Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


வக்கிரங்களை தூண்டும் இணையதளங்களுக்கு தடை: ஏமாற்றம் அடைந்தவர்கள் வலைதளங்களில் கோபம்

Posted:

புதுடில்லி:நாட்டில் அதிக அளவில் நடைபெறும், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு அடிப்படை காரணங்களில் முக்கியமானதாகக் கருதப்படும், செக்ஸ் இணையதளங்களை, மத்திய அரசு நேற்று திடீரென தடை செய்தது. 'பலான' இணையதளங்களைப் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டவர்கள், இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்தனர்; தங்கள் கோபத்தை, சமூக வலைதளங்களில், கண்டனமாக பதிவு செய்து தீர்த்தனர்.

நேற்று முன்தினம், அதாவது சனிக்கிழமை நள்ளிரவில், தங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டர் அல்லது கையில் இருந்த மொபைல் போன்களில், செக்ஸ் இணையதளங்களை தொடர்பு கொண்டவர்களுக்கு, ...

நில மசோதா: காங்.,கிற்கு அருணாச்சல் அதிர்ச்சி வைத்தியம்

Posted:

புதுடில்லி:'நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, இப்போதைய நிலையில், நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம்' என, காங்., தலைவர் சோனியா அறிவித்து, அதன்படி, தன் கட்சியினரையும், கட்சி ஆளும் மாநில முதல்வர்களையும் ஒருங்கிணைத்து கொண்டு வரும் நிலையில், காங்., ஆளும், அருணாச்சல பிரதேச அரசு, '2013ல், காங்., ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நில மசோதா, ஒன்றுக்கும் உதவாதது' என, தெரிவித்து, கட்சி மேலிடத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

திருத்தங்கள்:
நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான தொழில் வளர்ச்சிக்கு, அடிப்படை அத்தியாவசியமாக விளங்கும் நிலத்தை, கையகப்படுத்த முடிவு ...

ஓட்டலில் ஜாலி: எம்.பி.,க்களுக்கு 'சூடு'

Posted:

புதுடில்லி: டில்லியில், அரசு சார்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டும், அதில் தங்காமல், பிரபலமான நட்சத்திர ஓட்டலில் தங்கிய எம்.பி.,க்களுக்கு, லோக்சபா செயலகம், 'பெப்பே' காட்டியுள்ளது. இவர்கள் அளித்த, 'பில்'லுக்கு ஒப்புதல் அளிக்காமல், லோக்சபா செயலகம் நிலுவையில் வைத்துள்ளது.

லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஒவ்வொருவருக்கும், டில்லியில் அரசு சார்பில் தனித்தனி வீடுகள் ஒதுக்கப்படுவது வழக்கம்.
வழக்கம்:
புதிய ஆட்சி அமைந்ததும், பழைய எம்.பி.,க்கள் வீடுகளை காலி செய்வதற்கு தாமதமாகும்; அதுவரை, புதிய எம்.பி.,க்கள் ஓட்டலில் தங்குவது ...

பாட புத்தகத்தில் சர்ச்சை சாமியார் படம்: ராஜஸ்தான் கல்வி துறையில் குளறுபடி

Posted:

ஜோத்பூர்:ராஜஸ்தானில், மூன்றாம் வகுப்பு பாட புத்தகத்தில், 'மிகச் சிறந்த துறவிகள்' என்ற பாடத்தில், பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் புகைப்படமும் இடம்பெற்றுஉள்ளது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வட மாநிலங்களில் பிரபலமான சாமியார் ஆசாராம் பாபு. இவரின் ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுமி, தன்னை, சாமியார், பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தார். இதையடுத்து, கடந்த செப்டம்பரில் இருந்து, சாமியார், சிறைவாசம் ...

யு.ஜி.சி.,க்கு மூடுவிழா? மத்திய அரசு முடிவு

Posted:

புதுடில்லி:பல்கலைக் கழக மானியக் குழு எனப்படும், யு.ஜி.சி.,யை கலைத்து விட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தி, நாட்டின் கல்லுாரிகள் மற்றும் உயர்கல்வி மையங்களை கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, கல்வி விவகாரங்களை கவனிக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையும், திட்டக் கமிஷனுக்கு மாற்றாக ஏற்படுத்தப்பட்டுள்ள, 'நிடி ஆயோக்' அமைப்பும், தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.ஊழல், முறைகேடு, வெளிப்படையான செயல்பாடு இன்மை போன்றவற்றால், யு.ஜி.சி.,யின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமாகி உள்ளன. அதை சீரமைக்க என்ன ...

'ஓபி' அடிக்கும் எம்.பி.,க்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய திட்டம்: மத்திய அமைச்சர் பேச்சால் எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

Posted:

புதுடில்லி: 'பார்லிமென்டுக்கு வந்து, வீண் அமளியில் ஈடுபட்டு, 'ஓபி' அடிக்கும், எம்.பி.,க்களின் சம்பளம் பிடிக்கப்படும்' என, மத்திய, சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா பேசியதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 'காங்கிரஸ் இது போன்ற திட்டத்தை அமல்படுத்த முற்பட்டபோது, பா.ஜ., எதிர்த்தது ஏன்?' என்றும் கேள்வி எழுப்பின.அமைச்சர் மகேஷ் சர்மா, நேற்று முன்தினம், உ.பி.,யின் வாரணாசி தொகுதிக்கு சென்றார். அங்கு நிருபர்களை சந்தித்த அவரிடம், பார்லிமென்டில் நடைபெற்று வரும் அமளி தொடர்பாக, கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ...

'சந்தேக பேய்' விரட்டும் பெண் போலீஸ் குடும்பங்கள்

Posted:

சேலம்: சந்தேக பேய் விரட்டுவதால், தமிழக காவல் துறையில், கான்ஸ்டபிள் முதல், இன்ஸ்பெக்டர் வரையிலான, பெண் போலீசாரின் வாழ்க்கை, கடும் நெருக்கடி சூழலிலேயே அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தில், 1.30 லட்சம் போலீசார் உள்ளனர். இவர்களில், 40 சதவீதம் பேர் பெண்கள். கடந்த, 1991ல், அ.தி.மு.க., ஆட்சியில், மகளிர் காவல் நிலையங்கள் உதயமாகின. அன்று முதல், போலீசில் பணிபுரிய பலரும் ஆர்வம் காட்டினர். அப்போது, திறமை அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இப்போது, தேர்வு எழுதி, வெற்றி பெற்றால், பணி உயர்வு வழங்கப்படுகிறது. சாதாரண உடையில் இருப்பதை காட்டிலும், போலீஸ் உடையில் ...

குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி

Posted:

தஞ்சாவூர்: தஞ்சையில் நேற்று, குடிபோதையில் இளம்பெண் ஒருவர், சாலையில் ரகளையில் ஈடுபட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், 18 வயது குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்ற விதிமுறை உள்ள போதிலும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.

'டார்லிங்...':
சமீபத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில், 4 வயது சிறுவனுக்கு, அவனது உறவினரே மது ஊற்றிக் கொடுத்த சம்பவம் நடந்தது. அதேபோல், கோவை பள்ளி மாணவி ஒருவர், காதல் தோல்வியால், மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவமும் ...

தி.மு.க.,வுக்கு எதிர்காலம் இல்லையா? சட்டசபை தேர்தல் பதில் சொல்லும்: கருணாநிதி ஆவேசம்!

Posted:

சென்னை: ''தி.மு.க.,வுக்கு எதிர்காலம் இல்லை, என கூறுபவர்களுக்கு, சட்டசபைத் தேர்தல் பதில் சொல்லும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான, 'இனமானப் பேராசிரியர் - வாழ்வும் தொண்டும்' என்ற புத்தகத்தை, சனகன் எழுத, மங்கள முருகேசன் தொகுத்துள்ளார்.இந்த புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. முதல் பிரதியை, தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட, பொருளாளர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.விழாவில், ஸ்டாலின் பேசுகையில், ''அன்பழகன், தன் சுயசரிதையை எழுத வேண்டும்; அது, இளைஞர்களுக்கு ...

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு: அரசு மீது விஜயகாந்த் நம்பிக்கை

Posted:

இடைப்பாடி: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு கொண்டு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என சேலத்தில் விஜயகாந்த் தெரிவித்தார்.மதுவிலக்கு போராட்டத்தில் உயிர் இழந்த சசிபெருமாள் குடும்பத்தினருக்கு தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்த் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.அங்கு விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளேன். சசிபெருமாளின் குடும்பத்தினருக்கு, தே.மு.தி.க., எப்போதும் ஆதரவாக இருக்கும். அப்துல்கலாம் பிறந்தநாளை மாணவர் தினமாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை ...

2 இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி

Posted:

புதுடில்லி:மத்திய அரசு எடுத்து வரும் தீவிர முயற்சியால், லிபியாவில் கடத்தப்பட்ட இரு இந்தியர்கள் விரைவில் மீட்கப்படுவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வட ஆப்ரிக்க நாடானலிபியாவில், சிர்டி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த நான்கு இந்தியர்கள், துனிஷியா தலைநகர் துனிஸ் வழியாக இந்தியா திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களை ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மடக்கி, கடத்திச் சென்றனர்.இத்தகவல் வெளியானதையடுத்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சியால், கர்நாடகாவை சேர்ந்த, லட்சுமிகாந்த், விஜயகுமார் ஆகியோர், கடந்த வெள்ளியன்று விடுவிக்கப்பட்டனர். அவர்கள், நேற்று ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™