Tamil News | Online Tamil News |
- பாக்., பயங்கரவாதியிடம் உண்மை கண்டறியும் சோதனை
- சட்டசபை தேர்தலுக்கு தயாராகுது அ.தி.மு.க.,
- மத்திய அரசின் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நிம்மதி : மனைவி, குழந்தை சொத்து கணக்கு தேவையில்லை
- ஊழலை அம்பலப்படுத்திய அதிகாரி உத்தரகண்டுக்கு மாற்றம்
- ரூ.100 கோடி 'அவுட்டா?' மின் ஊழியர்கள் அதிருப்தி!
- காந்தியை பின்பற்றிய பின்லேடன்!
- ஆம்பூர் கலவரத்தில் சேதமான பொது சொத்துகளுக்கு நஷ்ட ஈடு வசூல்: மதிப்பீடு முடிந்ததும் நடவடிக்கை: ஐகோர்ட்டில் அரசு தகவல்
- விஜயகாந்த் வழக்கில் ஜெ.,வுக்கு 'நோட்டீஸ்'
- நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் மன்மோகனும் குற்றவாளி தான்: கோர்ட்டில் மது கோடா மனு
- குட்டி இந்தியாவை துபாயில் காண்கிறேன்: 50 ஆயிரம் இந்தியர் மத்தியில் மோடி பெருமிதம்
| பாக்., பயங்கரவாதியிடம் உண்மை கண்டறியும் சோதனை Posted: புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் சிக்கிய பாகிஸ்தான் பயங்கரவாதி உஸ்மான் கானிடம், உண்மை கண்டறியும் சோதனை இன்று நடைபெறுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன், உதம்பூரில், எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி, இரண்டு வீரர்களை கொன்று, அப்பாவி பொதுமக்களை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த பயங்கரவாதி உஸ்மான் கானை, உள்ளூர் மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.உஸ்மான் கான், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டான். விசாரணையில், தன் வயதை 16 என்றும், 20 என்றும் மாற்றி மாற்றி கூறிய அந்த பயங்கரவாதி, ... |
| சட்டசபை தேர்தலுக்கு தயாராகுது அ.தி.மு.க., Posted: சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., முழு வீச்சில் தயாராகி வருவது, எதிர்க்கட்சியினரிடம் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., ஆட்சி, அடுத்த ஆண்டு, மே மாதம் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக, சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், அ.தி.மு.க., தேர்தல் பணிகளை துவக்கி விட்டது. கடந்த சில வாரங்களாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி, இலக்கிய அணி என, ஒவ்வொரு அணியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்தில், அ.தி.மு.க., அரசின் சாதனைகளை, துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு, மக்களுக்கு ... |
| மத்திய அரசின் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நிம்மதி : மனைவி, குழந்தை சொத்து கணக்கு தேவையில்லை Posted: லோக்பால் சட்டம், 44ம் பிரிவின்படி, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை, வருமான வரித் துறையிடம், அதற்கான படிவங்களில் முறைப்படி அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கும் போது தன் மனைவி அல்லது கணவரது வருமானம் மற்றும் சொத்து விவரங்களையும் அளித்தாக வேண்டும். தொழில்கள் மூலமாக...: அதாவது, அரசு சம்பளம் பெறும் ஒருவரது மனைவி மற்றும் குழந்தைகள், தனியார் துறைகளில் பணியில் இருக்கலாம் அல்லது சொந்த தொழில்கள் மூலமாக வருமானம் ஈட்டலாம். அந்த வருமானம் மூலமாகவும், அரசு ஊழியர் சொத்துகளை வாங்கியிருக்கக் கூடும். தற்போதுள்ள ... |
| ஊழலை அம்பலப்படுத்திய அதிகாரி உத்தரகண்டுக்கு மாற்றம் Posted: புதுடில்லி: பணியிடங்களில், ஊழலை அம்பலப்படுத்தி வந்த, இந்திய வனத்துறை உயரதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி, மூன்று ஆண்டுகளுக்குப் பின், அவரது கோரிக்கைப்படி, உத்தரகண்ட் மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சர்ச்சை: 'எய்ம்ஸ்' எனப்படும், அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் நடந்த ஊழலை அம்பலப்படுத்தியவர், சஞ்சீவ் சதுர்வேதி. இதையடுத்து, மத்திய ஊழல் கண்காணிப்பு துறை தலைமை அதிகாரி பதவியிலிருந்து, கடந்த ஆண்டு, இவர் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 2002ல், அரியானாவிலிருந்து, ஐ.எப்.எஸ்., எனப்படும் இந்திய வனத்துறை அதிகாரியாக ... |
| ரூ.100 கோடி 'அவுட்டா?' மின் ஊழியர்கள் அதிருப்தி! Posted: மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நான்கு அலகுகளில், முதல் அலகில், கடந்த ஜூன், 1ம் தேதி துவங்கி, தொடர்ந்து, 50 நாள், முதன்மை பராமரிப்பு பணி நடந்தது. இதற்காக, 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டது. பணிகள் முடிந்து, கடந்த மாதம், 20ம் தேதி, மின் உற்பத்தி துவங்கிய நிலையில், 31ம் தேதி, பாய்லர் டியூப் பஞ்சர் ஆனதால், மின் உற்பத்தி பாதித்து. அவற்றை சரி செய்து, மின் உற்பத்தி துவங்கிய நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, மீண்டும் பாய்லர் டியூப் பஞ்சர் ஆனது. நுாறு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்தும், பராமரிப்பு பணி ... |
| காந்தியை பின்பற்றிய பின்லேடன்! Posted: லண்டன்: பயங்கரவாதச் செயல்கள் மூலம் ஏராளமானோரை கொன்று குவித்த, அல் - குவைதா அமைப்பின், மறைந்த தலைவன், ஒசாமா பின்லேடன், காந்தியை பின்பற்றுமாறு, தனது இயக்கத்தினருக்கு கட்டளையிட்டதாக, வியப்பூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.ஆப்கனில், தலிபான் ஆட்சியை அகற்ற, 2001ல், அமெரிக்க கூட்டுப்படைகள் அந்நாட்டிற்குள் நுழைந்தன. அப்போது, கந்தகாரில் தங்கியிருந்த பின்லேடன், கையில் கிடைத்த பொருட்களோடு, அவசர அவசரமாக அந்நகரில் இருந்து வெளியேறி, மலைப் பகுதியில் பதுங்கினான்.இதையடுத்து, அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட சோதனையில், பின்லேடன் விட்டுச் சென்ற, 1,500க்கும் மேற்பட்ட, அல் - ... |
| Posted: சென்னை: 'வேலுார் மாவட்டம், ஆம்பூரில் நடந்த கலவரத்தின் போது,எவ்வளவு பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது என்பதை, மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. அது முடிவடைந்ததும், நஷ்ட ஈடு தொகை வசூலிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்தது. வேலுார் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த, பழனி என்பவரின் மனைவி பவித்ரா. இவர் காணாமல் போனது தொடர்பாக, ஆம்பூர் பூந்தோட்டம் பர்ணகாரத் தெருவைச் சேர்ந்த, ஷாஜகானின் மகன் ஷமில் அகமது, 26, என்பவரை, ஜூன், 15ம் தேதி, போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின், வீடு திரும்பிய ... |
| விஜயகாந்த் வழக்கில் ஜெ.,வுக்கு 'நோட்டீஸ்' Posted: சென்னை: மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் இரண்டு ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதிலளிக்கும்படி, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார். மாநில தலைமை தகவல் ஆணையராக, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ராமானுஜம், ஆணையர்களாக, ஓய்வு பெற்ற மாஜிஸ்திரேட் தட்சிணாமூர்த்தி, வழக்கறிஞர் முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு பதவியேற்றனர். இந்நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த், ... |
| நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் மன்மோகனும் குற்றவாளி தான்: கோர்ட்டில் மது கோடா மனு Posted: புதுடில்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், அம்மாநில முன்னாள் முதல்வரும், குற்றவாளிகளில் ஒருவருமான மது கோடா, நேற்று தாக்கல் செய்த மனுவில், 'அப்போதைய நிலக்கரித் துறை அமைச்சரான மன்மோகன் சிங்கையும், வழக்கில் சேர்க்க வேண்டும்' என, கோரியுள்ளார்.மத்தியில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங், நிலக்கரித் துறையின் அமைச்சராகவும் இருந்தார்.அப்போது நடைபெற்ற முறைகேடுகள் குறித்த வழக்கை விசாரித்து வரும், சி.பி.ஐ., ... |
| குட்டி இந்தியாவை துபாயில் காண்கிறேன்: 50 ஆயிரம் இந்தியர் மத்தியில் மோடி பெருமிதம் Posted: துபாய்: ''துபாயில், குட்டி இந்தியாவை நான் காண்கிறேன்,'' என்று, நேற்றிரவு அந்நாட்டில், 50 ஆயிரம் பேர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, பெருமிதத்துடன் தெரிவித்தார்.துபாய், கிரிக்கெட் மைதானத்தில், யு.ஏ.இ.,யில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென, வளைகுடா நாடுகளில் வசிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு திரண்டிருந்தனர்.நிகழ்ச்சியில், 'பாரத் மாதா கி ஜே' என்ற கோஷத்துடன் மோடி பேச்சை துவங்கினார். தொடர்ந்து மோடி பேசியதாவது:துபாயில் நான் குட்டி இந்தியாவை பார்க்கிறேன். இங்கு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 18,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |