Tamil News | Online Tamil News |
- பாக்., பயங்கரவாதிக்கு 'ஆயுள்'
- கட்டாய ஓட்டுரிமை சட்டத்திற்கு தடை
- வங்கிகளின் வாராக்கடன் நிலையை தாங்க முடியலே: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கவலை
- பள்ளி கேன்டீன்களில் பீட்ஸா, பர்கர் சிப்சுக்கு விற்க தடை
- வரி ஏய்ப்பு வழக்கு: செப்டம்பர் 21ல் கலாநிதிக்கு மீண்டும் 'சம்மன்'
- இந்தியா - பாக்., பேச்சு நடைபெறுமா?
- ராஜா, மனைவியிடம் விசாரிக்க சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு
- முன்ஜாமின் கிடைக்காததால் இளங்கோவன் 'எஸ்கேப்'
- ரோட்டில் நடந்து செல்பவர்கள் கூட முதல்வர் வேட்பாளர்கள்: ஸ்டாலின்
- வரும் 24ல் கூடும் சட்டசபையில் 18 நாட்கள் விவாதம்
- பெங்களூரு மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு ஓட்டு விற்பனை:இணையதள விளம்பரத்தில் டாக்டர் புதுமை
| Posted: புதுடில்லி:டில்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்காக வந்த, நான்கு பயங்கரவாதிகளில் ஒருவனுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து, நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2007ல், பாகிஸ்தானில் இருந்து, நான்கு பயங்கரவாதிகள் டில்லியில் ஊடுருவியுள்ளனர் என, டில்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, ஒரு இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை, போலீசார் சுற்றி வளைத்தனர்.அப்போது, போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பியோட முயற்சித்த, ஜெய்ஷ் - இ - முகமது என்ற, பாக்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, நான்கு பயங்கரவாதிகளை போலீசார் கைது ... |
| கட்டாய ஓட்டுரிமை சட்டத்திற்கு தடை Posted: ஆமதாபாத்:'உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிப்பது கட்டாயம்' என, குஜராத் மாநில சட்டசபையில் நிறைவேற்றிய சட்டத்தை, ஆமதாபாத் உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. இதுகுறித்து, குஜராத்தின் ஆமதாபாத் உயர் நீதிமன்றத்தில், பொது அமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகள், ஜெயந்த் படேல் மற்றும் ஜே.என்.அஞ்ஞாரியா ஆகியோரை கொண்ட, 'டிவிஷன் பெஞ்ச்' நேற்று பிறப்பித்த உத்தரவு:ஓட்டளிக்கும் உரிமையிலேயே, அதை புறக்கணிக் கும் உரிமையும் அடங்கிஉள்ளது. ஓட்டளிப்பதை, எந்த சட்டத்தாலும் கட்டாயமாக்க முடியாது. அது போல, ஓட்டளிப்பதை கடமையாகவும் கருத முடியாது. எனவே, ... |
| வங்கிகளின் வாராக்கடன் நிலையை தாங்க முடியலே: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கவலை Posted: புதுடில்லி : ''பொதுத்துறை வங்கிகளில், வாராக்கடன் நிலை ஏற்க முடியாத அளவுக்கு உள்ளது; இவ்வங்கிகளின் பொருளாதார ஆரோக்கியத்தை சரிப்படுத்த, தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். டில்லியில் நேற்று, இந்திய வங்கி நிறுவன தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது: பொதுத்துறை வங்கிகளில், வாராக்கடன் நிலை அளவுக்கதிகமாக உள்ளது. தற்போதைய இந்த நிலை, ஏற்க முடியாத வகையில் உள்ளது. கடன் வசூலில், வங்கிகள் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை; பொருளாதாரத்தின் சில ... |
| பள்ளி கேன்டீன்களில் பீட்ஸா, பர்கர் சிப்சுக்கு விற்க தடை Posted: புதுடில்லி: பீட்ஸா, பர்கர், சிப்ஸ், கேக், குளிர்பானம், பிஸ்கட் போன்ற நொறுக்குத்தீனிகளை, நாடு முழுவதும் உள்ள பள்ளி கேன்டீன்களில் விற்க, விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சகம் நியமித்த, 10 உறுப்பினர்கள் உயர்மட்டக்குழு, பள்ளிகளில் விற்கக்கூடிய உணவு பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. இறுதி முடிவு எடுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ள, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு முழுவதும் உள்ள பள்ளி கேன்டீன்களில், இந்திய உணவு வகைகளை மட்டுமே விற்க ... |
| வரி ஏய்ப்பு வழக்கு: செப்டம்பர் 21ல் கலாநிதிக்கு மீண்டும் 'சம்மன்' Posted: புதுடில்லி: வரி ஏய்ப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், அதன் முன்னாள் தலைவர் கலாநிதி மாறன், முன்னாள் நிர்வாக இயக்குனர் நடராஜன் ஆகியோருக்கு, டில்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட், மீண்டும், 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், 2013-14 மற்றும், 2014-15ம் நிதியாண்டுகளில், முறையே, 110.60 கோடி ரூபாய் மற்றும், 36.50 கோடி ரூபாய், மூல வரி பிடித்தம் செய்துள்ளது. ஆனால், நிர்ணயித்த காலத்திற்குள், அத்தொகையை, அரசுக்கு செலுத்த தவறியதாக, வருமான வரி துறை, வழக்கு தொடர்ந்துள்ளது.இது தொடர்பாக, ஜூலை, 21ல், டில்லி கூடுதல் தலைமை ... |
| இந்தியா - பாக்., பேச்சு நடைபெறுமா? Posted: புதுடில்லி: நாளை மறுநாள் டில்லியில், இந்தியா - பாக்., நாடுகளின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பு நடைபெறுவது சந்தேகமே என்ற நிலை உருவாகி உள்ளது. காஷ்மீரை பிரித்து, பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற கொள்கையை கொண்டுள்ள, ஜம்மு - காஷ்மீர் மாநில, ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவர்களை, டில்லியில் சந்திக்க, பாக்., விருப்பம் தெரிவித்து, அந்த முடிவில் உறுதியாக உள்ளதால், இந்த சந்திப்பு நடைபெறாது என, எதிர்பார்க்கப்படுகிறது.'ஹூரியத் மாநாட்டு கட்சியினரை, பாக்., தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் சந்திப்பது, முறையானதல்ல; அது, இரு நாடுகளுக்கும் இடையேயான ... |
| ராஜா, மனைவியிடம் விசாரிக்க சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு Posted: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அவரது மனைவி உட்பட, 17 பேரிடம் விசாரணை நடத்த, சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். |
| முன்ஜாமின் கிடைக்காததால் இளங்கோவன் 'எஸ்கேப்' Posted: சென்னை:காங்கிரஸ் அறக்கட்டளை யின், முன்னாள் ஊழியர் வளர்மதி கொடுத்த புகாரை தொடர்ந்து, தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், இளங்கோவன் நேற்று மாலை, டில்லி சென்றார். காங்கிரஸ் அறக்கட்டளையில் ஊழியராக பணியாற்றிய வளர்மதி என்பவர், சென்னை மாநகர போலீசில், இளங்கோவன் மற்றும் அறக்கட்டளை செயலர் நாராயணன் மீது புகார் கொடுத்தார். 'அறக்கட்டளை சொத்து மூலம் கிடைக்கும் வருமானத்தில், இளங்கோவனும், நாராயணனும் முறைகேடு செய்துள்ளனர். இது, எனக்கு தெரியும் என்பதால், என்னை உருட்டுக்கட்டையால், தாக்குவோம் என மிரட்டினர்' என்று, புகாரில் வளர்மதி ... |
| ரோட்டில் நடந்து செல்பவர்கள் கூட முதல்வர் வேட்பாளர்கள்: ஸ்டாலின் Posted: சென்னை: இன்று, ரோட்டில் நடந்து செல்பவர்கள் கூட, தன்னை, 'முதல்வர் வேட்பாளர்' என கூறி, வலம் வருகின்றனர். இதை எப்படி எடுத்துக் கொள்வது என, தெரியவில்லை என தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:தமிழகத்தில் நடக்கும், அ.தி.மு.க., ஆட்சிக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே, தலைமை செயலகத்துக்கு வருவதை வாடிக்கையாக்கி விட்டார், ஜெயலலிதா. இதனால், முக்கியமான கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை; எல்லாமே. கிடப்பில் கிடக்கின்றன.ஜெயலலிதா, தலைமை செயலகத்துக்கு வந்தால், அதை பத்திரிகையாளர்கள் செய்தி ... |
| வரும் 24ல் கூடும் சட்டசபையில் 18 நாட்கள் விவாதம் Posted: சென்னை: 'தமிழக சட்டசபையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 18 நாட்கள் நடைபெறும்' என, சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.தமிழக சட்டசபை, வரும், 24ல் கூடுகிறது. இந்தக் கூட்டத் தொடரை, எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய, சபாநாயகர் தனபால் தலைமையில், நேற்று அலுவல் ஆய்வுக் கூட்டம் நடந்தது.இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, தனபால் கூறியதாவது:வரும், 24ல் சட்டசபை கூடுகிறது; அன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் அமைச்சர் செந்துார் பாண்டியன், இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் ... |
| பெங்களூரு மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு ஓட்டு விற்பனை:இணையதள விளம்பரத்தில் டாக்டர் புதுமை Posted: கர்நாடகாவில் இன்று நடைபெறும் பெங்களூரு மாநகராட்சி தேர்தலில், 10 ஆயிரம் ரூபாய் பணம் தருபவருக்கு ஓட்டளிப்பதாக, டாக்டர் ஒருவர், இணையதளத்தில் புதுமையாக விளம்பரம் செய்துள்ளார். கர்நாடகாவில், காங்., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆட்சி நடக்கிறது. ஆனால், தலைநகரான பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், பா.ஜ., வசம் உள்ளது. மாநகராட்சி உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான, 'பிருகத் பெங்களூரு மகாநகர பாலிகே' எனப்படும், பி.பி.எம்.பி., தேர்தல் இன்று நடக்கிறது. காங்., மற்றும் பா.ஜ., ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 22,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |