Tamil News | Online Tamil News |
- கலை, அறிவியல் கல்லூரிகளாக மாறும் இன்ஜி., கல்லூரிகள்? ஒரு லட்சம் இடங்கள் காலியால் முடிவை மாற்றும் நிர்வாகங்கள்
- கிடப்பில் நில மசோதா: மத்திய அரசு முடிவு
- எண்ணெய் நிறுவனங்களுக்கு மானிய வரம்பு நிர்ணயம்: லோக்சபாவில் மத்திய அரசு அறிவிப்பு
- பார்லி.,யில் தமிழக எம்.பி.,க்கள்...
- இந்தியாவை கைப்பற்ற வரைபடம்: ஐ.எஸ்., ரகசிய திட்டம் அம்பலம்
- 'ஹெல்மெட்' போடாமல் சிக்கியவர்கள் எவ்வளவு பேர்
- மதுவிலக்கு ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி 'ஆப்சென்ட்' ஏன்?
- மூன்று நாட்களில், சி.பி.ஐ.,யிடம் சரணடைய தயாநிதிக்கு ஐகோர்ட் கெடு
- ஐ.நா., சபை கூட்டத்தில் உரையாற்றுகிறார் மோடி
- 17 ஆண்டுகளாக இழப்பீடு கிடைக்காத 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை முடிவு
- வீண்பழி சுமத்த வேண்டாம்: இந்தியாவுக்கு பாக்., கோரிக்கை
| Posted: அண்ணா பல்கலை நடத்திய இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்தும், மாநிலம் முழுவதும், பல கல்லுாரிகளில், ஒரு லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. போதிய மாணவர் சேர்க்கை இல்லாத இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்லுாரிகளை கலை, அறிவியல் கல்லுாரிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளன. தமிழகத்தில், 581 இன்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்சர் கல்லுாரிகள் உள்ளன. இவற்றுள், 40 சதவீத தனியார் கல்லுாரிகளில், மிக குறைந்த அளவுக்கே மாணவர்கள் சேர்கின்றனர். தரமில்லாத, வசதியில்லாத கல்லுாரிகளை, கவுன்சிலிங் நிலையிலேயே மாணவர்கள் புறக்கணித்து விடுகின்றனர். |
| கிடப்பில் நில மசோதா: மத்திய அரசு முடிவு Posted: புதுடில்லி : நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, பார்லிமென்டின், அடுத்த, குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவும், அதற்காக, நான்காவது முறை, அவசர சட்டம் பிறப்பிக்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. |
| எண்ணெய் நிறுவனங்களுக்கு மானிய வரம்பு நிர்ணயம்: லோக்சபாவில் மத்திய அரசு அறிவிப்பு Posted: புதுடில்லி : எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கும் மானியத் தொகைக்கு, மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளது. 'ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு, 12 ரூபாயும், ஒரு கிலோ சமையல் எரிவாயுவுக்கு, 18 ரூபாயும் மானியமாக அளிக்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரப்படி, பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரம், 2010 ஜூன் முதல், எண்ணெய் வினியோக நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது; அதேபோன்று, டீசல் மீதான விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், 2014 முதல் அவற்றுக்கு வழங்கப்பட்டது. |
| பார்லி.,யில் தமிழக எம்.பி.,க்கள்... Posted: நேற்று பார்லிமென்ட்டில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக எம்.பி.,க்கள் பேசியதாவது: |
| இந்தியாவை கைப்பற்ற வரைபடம்: ஐ.எஸ்., ரகசிய திட்டம் அம்பலம் Posted: லண்டன்: அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்திய துணைக் கண்டம் உட்பட, உலகின் பெரும்பகுதியை கைப்பற்ற திட்டமிட்டு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அதற்கான வரைபடத்தை தயாரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பி.பி.சி., செய்தியாளர் ஆண்ட்ரூ ஹோஸ்கின், 'எம்பயர் ஆப் பியர்: இன்சைடு தி இஸ்லாமிக் ஸ்டேட்' என்ற நுாலை எழுதியுள்ளார். அதில், ஐ.எஸ்., கைப்பற்ற திட்டமிட்டுள்ள நாடுகளும், அவற்றுள் நுழையும் வழிகளைக் கூறும் வரைபடங்களையும் இணைத்துள்ளார்.அந்த நுாலில் கூறப்பட்டுள்ளதாவது: அபு முசாப் அல் - ஜர்கவி, பரந்துபட்ட இஸ்லாமிய தேசத்திற்காக உருவாக்கிய பயங்கரவாத அமைப்பு ... |
| 'ஹெல்மெட்' போடாமல் சிக்கியவர்கள் எவ்வளவு பேர் Posted: சென்னை: 'ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்ட பின், இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.'இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்; தவறினால், அவர்களின் ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு, ஜூலை 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், 'ஹெல்மெட் அணிவதிலிருந்து, பெண்கள், குழந்தைகளுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்; ஆவணங்களை பறிமுதல் செய்யக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் ... |
| மதுவிலக்கு ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி 'ஆப்சென்ட்' ஏன்? Posted: தி.மு.க., சார்பில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சித் தலைவர் கருணாநிதியும் பங்கேற்க திட்டமிட்டு இருந்தார்; ஆனால் கலந்து கொள்ளவில்லை. தான் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றால், ஸ்டாலின், கனிமொழிக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகும் என்பதால், கடைசி நேரத்தில், கருணாநிதி தன் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. |
| மூன்று நாட்களில், சி.பி.ஐ.,யிடம் சரணடைய தயாநிதிக்கு ஐகோர்ட் கெடு Posted: சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிக்கு வழங்கிய இடைக்கால முன் ஜாமினை, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. 'மூன்று நாட்களில், சி.பி.ஐ.,யிடம் சரணடைய வேண்டும்' என, கெடு விதித்துள்ளது. |
| ஐ.நா., சபை கூட்டத்தில் உரையாற்றுகிறார் மோடி Posted: நியூயார்க் : அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். அங்கிருந்து, அமெரிக்காவின் மேற்கு பகுதியான சான் பிரான்சிஸ்கோ செல்லவிருக்கிறார்.அடுத்த மாதம் துவங்கும், ஐக்கிய நாடுகள் சபையின், 70வது கூட்டத்தொடரில், 150 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்க செல்கிறார்.இந்த கூட்டத்தொடரில், 'நிலையான வளர்ச்சி' என்ற தலைப்பில் மோடி உரையாற்றுகிறார். பின், அங்கிருந்து, அமெரிக்காவின் மேற்கு பகுதியான சான் பிரான்சிஸ்கோவுக்கு ... |
| 17 ஆண்டுகளாக இழப்பீடு கிடைக்காத 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை முடிவு Posted: மதுரா: உ.பி.,யின் மதுரா பகுதியில் கட்டப்பட்டுள்ள அணைக்காக தங்கள் விவசாய நிலங்களை விட்டுக் கொடுத்த விவசாயிகளுக்கு, 17 ஆண்டுகளுக்கு மேலாகியும் இழப்பீடு வழங்கப்படாததால், தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு, 25 ஆயிரம் பேர், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இங்குள்ள மதுரா பகுதியில், 1998ல், பெரிய அணை கட்டப்பட்டது. இதற்காக, விவசாயிகளின், 700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலங்களை கொடுத்த விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்கப்படும் என, மாநில அரசு அறிவித்தது. ஆனால், 15 ஆண்டுகளுக்கு ... |
| வீண்பழி சுமத்த வேண்டாம்: இந்தியாவுக்கு பாக்., கோரிக்கை Posted: இஸ்லாமாபாத்: ''பயங்கரவாதத்தை துாண்டுவதாக வீண் பழி சுமத்த வேண்டாம்,'' என, பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப், இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இஸ்லாமாபாத்தில் அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:இந்தியாவில் பிரிவினைவாத இயக்கங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. அதனால், பழையபடி, பாகிஸ்தான் மீது, இந்தியா குற்றம் சாட்டத் துவங்கியுள்ளது. அதை நிறுத்தி விட்டு, திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் அமைதி காணவே, பாகிஸ்தான் விரும்புகிறது. உள்நாட்டில் பயங்கரவாதத்தை வேரறுக்கவும், பயங்கரவாதிகளின் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 11,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |