Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மழை வேண்டி யாகம்: ஆந்திர அரசு உத்தரவு

Posted:

ஐதராபாத்: திருமலையில், அதிக மழை பெய்ய வேண்டி, சிறப்பு யாகம் நடத்தும்படி, திருப்பதி தேவஸ்தானத்துக்கு, ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபகாலமாக பருவமழை பொய்த்து வருகிறது. நெல்லுார், கடப்பா, ராயலசீமா, கர்னுால் ஆகிய மாவட்டங்கள், போதிய மழை இல்லாததால் வறண்டு போயுள்ளன. இந்நிலையில், அதிக மழை பெய்ய வேண்டி, சிறப்பு யாகம் நடத்தும்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் ...

இயக்குனரை தாக்கிய ஐந்து மாணவர்கள் கைது: பிரதமர் மோடிக்கு ராகுல் கண்டனம்

Posted:

புனே: மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள எப்.டி.ஐ.ஐ., எனப்படும், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி மையத்தின் ஐந்து மாணவர்களை, வன்முறையில் ஈடுபட்டதாக கூறி, போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், பேச முடியாமல் செய்; சஸ்பெண்ட் செய்; கைது செய்: இனிய நாள் உருவாக, இதுவே, பிரதமர் நரேந்திர மோடியின் தாரக மந்திரம் என கருதுவதாக கூறியுள்ளார்.

எப்.டி.ஐ.ஐ., தலைவராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, 'டிவி' நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதை கண்டித்து, எப்.டி.ஐ.ஐ., மாணவர்கள், 69 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ...

மீண்டும் மீண்டும் பாக்., லொள்ளு!

Posted:

ஸ்ரீநகர்: இந்தியாவின் முந்தைய எதிர்ப்புகளை கண்டுகொள்ளாமல், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்திக்குமாறு, காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு, டில்லியில் உள்ள பாகிஸ்தான் ஐ - கமிஷன் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

நல்லுறவு:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியான காஷ்மீரை, பாகிஸ்தான் வசம் ஒப்படைத்து விட்டால், காஷ்மீர் பிரச்னை தீர்ந்து விடும் என்ற எண்ணம் கொண்ட, ஜம்மு - காஷ்மீரில் செயல்படும் ஹுரியத் மாநாட்டு கட்சிகளுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் நல்லுறவுநிலவுகிறது. பாகிஸ்தான் பிரதமர் அல்லது அந்நாட்டு அமைச்சர்கள், ...

ஒரு பெண்ணை 4 பேர் எப்படி கற்பழிப்பாங்க?

Posted:

லக்னோ: ''நான்கு பேர் சேர்ந்து, ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வது நடக்கக் கூடிய காரியமல்ல,'' என, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் கூறினார்.

உ.பி.,யில், முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். அம்மாநில சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து, மாநில தலைநகர் லக்னோவில், நேற்று நிருபர்களை
சந்தித்த முலாயம் சிங் கூறியதாவது:உ.பி., மக்கள் தொகையை கணக்கில் கொண்டால், நடைபெறும் குற்றங்கள் மிகக் குறைவு தான். ஒருவன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால், நான்கைந்து பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விடுகிறது. ...

இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு: கருணாநிதி நம்பிக்கை!

Posted:

சென்னை: 'இலங்கை தமிழர்களுக்கு சம உரிமைகளுடன் நல்வாழ்வு கிடைக்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:இலங்கை பார்லிமென்ட் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி, 45.7 சதவீத ஓட்டுகளைப் பெற்று, 93 இடங்களிலும்; ராஜபக் ஷேயின் இலங்கை சுதந்திர கட்சி கூட்டணி, 42.4 சதவீத ஓட்டுகளைப் பெற்று, 83 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தமிழ் தேசிய கூட்டணி, 14 இடங்களில் வெற்றி பெற்று, இலங்கையில், மூன்றாவது பெரும் கட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருப்பது முக்கியமான திருப்பம். ரணில் விக்ரமசிங்கே, இலங்கைப் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்க இருக்கிறார்; அவருக்கு ...

மதுவிலக்கை திசை திருப்பும் அ.தி.மு.க.,: விஜயகாந்த் புகார்

Posted:

சென்னை: 'மதுவிலக்கு பிரச்னையை, மக்களிடம் இருந்து திசை திருப்பவே, இளங்கோவன் பிரச்னையை அ.தி.மு.க.,வினர் கையில் எடுத்துள்ளனர்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியிருக்கிறார்.
அவரது அறிக்கை:கடந்த, இரண்டு நாட்களாக அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டு வன்முறை வெறியாட்டங்களை நடத்துகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு இடையூறுகளும், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக சென்னையில், போக்குவரத்து ஸ்தம்பித்து போனது.ஜனநாயக நாட்டில் கருத்துரிமையும், பேச்சுரிமையும் அனைவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும், நடக்கும் ...

பெண் புகார் : இளங்கோவன் கைதாவாரா?

Posted:

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, காங்., அலுவலக முன்னாள் பெண் ஊழியர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இளங்கோவன் கைதாக வாய்ப்பு இருப்பதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜெயலலிதா - மோடி சந்திப்பு குறித்து, இளங்கோவன் கூறிய கருத்து, அ.தி.மு.க.,வினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநிலம் முழுவதும், அவரது உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில், அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இளங்கோவன் மீது, காங்கிரஸ் அலுவலக முன்னாள் பெண் ஊழியர் வளர்மதி, ...

பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1: பெருநகரங்களில் சென்னை அசத்தல்

Posted:

புதுடில்லி: நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில், பெரிய மாநிலங்கள் வரிசையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிரான, பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் நகரங்களில், சென்னை, மிகக்குறைவான குற்ற எண்ணிக்கையுடன் அசத்தி உள்ளது; தலைநகர் டில்லி, இதில் முதலிடத்தை பெற்றுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை, வீடுகளில் பெண்களுக்கு அடி, உதை என, காலங்காலமாக, பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதுதொடர்பாக, என்.சி.ஆர்.பி., எனப்படும், தேசிய குற்ற ஆவணக்குழு, ஆய்வு மேற்கொண்டு, கடந்த 2014ல், பாதுகாப்பான 10 மாநிலங்கள் பட்டியலை ...

தி.மு.க., 'மாஜி' ராஜா மீது சொத்து குவிப்பு வழக்கு: நாடு முழுவதும் 20 இடங்களில் சி.பி.ஐ., சோதனை

Posted:

தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அவரது மனைவி உட்பட, 17 பேர் மீது, வருமானத்துக்கு அதிகமாக, 27.92 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக, சி.பி.ஐ., புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, நாடு முழுவதும், 20 இடங்களில் நேற்று சோதனை நடந்தது.

கடந்த, 2008ல், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, '2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு உரிமம் வழங்கியதில், 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை அளித்தது. இதையடுத்து, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரித்தது; மத்திய தொலைத்தொடர்பு ...

கடலோர பாதுகாப்புக்கு நீச்சல் தெரியாத போலீஸ்

Posted:

மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில், கடற்கரை பாதுகாப்பு போலீஸ் பிரிவில், 450 போலீசார் உள்ளனர். இவர்களில், 230 பேருக்கு நீச்சல் தெரியாது என்ற தகவல், மாநில தணிக்கை ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மும்பை கடற்கரை பகுதிகளில், ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், சம்பவ இடத்துக்கு உடனே விரைந்து சென்று, நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, கடற்கரை பாதுகாப்பு பிரிவு போலீசுக்கு உள்ளது. எனவே, இப்பிரிவில் உள்ள அனைத்து போலீசாருக்கும் நீச்சல் தெரிந்திருக்க வேண்டுமென, மாநில அரசு சுற்றோலை அனுப்பி உள்ளது. இதையடுத்து, கடற்படை பாதுகாப்பு பிரிவு போலீசாருக்கு, நீச்சல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™