Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இளங்கோவனுக்கு எதிரான போராட்டத்தால் அ.தி.மு.க.,வில் உற்சாகம்: மதுவிலக்கு பிரச்னை திசை திரும்புவதால் மேலிடமும் மவுனம்

Posted:

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு எதிரான போராட்டத்தால், பல்வேறு பிரச்னைகளால் சோர்ந்து கிடந்த, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு, உற்சாகம் ஏற்பட்டு உள்ளது. அத்துடன், இந்தப் போராட்டத்தால், மதுவிலக்கு பிரச்னை திசை திரும்பி உள்ளதால், கட்சி மேலிடமும் மவுனம் காத்து வருகிறது. கடந்த சில நாட்களாக, மதுவிலக்கை அமல்படுத்த கோரி, அனைத்து எதிர்க்கட்சிகளும், போராட்டத்தில் குதித்தன. அ.தி.மு.க., தரப்பில், இது தொடர்பாக, எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இது, அ.தி.மு.க., தொண்டர்களிடம், சோர்வை ஏற்படுத்தி இருந்தது.

மாநிலம் முழுவதும்...:
இந்நிலையில், பிரதமர் ...

தேர்தலை சந்திக்க உள்ள பீகாருக்கு தாராள நிதியுதவி: ரூ.1.25 லட்சம் கோடியை அறிவித்தார் பிரதமர் மோடி

Posted:

ஆரா:இன்னும் ஒருசில மாதங்களில், சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள பீகார் மாநிலத்திற்கு, 1.25 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு நிதியுதவி அளிப்பதாக, பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். ஆரா என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற,மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்முன்னிலையில், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை, பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.பீகாரில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். இம்மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், கட்சிகளுக்குள் தேர்தல் கூட்டணி, ...

டில்லியில் தமிழ்நாடு இல்லத்தில் சுருட்டப்பட்ட கோடிகள்!

Posted:

டில்லி தமிழ்நாடு இல்லத்தில், அரசுக்கு வரவேண்டிய லட்சக்கணக்கான பணத்தை, பல ஆண்டுகளாக கையாடல் செய்த சம்பவம், பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சாதாரண ஊழியரை பலிகடா ஆக்கிவிட்டு, அனைத்து விஷயங்களையும் மூடிமறைக்கும் முயற்சிகள், அரங்கேறுவதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.இதுகுறித்து தகவலறிந்த டில்லி வட்டாரங்கள் கூறியதாவது:பல்வேறு அலுவல்களுக்காக, தமிழகத்திலிருந்து டில்லி வருகின்றவருக்கு, அரசு சார்பிலான தங்கும் வசதியை, தமிழ்நாடு இல்லம் ஏற்படுத்தி தருகிறது. இங்கு தங்கவேண்டுமெனில், சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள, ...

கள்ளத்தொடர்பு தப்பில்லை: கோர்ட் அதிரடி

Posted:

புதுடில்லி: 'கள்ளக்காதலில் ஈடுபடுவது, நேர்மையற்ற பழக்கமே தவிர, தண்டனைக்குரிய குற்றமில்லை' என, டில்லி கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2010ல், காதலித்த நபர் ஒருவரை, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், அந்த ஆணுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.இதை தட்டிக் கேட்ட மனைவியை, அவன் அடித்து துன்புறுத்தி உள்ளான். இதனால், மனவேதனை அடைந்த மனைவி, திருமணமாகி, ஓர் ஆண்டு நிறைவடைவதற்குள், தற்கொலை செய்து கொண்டார்.இறந்த பெண்ணின் சகோதரர், டில்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில், அவளின் ...

கட்சி அலுவலகம் தாக்குதல்: அ.தி.மு.க.,வுக்கு கண்டனம்

Posted:

தி.மு.க., தலைவர் கருணாநிதி: அனைத்துக் கட்சித் தலைவர்களும், ஊடகங்களும் விமர்சனம் செய்ததைப் போல, தமிழ்நாடு காங்., தலைவர் இளங்கோவனும், மோடி - ஜெயலலிதா, சந்திப்பு குறித்து, தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். இதற்காக, ஆளுங்கட்சியினர், சத்தியமூர்த்தி பவனிற்கும், இளங்கோவன் வீட்டுக்கும் சென்று, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு: இளங்கோவன் தவறாக பேச வாய்ப்பில்லை; அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை பற்றி, அவர் தன் கருத்தை தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., ஆட்சியின் ஊழலை எதிர்த்து அவர், போராடி வருகிறார். அவர் நடத்தும் ...

மருந்தும் இல்லை; மருத்துவரும் இல்லை : அரசு மீது விஜயகாந்த் குற்றச்சாட்டு

Posted:

சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என, முதல்வர் ஜெயலலிதா சொல்கிறார்; அது, அ.தி.மு.க.,வினரை மட்டுமே, உள்ளடக்கிய வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.ஏழரை கோடி மக்கள் வசிக்கும் தமிழகத்தில், ஏழு பேருக்கு உதவிகளை வழங்கிவிட்டு, அனைவருக்கும் வழங்கியது போல காட்டும், முதல்வரை தான் தமிழகம் பெற்றிருக்கிறது. அரசின் இலவச கல்வி தரம் இல்லாததால், அதை கற்பவர்கள், உயர்கல்விக்கு செல்ல முடியாத நிலையும், அதனால், பல கல்லுாரிகள் மூடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் ...

ராஜபக் ஷே தோல்வி; பிரதமராகிறார் ரணில்

Posted:

கொழும்பு: ஜனவரியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபக் ஷே, 69, பிரதமராகி விட வேண்டும் என மேற்கொண்ட முயற்சிகள், தோல்வி அடைந்து உள்ளன. நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தல் முடிவின் படி, இப்போதைய பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, 66, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இலங்கை பார்லிமென்டின், 225 இடங்களுக்கு, நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில், 70 சதவீத ஓட்டுகள், அதாவது, 51 லட்சம் ஓட்டுகள் பதிவான நிலையில், ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினமே துவங்கியது.முடிவுகள், நேற்று அறிவிக்கப்பட்டன. இப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான, யு.என்.பி., ...

'தல' தோனிக்கு 'மவுசு' குறையல: ரூ.140 கோடி சம்பாதிக்கிறார்

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், உலகக் கோப்பை நாயகனுமான, மகேந்திர சிங் தோனி, தனியார் நிறுவன விளம்பரங்களில் நடிப்பதின் மூலம், ஆண்டுக்கு, 140 கோடி ரூபாய் சம்பாதித்து, சக வீரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தன் அசாத்தியமான பேட்டிங் திறமையாலும், கேப்டன் பொறுப்பை கூலாக நிர்வகித்தும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், மற்றும் 20 - 20 கிரிக்கெட் போட்டிகளில், இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்று தந்தார். இதனால், பல தனியார் நிறுவனங்கள், தங்கள் நிறுவன தயாரிப்புகள் குறித்த விளம்பரங்களில், தோனியை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்கின்றன. தொடர்ந்து, பல விளம்பர ...

கொழும்புக்கு போட்டியாக குளச்சல் உருவாகுமா?

Posted:

சர்வதேச அளவில், கொழும்பு துறைமுகத்திற்கு போட்டியாக, குளச்சல் துறைமுகத்தை உருவாக்க, மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், மாநில அரசு போக்கு காட்டி வருவதோடு, மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழகத்தின் பழமையான இயற்கை துறைமுகமாக, குமரி மாவட்டத்தில் உள்ள, குளச்சல் துறைமுகம் உள்ளது. நீண்ட காலமாகவே, இந்தத் துறைமுகம் முக்கியத்துவம் இழந்து காணப்படுகிறது. சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு மிகவும் உகந்ததாகவும், குமரியை, நாட்டின் முதல்நிலை மாவட்டமாக மாற்றவும், குளச்சல் துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மாற்றவும், மத்திய அரசு ...

பத்தில் ஒரு பங்காக குறைந்து போன பப்ளிக் போன் பூத்கள்

Posted:

புதுடில்லி: முன்பெல்லாம் தெருவுக்கு பத்துக்கும் அதிகமாக இருந்த பி.சி.ஓகள், இன்று மறைந்து வருகின்றன. இதற்கு எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகிவிட்ட மொபைல் போன்கள் தான் காரணம்.இந்தியாவில் 90 கோடிக்கும் மேலான மொபைல் போன்கள் தற்போது புழக்கத்தி்ல் உள்ளன. செல்போன்கள் தவிர வீட்டுக்கு வீடு மின்னஞ்சல், இன்டர்நெட் சாட்டிங் போன்றவற்றின் வருகையாலும் மக்கள் பப்ளிக் போன் பூத்களை பயன்படுத்துவது வெகுவாக குறைந்தது. 90களின் மத்தியில் பப்ளிக் போன்கள் தான் மக்கள் மத்தியில் பரவலாக புழக்கத்தில் இருந்தன. ஒவ்வொரு ஆண்டும் அவற்றின் எண்ணி்க்கையும் கணிசமாக ...

15 மாதத்தில் 25 நாடுகள்: மோடி பயணம்

Posted:

புதுடில்லி: பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, 15 மாத ஆட்சியில் இதுவரை 25 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளார். 2014-ம் ஆண்டு நடந்த பார்லி. லோக்சபா தேர்தலில் பா.ஜ. வெற்றி பெற்றது. பிரதமராக நரேந்திர மோடி 2014, மே மாதம் பதவியேற்றார். இம்மாதத்துடன் (ஆகஸ்ட்) மோடி பிரதமராக பதவியேற்று 15 மாதங்கள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில் அவர் பயணம் செய்த நாடுகள்:*2014 (ஜுன் 15-16)- பூட்டான்*2014 (ஜுலை 14-16) பிரேசில் (பிரிக்ஸ் மாநாடு)*2014 ( அக். 3-4) நேபாளம்*2014 ( அக். 30 , செப்.3 ) ஜப்பான்*2014 ( செப். 26-30 ) அமெரிக்கா*2014 ( நவ. 11-13) மியான்மர்*2014 ( நவ. 13-14) ஆஸ்திரேலியா*2014 ( நவ. 9) பிஜூ*2014 ( நவ. 25-27) நேபாளம் (சார்க் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™