறைய வித்தியாசமாக தெரிந்தது. அவ்வளவு அழகாக தோன்றினாள். நீ முன்பே மூக்குத்தி அணிந்திருந்தால் நானே உன்னை பெண் கேட்டு வந்திருப்பேன் என்று அவளிடம் கூறினேன். அதற்கு அவள் சொன்ன பதில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது. "நீ முன்பே சொல்லியிருந்தால் நான் அணிந்திருப்பேனே" ——————————————————- படித்ததில் ...

காக்கா முட்டை!

Posted: 03 Aug 2015 12:59 PM PDT

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது காக்கா ஒன்று. அது தன் கூட்டில் முட்டையிட்டு பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்லும். மாலையில் வந்து பார்த்தால் முட்டை காணாமல் போயிருக்கும். இப்படியே நீண்ட நாட்களாக நடந்து வந்ததால் ஒருநாள் மறைந்திருந்து கவனித்தது. அங்கிருந்த நாகப்பாம்பு ஒன்று காக்கா இரை தேடுவதற்காகப் பறந்து சென்றதும், ரகசியமாக அங்கு வந்து முட்டையைக் குடித்துவிட்டுச் சென்றது. இது காக்காவுக்கு கோபத்தை வரவழைத்தது. ஆனால், நாகப் பாம்பை எதிர்த்து நிற்பது என்பது ...

கெட்ட பழக்கம்…!

Posted: 03 Aug 2015 12:57 PM PDT

- ஒரு காதலனும், காதலியும் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். வழக்கப்படி கடற்கரையில் படகின் நிழல் மறைவில் அமர்ந்திருந்தனர் – காதலி: நாம் கல்யாணம் பண்ணின பிறகு இந்த சிகரெட் பழக்கத்தை விட்டிடனும்…! – காதலன்: விட்டிடறேன் – காதலி: ப்ரண்ட்ஸோட சேர்ந்துட்டு குடிச்சுட்டு கும்மாளம் போடறதையும் விட்டிடனும்! – காதலன்: விட்டிடறேன் – காதலி: அதோட சாயந்திரத்தில கிளப்புக்கு போறதையும் சேர்த்துதானே…! – காதலன்: அதையும் சேர்த்துதான்! – காதலி: இன்னும் வேற எதையாவது விடறதுக்கு யோசிக்கிறீங்களா? – காதலன்: ஆமாம்…கல்யாணம் ...

சீன வானொலி தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் நிலானி

Posted: 03 Aug 2015 12:55 PM PDT

தமிழில் பேசுவதையே பல தமிழர்கள் தரக்குறைவாக நினைக்கும் போது சீன மாணவியான நிலானி, தன் தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். சீன வானொலி தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் அவர் தற்போது வந்திருப்பது பேச்சுத் தமிழ் கற்க. "நான் சீனாவில் தமிழ் மொழியில் படித்துப் பட்டம் பெற்றேன். ஆனால் எனக்கு தமிழ்நாட்டில் புழங்கும் பேச்சுத் தமிழ் அவ்வளவாகத் தெரியவில்லை. கொச்சைத் தமிழில் பேசுவதைக் கேட்கும்போது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு" என்று புன்னகைக்கிறார் ...

தெரிஞ்சுக்கோங்க!...சிவப்பு அரிசி!

Posted: 03 Aug 2015 12:52 PM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

உயிர் (எழுத்து) கவிதை...

Posted: 03 Aug 2015 12:49 PM PDT

அணுகுண்டு சோதனை நடத்தி அக்கினி சிறகுகளாய் முளைத்தவரே ! ஆயிரமாயிரம் மக்களை கனவு காணச் சொன்னவரே ! இராமேஸ்வரம் பெற்றடுத்த கிடைத்தற்கரிய சிப்பியே ! ஈகை பெருந்தகையாய் பண்போடு இருந்தவரே ! உலக முழுவதிலும் தமிழனை தலை நிமிர வைத்தவரே ! ஊண் உறக்கம் இன்றி நாட்டின் முன்னேற்றத்தை சிந்தித்தவரே ! எளிமையை வலியுறுத்தி முன்னுதாரணமாய் நின்றவரே ! ஏற்றப் பாதையில் இந்தியாவை நடத்திச்சென்று வல்லரசாக்க நினைத்தவரே ! ஐயமின்றி சொல்வோம் நாங்கள்......தங்கள் கனவு நனவாகும் என்று ! ஒட்டு மொத்த உலகத்தையும் இன்று அழ வைத்துவிட்டு ...

விலகிச் செல்லும் நட்சத்திரங்கள்!

Posted: 03 Aug 2015 12:41 PM PDT

பால் வீதியில் உள்ள மூன்றில் ஒரு பகுதி நட்சத்திரங்கள் தங்களின் வழிப்பாதையை மாற்றிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதன்படி புதிய பால்வீதியில் நட்சத்திரக் குடும்பங்கள் கொண்ட வரைபடத்தினை உருவாக்கியிருக்கிறாரகள். தற்கால வாழ்க்கையில் பிறந்த இடத்திலிருந்து பிழைப்பிற்காகவோ, வேறு சில காரணங்களுக்காகவோ வெகுதூரம் வெவ்வேறு இடங்களுக்கு செல்வது சகஜம். சிலர் தேவை நிமித்தம் தங்கள் வாழ்நாளில் பாதி உலகைக் கூடச் சுற்றி வந்து விடுகிறார்கள். அதேமாதிரித் தான் நட்சத்திரங்களும் என்கிறார் அமெரிக்காவின் ...

இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன.

Posted: 03 Aug 2015 12:38 PM PDT

புதுடெல்லி: இந்தியாவில் ஆபாச இணையதளங்களை முடக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆபாச இணையதளங்கள் முக்கிய காரணம் என்ற குற்றச்சாற்று நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆபாச இணையதளங்களை முடக்க உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விசாரணை இன்னும் நடந்துவருகிறது. அந்த ...

அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை!

Posted: 03 Aug 2015 12:34 PM PDT

அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு வீறிட்டு வளர்ந்தாலும் அதை நாம் ஏற்றுக்கொண்டு புதிய அனுபவத்தை உணரமுடியும். ஆனால் உணவு விவகாரங்களில் அது நேர்எதிர். நவீன உணவுகளை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு வரவேற்கிறோமோ அந்த அளவிற்கு வயிற்றை அது பதம் பார்த்துவிடும். தமிழர்களுக்கு என்று ஒரு பாரம்பரிய பண்பாடு உணவு முறை உண்டு. என்னதான் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி நம் சூழல் இருந்தது, எவையெவை நமக்கு உரித்தானவை என்பதை உணருகிற நேரம் பலருக்கு ...

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை

Posted: 03 Aug 2015 12:30 PM PDT

இந்த திரி இல் நாம் சில டிபன்களை பார்க்கலாம். வழக்கமாகச செய்யும் இட்லி தோசை அடை போன்றவை களும் இதில் வரும் புதிதாக சிலவும் வரும். தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே ! புன்னகை வழக்கம் போல உங்கள் கருத்துகளையும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிருங்கள் புன்னகை

சீனாவில் மதுவில் 'வயாகரா' கலப்படம்

Posted: 03 Aug 2015 12:29 PM PDT

- 'வயாகரா' என்பது ஆண்கள் பயன்படுத்தும் உணர்வுககளை தூண்டும் மாத்திரை. சீனாவில் அதை மதுக்களில் கலப்படம் செய்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இது குறித்து மத்திய சீனா அதிகாரிகள் முக்கிய மது தயாரிப்பு நிறுவனங்களை ஆய்வு செய்தனர். குயான்ஸி மாகாணத்தில் உள்ள குயிகுன் ஆல்கஹால் நிறுவனம் தனது 3 மது வகைகளில் கலப்படம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிறுவனத்தின் மது வகைகள்தான் அதிக விலைக்கு விற்கப்படு கின்றன. இதுகுறித்து குயான்ஸி மாகாணத்தின் லியுஸ்கு நகர உணவு ...

விஞ்ஞானி ஜன்ஸ்டீனை விட அறிவு திறனில் மிஞ்சி சாதனை படைத்த சிறுமி

Posted: 03 Aug 2015 12:28 PM PDT

- லண்டன், – மென்சர் என்ற அமைப்பு சமீபத்தில் அறிவுத்திறன் சோதனை நடத்தியது. பொது அறிவு, நினைவுத்திறன், கணித திறன், சிக்கலுக்கு தீர்வு காண்பது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அறிவுத் திறன் சோதிக்கப்பட்டது. – அதில் இங்கிலாந்தை சேர்ந்த நிகோல்பார் என்ற 12 வயது சிறுமி 162 புள்ளிகள் பெற்றார். இதன் மூலம் விஞ்ஞானி ஜன்ஸ்டீனை விட அறிவு திறனில் மிஞ்சி சாதனை படைத்தாள். – விஞ்ஞானி ஆல்பர்ட் ஜன்ஸ்டீனின் அறிவுத்திறன் குறியீட்டை 160 புள்ளிகள் என மென்சா நிர்ணயித்துள்ளது. ஆனால் சிறுமி நிகோல்பார் ...

மதுவிலக்கு பற்றி பேச கருணாநிதி, வைகோவுக்கு என்ன யோக்யதை? நத்தம் விஸ்வநாதன் கேள்வி!

Posted: 03 Aug 2015 12:22 PM PDT

சென்னை: மதுவிலக்கு பற்றி பேச கருணாநிதி, தமிழிசை, வைகோ ஆகியோருக்கு என்ன யோக்யதை இருக்கிறது என தமிழக மதுவிலக்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''கடந்த நான்கு அண்டுகளாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு நிகழ்த்தி வரும் சாதனைகள் மற்றும் திட்டங்கள் காரணமாக அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே இருப்பதை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் ...

மஹா பெரியவா !

Posted: 03 Aug 2015 12:22 PM PDT

நீங்க எல்லாருமே சுவாமி கும்புடறவாளாதான் இருப்பேள். தினசரி கர்மானுஷ்டானங்களை அனுசரிச்சு பூஜை பண்ணாட்டாலும் தெரிஞ்ச ஒரு சின்னத் துதியையாவது சொல்லி, சில நிமிஷமாவது தினமும் சுவாமியை வணங்கறதையும் பழக்கமா வைச்சுண்டிருப்பேள் . அவா அவா வழக்கப்படிஆராதனைகளைப் பண்ணினாலும் நிச்சயம் ஏதாவது ஒரு வேண்டுதலும் அதுல இருக்கும்கறதுதான் நிஜம். அப்படி நீங்க வேண்டிக்கறதெல்லாம் உடனே பலிச்சுடறதா? சிலருக்கு கேட்டது உடனே கிடைக்கும், இன்னும் கொஞ்சம் பேருக்கு கொஞ்சம் தாமதமா கிடைக்கும். மத்தவாள்ல சிலருக்கு ரொம்ப ...

வேலைக்கு போகாதீர்கள் - ஷங்கர் பாபு நூலினை டவுன்லோட் செய்ய.

Posted: 03 Aug 2015 12:06 PM PDT

ஷங்கர் பாபு - வேலைக்கு போகாதீர்கள் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/qgtd095iwzyppyt/Velaiku+pogatheerkal+shankar+babu.pdf

படித்ததில் பிடித்தது

Posted: 03 Aug 2015 12:03 PM PDT

*சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்… *வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!! *எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும். யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும் !! *விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம். ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது !!!! *உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!! *பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது ...

11000 பதிவுகளை கடந்த திரு. அய்யாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாருங்கள் நண்பர்களே !

Posted: 03 Aug 2015 09:30 AM PDT

11000 பதிவுகளை கடந்த திரு. அய்யாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாருங்கள் நண்பர்களே !

அய்யா ஒரு லட்சம் பதிவுகளை எட்ட என் வாழ்த்துக்கள் ...

நுனிப் புல் திண்போமா ?

Posted: 03 Aug 2015 09:19 AM PDT

நுனிப் புல் திண்போமா ? அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ...

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Posted: 03 Aug 2015 05:39 AM PDT

வணக்கம்.... எனக்கு இந்த திரைப்படங்களின் பாடல்கள் கிடைக்குமா.. ..நான் உங்கள் ரசிகன் ,,புதிழ சரித்திரம்.. ..அந்த வீட்டில் ஒருகோவில்.. ..தங்கச்சி.. அத்துடன் குருபானி கிந்தி,,பாடல்கள் ஒருகாலத்தில் தமிழில் அதே இச்சசமைப்போடு வெளிஜாகி இருந்தது அந்த பாடல்கள் கிடைக்க வாழ்ப்பு இருக்குமா.. இங்கு உள்ள நண்பர்கள் ஜாரிடமாவது இருக்கிந்தால் தந்து உதவுங்கள்..

எனது கதைகள் --

Posted: 03 Aug 2015 05:25 AM PDT

ஓட்டைப் படகு. ============ காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று ...

மது தயாரிக்கும் நிறுவனங்கள் யாருக்கு சொந்தமானவை... அறிந்து கொள்ளுங்கள்!

Posted: 03 Aug 2015 05:16 AM PDT

தமிழகத்தில் மொத்தம் 15 நிறுவனங்கள் மது தயாரிப்பில் ஈடுபட்டள்ளன. மதுவுக்கு எதிராக தற்போது குரல் கொடுத்து வரும் தி.மு.கவை சேர்ந்தவர்கள் கையில்தான் தமிழகத்தில் பெரும்பாலான மது தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. - இவர்களிடம் இருந்துதான் டாஸ்மாக்கிற்கு அதிகமாக மது கொள்முதல் செய்யப்படுகிறது. - தமிழகத்தில் எந்த எந்த நிறுவனங்கள் மது உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அதன் உரிமையாளர்கள் யார்? யார்? என்று பார்ப்போம். பீர் வகைகள்... சென்னை புருவரீஸ்-பெங்களூரு தொழிலதிபர். மோகன் புருவரீஸ் ...

புத்தகம் தேவை

Posted: 02 Aug 2015 11:13 PM PDT

அமீஷ் திரிபாதி எழுதிய மெலூஹாவின் அமரர்கள் சிவா முத்தொகுதி புத்தகம் தமிழில் பிடிஎஃப் வடிவில் தேவை..

உள்ளத்தில் பூத்த நட்பு- முஹம்மத் ஸர்பான்

Posted: 02 Aug 2015 11:11 PM PDT

சுமந்த வயிறு வேறு இரு நெஞ்சமோ ஒன்று பாசமெனும் தாரகைகள் நட்புஎனும் வான்பரப்பில் ஒளி வீச நீயில்லையே,,,,!! பிரிந்து சென்றாய்...!! நெஞ்சில் விளைந்தது அக்கினி மூட்டம்;கண்ணில் பாயும் காவிரி ஊற்று;என் செவிகளில் கேளும் உன் தொனிகள் என்னை கொல்லுதடா....? இணைந்திருந்து..., சுவைத்த உணவின் வாசம் என் கைகளில் மாறல்லையே..!! நடந்த பாதைகள் வா வா என்றது அமர்ந்த மர நிழல் தேடுதடா..?? உனைக் கண்டது நீலக் கடலோரம். அமர்ந்திருந்து தூதுவிட்டேன்,இளநாரையிடம்.., மீனவன் வாடை சுமந்த ...

தண்டனை -முஹம்மத் ஸர்பான்

Posted: 02 Aug 2015 11:10 PM PDT

கோடரியால் வெட்டப்பட்ட விறகுகள் கொள்ளியாய் மனிதனுக்கே மாறுகின்றது, கொடுமைகள் செய்யும் கைகள் பறிக்கும் வண்ணமலர்கள் சவ ஊர்வலத்திலும் பெரிய சுவரில் நினைவாய் தொங்கப்படும் புகைப்படத்தையும் அழகாய் காட்டுகிறது. மனிதனாய் பிறந்த ஒவ்வொருவனும் தன்னைத்தானே முகம் பார்த்துக்கொள்கிறான் நிழலெனும் மெய்விம்பத்தில்...........,,,,,,, தீவினை செய்தாலும் நலமாய் தாங்கி பிடிக்கும் மண்ணும் ஏனைய பூதங்களும் மனிதனை மன்னித்தாலும் அவன் இழைத்த பாவமும் தோண்டிய குழிகளும் உனக்கே தண்டனையாய் இறைவனால் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™