Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆப்கானிஸ்தானில் இருந்து தினமும் வருகிறது வெங்காயம் 1,000 டன்: நாடு முழுவதும் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

Posted:

புதுடில்லி: கடந்த வாரத்தில், உச்சத்திற்கு சென்ற வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், இரு நாட்களாக விலை குறைந்து வருகிறது. இருப்பினும், விலையை மேலும் குறைக்க, வெளிநாடுகளில் இருந்து, 10 ஆயிரம் டன் வெங்காய இறக்குமதிக்கான முயற்சியை, மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து, தினமும், 1,000 டன் வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது.

'ஆட்சியை மாற்றிய காய்கறி' என, பிற காய்கறிகளுக்கு இல்லாத பெருமை, வெங்காயத்திற்கு உண்டு. 1998ல், டில்லி மாநிலத்தில், முதல்வராக இருந்த, இப்போதைய ...

தொழிலாளர்கள் குறைந்தபட்ச மாத சம்பளம்...ரூ.20 ஆயிரம்:நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு

Posted:

புதுடில்லி:நாடு முழுவதும் உள்ள, கோடிக் கணக்கான தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில், மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, குறைந்தபட்ச மாத சம்பளமாக, 20 ஆயிரம் ரூபாயை, நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி, பதில் தெரிவிக்குமாறு கேட்டுள்ளது. இப்போதைய நிலையில், குறைந்தபட்ச மாத சம்பளமாக, 4,160 ரூபாய் என, உள்ள நிலையில், 20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்வதை, தொழிற்சங்கங்கள் மறுக்கப் போவதில்லை என்பதால், '20 ஆயிரம் ரூபாயே, குறைந்தபட்ச மாத சம்பளம்' என, விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட ...

மோடிக்கு பதிலடியாக நிதிஷ் 2.70 லட்சம் கோடி

Posted:

பாட்னா:பீகார் மாநிலத்திற்கு, பிரதமர் மோடி சமீபத்தில், 1.25 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ள நிலையில், அதற்கு போட்டியாக, முதல்வர் நிதிஷ் குமார், 2.70 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களை, அறிவித்துள்ளார்.இதெல்லாம், அந்த மாநிலத்தில், இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள, சட்ட சபை தேர்தலுக்காக தான்.தேர்தல் தேதி இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், கடந்த வாரம், பீகாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 1.25 லட்சம் கோடி ரூபாய், சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என, அறிவித்தார். அதனால், பா.ஜ.,வின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துவிடும் என கருதிய, மோடியின் ...

இந்தியாவை கண்டால் பயம் பாகிஸ்தான் ராணுவம் அலறல்

Posted:

இஸ்லாமாபாத்:'இந்தியா தான், பாகிஸ்தானை அச்சுறுத்தும் ஒரே அன்னிய சக்தி' என, பாக்., ராணுவம் புலம்பியுள்ளது. பாகிஸ்தான் எம்.பி., முஷாஹித் உசேன் சையத் தலைமையிலான, தேசிய பாதுகாப்பு குழு, ராவல்பிண்டியில் உள்ள, ராணுவ பணியாளர் தலைமை அலுவலகத்திற்கு, கருத்து கேட்புக்காக சென்றது. இக்குழுவிடம், ராணுவ பணியாளர் தலைமைக் குழு தலைவர், ஜெனரல் ரஷாத் மகமூத் மற்றும் ராணுவ பணியாளர்கள் கூறியதாவது: கடந்த, இரண்டு ஆண்டுகளில், இந்தியா, 6.50 லட்சம் கோடி ரூபாய்க்கு, ராணுவ தளவாடங்களை வாங்கிக் குவித்துள்ளது; இதில், 80 சதவீதம், பாகிஸ்தானை தாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட ...

நடிகர் சஞ்சய் தத் வழக்கில் வந்தது திடீர் திருப்பம்!

Posted:

புதுடில்லி:'ஏ.கே., 56' துப்பாக்கியை வைத்திருந்த வழக்கில், நடிகர் சஞ்சய் தத்திற்கும், அவரின் நண்பர் யூசுப்புக்கும், பல ஆண்டுகளுக்கு முன்பே, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த குற்றத்திற்கு அதிகபட்சம், மூன்றாண்டுகள் தான் தண்டனை விதிக்க முடியும் என்பதை அறிந்து, நீதிபதிகள் நேற்று, அதிர்ச்சி அடைந்தனர்.யூசுப் நுல்வாலா சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பி.சி.பந்த் ஆகியோரின் கவனத்திற்கு, வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த விவகாரத்தை கொண்டு ...

ஷீனா போரா கொலை வழக்கில் அதிரடி

Posted:

மும்பை:நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, ஷீனா போரா கொலை வழக்கில் கைதான, இந்திராணி முகர்ஜியின், இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கடந்த 1997 முதல் 2007 வரை, ஸ்டார் இந்தியா 'டிவி' சேனலின் தலைமை நிர்வாகியாக இருந்தவர், பீட்டர் முகர்ஜி. இவரது இரண்டாம் மனைவி இந்திராணி; ஏற்கனவே, இரு முறை திருமணம் ஆனதை மறைத்து,பீட்டரை, மூன்றாவது கணவராக மணந்தார். அறிமுகம்:கடந்த 2012ல், முதல் கணவர் மூலம் பிறந்த ஷீனா போராவை, தன் சகோதரி என, அறிமுகம் செய்து, தன்னுடன் தங்க வைத்தார் இந்திராணி. இந்த ரகசியம் அறியாத, ...

மத்திய அமைச்சர் கருத்து கருணாநிதி வரவேற்பு

Posted:

சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை:மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், 'மதுரவாயல் மேம்பால சாலை திட்டம் குறித்து, நீதிமன்றத்துக்கு வெளியே பேசி தீர்க்க, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தேவைப்பட்டால், ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதையில், சிறிய மாற்றம் அல்லது புதிய பாதை அமைக்க தயராக உள்ளோம். இந்த திட்டத்தை செயல்படுத்தா விட்டால், மிகவும் பழமை வாய்ந்த, சென்னை துறைமுகம் வருங்காலத்தில் காட்சிப் பொருளாக மாற வாய்ப்புள்ளது. எனவே, இந்த பிரச்னையில் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்' என, கூறியிருக்கிறார்.மேலும், அதே பேட்டியில், 'குளச்சல் ...

தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான விசாரணைக்கு தடை

Posted:

சென்னை: சட்டசபையில், காவலரை தாக்கியதாக, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.சட்டசபையில், பிப்ரவரி மாதம், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த போது, ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களை சபையை விட்டு வெளியேற்ற, சபை காவலர்களுக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார். அதற்கு, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், சபை வளாகத்திற்குள் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், சபை காவலரை ...

இளங்கோவனுக்கான நிபந்தனை தளர்த்த மறுப்பு

Posted:

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கான, முன் ஜாமின் நிபந்தனையை தளர்த்த, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. காங்., அறக்கட்டளை முன்னாள் பெண் ஊழியர் வளர்மதி அளித்த புகாரில், தமிழக காங்., தலைவர் இளங்கோவன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகி நாராயணன் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருவருக்கும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், முன் ஜாமின் வழங்கினார். 'மதுரையில் தங்கியிருந்து, தல்லாகுளம் காவல் நிலையத்தில், 15 நாட்கள் கையெழுத்திட வேண்டும்' என, நிபந்தனை விதித்தார். மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம், கையெழுத்திட சென்ற ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™