Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


போலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பால் அரசுக்கு ரூ.400 கோடி மிச்சம்: 4 ஆண்டுகளில் 3.52 லட்சம் போலி கார்டுகள் கண்டுபிடிப்பு

Posted:

தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், 3.52 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன.இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் என்ற வகையில், நான்கு ஆண்டுகளில், 400 கோடி ரூபாய் வரை மிச்சம் ஆகி உள்ளது. போலி ரேஷன் கார்டு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த, அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 33 ஆயிரத்து, 973 கடைகள் மூலம், 2.12 கோடி ரேஷன் கார்டுகளுக்கு அத்தியாவசிய பொருட்கள், பொது வினியோகத் திட்டத்தில் வழங்கப்படுகிறது.இந்த கார்டுகளுக்கு, அரிசி, சர்க்கரை, பருப்பு வகை, பாமாயில், மண்ணெண்ணெய், கோதுமை ஆகியன மத்திய, மாநில அரசுகளின் ...

சட்டசபைக்கு விஜயகாந்த் வருவாரா? தே.மு.தி.க.,வினர் எதிர்பார்ப்பு

Posted:

அடுத்த வாரம் துவங்கும், தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க முடியாத நிலையில், அக்கட்சியின் தலைவரான விஜயகாந்த் பங்கேற்று, மக்கள் பிரச்னைகள் குறித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துஉள்ளது.

கடும் மோதல்:
தமிழகம் முழுவதும், 'டாஸ்மாக்'குகளுக்கு எதிரான போராட்டம், அதிகரித்துள்ள நிலையில், ஐந்து மாத இடைவெளிக்கு பின், வரும் 24ல், சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது.இந்த ஆண்டின், முதல் சட்டசபை கூட்டத் தொடர், பிப்., 17ல், கவர்னர் உரையுடன் துவங்கியது. தொடரின் மூன்றாவது நாளில், ஆளுங்கட்சியினருக்கும், தே.மு.தி.க., - ...

சட்டசபை தேர்தலுக்கு லோக்சபா 'பார்முலா': அ.தி.மு.க.,வில் தீவிர ஆலோசனை

Posted:

சட்டசபை தேர்தலில், லோக்சபா தேர்தல், 'பார்முலா'வை பின்பற்றுவது குறித்து, அ.தி.மு.க., தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில், அ.தி.மு.க., அரசின் ஆட்சி காலம், அடுத்த ஆண்டு, மே மாதம் நிறைவு பெறுகிறது. ஏற்கனவே, 1996, 2006 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. இதனால், 2016ல் தேர்தலை சந்திக்காமல், 2015ல் தேர்தலை சந்திக்கலாமா என, அ.தி.மு.க., தலைமை யோசித்து வருகிறது.
இதை அறிந்த தி.மு.க., தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை துவக்கி விட்டது. தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்துள்ளது. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ஒவ்வொரு தொகுதியாக, மக்களை சந்திக்க உள்ளார்.மேலும், ...

மீண்டும் கொடி கட்டி பறக்கிறது தங்கம் விலை:2 வாரத்தில் கிராமிற்கு ரூ.200 வரை அதிகரிப்பு

Posted:

சென்னை: தங்கம் விலை மீண்டும் கொடி கட்டி பறக்கத் துவங்கி உள்ளது. இரு வாரங்களில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 1,616 ரூபாயும், கிராமுக்கு, 202 ரூபாயும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலைச்சரிவு மற்றும் கிரீஸ் நாட்டின் பொருளாதார சூழல் காரணமாக, தங்கத்தின் விலை, கடந்த மாதம் சரிந்தது.ஆபரண தங்கம் கிராம், ஜூலை, 1ம் தேதி, 2,499 ரூபாய்க்கும்; சவரன், 19 ஆயிரத்து, 992 ரூபாய்க்கும் விற்பனையானது. இதன் பின், ஆகஸ்ட் மாதத்தில், அதாவது, 37 நாட்களில், தங்கம் விலை கிராமுக்கு, 156 ரூபாயும், சவரனுக்கு, 1,248 ரூபாயும் குறைந்தது.

படிப்படியாக...:
கடைசியாக இம்மாதம், 6ம் தேதி, ...

'குட்டி மாநிலங்களில் உள்ள வளர்ச்சி தமிழகத்தில் இல்லையே': கருணாநிதி ஆதங்கம்

Posted:

சென்னை: ''சிறிய சிறிய மாநிலங்கள் கூட, நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் முன்னேற்றமே இல்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.காஞ்சிபுரம் மாவட்டம், தி.மு.க., மகளிர் அணி சார்பில், மதுவுக்கு எதிரான மாநாடு, படப்பையை அடுத்த கரசங்காலில் நேற்று நடந்தது. கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழி தலைமை வகித்தார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.மாநாட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:மாற்றான் நினைப்பதற்கு இணங்க, தி.மு.க., ஒன்றும், பட்டு போய்விடும் கொள்கைகளை உடைய கட்சி அல்ல; சில ...

ராஜா மீது சொத்துக்குவிப்பு வழக்கிற்கு உள்குத்து காரணம்? ஆதரவாளர்கள் சந்தேகம்

Posted:

புதுடில்லி: முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ராஜா மீது, சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது, சி.பி.ஐ., ராஜாவின் வீடு, உறவினர் வீடுகள், அவருக்கு நெருக்கமான கம்பெனிகள் என, பல இடங்களில் ரெய்டு நடத்தியுள்ளது. 'அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என, தி.மு.க., கூறியுள்ளது. ஆனால், 'உண்மை அதுவல்ல' என்கின்றனர், ராஜாவுக்கு நெருக்கமானவர்கள்.'2ஜி' வழக்கு தொடர்ந்த பின், இரண்டு ஆண்டுகள் கழித்து சொத்து குவிப்பு வழக்கு போடக் காரணம் என்ன; இதை முன்பே சி.பி.ஐ., செய்திருக்கலாமே?' என கேள்வி எழுப்புகின்றனர், ராஜா ஆதரவாளர்கள்.'தமிழக முதல்வர்- - பிரதமர் சந்திப்பினால் தான், ...

இந்தியாவுடன் பேச்சு: ரத்து செய்தது பாக்.,

Posted:

இஸ்லாமாபாத்:இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பை, பாகிஸ்தான் நேற்று திடீரென ரத்து செய்தது.

டில்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் இந்தியா மற்றும்பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீசுடன் பேச, டில்லி வந்த, ஹூரியத்தை அமைப்பை சேர்ந்த பிரிவினைவாத தலைவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நிபந்தனை விதிக்காதீங்க:
பாகிஸ்தான் தேசிய ...

பாக்.,கில் தாவூத்: சிக்கியது டெலிபோன் பில்

Posted:

புதுடில்லி: மும்பையில், 1993ல் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் தான் வசித்து வருகிறான் என்பதற்கான வலுவான ஆதாரம், இந்திய புலனாய்வு அமைப்புகளிடம் கிடைத்துள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு:
மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், மும்பையில் பயங்கர வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதும், குடும்பத்துடன் பாகிஸ்தான் தப்பிச் சென்று விட்டான்.அவன் அங்கிருப்பதற்கான ஆதாரங்களை அவ்வப்போது, பாகிஸ்தான் அரசிடம் தெரிவித்து, அவனை பிடித்து ஒப்படைக்குமாறு, இந்தியா விடுக்கும் வேண்டுகோள் இதுவரை ...

பெரு நிறுவனங்கள் 200 கோடி ரூபாய் பாக்கி

Posted:

சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு, 200 கோடி ரூபாய் பாக்கித் தொகையை தராமல், சில அரசு துறைகள் மற்றும் பெரு நிறுவனங்கள் இழுத்தடித்து வருகின்றன. இதனால், 500 சிறு தொழில் நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

நிறுவனம் மூடல்:
தமிழகத்தில், பதிவு செய்யப்பட்ட, 10 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள், பல பிரச்னைகளால் மூடப்பட்டு விட்டன. இந்நிலையில், சிறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்து கொடுத்த, பொருட்களை பெற்ற, ஏராளமான பெரு நிறுவனங்கள், அதற்கான தொகையை ...

'இந்தியா வருகிறோம்!': ஆக்ராவில் ஐ.எஸ்., வாசகம்

Posted:

ஆக்ரா:நாட்டில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக, உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில், ஆக்ரா நகர சுவரில் எழுதப்பட்டுள்ள பயங்கரவாத ஆதரவு வாசகத்தால், அந்நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலத்தில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரும், உலகப் புகழ்பெற்ற தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ராவில், போலீஸ் நிலையத்துக்கு அருகில், கரித்துண்டால், 'ஐ.எஸ்., இயக்கம் விரைவில் வருகிறது' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது; அந்த இயக்கத்தின் சின்னமும் வரையப்பட்டிருந்தது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ...

என்.எல்.சி., விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்: தனியார்மயத்திற்கு ஆயத்தமா

Posted:

நெய்வேலி: என்.எல்.சி., ஊதிய மாற்று ஒப்பந்த விவகாரத்தில் நீடிக்கும் மத்திய அரசின் மவுனம், தனியார் மயமாக்கப்படுமோ என்ற அச்சத்தை, தொழிலாளர்களிடையே ஏற்படுத்தி உள்ளது. என்.எல்.சி.,யில், 2012, ஜனவரியில் அமல்படுத்தியிருக்க வேண்டிய தொழிலாளர்களுக்கான, புதிய ஊதிய மாற்று ஒப்பந்த விவகாரம், தற்போது வரை முடிவுக்கு வரவில்லை. இதை கண்டித்து, கடந்த ஜூலையில் துவங்கிய நிரந்தர தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், 30 நாட்களைத் தொடர்ந்து நீடிக்கிறது.தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பெயரளவிற்கு ஆதரவு தெரிவித்து, அரசியல் கட்சி தலைவர்கள், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™