ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எனது கதைகள் --
- 'மார்ஷ்மெல்லோ' – புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளப் பதிப்பு வெளியீடு!!
- இன்று ஆக. 19. கருட ஜெயந்தி - கருட பஞ்சமி
- டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
- 2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.1,50,000 லாபம்! குதூகல வருமானம் கொடுக்கும் கொய்யா! (பசுமை விகடன்)
- கடல்
- ஜீவாலையில் தீபங்கள்
- ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா
- புதிய உறுப்பினர்
- 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'- ஜெ.வை நையாண்டி செய்யும் விஜயகாந்த்!
- புரியாத புதிர்
- மூளைக்குணவு
- உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !
- தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்
- புதுக்கவிதை.
| Posted: 19 Aug 2015 03:20 PM PDT ஓட்டைப் படகு. ============ காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று ... |
| 'மார்ஷ்மெல்லோ' – புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளப் பதிப்பு வெளியீடு!! Posted: 19 Aug 2015 01:26 PM PDT ஆண்ட்ராய்டு இயங்குதளப் பதிப்புகளுக்கு லாலிபாப் (5.0 – 5.1), கிட்கேட் (4.4), ஜெல்லி பீன் (4.1 – 4.3), ஐஸ் க்ரீம் சான்ட்விச் (4.0) என்று இனிப்பு வகைகளாகப் பெயரிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் லேட்டஸ்ட் வெர்சன் ஆண்ட்ராய்டு M (6.0)க்கு MARSHMALLOW என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த புதிய இயங்குதளத்திற்கு MANGO LASSI, MOON PIE, MILK SHAKE உள்ளிட்ட பல பெயர்கள் பரிசீலனையில் இருந்து வந்தன. இந்நிலையில் நேற்று ஆண்ட்ராய்டு பொறியியல் துறை துணைத் தலைவர் டேவ் பர்க் (DAVE ... |
| இன்று ஆக. 19. கருட ஜெயந்தி - கருட பஞ்சமி Posted: 19 Aug 2015 01:25 PM PDT இன்று ஆக. 19. கருட ஜெயந்தி. இந்த நல்ல நாளில் கருடாழ்வாரை வழிபட்டால் பல்வேறு புண்ணியங்கள் கிடைக்கும். தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. ஆவணி மாத சுக்ல பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் கருட அவதாரம். இதுவே கருட பஞ்சமி எனப்படுகிறது. நட்சத்திரங் களில் சுவாதி நட்சசத்திரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. சூரியன் துலா ராசியில் சஞ்சாரம் செய்யும்போது சுவாதி நட்சத்திர நாளில்தான் கடலில் சிப்பிக்குள் முத்து உருவாகும். நரசிம்மர் ... |
| டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo Posted: 19 Aug 2015 01:03 PM PDT இந்த திரி இல் நாம் சில டிபன்களை பார்க்கலாம். வழக்கமாகச செய்யும் இட்லி தோசை அடை போன்றவை களும் இதில் வரும் புதிதாக சிலவும் வரும். தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே ! |
| 2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.1,50,000 லாபம்! குதூகல வருமானம் கொடுக்கும் கொய்யா! (பசுமை விகடன்) Posted: 19 Aug 2015 12:40 PM PDT பசுமை விகடனிலிருந்து..... ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த தட்பவெப்ப நிலையில், பருவத்துக்கேற்ப விளையும் காய்கறிகள், பழங்கள்தான் அந்த மண்ணில் வசிப்பவர்களுக்கு ஏற்றவை' என்று சூழலியலாளர்களும், இயற்கை மருத்துவர்களும் பல்லாண்டு காலமாகச் சொல்லி வந்தாலும்... வெளிநாடுகளிலிருந்து 'பளபள'வென இருக்கும் பழங்களை வாங்கி உண்ணப் பழகிவிட்ட நகர மக்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உள்ளூர் பழங்களை உதாசீனம் செய்வதுதான் நிதர்சனம். அப்படி நகர மக்களால் ஒதுக்கப்பட்டு வரும் பழங்களில் ஒன்று கொய்யா. ஆனால், கொய்யாவில் வைட்டமின்-சி ... |
| Posted: 19 Aug 2015 12:36 PM PDT கடல் அலையே நீ சலனத்துடன் சல சலத்து வந்தாலும் நான் எத்தனை முறை சலனமில்லாமல் அமர்திருக்கிறேன்!! உனக்கும் எனக்கும் நெருக்கம் அதிகம் கோவத்தோடு வந்தாலும் குளிர்விப்பாயே!! அலை அலையாக துன்பங்கள் வந்தாலும் வந்த சுவடு தெரியாமல் வாழவும் வாழ்க்கை ஒன்றும் இல்லை என்பதை என் கால்களை தழுவிசெல்லும் போது சூசகமாக உணர்த்தி செல்வாயே!! எத்தனை காதல்கள் உன்னில் தொடங்கி உன்னில் முடிகிறது!! சரி உனக்கும் காதல் தோல்வியோ இத்தனை உப்பாய் இருக்கிறாய்??! |
| Posted: 19 Aug 2015 12:30 PM PDT உரைந்த இரத்தம் கொண்டு தோல் சட்டை போர்த்திய குருதிக்குமிழ் பொங்கும் குருதிமுகில் தேசமடா ! இது அனல் குடிக்கும் பூக்களின் தண்ணீர் தாகமடா ! சிதையும் சதையெல்லாம் நீ செதுக்கும் சிலையன்றோ! ஈழமே. துயில் சூடா விழிகளிலே துயர் சூடிய வெறுமையிலே கண்ணீர் விழியோடு வழிதேடி - திசையறியாக் காற்றைப்போல் ! உறவுகள் துறந்தோம் , உயிரையும் பிரிந்தோம் , தாய்மண்ணே உனைப்பிரிந்து அகதிகளாய் அலைகின்றோம்! |
| ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா Posted: 19 Aug 2015 12:28 PM PDT அன்பான நண்பர்களே... டி எம் எஸ் அவர்களும்...பி சுசிலா அவர்களும் பாடிய ஒரு பாடல் அவ்வளவு இனிமை ,எந்த திரைப்படம் என்று தேயவில்லை அந்த ஒரு பாடலே போதும் அந்த திரையில் வந்த மற்றைய பாடல்களும் இது போன்று இனிமையாக இருக்குமென்று .... ராயா ஓ ராயா .. பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ... இப்படி ஆரம்பிக்கும்.. மிக இனிமை.. நண்பர்களே ,இந்த பாடல் எந்த திரையில் இடம் பெற்றது ,இந்த திரைப்படத்தில் வேறு பாடல்கள் இருக்குமாயின் தயை கூர்ந்து தந்து உதவுங்கள் ..அருமையான பாடல் |
| Posted: 19 Aug 2015 12:26 PM PDT பெயர்: விஜி சொந்த ஊர்: பொள்ளாச்சி ஆண்/பெண்: பெண் ஈகரையை அறிந்த விதம்: தோழி மூலம் பொழுதுபோக்கு: இசை, புத்தகம் தொழில்: இல்லத்தரசி மேலும் என்னைப் பற்றி: நிறைய புத்தகங்கள் வாசிக்க நான் கொண்ட ஆர்வம் என்னை இங்கு கொண்டு வந்த து சேர்த்தது |
| 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'- ஜெ.வை நையாண்டி செய்யும் விஜயகாந்த்! Posted: 19 Aug 2015 12:22 PM PDT சென்னை: தனிமனித தாக்குதல் என்று வியாக்கியானம் பேசும் ஜெயலலிதா, பிறரை இழித்தும், பழித்தும் பேசுவது மட்டும் நியாயமா? என கேள்வி எழுப்பியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் நியாயம்? என்றும், இதைதான் "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பார்கள் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவினரின் வன்முறை வெறியாட்டங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. அதனால் பொதுமக்களுக்கு பல்வேறு ... |
| Posted: 19 Aug 2015 12:17 PM PDT கணவன் கண்ணே என்பான் பிறகு காலால் எட்டி உதைப்பான்!! முத்தே என்பான் முடிந்ததும் மூக்குடைப்பான்!! அமுதே என்பான் கன்னத்தில் அறைந்து போவான்!! காவியமே என்பான் கண்ணில் கண்ணீர் வரவைப்பான்!! ஓவியமே என்பான் பிறகு ஒழுக்கம் கெட்டவளே என்றழைப்பான்!! இப்பொழுது புரிகிறதா புரியாத புதிர் ஆணா?? பெண்ணா?? பெண் ஒன்றும் புரியாத புதிர் அல்ல! பெண்ணின் புதிர்களை அவிழ்க்க எந்த ஆணும் முயற்சிப்பதில்லை!! |
| Posted: 19 Aug 2015 12:13 PM PDT ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு ! Posted: 19 Aug 2015 12:11 PM PDT எங்கே அவர்கள் உட்கார்ந்துள்ளார்கள் ? டாம், ஆல்ப், பிரெட், பில் மற்றும் ஜிம் ஒரு சுற்று மேஜையில் அமர்ந்திருந்தார்கள். ஆல்ப் பிரெட் உடைய இடது பக்கத்தில் உட்கார்ந்தார்; டாம் ஜிம் உடைய வலது பக்கத்தில் அமர்ந்தார்; பில் ஆல்ப் உடைய இடது பக்கம் அமர்ந்திருந்தார். ஆல்ப் 'A' இடத்தில் இருந்தால், மற்றவர்கள் எங்கே உள்ளார்கள்? |
| Posted: 18 Aug 2015 07:39 PM PDT தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் ரமணி இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம். 01. Pantoum: பாண்டி Pantoum - Wikipedia, the free encyclopedia இந்த வடிவத்தைத் தமிழில் 'பாண்டி' என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் தம் 'சந்தவசந்தம்' மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w இந்த pantoum--'பாண்டி' வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்: Stanza ... |
| Posted: 18 Aug 2015 06:19 PM PDT நினைப்பு….!! * நினைப்பதற்கு ஏதுமில்லையென்று நிம்மதியாயிருக்கவே நினைக்கத் தோன்றவில்லை நினைப்புகள் மெல்ல மெல்ல அரும்பிக் கொண்டேயிருக்கின்றன. அது எப்பொழுதும் ஒரே நினைப்பாக நினைவுக்கு வருவதில்லை அடுக்கடுக்கான மடிப்புகளாய் அலையலையாய் நிமிடந்தோறும் வந்துக் கொண்டேயிருக்கின்றன யாரேனுமொருவர் நினைவுப்படுத்தி சுடராய் தூண்டிவிடுகின்றார்கள் புதிய புதிய தகவல்களோடும் பிர்ச்சினைகளோடும் தாவித் தாவி நினைவுகளாய் மலர்கின்றன எப்பொழுதும் நினைவடுக்குச் சேமிப்பு மையத்தில் சேகரிக்கப்பட்டவைகள் வெளியாகி நினைவுப்படுத்தி ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |