Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உணவு மாதிரி முடிவுகள் வெளியிடுவதில் தமிழக அரசு கமுக்கம்: இரண்டு மாதங்களாகியும் மவுனம் ஏன் என மக்கள் கேள்வி

Posted:

'மேகி நுாடுல்ஸ்' சர்ச்சையை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட உணவு மாதிரிகளின் முடிவுகள், வெளியிடப்படாமல் உள்ளன. 'இந்த விஷயத்தில், அரசு மவுனமாக உள்ளது ஏன்?' என, மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.'நெஸ்லே' நிறுவன தயாரிப்பான, 'மேகி நுாடுல்ஸ்'சில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் உள்ளதை உறுதி செய்த மத்திய அரசு, அவற்றின் விற்பனைக்கு தடை விதித்தது. தமிழகத்தில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய ஆய்வில், அனுமதியை விட, காரீயத்தின் அளவு அதிகமாக இருந்ததால், ஆறு நிறுவனங்களின் நுாடுல்ஸ் விற்பனைக்கு, மாநில அரசு தடை விதித்தது. சென்னை மாவட்ட ...

நிரந்தர உறுப்பு நாடாகும் இந்தியாவின் முயற்சிக்கு தடை: அமெரிக்கா, ரஷ்யா, சீனாவின் எதிர்ப்பால் பின்னடைவு

Posted:

நியூயார்க் : ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தர உறுப்பினராக முயற்சிக்கும் இந்தியாவின் நீண்டகால நடவடிக்கைக்கு, திடீர் தடை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கவுன்சிலின் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு, அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள், கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது, இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.சர்வதேச விவகாரங்களை கையாளும் ஐக்கிய நாடுகள் சபையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் என்ற சக்திவாய்ந்த அமைப்பு செயல்படுகிறது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது; ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் அளிப்பது; அமைதியை ...

'குட்ரோச்சியிடம் பணம் பெற்ற சோனியா குடும்பம்'

Posted:

புதுடில்லி:பார்லி.,யில், மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியதிலிருந்தே, காங்., உள்ளிட்ட கட்சிகள் இரு சபைகளையும் நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எம்.பி.,க்கள், 'சஸ்பென்ஷன்' உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், அமளி நிற்கவில்லை. நேற்று, லோக்சபாவில் ஆளுங்கட்சியான, பா.ஜ.,வுக்கும், காங்.,குக்கும் இடையே நடந்த வார்த்தை போர் இதோ:காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்:ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளே, கறுப்புப் பணத்தில் நடத்தப்படுவது தான். கறுப்புப் பணத்தின் மொத்த உருவம், லலித் மோடி. எதிர்க்கட்சியினரின் கேள்விக்கணைகளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததால் தான், ...

ராஜிவ் கொலை வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted:

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் விடுதலை தொடர்பான வழக்கின் தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும், விடுதலை செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி, எச்.எல்.தத்து தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன, 'பெஞ்ச்' கடந்த சில மாதங்களாக, இந்த வழக்கை விசாரித்தது. இரு நாட்களாக, இந்த வழக்கின் இறுதி வாதம் நடந்தது. ...

45 லட்சம் பேருக்கு இலவச பொருட்கள்: டிசம்பருக்குள் வழங்க உத்தரவு

Posted:

சென்னை: 'டிசம்பர் மாதத்திற்குள், 45 லட்சம் பேருக்கு, இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த, 2011 சட்டசபைத் தேர்தலில், 'அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், அத்திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டார். 2011 - 12ல், 25 லட்சம்; 2012 - 13ல், 35 லட்சம்; 2013 - 14ல், 35 லட்சம் பேருக்கு, இலவசப் பொருட்கள் வழங்கப்பட்டன.கடந்த ஆண்டு, 45 லட்சம் பேருக்கு, இலவசப் பொருட்கள் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை, 40 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. ...

'டாஸ்மாக்'கை மூடினால் சாராயம் பெருகும்: உயர் நீதிமன்றம் கருத்து

Posted:

சென்னை : 'மதுக்கடைகளின் வேலை நேரத்தை குறைக்கும்படி, அரசை கட்டாயப்படுத்த முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கூறிவிட்டது.சமூகநீதிக்கான வழக்கறிஞர் அமைப்பின் தலைவர், கே.பாலு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், மது தாராளமாக கிடைப்பதால், குற்றங்கள், விபத்துகள் அதிகரிக்கின்றன. காலை, 10:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை, மது விற்கப்படுகிறது. மாலை, 5:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை மட்டுமே, மது விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும். இதனால், குடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.மது விற்பனை விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதன்படி, விற்பனை நேரத்தை, ...

அரசு பஸ்களை ஆய்வு செய்ய குழு: அரசுக்கு விஜயகாந்த் ஆலோசனை

Posted:

சென்னை : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை:தொடர்ந்து விபத்தில் சிக்குவதும், அடிக்கடி நடுவழியில் பழுதாகி நிற்பதும், சக்கரம் கழன்று ஓடுவதும், மேற்கூரை பெயர்ந்து விழுவதுமான மோசமான நிலையில், அரசு பஸ்கள் உள்ளன.போக்குவரத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வற்புறுத்துவதால், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், அரசு பஸ்களை, உரிய முறையில் ஆய்வு செய்யாமல், 'பொதுமக்கள் போக்குவரத்துக்கு ஏற்றது' என, சான்றிதழ் வழங்குகின்றனர்.'அரசு பஸ்கள் நிலை மோசமாக இருப்பதற்கு, இதுவே காரணம்' என, போக்குவரத்து தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பஸ்களில் ஏற்படும் அனைத்து ...

அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு இரட்டை இலை 'இல்லை'

Posted:

பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.பெங்களூரு மாநகராட்சி தேர்தல், வரும், 22ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க., சார்பில், ஏழு வார்டுகளில் வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். இவர்கள், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட, கட்சியின் அனுமதி கடிதம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், உரிய தேதிக்குள் அனுமதி கடிதங்களை வாங்காமல் அலட்சியமாக இருந்து விட்டனர். அதனால், அ.தி.மு.க., வேட்பாளர்கள், ஏழு பேரும், சுயேச்சையாகவே கருதப்படுவர். அவர்களுக்கு, அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னமும் ...

பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு கார்: பாதித்த சிறுமியை நடக்க வைத்து கொடுமை

Posted:

கோபிசெட்டிபாளையம்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர், போலீசார் துணையுடன், காரில் வலம் வந்தார்; இவரால் கர்ப்பமாகி பாதிக்கப்பட்ட சிறுமியை, போலீசார் நடக்க வைத்து, கொடுமை செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே சிலேட்டர் அவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் தன்சீர், 30. இவருக்கு திருமணமாகி, மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். வீட்டுக்கு அருகே வசித்த, 15 வயது சிறுமியை, தன்சீர், அடிக்கடி மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது; இதனால், சிறுமிக்கு கர்ப்பமானார்.

சிறுமி மீது தாக்குதல்:
கடந்த, 7ம் தேதி இரவு, தன்சீர் மனைவி ரசீதா பானு, தன் கணவர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™