ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வாழ்த்துபா
- காதலால் துன்பமேயன்றி இன்பமில்லை...!!
- திருமணம்
- மீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா
- ஆன்மீக பகிர்வுகள் !!!
- திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை
- விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!?
- இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!
- “காக்னிடிவ் பிஹேவியர் தெரபி
- ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா
- கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல்
- அறிமுகம் : வினோத் குமார் !
- பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!!
- APJ அப்துல் கலாம் ஐயா இறந்ததற்கு பிறகு ஒரு சிலர் உருவாக்கிய சில பொய்யான தகவல்கள்...
- இணையதள சேவையை பெறவும், துண்டிக்கவும் டிராய் புதிய உத்தரவு!
- எளிமையின் நாயகன்!
- அரு உருவ கொளஞ்சி குமரன்!
- ஹைக்கூ - கவியரசன்
- விண்டோஸ் 10
- கலாம் அவர்களின் சொத்துக்கள்
- வானமே எல்லை !
- காதோடு நான் பேசுவேன்… – எல் ஆர் ஈஸ்வரி
- திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு
- மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?
- சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !
- சும்மா
- வானவில் மருத்துவம்
- தெரிஞ்சுக்கோங்க!..மெகா புட்டு!
- முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு)
- ஆவணி மாத பலன்கள் :)
- கயல்விழி – சிறுகதை
- இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான்
- மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது: மனநல மருத்துவ ஆராய்ச்சியில் தகவல்
- மதுவிலக்கு!!!
- குட்டி கவிதைகள்
- மணிரத்னத்தின் சினிமா - யமுனா ராஜேந்திரன்
- பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை
- மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
- சமையல் எரிவாயு மானியம்: தமிழகத்தில் 1.24 லட்சம் பேர் ஒப்படைப்பு
- காத்திருப்பு...
- முஹம்மத் ஸர்பான் கவிதைகள் - தொடர் பதிவு !
- தமிழக வனத்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் எம்.எஸ்.எம்.ஆனந்தன்
| Posted: 10 Aug 2015 12:53 PM PDT மின்னும் நட்சத்திர கூட்டத்தினிடையே ஜொலிக்கும் நட்சத்திரமாய் மண்ணில் நீ வந்தாய்!! புடமிட்ட பொன்னும் பொறாமை கொள்ளும் அழகோடு மிளிர்ந்தாய்!!! வானும் மண்ணும் வாழ்த்த செழிப்போடு நீ வளர்ந்தாய்!! இப்பொழுது வாழ்க்கையை வசப்படுத்தும் வாலிபத்தை அடைந்தாய்!! உன் வாலிபத்தின் காலங்களில் நீ புவி போற்றும் பூமகனாக தாய் போற்றும் சேயாக தந்தை போற்றும் தவப்புதல்வனாக!! ஊர் போற்றும் நல்ல பண்பாளனாக !! மனைவி போற்றும் நல்ல மணாளனாக!! கடவுள் வாழ்த்தும் பக்தனாக வாழ வாழ்த்துக்கள்!!! |
| காதலால் துன்பமேயன்றி இன்பமில்லை...!! Posted: 10 Aug 2015 12:51 PM PDT - ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் காதல் என்பது வெறும் மாயை என்பது புரியும். - ஒரு வகை கவர்ச்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை. காதல் காதல் என மாய்ந்து போகும் கவிஞர்களை ஒரு சததுக்கும் பிரயோசனப் படாதவர்கள் என்றே சொல்லத் தோன்றும். - இவர்களால் இந்தப் பூமிக்கு என்ன பயன் என்ற கேள்வி என் மனதில் அடிக்கடி எழும்புவதுண்டு . - மொத்தத்தில் காதலால் துன்பமேயன்றி இன்பமில்லை. இதனால் யாருக்கும் இலாபமுமில்லை. - --------------------------------------- காதல் குறித்து ஒரு பெண்ணின் பார்வை ... |
| Posted: 10 Aug 2015 12:48 PM PDT திருமணம் என்பது தீண்டுவதற்க்கு மட்டுமல்ல!! அன்பை அன்பால் அடைவதும்! ஆசுவாசப்படுத்துவதும் காதலில் கரைந்து போவதும்!! நரைவிழுந்து நடை தடுமாறினாலும் கொண்ட நம் காதல் மாறாமல் அன்பை மட்டுமே கொடுத்து பெறுவதுமே திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான தாரகமந்திரம்!!! |
| மீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா Posted: 10 Aug 2015 12:46 PM PDT http://www.mediafire.com/download/1z2m2d86bjtl3ai/Meendum+Thoondil+Kathaikal.pdf என்றும் அன்புடன் செல்லா |
| Posted: 10 Aug 2015 10:47 AM PDT ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ... |
| திருப்புல்லாணி & உத்திரகோசமங்கை Posted: 10 Aug 2015 10:38 AM PDT திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் கோவில் பூரியிலுள்ள ஜெகநாதர் கோவிலுக்கும் முந்தய யுக கோவிலாகும் பூரி கோவில் கிரிஸ்ணாவதாரத்துடன் தொடர்புடையது என்றால் திருப்புல்லாணி கோவில் அதற்கும் திரேதாயுகத்திற்கும் முந்தய கிருத யுக கோவிலாகும் ஆகவேதான் ஆதி ஜெகநாதர் கோவில் என்றுள்ளது இங்கே தசரதன் யாகம் செய்து அந்த யாகத்தில் வெளிவந்த அவில் பாகத்தை உண்டு ராமர் லக்ஷ்மணன் பரதன் சத்ருக்கனன் பிறந்தனர் அதுமட்டுமல்ல அதே சமயத்தில் மாதங்க முனிவரின் ஆசிரமத்தில் பிள்ளை வரம் வேண்டி தவம் செய்து வந்த அஞ்சனை மடியில் தசரதன் செய்த ... |
| விண்டோஸ் 10 upgrade பண்ணவேண்டுமா!? Posted: 10 Aug 2015 08:19 AM PDT இது வரை விண்டோஸ் 10 update கிடைக்க பெறாதவர்கள். பின்வரும் முறைகளின் மூலம் மைக்ரோசாப்ட் தளத்தில் இருந்து original ISO தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம். முதலில் உங்களின் தற்போதைய இயங்குதள எது அதற்கேற்ற இலவச விண்டோஸ் 10 பதிப்பு எது என்பதை இந்த படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அடுத்து , https://www.microsoft.com/en-us/software-download/windows10 இந்த சுட்டியை திறந்து இதில் உங்களுக்கு 32 bit OS வேண்டுமா அல்லது 64 bit OS வேண்டுமா என்று தெரிவு செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும் ஒரு ... |
| இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Posted: 10 Aug 2015 07:13 AM PDT இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! நேற்று (8.8.2015) காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு அருகேயுள்ள சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் விவசாயக் கூலியான படிக்காத அந்த தாய்க்கும், அந்த சிறுமிக்கும், அந்த படிப்பிற்கான கலந்தாய்வு கோயம்புத்தூரில் ... |
| Posted: 10 Aug 2015 05:59 AM PDT இந்த கட்டுரை ஒரு முக்கியமான, ஆனால் நோய் என்ற விழிப்புணர்வு அதிகமில்லாத மனதைப் பாதிக்கும் பிரச்சனை பற்றியது. – "ஐந்து சதவிகித மக்களுக்கு ஓசிடி இருக்கிறது. கட்டாயம் இதுபற்றி எழுத வேண்டும்' என்ற வேண்டுகோளுடன் இது பற்றி மனநல மருத்துவர் டாக்டர் பாரதி விஸ்வேஸ்வரன் பேசினார். – "ஓடிசி என்பது மீண்டும், மீண்டும் அர்த்தமில்லாத சிந்தனை தோன்றுவதால், செய்யக்கூடிய செயல்கள் அல்லது ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியது. (அப்செஷன் என்பது அதீதமான எண்ணத் தாக்கம்; இதைப் படித்து விட்டு எல்லாரும் பயப்பட ... |
| ,,, பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ...அருமையான பாடல் கிடைக்குமா Posted: 10 Aug 2015 04:54 AM PDT அன்பான நண்பர்களே... டி எம் எஸ் அவர்களும்...பி சுசிலா அவர்களும் பாடிய ஒரு பாடல் அவ்வளவு இனிமை ,எந்த திரைப்படம் என்று தேயவில்லை அந்த ஒரு பாடலே போதும் அந்த திரையில் வந்த மற்றைய பாடல்களும் இது போன்று இனிமையாக இருக்குமென்று .... ராயா ஓ ராயா .. பாடங்களை சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா ... இப்படி ஆரம்பிக்கும்.. மிக இனிமை.. நண்பர்களே ,இந்த பாடல் எந்த திரையில் இடம் பெற்றது ,இந்த திரைப்படத்தில் வேறு பாடல்கள் இருக்குமாயின் தயை கூர்ந்து தந்து உதவுங்கள் ..அருமையான பாடல் |
| கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல் Posted: 10 Aug 2015 04:32 AM PDT விழுப்புரம்: பள்ளி, கல்லுாரிகளில், திருக்குறளை கட்டாய பாடமாக்க வேண்டும், என, உத்தரகண்ட் எம்.பி., தருண் விஜய் கூறினார். விழுப்புரத்தில் நேற்று நடந்த கம்பன் விழாவில், தருண் விஜய் பேசியதாவது:தமிழர்களின் பாரம்பரியம், வாழ்க்கை முறைகளை பார்க்கும்போது பெருமிதமாக உள்ளது. ராஜராஜசோழன், பல்லவ மன்னர்கள் தமிழ் மண்ணின் அடையாளம்.தமிழகத்தில் தமிழ் மொழியை பெருமைப்படுத்த, கம்பன் கழகம் போன்ற அமைப்புகள் உள்ளன. எங்கள் மாநிலத்தில், தமிழை பெருமைப்படுத்த நான் பாடு படுவேன். இந்த விழாவுக்கு வந்துள்ள ... |
| Posted: 10 Aug 2015 04:17 AM PDT பெயர்: வினோத் குமார் சொந்த ஊர்: ஊத்துக்குளி ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: சாண்டில்யன் உரைகளை தேடும்பொது பொழுதுபோக்கு: தமிழ் வரலாற்று நோவேல் படிப்பது தொழில்: தகவல் தொழில்நுட்பம் மேலும் என்னைப் பற்றி: தமிழன் என்று சொல்லும்போது பெருமியாடையும் ஒருவன். ஈகரைக்கு என் வாழ்த்துக்கள். |
| பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்: கிழக்குக் கடற்கரை சாலை பயங்கரம்!! Posted: 10 Aug 2015 04:13 AM PDT காரில் ஒரு பக்கம் உங்கள் மனதுக்கு பிடித்தவர் அமர்ந்திருக்க, மறுபக்கம் வங்காளக்கடலை ரசித்தபடியே பயணம் செய்யும் அழகிய அனுபவத்தை தரக்கூடியது கிழக்கு கடற்கரை சாலை. குறைந்த செலவில் வார விடுமுறையை நிறைவாக கொண்டாட விரும்புவர்களுக்கு ஈ.சி.ஆர் ஒரு வரப்பிரசாதம். ஒரு காரும், நான்கு நண்பர்களும் இருந்தால்போதும், காலை முதல் மாலை வரை எத்தனை முறை வேண்டும் என்றாலும் ஈ.சி.ஆரில் டிரிப் அடித்துக்கொண்டிருக்கலாம். நெருக்கடியான சென்னை சாலைகளில் பயணம் செய்து அலுப்பானவர்கள், விசாலமான, காற்றோட்டமான, இயற்கை ... |
| APJ அப்துல் கலாம் ஐயா இறந்ததற்கு பிறகு ஒரு சிலர் உருவாக்கிய சில பொய்யான தகவல்கள்... Posted: 10 Aug 2015 04:10 AM PDT APJ அப்துல் கலாம் ஐயா இறந்ததற்கு பிறகு ஒரு சிலர் உருவாக்கிய சில பொய்யான தகவல்களை சிந்திக்காமல் பரப்பிய சில வதந்திகள்... பொய் 1) அப்துல் கலாம் இறுதிச்சடங்கிற்கு ஒபாமா ராமேஸ்வரம் வருகிறார். என்று பொய்யான தகவல்களை பரப்பினர். பொய் 2) முதல் முறையாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் அவர்கள் நாட்டுக் கொடியை அப்துல் கலாம் இறந்ததற்காக அரை கம்பத்தில் பறக்க விட்டனர் என்று ஒரு பொய்யான போட்டோ வை பரப்பினர். அந்த சம்பவம் 10 நாட்களுக்கு முன்பு அமெரிக்க படை வீரர்கள் சுட்டு கொல்லப்பட்டதற்க்காக அரைக் கம்பத்தில் ... |
| இணையதள சேவையை பெறவும், துண்டிக்கவும் டிராய் புதிய உத்தரவு! Posted: 10 Aug 2015 03:42 AM PDT புதுடெல்லி: செல்போனில் இணையதள சேவையை பெறவும், துண்டிக்கவும் புதிய வசதியை ஏற்படுத்தி தர செல்போன் நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டு உள்ளது. அதிக வருவாய் பெறும் நோக்கத்தில், செல்போனில் இணையதள சேவையை 'டிஆக்டிவேட்' (துண்டித்தல்) செய்யும் நடைமுறையை செல்போன் சேவை நிறுவனங்கள் சிக்கலானதாக வைத்திருக்கிறது என்று புகார்கள் எழுந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) நேற்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சந்தாதாரர்கள் தங்கள் செல்போன்களில் இணையதள சேவையை ... |
| Posted: 10 Aug 2015 03:39 AM PDT சுற்றிலும் பள்ளிக்குழந்தைகள் நிரம்பியிருக்கிறார்கள். நடுவில் உயிர்ப்புள்ளியாக அப்துல் கலாம். – "உங்களில் எத்தனை பேர் அரசியல்வாதியாக மாற விரும்புகிறீர்கள்?' எதிரே எந்த கைகளும் உயரவில்லை. நிதானமாக டுத்த கேள்வியைக் கேட்கிறார் கலாம். – "எத்தனை பேர் விஞ்ஞானியாக மாற விரும்புகிறீர்கள்?' கேள்வி கேட்டதும், சட்டென்று கொத்தாக ஏராளமான கைகள் உயர்கின்றன. – இந்த நம்பிக்கைதான் கலாம்! தேசமெங்கும் வாழ்நாள் முழுக்க லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு "முன்மாதிரி'யாகத் திகழ்ந்ததுதான் கலாம் அளப்பரிய சாதனை! அவருடைய ... |
| Posted: 10 Aug 2015 03:20 AM PDT - - கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள மணவாள நல்லூரில் முருகப்பெருமான் பிற திருக்கோயில்களிலிருந்து மாறுபட்டு உருவமின்றி அரூபமாகத் திருமேனி கொண்டு "கொளஞ்சியப்பர்' என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ளார். – நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படையில் முருகன் விரும்பி உரையும் இடங்களைப் பட்டியலிட்டு கூறுமிடத்து தன் அடையாளமாக நடப்பட்ட கல் நிற்கும் இடத்திலும் முருகன் வீற்றிருப்பான் என்கின்றார். இவ்வாறு ஒரு கல்லில் ஆவேசித்து (ஆபிர்வித்து) நிற்கும் முருகனின் தொன்மையான நிலைக்கு கந்துடை ... |
| Posted: 10 Aug 2015 03:10 AM PDT ஹைக்கூ கவிதைகள் முழுதாய் படிக்க மறந்து விட்டது கறையான் அலமாரியில் புத்தகம் ........................................................ சமமான சீருடை இருந்தும் பிரித்து வைத்தது மதிய உணவு ........................................................... வசிப்பிடம் இழந்த நதி தஞ்சம் அளித்த வீதி ........................................................... வாகனத்தில் மிதிபட்ட சூரியன் நடை பாதையில் மழைநீர் ........................................................... தோகை விரித்த ... |
| Posted: 10 Aug 2015 02:36 AM PDT என்னுடையது விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் நான் விண்டோஸ் 10 எப்படி upgrede செய்வது கொஞ்சம் விவரமாக சொல்லவும் |
| Posted: 10 Aug 2015 12:51 AM PDT கலாம் அவர்களின் சொத்துக்கள் அப்துல் கலாம் விட்டுச்சென்ற உடைமைகள் பட்டியலிடப்பட்டுள்ளது. புத்தகங்கள் -2500 கை கடிகாரம் -1 முழுகை சட்டை -6 கால் சட்டை -4 சூட் - 3 ஷூ - 1 ஜோடி சொந்தமாக டிவி, பிரிட்ஜ், ஏசி, கார் எதுவும் வைத்துக் கொள்ள வில்லை. வானொலி கேட்பார் மற்றும் செய்தித் தாள் படிப்பார். 50 ஆண்டுகள் பொதுவாழ்வில் வாழ்ந்த ஒரு மனிதரின் மறுபக்கம்தான் இவை. அவர் ஏழ்மையில் வாழவில்லை, ஆடம்பரத்திலும் திளைக்க வில்லை, குறைந்தபட்சம் என்ன இருந்தால் போதுமோ அப்படி வாழ்ந்தார். தன் ஓய்வூதியம் ... |
| Posted: 10 Aug 2015 12:50 AM PDT இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை. கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும். அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும். மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, "ஆ! அம்மா !! வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்து போகனும் " என்று தீர்மானித்துக் கொள்ளும். அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. ... |
| காதோடு நான் பேசுவேன்… – எல் ஆர் ஈஸ்வரி Posted: 10 Aug 2015 12:46 AM PDT * உங்க இயற்பெயர் என்ன? லூர்து மேரி ராஜேஸ்வரி * பாடிய முதல் பக்திப்பாடல்? குன்னக்குடி இசையில் "உலகாளும் உமையவளே!' * இதுவரை எத்தனை பாடல்கள் பாடியிருக்கீங்க? தெரியாது. எண்ணுவதில்லை. * லேட்டஸ்ட் ஹிட்? பூந்தமல்லிதான்; நான் புஷ்பவல்லிதான். *உங்கள் மேடைக்கச்சேரிகளில் நேயர்களால் அதிகமாகக் கேட்கப்படும் விருப்பப்பாடல்? பெரும்பாலும் பக்திபாடல்கள்தான்! திரை இசைன்னா, எலந்தப்பழமும் "கலா சலா கலசலா'வும்! * ஜெயலலிதாவுக்குப் பாடிய முதல் பாடல்? நீ என்பதென்ன… நான் என்பதென்ன? (வெண்ணிற ஆடை) * ... |
| திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு Posted: 09 Aug 2015 11:26 PM PDT திருப்பதி: ''திருமலையில், 'ஆனந்த நிலையம் அனந்த சொர்ணமயம்' என்ற, கோவில் முழுவதையும் தங்கமயமாக்கும் திட்டம் கைவிடப்படுகிறது,'' என, தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: திருமலையில், ஏழுமலையான் குடி கொண்டிருக்கும் கோவில் முழுவதையும் தங்கமயமாக்க, ஐந்து ஆண்டுகளுக்கு முன், அப்போதைய அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு நாயுடு முடிவு செய்தார். அதற்கு, 'ஆனந்த நிலையம் அனந்த சொர்ணமயம் திட்டம்' என, பெயர் சூட்டினார். அந்தத் திட்டத்திற்கு பலர் பணம், ... |
| மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ? Posted: 09 Aug 2015 10:58 PM PDT ஆச்சு….புனிதாவும் அவளது கணவன் ராஜேஷும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிக் கொண்டு…. இன்றோடு மூன்றாவது நாள் முடிகிறது…. …! - இப்படியே ராஜேஷை விட்டுப் பிரிந்து போகவும் புனிதாவுக்கு மனதளவில் சம்மதம் தான்…குழந்தை அருண் மட்டும் பிறந்திருக்கவில்லையென்றால் ….. அவளது முடிவு அதுவாகத் தான் இருந்திருக்கும்…என்ன செய்வது…?.சிலரின் வாழ்க்கை….எப்பவுமே இன்னொருவரின் கைகளில் தான் இருக்குமோ என்னவோ? பார்க்கலாம்…இந்த விஷயம் இன்னும் எவ்வளவு தூரம் போகும் என்று. - எண்ணியபடியே….அருணை இடுப்பில் இடுக்கியபடியே…கிண்ணத்தில் ... |
| சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Posted: 09 Aug 2015 10:35 PM PDT ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் . அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார் வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது. அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு ... |
| Posted: 09 Aug 2015 10:33 PM PDT வாசலில் நிழலாடியது. யாரென்று பார்த்தேன். பக்கத்துத்தெரு பத்மநாபன் கையில் ஒரு பையுடன் நின்றுகொண்டு இருந்தார். " வாங்க! பத்மநாபன்! என்ன இவ்வளவு தூரம்?" " ஒண்ணுமில்ல சார்! சும்மா உங்கள பாத்துட்டுப் போலாம்ணு வந்தேன் " " அதென்ன கையில பை ?" " பெரியவங்களைப் பார்க்கப் போகும்போது சும்மா கைய வீசிக்கிட்டுப் போகக்கூடாது. ஏதாவது பழங்கள் வாங்கிக்கிட்டுப் போ! " ன்னு அப்பா சொன்னார்.அதான் ஆப்பிள் வாங்கியாந்தேன்." என்று சொல்லிவிட்டுப் பையிலிருந்த பழங்களை எடுத்து மேஜையின் மீது வைத்தார்.மொத்தம் 13 பழங்கள் ... |
| Posted: 09 Aug 2015 10:28 PM PDT காய்கறிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருப்பது காய்கறிகளுக்கு இயற்கை தந்த வரமாகும். இப்படி பல்வேறாக வேறுபட்டிருக்கும் ஒவ் வொரு நிற காய்கறிக்குள்ளும் ஒவ்வொரு விதமான சத்தான விஷயங்கள் அடங்கியுள்ளன. வானவில்லின் ஏழு வண்ணம் கண்களுக்கு, காய்கறிகளில் ஏழு வண்ணம் உடல் நலத்துக்கு. |
| தெரிஞ்சுக்கோங்க!..மெகா புட்டு! Posted: 09 Aug 2015 10:25 PM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு) Posted: 09 Aug 2015 10:10 PM PDT - ஒரு வெள்ளக்காரன் சோறக் கையால சாப்டறதப் பாத்து.... அடடா!! ன்னு சந்தோசபட்டு முடிக்கறதுக்குள்ள, இந்த பக்கம் நம்மாளு ஸ்பூன வச்சி, வடைக்கூட சண்ட போட்டுட்டு இருக்கான்.. |
| Posted: 09 Aug 2015 09:41 PM PDT மேஷம் 18.8.2015 முதல் 17.9.2015 வரை கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள், மற்றவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்பவர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 5ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் மனக்குழப்பம் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளும் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களை விரும்பிய பாடப் பிரிவில் சேர்ப்பீர்கள். குரு 5ம் வீட்டில் வலுவாக நிற்பதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் ... |
| Posted: 09 Aug 2015 09:39 PM PDT - அவளிடம் இதை எப்படி கேட்பது என்பதில் நிறைய தயக்கம் இருந்தது. பிரம்மன் ஓவர்டைம் செய்து அவளை உருவாக்கியிருப்பான் போலிருக்கிறது. கயல்விழி என்ற பெயரைவிட அவளுக்கு பொருத்தமான வேறு ஒரு பெயர் இல்லவேயில்லை. கயலின் விழிகள் அலெக்சாண்டரின் போர்வாள் போல கூர்மையானது. பார்வையால் ஒரு வெட்டு வெட்டினாள் என்றால் எப்படிப்பட்ட ஆணும் இதயம் அறுந்து உயிரிழப்பான். அவள் வேலை பார்த்த கடையில் இருந்த எல்லாப் பெண்களுமே கொள்ளை அழகு தான். இருந்தாலும் நிலவோடு நட்சத்திரங்கள் போட்டியிட முடியுமா? அவளுடைய உயிர்த்தோழி ஒருத்தி ... |
| இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான் Posted: 09 Aug 2015 09:17 PM PDT அட்டுழியம்,அனாச்சாரம் தலைநிமிர்ந்து நியாயம்,நீதி,தர்மம், தலை குனிந்து உனக்கே...,நீயே! குழி தோண்டிக் கொண்ட தொடர் கதையே.......!!!!மீதம்...., நீ பெற்ற அறிவோ? நீரில் வரைந்த ஒவியம் என் மூதாதையின் அறிவோ? கல்லில் வெட்டிய காவியம். அன்று,என் மூதாதை பெற்ற அறிவு உண்மை நேர்மை சாத்தியமென இட்டுச் சென்று வாழ்வே இன்ப பூங்காவனம். இன்று, உன் அறிவு பொய் துரோகம் அசத்தியமென வாழ்வே துயர நந்த வனம். அடுக்கு மாளிகைகளை கட்டுகிறாய்; தேவாமீர்தம்,முக்கனிகளை சுவைக்கிறாய்; வயிற்றுக்காக கையேந்திய ... |
| மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது: மனநல மருத்துவ ஆராய்ச்சியில் தகவல் Posted: 09 Aug 2015 09:11 PM PDT மது அருந்துவோர் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது. அதனால் சமூகத்தில் இன்று விவாகரத்து, தற்கொலை, கொலை சம்பவங்கள் அதிகரிப்பதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் போதிய விழிப் புணர்வு இல்லாததால், சங்கிலியால் பிணைக்கப்பட்டவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள்தான் மன நோயாளிகள் என சமூகத்தில் நினைக்கப்பட்டது. 'நிரூபிக்கப் படாத, உண்மையில் நிகழ்ந்திராத ஒரு விஷயத்தை, அது உண்மை யில் நடக்கிறது என்ற அசைக்க முடியாத எண்ணம் கொண்டிருப் பவர்கள்கூட' மனநோயாளிகள் தான் என மருத்துவ ... |
| Posted: 09 Aug 2015 08:57 PM PDT தமிழா! தமிழா! தள்ளாடும் தமிழா! தாய் மறந்து தாரம் மறந்து தனை மறந்த தமிழா! மனை மறந்தும் மது நுகர்ந்தும் மதி இழந்தும் மரணம் உணர்ந்தும் மயங்கி மடியும் மனிதா! மனிதம் மறந்து மதங்கள் பூசி சமூகம் துறந்து சாதிகள் பேசி பாதை மறந்த போதையே! விழிமின் தமிழா! வீதியில் விழுமுன்! மதுவிலக்கு கொண்டுவா மனிதா! மனதில்!!! சாகும்முன் பிணமாகாதே! சாதித்திடு! |
| Posted: 09 Aug 2015 08:56 PM PDT நதியில் தெரியும் நிஜத்தின் நிழல் நதிக்கு சொந்தமானது என்று!! நானும் உன்னை அப்படித்தான் நினைத்திருந்தேன்!! இதயத்தில் பூத்த காதல் பூவின் நிழல் இன்று எனக்கு சொந்தம்!! (நீ எனக்கு கணவனாக) _____-----______________-----------______------------- அன்பு எனும் செடியில் பூத்த அழகிய காதலர்கள் நாம்!!! வாடா மலர்கள் நாம் பிறர் சூடா மலர்கள் நாம்!!! |
| மணிரத்னத்தின் சினிமா - யமுனா ராஜேந்திரன் Posted: 09 Aug 2015 08:52 PM PDT http://www.mediafire.com/download/db5al1t7irp7i2u/Maniratnathin+Cinema.pdf என்றும் அன்புடன் செல்லா |
| பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை Posted: 09 Aug 2015 07:52 PM PDT I went to a party Mom, I remembered what you said. You told me not to drink, Mom, So I drank soda instead. I really felt proud inside, Mom, The way you said I would. I didn't drink and drive, Mom, Even though the others said I should. I know I did the right thing, Mom, I know you are always right. Now the party is finally ending, Mom, As everyone is driving out of sight. As I got into my car, Mom, I knew I'd get home in one piece. Because of the way you raised me, So ... |
| மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு Posted: 09 Aug 2015 04:24 PM PDT பாம் ஆயில் மற்றும் மூலிகைகளை கொண்டு புதிய சமையல் எண்ணெய் ஒன்றை மலேசிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கேன்சர் மற்றும் இதய நோய்களை கட்டுப்படுத்தும் இந்த எண்ணெய்யை மீண்டும் மீண்டும் 80 தடவைகளுக்கு மேல் சமையலுக்கு பயன்படுத்த முடியும். இதனால், எந்த பக்கவிளைவும் ஏற்படாது என்கின்றனர் இதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள். அப்தால் ஆயில் என்ற இந்த சமையல் எண்ணெய் ரூடாஸியே எனும் மூலிகை சாற்றுடன் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மூலிகையானது சமையல் எண்ணெய்யை ஒரு முறை பயன்படுத்திய பிறகும் கூட அப்படியே புதியது ... |
| சமையல் எரிவாயு மானியம்: தமிழகத்தில் 1.24 லட்சம் பேர் ஒப்படைப்பு Posted: 09 Aug 2015 03:48 PM PDT தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் 1.24 லட்சம் பேர் சமையல் எரிவாயு மானியத்தை திரும்ப ஒப்படைத்துள்ளனர் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். - இதுவரை நாடு முழுவதும் 3 எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 17.74 லட்சம் பேர் மானியம் வேண்டாம் என ஒப்படைத்துள்ளதன் மூலம் மானியத் தொகையாக ஆண்டுக்கு சுமார் ரூ.847 கோடிக்கும் மேல் மிச்சமாகியுள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். - - |
| Posted: 09 Aug 2015 12:18 PM PDT ![]() |
| முஹம்மத் ஸர்பான் கவிதைகள் - தொடர் பதிவு ! Posted: 09 Aug 2015 12:13 PM PDT வெண் மேக மை எடுத்து இருள் மேகம் கை எடுத்து எழுதிய கவிதை நிலா..... |
| தமிழக வனத்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் எம்.எஸ்.எம்.ஆனந்தன் Posted: 09 Aug 2015 09:29 AM PDT தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீண்டும் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்துவைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சி, ஆளுநர் மாளிகையில் நடந்தது. இந்த நிகழ்வில், முதல்வர் ஜெயலலிதா, தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் அனைவரும் குழுபுகைப்படம் எடுத்துக் கொண்டனர். திருப்பூர் வடக்கு தொகுதி ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
