Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


லலித் மோடிக்கு எதிராக 'ரெட் கார்னர் நோட்டீஸ்'

Posted:

புதுடில்லி: ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் முறைகேடு செய்த, லலித் மோடியை கைது செய்ய, 'ரெட் கார்னர்' நோட்டீஸ் வெளியிடும்படி, சி.பி.ஐ.,க்கு, மத்திய அமலாக்க துறை கடிதம் எழுதியுள்ளது. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளுக்கான நிதியில் முறைகேடு செய்ததாக, ஐ.பி.எல்., தலைவராக இருந்த லலித் மோடிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; இதுகுறித்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. லண்டனுக்கு தப்பி ஓடிய லலித் மோடி, அங்கு தலைமறைவாக இருந்து வருகிறார். சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, லலித் மோடிக்கு எதிராக, மத்திய அமலாக்க பிரிவு இயக்குனரகமும் வழக்கு பதிவு செய்துள்ளது. ...

பிரதமருக்கு நோயாளியுடன் 'செல்பி'

Posted:

புதுடில்லி:தங்கள் பகுதிக்கு, 'எய்ம்ஸ்' மருத்துவமனை வேண்டும் என போராடி வரும், உ.பி.,யின் பந்தல்கண்ட் பகுதி மக்கள், நோயாளிகளுடன், 'செல்பி' படம் எடுத்து, பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

தங்களை தாங்களே...
மொபைல் போன்களில் உள்ள கேமரா மூலம், தங்களை தாங்களே படம் எடுத்துக் கொள்வதை, செல்பி என்கின்றனர். வெளியிடங்களுக்கு மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது, பிரதமர் மோடி, பொதுமக்கள் மற்றும் பிரமுகர்களுடன் செல்பி படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.ஆனால், 'அத்தகைய பழக்கம் நல்லதல்ல; அதுவொரு விதமான மனநோய்' என, ...

'கூகுள்' நிறுவன தலைவராக தமிழர் சுந்தர் பிச்சை நியமனம்: சர்வதேச நிறுவனங்களில் இந்தியர்கள் 'கலக்கல்!'

Posted:

புதுடில்லி : தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, 'கூகுள்' தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த, 'கூகுள்' நிறுவனம், இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் முன்னணியில் உள்ளது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, கூகுள் அளித்து வருகிறது. இதனுடைய ஆண்டு விற்றுமுதல், 4.2 லட்சம் கோடி ரூபாய்.

மோடி வாழ்த்து:
கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான லாரி பேஜ், நேற்று, கூகுள் மற்றும் ...

தி.மு.க., புள்ளிகள் ரூ.16 ஆயிரம் கோடிக்கு மது 'சப்ளை' செய்வது அம்பலம்:'டாஸ்மாக்'கில் சரி பாதிக்கு இவர்களின் சரக்கு தான் விற்பனை

Posted:

'டாஸ்மாக்' நிறுவனம், கடந்த நிதியாண்டில், 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, மது வகைகளை கொள்முதல் செய்துள்ளது. இதில், தி.மு.க., ஆதரவு முக்கிய நபர்களின், மதுபான ஆலைகளில் இருந்து மட்டும், 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள், 'சப்ளை'யானது அம்பலமாகி உள்ளது. அதாவது, டாஸ்மாக்கில் சரிபாதிக்கு, இவர்களின் சரக்கு தான் விற்பனையாகி உள்ளது. தற்போது, அ.தி.மு.க., ஆட்சி நடந்தாலும், தி.மு.க., ஆதரவாளர்களால் நடத்தப்படும், மது ஆலைகளில் இருந்து தான், டாஸ்மாக் அதிகாரிகள், அதிகளவில் மது வகைகளை கொள்முதல் செய்கின்றனர். கடந்த, 2014 - 15ம் நிதியாண்டில், டாஸ்மாக் நிறுவனம், தி.மு.க., ஆதரவாளர்களால் ...

முலாயமுக்கு பாராட்டு; சோனியாவுக்கு குட்டு

Posted:

புதுடில்லி: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடரை முழுவதுமாக முடக்கிய காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், அவர் மகன் ராகுலையும், கடுமையாக விமர்சித்துள்ள பிரதமர் மோடி, பார்லிமென்டை முடக்கியகாங்கிரஸ் செயலை கண்டித்த சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவை பாராட்டியுள்ளார்.கடந்த மாதம் 21ல், மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய நாளில் இருந்து, காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் நடத்திய அமளிகளால், பார்லிமென்டின் இரு சபைகளிலும் குறிப்பிடும்படியாக எந்த அலுவலும் நடைபெறவில்லை. நாளை மறுநாளுடன், மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைய உள்ள நிலையில், ஜி.எஸ்.டி., எனப்படும் ...

'மேகி' நூடுல்ஸ் நிறுவனத்திடம் ரூ.640 கோடி கேட்கிறது அரசு

Posted:

புதுடில்லி : முறையற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக, 'மேகி' நுாடுல்ஸ் தயாரிப்பு நிறுவமான, 'நெஸ்லே இந்தியா'விடம், 640 கோடி ரூபாய் இழப்பீடு கேட்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்தின் தயாரிப்பான, 'மேகி' நுாடுல்சில், ரசாயன உப்பு, காரீயம் ஆகியவை அதிகமாக கலந்திருப்பது, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவற்றின் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், முறையற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும், விளம்பரங்கள் மூலம், மக்களை தவறாக வழிநடத்தியதாகவும் கூறி, அதற்காக, 640 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, தேசிய நுகர்வோர் ...

'லீவ்' கேட்டவரின் வேலை காலி!

Posted:

ஷில்லாங் : பிரசவ கால விடுமுறை கேட்ட, பெண் டாக்டரை,மருத்துவமனை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின் ஷில்லாங்கில், கார்டன் ராபர்ட் மருத்துவமனை உள்ளது. சர்ச் நிர்வாகத்தின் கீழ், இந்த மருத்துவமனை செயல்படுகிறது. இதில், கடந்த ஐந்து ஆண்டுகளாக பல் டாக்டராக பணிபுரிந்து வந்தார், ரேச்சல். இவர், சமீபத்தில் கர்ப்பமடைந்தார். இதையடுத்து, ஒன்பது மாத விடுமுறை கோரி, மருத்துவமனை நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்தார். இதை பரிசீலித்த மருத்துவமனை நிர்வாகம், ரேச்சலை, வேலையை விட்டு, 'டிஸ்மிஸ்' ...

ஆதார் அட்டை கட்டாயமில்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவு: அரசியல் சாசன பெஞ்சில் ஆதார் வழக்கு

Posted:

புதுடில்லி:'ஆதார்' அடையாள அட்டை அனைவருக்கும் கட்டாயம்; அந்த அட்டை இருந்தால் தான், அரசின் நல உதவிகள் கிடைக்கும் என, கூறப்படுவதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளை, மூன்று நீதிபதிகளை கொண்ட, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், கூடுதல் நீதிபதிகளை கொண்ட, 'பெஞ்ச்'சிற்கு வழக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என, நிர்ப்பந்திக்க கூடாது எனவும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதிகாரம் கிடையாது:
'ஆதார் அடையாள அட்டை அனைவருக்கும் கட்டாயம்' என்ற அரசின் ...

மதுவிலக்கு போராட்டங்கள் எல்லை மீறினால் கடும் நடவடிக்கை பாயும்: போலீசார் எச்சரிக்கை

Posted:

'மாநிலம் முழுவதும், பூரண மதுவிலக்கு கோரி நடந்து வரும் போராட்டங்கள் எல்லை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்' என, போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த மாதம் துவங்கிய, பூரண மதுவிலக்கு கோஷம், படிப்படியாக அதிகரித்து, சசிபெருமாள் மரணத்திற்குப் பின் தீவிரமடைந்து உள்ளது. ஒரு பக்கம், ஆளும் அ.தி.மு.க.,வை தவிர்த்து, மற்ற பிரதான அரசியல் கட்சியினர் முதல், 'லட்டர்பேடு' கட்சியினர் வரை, மதுவிலக்கு போராட்டத்தில் குதித்துள்ளனர். மற்றொரு பக்கம், பல்வேறு தனியார் அமைப்புகளும், தினமும் போராட்டம் நடத்தி வருகின்றன.

தினமும் ...

சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும்: கவர்னரிடம் விஜயகாந்த் கோரிக்கை

Posted:

சென்னை: 'சட்டசபையை உடனடியாக கூட்டுவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கவர்னர் ரோசய்யாவிடம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்று மாலை, கவர்னர் ரோசய்யாவை, சந்தித்து பேசினார். அப்போது, தமிழக பிரச்னைகள் தொடர்பான மனுவை, கவர்னரிடம் வழங்கினார்.பின், விஜயகாந்த் அளித்த பேட்டி:பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் போராடி வருகின்றன. ஆனால், அரசிடம் இருந்து, இதுவரை எந்த சாதகமான அறிவிப்பும் இல்லை. இவ்வளவு நாட்கள் நடவடிக்கை எடுக்காத அரசு, இனி நடவடிக்கை எடுக்குமா என, ...

அ.தி.மு.க., - பா.ஜ., உறவு விளக்கம் கூறாதது ஏன்: கருணாநிதி

Posted:

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், 'சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் சந்திப்பு நடந்தது' என்றும், 'இதன் மூலம், பா.ஜ., - அ.தி.மு.க., இடையே இருந்த அரசியல் உறவு, அம்பலத்துக்கு வந்து விட்டது' எனவும், கூறியிருக்கிறார். ஆனால், இந்த சந்திப்பு பற்றி பிரதமர், முதல்வர் தரப்பில், எந்த விளக்கமும் இதுவரை கூறவில்லை.'ஜெயலலிதாவுக்கு உடல் நலம் சரியில்லை; அதனால், பிரதமர் நலம் விசாரிக்கப் போனார்' என, தமிழக பா.ஜ., தலைவர் கூறுகிறார். ஆனால், அக்கட்சியை சேர்ந்த பிரதமரோ, ஜெயலலிதா வீட்டிற்கே ...

பிரிட்டனில் அரசு குடும்பத்தை தகர்க்க ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டம்

Posted:

லண்டன் : பிரிட்டனில், ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அரச குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்த, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சதித் திட்டத்தை நிறைவேற்ற பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் பிரிட்டனில் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்படுவதால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் மீது பிரிட்டன் படைகள் தாக்குதல் நடத்தின. இதில், ஜப்பான் நிலைகுலைந்து போனது. அந்த வெற்றியை நினைவு கூறும் வகையில், வரும் சனிக்கிழமை, லண்டனில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™