Tamil News | Online Tamil News |
- செம்மர கடத்தலில் ரூ.100 கோடி குவித்த சென்னை நபர்... சிக்கினார் :துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றவர் மும்பையில் கைது
- நாடு முழுவதும் என்.ஜி.ஓ., தில்லு முல்லு...அம்பலம்: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல்
- காங்., தொடர்ந்து பிடிவாதம் பார்லி., முடங்கும் அபாயம்
- மா.செ.,க்கள் பட்டியல் வெளியீட்டில் தாமதம் ஏன்? அ.தி.மு.க., தலைமைக்கு எட்டிய அதிர்ச்சி தகவல்
- பூரண மதுவிலக்குக்கு முன்னுரிமை தர திட்டம்? தி.மு.க., தேர்தல் அறிக்கை குழு இன்று கூடுகிறது
- தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் 7ல் பிரதமர் மோடி அறிவிப்பு
- த.மா.கா.,வை கரைப்பதில் இளங்கோவன் தீவிரம் கட்சியை காப்பாற்ற போராடும் வாசன்
- அலைபேசி டவரில் சசிபெருமாளுக்கு நடந்தது என்ன?: ஜெயசீலன் விளக்கம்
- மெட்ரோ ரயிலில் 10 லட்சம் பேர் பயணம்
- தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும்: வருண் கருத்தால் பா.ஜ.வில் சலசலப்பு
Posted: ![]() திருப்பதி:செம்மர கடத்தல் மூலம், 100 கோடி ரூபாய் குவித்த, சென்னை நபர் சிக்கினார். துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றவரை, மும்பையில், ஆந்திர போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்துார், கடப்பா உட்பட, சில மாவட்டங்களில் உள்ள வனங்களில் இருந்து, விலை உயர்ந்த செம்மர கட்டைகள் வெட்டப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இந்த கடத்தல் தொழிலில், ஆந்திரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெரிய கும்பல் ஈடுபட்டிருப்பதும், அவர்களுக்கு முக்கிய புள்ளிகள் சிலர் உதவி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, செம்மர கடத்தலை தடுக்க, கடும் ... |
நாடு முழுவதும் என்.ஜி.ஓ., தில்லு முல்லு...அம்பலம்: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் Posted: ![]() புதுடில்லி:இந்தியாவில், பள்ளிகளை விட இரு மடங்குக்கும் அதிகமாக, என்.ஜி.ஓ., எனப்படும், அரசுசாரா அமைப்புகள் உள்ளன. சமூக அமைப்பு பதிவு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட என்.ஜி.ஓ.,க் களில் பெரும்பாலானவை, ஆண்டு வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் செயல்படுவது, சி.பி.ஐ., திரட்டிய தகவல்கள் மூலம் அம்பலமாகி உள்ளது. என்.ஜி.ஓ.,க்கள் செயல்பாடு குறித்து பல்வேறு சந்தேகங்களை குறிப்பிட்டு, மூத்த வழக்கறிஞர், எம்.எல்.சர்மா, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட், மொத்த என்.ஜி.ஓ.,க்கள் எண்ணிக்கை, அவை தாக்கல் செய்துள்ள ஆண்டு கணக்கு ... |
காங்., தொடர்ந்து பிடிவாதம் பார்லி., முடங்கும் அபாயம் Posted: ![]() புதுடில்லி:பார்லிமென்டை அமளி யால் முடங்குவதை தடுக்கும் நோக்குடன், மத்திய அரசு, இன்று கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில், சர்ச்சைக்குள்ளான மூன்று பா.ஜ., தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து, கட்டாயம் விவாதிக்க வேண்டுமென, காங்., வலியுறுத்தி உள்ளது. சர்ச்சை:லலித் மோடி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட, 'மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, வியாபம் ஊழலில் சிக்கிய ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர், பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்' என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், ... |
மா.செ.,க்கள் பட்டியல் வெளியீட்டில் தாமதம் ஏன்? அ.தி.மு.க., தலைமைக்கு எட்டிய அதிர்ச்சி தகவல் Posted: ![]() அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் தேர்வில், பல குழப்பங்களும் உள்ளடி வேலைகளும் இருப்பதால், அறிவிப்பு தள்ளிப் போவதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க., உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்து, வட்ட செயலர் பதவிகளுக்கான நிர்வாகிகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். பகுதி செயலர், நகர, ஒன்றிய, மாவட்ட செயலர்கள் பதவிகளுக்கான நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. மூன்று பேர் பட்டியல்: இதில், மாவட்ட செயலர்கள் பட்டியலை விரைந்து வெளியிட, அ.தி.மு.க., தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, மாவட்டம் தோறும், மூன்று பேரை, கட்சித் தலைமைக்கு பரிந்துரை செய்ய, மண்டல பொறுப்பாளர்கள் ... |
பூரண மதுவிலக்குக்கு முன்னுரிமை தர திட்டம்? தி.மு.க., தேர்தல் அறிக்கை குழு இன்று கூடுகிறது Posted: ![]() தி.மு.க.,வில், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள, ஒன்பது பேர் குழு, சென்னையில் இன்று கூடி, முதல் கட்ட ஆலோசனையை துவங்குகிறது. இக்கட்சியின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகளில், பூரண மதுவிலக்குக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என, தெரியவந்துள்ளது.தமிழகத்தை ஆளும், அ.தி.மு.க., ஆட்சியின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு மே மாதம் முடிகிறது. அதற்கு முன், தேர்தல் நடத்தப்பட வேண்டும். இன்னும், ஒன்பது மாத அவகாசம் உள்ள நிலையில், தேர்தல் பணிகளை, தி.மு.க., இப்போதே துவங்கி உள்ளது.சட்டசபை தேர்தலுக்கு என்னென்ன வாக்குறுதிகள் வழங்கலாம் என்பது குறித்து ... |
தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் 7ல் பிரதமர் மோடி அறிவிப்பு Posted: ![]() வல்லுார் அனல் மின் நிலையத்தில் இருந்து,தமிழகத்திற்கு, கூடுதலாக, 112 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட உள்ளது. தேசிய அனல் மின் கழகமான - என்.டி.பி.சி., மற்றும் தமிழ்நாடு மின் வாரியம் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம் வல்லுாரில், தலா, 500 மெகாவாட் திறனுடைய, மூன்று அலகுகளுடன் கூடிய அனல் மின் நிலையம் அமைத்துள்ளன. தற்போது இங்கு, வணிக ரீதியாக மின் உற்பத்தி நடந்து வருகிறது. இங்கு இருந்து, தமிழகத்திற்கு, 1,040 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை கடற்கரை சாலையில் உள்ள, சென்னை பல்கலை கழக நுாற்றாண்டு விழா அரங்கில் வரும், 7ம் தேதி, தேசிய ஜவுளி நெசவாளர் ... |
த.மா.கா.,வை கரைப்பதில் இளங்கோவன் தீவிரம் கட்சியை காப்பாற்ற போராடும் வாசன் Posted: ![]() த.மா.கா.,விலிருந்து விலகி, காங்கிரசில் இணைய விரும்பும் முக்கிய பிரமுகர்களுக்கு, காங்கிரசில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, பலரும் த.மா.கா.,வில் இருந்து காங்கிரஸ் பக்கம் தாவ, தயாராகி வருகின்றனர். தமிழக காங்கிரசிலிருந்து, த.மா.கா., பிரிந்த பின், தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது ராகுலின் விருப்பமாக உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன், தமிழக காங்கிரசை ஓரம்கட்டி வைத்திருந்த ராகுல், தற்போது தமிழகத்தின் மீது அதிக அக்கறை செலுத்த துவங்கியுள்ளார். வாசன், காங்கிரஸ் ... |
அலைபேசி டவரில் சசிபெருமாளுக்கு நடந்தது என்ன?: ஜெயசீலன் விளக்கம் Posted: ![]() நாகர்கோவில்:சசிபெருமாள் இறப்பதற்கு முன்னர் அலைபேசி டவரில் நடந்தது என்ன என்பது பற்றி அவருடன் டவரில் ஏறிய உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் விளக்கமளித்த்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:டாஸ்மாக் கடையை அகற்ற மதுபோதை ஒழிப்பு மக்கள் இயக்கம் சார்பில் தீக்குளிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நானும், சசி பெருமாளும் மண்ணெண்ணை பாட்டிலுடன் அலைபேசி டவரில் ஏறினோம். பாதி துாரம் ஏறியதும் களைப்பு காரணமாக நான் இருந்து விட்டேன். ஆனால் சசி பெருமாள் உச்சிவரை சென்று விட்டார். அவர் எனக்கு மேலே சுமார் 100 அடி உயரத்தில் இருந்ததால் அவருடன் ... |
மெட்ரோ ரயிலில் 10 லட்சம் பேர் பயணம் Posted: ![]() சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய, ஒரு மாதத்தில், 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். நேர மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.சென்னையில், ஆலந்துார் - கோயம்பேடு இடையே, கடந்த ஜூன் 29ம் தேதி, மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியது. முதல் நாள் மட்டும், 40 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். மின்சார ரயில், மேம்பால ரயில் சேவையுடன் இணைப்பு இல்லாததாலும், மெட்ரோ ரயிலில் தினமும் பயணிப்போர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. 15 நிமிடங்களுக்கு...: பயணக் கட்டணம் அதிகம் என்றாலும், சீசன் டிக்கெட் எடுக்கும் வசதி இல்லை. அதனால், தினமும் செல்லும் அலுவலகப் பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் ... |
தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும்: வருண் கருத்தால் பா.ஜ.வில் சலசலப்பு Posted: ![]() புதுடில்லி: தூக்கு தண்டனையை இந்தியாவில் ஒழித்துக் கட்ட வேண்டும் என பா.ஜ. எம்.பி. வருண் கூறியுள்ளார். இவரின் கருத்து பா.ஜ.வில் சலசலப்பபை ஏற்படுத்தியுள்ளது.1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன், 53 கடந்த மாதம் 30-ம் தேதி நாக்பூர் சிறையில் அதிகாலை தூக்கலிடபட்டான். யாகூட் தூக்கலிடப்பட்டதை காங். உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன. இது குறித்து நேற்று பேட்டியளித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, இந்தியாவில் தூக்கு தண்டனையை நீக்கும் கேள்விக்கே இடமில்லை என்றார். இந்நிலையில் ஆங்கில இதழ் ஒன்றிற்கு பா.ஜ. எம்.பி. வருண் ... |
You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 02,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |