Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தி.மு.க.,வில் மீண்டும் அழகிரி? ஸ்டாலினை சமரசப்படுத்த தீவிரம்

Posted:

தி.மு.க., தலைவர் கருணாநிதியையும், கட்சியின் பொருளாளர் ஸ்டாலினையும் சமரசப்படுத்தி, மீண்டும் கட்சியில் இணைய, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, சென்னையில் முகாமிட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டசபை தேர்தல் நெருக்கத்தில் இருப்பதால், தி.மு.க.,வில் மீண்டும் அழகிரியை சேர்க்க வேண்டும் என, கட்சியின் மூத்த தலைவர்கள், கருணாநிதியிடம் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அழகிரியை சேர்க்கக் கூடாது என்பதில், பொருளாளர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த, நீதிபதி ஒருவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க, அழகிரி ...

நான் சொன்னது வேறு: இளங்கோவன் 'பல்டி'

Posted:

சென்னை: ஜெ., - மோடி சந்திப்பு குறித்து, தான் வெளியிட்ட கருத்திலிருந்து, பின் வாங்குவது போல, இளங்கோவன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கூறிஉள்ளதாவது:

பிரதமர் மோடியும், முதல்வர் ஜெயலலிதாவும் சந்தித்து பேசியதில், பல பிரச்னைகளில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிற தமிழகத்திற்கு, எந்த நன்மையும் ஏற்படவில்லையே என்ற ஆதங்கத்தில், நான் ஆற்றிய உரையில் கூறப்பட்ட, என் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளன.
பா.ஜ.,விற்கும், அ.தி.மு.க., விற்கும் ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக, அக்கூட்டத்தில் தெரிவித்திருந்தேன். தமிழகத்தின் நலனை மனதில் கொள்ளாமல், ...

உ.பி.,யில் மற்றொரு தாஜ்மகால்!

Posted:

புலந்த்ஷார்: முகலாய பேரரசர் ஷாஜகான், தன் காதல் மனைவி மும்தாஜ் நினைவாக, உத்தர

பிரதேச மாநிலம், ஆக்ராவில், 1653ம் ஆண்டு, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை கட்டினார். அதே மாநிலத்தில், 362 ஆண்டுகளுக்கு பின், ஓய்வு பெற்ற, 'போஸ்ட் மாஸ்டர்', பைசுல் ஹசன் கதிரி, 80, தன் மனைவி, தஜாமுலி பேகம் நினைவாக, தாஜ்மகால் கட்டி வருகிறார்.
புற்றுநோய்
இவருக்கு, 1953ல் திருமணம் நடைபெற்றது; 58 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்த தம்பதியை, கொடிய தொண்டை புற்றுநோய் பிரித்தது; 2011ல், தஜாமுலி மறைந்தார். அவரை மறக்க முடியாத கதிரி, தங்களின் பூரண மணவாழ்க்கை நினைவாக, தன் கிராமத்தில், தாஜ்மகாலை கட்ட ...

பெரிய வெங்காயம் விலை நாசிக்கில் கிலோ ரூ.60 ஆக உயர்வு கிடைக்குமா?:வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் கடும் தட்டுப்பாடு

Posted:

விளைச்சல் குறைவால் நாடு முழுவதும் பெரிய வெங்காயம் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. மிகப்பெரிய வெங்காய கிடங்கு உள்ள மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பெரிய வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பால் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

நாட்டில் மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, கர்நாடகா, உ.பி., ஆந்திரா, தமிழ்நாடு, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது; ஆண்டுதோறும் 200 லட்சம் டன் உற்பத்தியாகிறது.வெங்காயத்தை சாதாரண பதப்படுத்தும் முறையில் ...

நெய்வேலி ஊழியர் பிரச்னையில் அமைச்சர்... தலையிட மாட்டார்:அ.தி.மு.க., குழுவிடம் மத்திய அரசு தகவல்

Posted:

'நெய்வேலி நிறுவன பிரச்னையில், நிர்வாகத்திற்கும் தொழிலாளர்கள் தரப்புக்கும் இடையே, மீண்டும் பேச்சு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என, மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மற்றபடி, இவ்விவகாரத்தில், அமைச்சர் நேரடியாக தலையிட மாட்டார்' என, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குழு தெரிவித்துள்ளது.புதிய ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ள வலியுறுத்தி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தொழிலாளர்கள், தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில், ஈடுபட்டுஉள்ளனர். இதனால், அங்கு மின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுஉள்ளது. எனவே, இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்று, அரசியல் கட்சிகள் ...

கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த சிஷெல்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம்

Posted:

புதுடில்லி:கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியப் பெருங்கடல் நாடுகளில் ஒன்றான சிஷெல்ஸ் உடன், ஒப்பந்தம் மேற்கொள்ள, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று கூடியது. அதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும், சிஷெல்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் கறுப்புப் பணம் வருவதை தடை செய்யவும், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, சந்தேகத்திற்கு இடமான பணப் ...

'இன்டர்போல்' வசம் லலித் மோடி ஆவணங்கள்

Posted:

புதுடில்லி:ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை நடத்திய, ஐ.பி.எல்., முன்னாள் கமிஷனர் லலித் மோடி மீது, சென்னை உட்பட இந்திய நகரங்களில் தொடரப்பட்டுள்ள வழக்கு விவரங்கள்தொடர்பான அனைத்து கோப்புகளையும், 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீஸ் அமைப்பிற்கு, சி.பி.ஐ., அனுப்பி வைத்துள்ளது.இதன் மூலம், லண்டனில் பதுங்கி வாழும் லலித் மோடியை கைது செய்ய ஏதுவாக, 'ரெட் கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை நடத்தியது தொடர்பாக நிதி முறைகேடுகளில் ஈடுபட்டார் என, சென்னை போலீசில், 2012ல் தொடரப்பட்ட வழக்கை, மத்திய ...

ராஜா, நண்பர்கள் வீடுகளில் 6.5 கிலோ நகைகள் 200 சொத்துகளின் ஆவணங்களும் சிக்கின

Posted:

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின், டில்லி வீடு மற்றும் வங்கி லாக்கரில், 3.5 கிலோ வைரம் பதித்த தங்க நகைகள்; நண்பர்கள் வீடுகளில், மூன்று கிலோ தங்க நகைகள், 200 சொத்து ஆவணங்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ரூ.28கோடி:தி.மு.க.,வின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா. '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி; தற்போது, ஜாமினில் உள்ளார். இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக அவர், 28 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, ராஜாவின் வீடுகள், சகோதரர் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில், நேற்று ...

மின்மயமாக்கல் திட்டத்தில் 302 கி.மீ., ரயில் பாதை:ரூ. 357 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கியது

Posted:

சேலம், நாமக்கல் வழியாக, திண்டுக்கல் மற்றும் ஈரோடு - திருச்சி வரையிலான, 302 கிலோ மீட்டர் தொலைவுக்கு, ரயில் பாதைகள் மின்மயமாக்கும் பணி, 357 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டது.சேலம் ரயில்வே கோட்டத்தில், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், உதகை உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன. இவற்றின் வழியாக, தினமும், 100க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. தினமும் ஒரு லட்சம் பயணிகள் வரை பயணிக்கின்றனர். ஆண்டு வருவாய், 611 கோடி ரூபாயை எட்டியுள்ளது.இந்நிலையில், டீஸல் சேமிப்பு காரணமாக, சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் பாதைகள் அனைத்தும், மின்மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ...

செல்ல பூனையின் 'கிட்னி'யை மாற்ற ரூ.20 லட்சம் செலவழித்த அமெரிக்க தம்பதி

Posted:

நியூயார்க்; வளர்ப்பு பூனைக்கு சீறுநீரக மாற்று சிகிச்சைக்காக அமெரிக்காவை சேர்ந்த தம்பதி ரூ.20 லட்சம் செலவழித்துளளனர்.
நியூயார்க் நகரை சேர்ந்த ஆன்ந்த்ரே கோன்சியர் தம்பதி, ஓகி என்று பெயரிடப்பட்ட செல்ல பூனையை 9 வருடங்களாக பாசத்துடன் வளர்த்து வந்தனர். பூனைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் ஓகியின் கிட்னி செயலிழந்தது தெரிய வந்தது. உடனே பூனையை பெனிசிலோவேனியா பல்கலை கால்நடை மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஓகியின் சிகிச்சைக்காக இந்திய மதிப்பில் ரூ.20 லட்சம் செலவாகும் என்று டாக்டர்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™