Tamil News | Online Tamil News |
- அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை... 86 லட்சம்!: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குவியும் பதிவுகள்
- இலங்கையுடனான உறவில் அமெரிக்க அரசு...பல்டி: ஐ.நா.,வில் ஆதரவு தீர்மானம் கொண்டு வர முடிவு
- பழைய கூட்டணி - பா.ஜ., மீண்டும் முயற்சி * சென்னையில் அமித் ஷா யோசனை
- சோனியா வழக்கு : அமெரிக்க கோர்ட் தள்ளுபடி
- 'சிறுவர்களுக்கு பதிலளிக்க அவசியம் இல்லை!'
- 'என்னை எதுவும் செய்ய முடியாது' 'மாஜி' மந்திரி ராஜா பேச்சு
- வெளிநடப்பு: எதிர்கட்சிகள் விளக்கம்
- குஜராத் போராட்டத்தை ஒடுக்க 5,000 வீரர்கள்
- அரசு சார்பில் சிவாஜிக்கு மணிமண்டபம்
- ஐந்தாவது முறையாக சஞ்சய் தத்துக்கு பரோல்
| அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை... 86 லட்சம்!: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குவியும் பதிவுகள் Posted: தமிழகத்தில், வேலை வாய்ப்பு மையங்களில் பதிவு செய்து, அரசு வேலை வாய்ப்புக்காக, 86 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலைக்காக மனுக்கள் குவிந்து வருகின்றன. தமிழகத்தில், அரசு வேலைக்கென தனி மவுசு இருந்து வருகிறது. படித்து, வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய வசதியாக, மாநிலம் முழுவதும், 37 வேலை வாய்ப்பு பதிவு மையங்கள் உள்ளன. இங்கு பதிவு செய்வோர், பதிவு மூப்பு அடிப்படையில், வேலை வாய்ப்புக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.ஐ.டி., நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் கிளைகள் தமிழகத்தில் கால் பதித்து, சம்பளத்தை பல ... |
| இலங்கையுடனான உறவில் அமெரிக்க அரசு...பல்டி: ஐ.நா.,வில் ஆதரவு தீர்மானம் கொண்டு வர முடிவு Posted: கொழும்பு:இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை பின்பற்றிவந்த அமெரிக்கா, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, திடீர், 'பல்டி' அடித்துள்ளது. இலங்கைக்கு ஆதரவாக, ஐ.நா.,வில் தீர்மானம் கொண்டு வரப் போவதாக அறிவித்துள்ளது.இலங்கையில், 2009ல், நடந்த சண்டையில், மனித உரிமை மீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்தக்கோரி, ஐ.நா,, மனித உரிமை கவுன்சிலில், அமெரிக்கா சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், கடந்தாண்டு நிறைவேறியது. இந்நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மைத்ரிபால சிறிசேன, அதிபராக பதவியேற்றுள்ளார். இதையடுத்து, இலங்கையுடன் ... |
| பழைய கூட்டணி - பா.ஜ., மீண்டும் முயற்சி * சென்னையில் அமித் ஷா யோசனை Posted: சிதம்பரம் நடராஜரை தரிசிக்கவும்; புதுச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, 24ம் தேதி இரவு, 12:00 மணியளவில், சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நிர்வாகிகள் இல.கணேசன், வானதி சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர்.சென்னையில், அமித் ஷா தங்குவதற்கு, அடையாரில் உள்ள, சி.எல்.ஆர்.ஐ., விருந்தினர் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரை அழைத்துக் கொண்டு, அங்கே சென்ற தமிழக பா.ஜ., தலைவர்களுடன், அமித் ஷா, அரை மணி நேரம் ஆலோசனை ... |
| சோனியா வழக்கு : அமெரிக்க கோர்ட் தள்ளுபடி Posted: நியூயார்க:சீக்கியர் மீதான தாக்குதல் தொடர்பாக, சோனியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, அமெரிக்க கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, 1984, அக்.,31ல் அவரது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில், பலர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலை கட்டவிழ்த்து விட்டோர் மற்றும் வன்முறையில் ஈடுபட்டோரை, இந்திராவின் மருமகளும், காங்கிரஸ் தலைவருமான, சோனியா, பாதுகாப்பதாக, அமெரிக்காவை சேர்ந்த, எஸ்.எப்.ஜே., என்ற சீக்கிய அமைப்பு குற்றம் ... |
| 'சிறுவர்களுக்கு பதிலளிக்க அவசியம் இல்லை!' Posted: ''எனக்கு எதிராக, காங்., அறக்கட்டளை முன்னாள் ஊழியர் வளர்மதி அளித்த புகாரின் பின்னணியில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இருக்கிறார்,'' என, தமிழக காங்., தலைவர் இளங்கோவன், பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அவரது பேட்டி: தமிழக காங்., கட்சியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து, 15 நாட்களுக்கு ஒரு முறை, டில்லிக்கு தகவல் சொல்வதும், அறிக்கை வழங்குவதும் வழக்கம். அதற்காகத் தான், கடந்த வாரம் நான் டில்லி சென்றேன். அங்கு தங்கியிருந்து, அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசித்தேன். ஆனால், நான் தலைமறைவாகிவிட்டதாகவும், வழக்கு - ... |
| 'என்னை எதுவும் செய்ய முடியாது' 'மாஜி' மந்திரி ராஜா பேச்சு Posted: கூடலுார்: ''2ஜி வழக்கில் என்னை எதுவும் செய்து விட முடியாது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேசினார். நீலகிரி மாவட்டம், கூடலுார் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் ராஜா பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தலில், கூடலுார் சட்டசபை தொகுதியில் நான் போட்டியிடுவதாக தகவல்கள் வருகின்றன. எதையும், தி.மு.க., தலைவர் கருணாநிதி முடிவு செய்வார்.கடந்த, 2013ல், என் உறவினர் வீடுகளில் சோதனை செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், 'ஒன்றுமில்லை' என தெரிவித்தனர். ஆனால், தற்போது என் மீது சொத்து குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளனர். 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என கூறியவர்கள், தற்போது, 27 ... |
| வெளிநடப்பு: எதிர்கட்சிகள் விளக்கம் Posted: சென்னை: 'மக்கள் பிரச்னைகளை பேச அனுமதிக்கவில்லை. அதனால்தான், சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தோம்' என, எதிர்கட்சி தலைவர்கள் கூறினர். தி.மு.க., சட்டசபை தலைவர் ஸ்டாலின் இதுவரை, 22 பிரச்னைகள் குறித்து விவாதிக்க, ஒத்தி வைப்பு தீர்மானம், கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளேன். அதில் முக்கியமானது, மேகதாது பிரச்னை. இதுகுறித்து, இரண்டு நாட்களுக்கு முன், கர்நாடக முதல்வர், அந்த மாநில அனைத்துக் கட்சி குழுவுடன், பிரதமரை சந்தித்து முறையிட்டுள்ளார். 'அணை கட்டுவதில் இருந்து பின்வாங்க மாட்டோம்' எனக் கூறியுள்ளனர். இது ஆபத்தான நிலை. ஏற்கனவே தண்ணீர் ... |
| குஜராத் போராட்டத்தை ஒடுக்க 5,000 வீரர்கள் Posted: ஆமதாபாத்:குஜராத்தில், ஓ.பி.சி., இட ஒதுக்கீடு கோரி, அம்மாநிலத்தின் பெரும்பான்மை ஜாதியினரான படேல் சமுதாயத்தினர் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்து, மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.இதனால், 5,000 துணை ராணுவப்படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்; பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அழைப்பு:அமைதி காக்குமாறு, மாநில முதல்வரும் அதே சாதியை சேர்ந்தவருமான ஆனந்திபென் படேல் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளனர்.குஜராத் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் படேல் சமுதாயத்தினர், தங்களுக்கு, ஓ.பி.சி., அந்தஸ்து வழங்க ... |
| அரசு சார்பில் சிவாஜிக்கு மணிமண்டபம் Posted: சென்னை:'நடிகர் சிவாஜி கணேசனுக்கு, தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ் அவர் வௌியிட்ட அறிவிப்பு:'நடிகர் திலகம்' என, தமிழக மக்களால் போற்றப்படும், சிவாஜி கணேசனுக்கு நினைவகம் அமைக்க, சென்னை, அடையாறு, சத்யா ஸ்டியோ அருகே, 65 சென்ட் நிலத்தை, 2002 செப்., 26ல் ஒதுக்கினேன். தென்னிந்திய நடிகர் சங்க வேண்டுகோளை ஏற்று, இந்த நிலம் ஒதுக்கப்பட்டு, நினைவகத்தை அவர்களே அமைத்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது.நினைவகத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் வழியாக, நீதிபதிகள் குடியிருப்புகளுக்கு ... |
| ஐந்தாவது முறையாக சஞ்சய் தத்துக்கு பரோல் Posted: மும்பை: சிறையில் இருக்கும் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், மகளின் மூக்கு அறுவை சிகிச்சைக்காக, மீண்டும் பரோலில் வந்தார். கடந்த, 1993ல் மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தபோது, பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக, சஞ்சய் தத், 56, மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர் மீதான குற்றச்சாட்டை விசாரித்த, தடா நீதிமன்றம், ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, புனேயில் உள்ள, எரவாடா சிறையில் சஞ்சய் தத் அடைக்கப்பட்டார். அங்கு, 18 மாதங்கள் இருந்தபின், சஞ்சய் தத், ஜாமினில் வெளிவந்தார். தொடர்ந்து நடந்த விசாரணையில், நீதிமன்ற உத்தரவுப்படி, 2013ல், மீண்டும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 27,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |