ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அக்னிச் சிறகுகள்-எ.பி.ஜே.அப்துல் கலாம்-சுயசரிதம்-முழு நூல்
- ஆலமரம்
- நாம் அத்தனை பேரும் பயங்கரவாதிகளாக ஆக முடியாது!
- மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
- ஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்!
- தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்
- பாமரர் தேவாரம்
- “”திடீர்னு கொஞ்சறா! திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா!”
- முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு!
- விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
- சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல்
- தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம்
- அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொடர்ந்து மக்கள் அஞ்சலி
- உலகச் செய்திகள்!
- ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பொன்மொழிகள்
- சிந்தனைத் துளிகள்
- பச்சோந்திகள் நிறம் மாறும் விதம்
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- வாழ்வின் புதிர்களும் ஞானியின் திறவுகோலும் - சத்குரு ஜக்கி வாசுதேவ்.
- பள்ளி மடல்...
- பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே
- மூளைக்குணவு
- விதி
- கணினியைத் தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்: இளவல்களுக்கு இளையராஜா அறிவுரை!
- சம்போ சிவ சம்போ -சத்குருவுடன் கைலாஷ் மானசரோவர் உற்சாக யாத்திரை .
- சூடான இட்லி சாம்பார்
- நான் நல்லாயிருவேன்ல…
- சம்யுக்தா - யத்தனபூமி சுலோசனாராணி - மொழி பெயர்ப்பு நாவலை டவுன்லோட் செய்ய.
- கண்ணாமூச்சி விளையாட்டு - படுதலம் சுகுமாரன் நாவலை டவுன்லோட் செய்ய.
- 28-7-2015 - அவள் விகடன் + 22-7-2015- ஆனந்த விகடன் + 25-7-2015- டைம் பாஸ் விகடன்
- தெற்கத்தி தெய்வங்கள் - ப்ரியா கல்யாணராமன் நூலினை டவுன்லோட் செய்ய.
- உயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும் - வெ .தமிழழகன் நூல்.
- 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
- மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல் 1
- நுனிப் புல் திண்போமா ?
- பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு
- வங்கதேச நிலப்பகுதியில் வசிக்கும் 37 ஆயிரம் மக்கள் இனிமேல் இந்தியர்கள்!
- நம்ம குலதெய்வம்
- உயிரற்ற ஆட்டக்களத்தில் வெளுத்துக் கட்டும் சூரர்களா ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள்?
- எதை நீ சாதித்தாய் - கலாம்
- சொத்துக் குவிப்பு வழக்கு : முன்னேற்றமா ? பின்னேற்றமா ?
- என்னுடைய தமிழ் ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)
- நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்!
- குலதெய்வ வழிபாடு
அக்னிச் சிறகுகள்-எ.பி.ஜே.அப்துல் கலாம்-சுயசரிதம்-முழு நூல் Posted: 31 Jul 2015 09:40 PM PDT நண்பர்களே! எ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் சுயசரித நூலான அக்கினிச்சிறகுகள் என்ற நூலை மின்நூலாக உங்களுக்காக வழங்குகின்றேன். . பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள். http://www.mediafire.com/download/4zeek32yd5bwnma/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf |
Posted: 31 Jul 2015 09:34 PM PDT ஆலமரம் ஆதிகாலம் தொட்டே இந்தியாவில் இருந்து வருகிறது. குறிப்பாக, இமய மலைச்சாரல் காடுகளிலும், இந்திய தீபகற்பத்தின் மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகளிலும் காணப்படுகிறது. சாலை ஓரங்களிலும், ஆலயங்களின் அருகிலும், ஆறுகளின் கரை ஓரங்களிலும் காணப்படுகிறது. கிராமங்களில் பெருமளவு ஆலமரங்கள் வளர்கின்றன. பரந்து விரிந்து நிழல் தருவதால் கிராம மக்கள் கூடும் இடமாகவும், கிராம வாணிபம் நடைபெறும் இடமாகவும், கால்நடைகளின் உறைவிடமாகவும், கிராம சங்கங்களின் கூட்டம் நடத்தும் இடமாகவும் ஆலமரங்கள் திகழ்கின்றன. இந்திய ... |
நாம் அத்தனை பேரும் பயங்கரவாதிகளாக ஆக முடியாது! Posted: 31 Jul 2015 09:02 PM PDT இன்றைக்கு நம்முடைய ஞாபக அடுக்குகளில் புதைந்துவிட்ட 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை மீண்டும் நினைவுகூர்வது பலருக்குச் சங்கடம் அளிப்பதாக இருக்கலாம். எனினும், நியாயத்தின் உண்மையை நோக்கி நகர வேண்டும் என்றால், ஆரம்பக் கதைகளை நாம் புறக்கணிக்க முடியாது. காட்சி ஊடகங்களால் 'தேசத்தின் மீதான போர்' என்று வர்ணிக்கப்பட்ட 2008 மும்பை தாக்குதலைவிடவும் பெரும் உயிர்ச் சேதத்தை உருவாக்கிய பயங்கரவாத நடவடிக்கை அது. 1993 மார்ச் 12 அன்று மதியம் 1.33-க்கும் 3.40-க்கும் இடையே மும்பை அன்றைய பம்பாய் - கிட்டத்தட்ட ... |
மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து! Posted: 31 Jul 2015 08:36 PM PDT எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஷஸ் தொடரில் 2-1 என்று முன்னிலை பெற்றுள்ளது. வெற்றிக்குத் தேவையான 121 ரன்களை எடுக்க களமிறங்கி குக், லித் விக்கெட்டுகளை மட்டும் இழந்து 124 ரன்கள் எடுத்து 3-ம் நாள் ஆட்டத்தில் பாதியிலேயே வெற்றியை ஈட்டியது. கிட்டத்தட்ட இரண்டரை நாளில் ஆஸ்திரேலியாவை காலி செய்தது. இயன் பெல் 10 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தும், ஜோட் ரூட் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாக திகழ்ந்தனர். அலிஸ்டர் ... |
ஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்! Posted: 31 Jul 2015 08:05 PM PDT தமிழ் சினிமா வில் மாறுபட்ட பயணத்திரைக்கதை என்று பார்த்தால் நந்தலாலா, அன்பே சிவம் போன்றவற்றை சொல்லலாம்.2 மே வர்த்தக ரீதியாக தோல்விதான்.இருந்தும் துணிச்சலாக அந்தபாணி கதையை தேர்வு செய்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஒரு ஷொட்டு ஹீரோ ஆம்புலன்ஸ் எமெர்ஜென்சி மெடிக்கல் டெக்னீஷியன். அவருக்கு ஒரு உதவியாளர் கம் டிரைவர். இன்னொரு ஹீரோ 60 வயசு பெரியவர்.முதல்வர் இருந்தும் இல்லாத தமிழகம் போல் மகன் இருந்தும் இல்லாமல் தனிமையில் வசிக்கும் அவர் ஆம்புலன்சை பயணம் செய்யும் தேராக பயன்படுத்திக்கொள்ளும் ஜாலி ... |
Posted: 31 Jul 2015 08:02 PM PDT தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் ரமணி இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம். 01. Pantoum: பாண்டி Pantoum - Wikipedia, the free encyclopedia இந்த வடிவத்தைத் தமிழில் 'பாண்டி' என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் தம் 'சந்தவசந்தம்' மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w இந்த pantoum--'பாண்டி' வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்: Stanza ... |
Posted: 31 Jul 2015 07:57 PM PDT பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
“”திடீர்னு கொஞ்சறா! திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா!” Posted: 31 Jul 2015 07:46 PM PDT - ""என் மனைவிக்கு அடிக்கடி "மல்டிபிள் பர்சனாலிட்டி' வரும் போல!" ""எப்படிச் சொல்றே?" ""திடீர்னு கொஞ்சறா! திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா!" - -ம.நிவேதா, சிக்கல் =. - ""பல்லி விழுந்தா அது நடக்கும், இது நடக்கும்…னு சொல்றதெல்லாம் கப்சா…" ""அப்புறம்…?" ""பல்லி விழுந்தா, கொஞ்ச நேரத்துக்குப் பிறகு பல்லிதான் நடக்கும்!" -வி.ரேவதி, சென்னை. |
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு! Posted: 31 Jul 2015 06:45 PM PDT ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் நடந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில், நாடு முழுவதும் இருந்து, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து, 5 கி.மீ.,யில் உள்ள பேக்கரும்பு வரை, எங்கு பார்த்தாலும் மனிதக் கூட்டமாக தென்பட்டது. இறுதி அடக்கம் நடந்த மைதானத்தைச் சுற்றி ஏராளமானோர் கூடினர். பலர், அருகில் இருந்த வீடு, கட்டட மாடிகள், தென்னை, பனை மரங்கள் மீது ஏறி நின்று, இறுதிச் சடங்கை பார்த்தனர். மைதானத்தின் பின் பகுதியில் கூடிய கூட்டத்தினர், திடீரென தடுப்புகளை ... |
விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! Posted: 31 Jul 2015 06:15 PM PDT விண்டோஸ் 10 - நேற்றிரவு எனக்கு கிடைத்தது, ராஜாவும் விண்டோஸ் 10-க்கு மாறிவிட்டார். இப்பொழுது என் மடிக்கணினி வேகமாக இயங்குவது போல் தெரிகிறது, ஒரு வேளை புது விண்டோஸ் என்பதால் இவ்வாறு உள்ளதா எனத் தெரியவில்லை. Microsoft edge browser சிறப்பாக உள்ளது. தரவிறக்க வேகமும் அதிகமாக உள்ளது. இப்பொழுது அதிலிருந்துதான் பதிவுகள் எழுதுகிறேன்! file explorer அனைத்தும் ஒரே வெள்ளையாக உள்ளது எனக்குப் பிடிக்கவில்லை. இதனை மாற்ற வழி உள்ளதா எனக் கூறுங்கள்? NHM writter-ல் shift key அழுத்தி எழுத சிரமமாக ... |
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Posted: 31 Jul 2015 05:54 PM PDT - காந்தியவாதி சசிபெருமாள் கன்னியாகுமரியில் இன்று காலமானார். கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்திய நிலையில் அவரது உயிர் பிரிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. - காந்தியவாதியான சசிபெருமாள் தொடர்ந்து மதுவற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்ற தொடர்ந்து போராடி வந்தார். இதற்கென பல முறை அவர் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தியுள்ளார். போலீசார் அவரைக் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்த போதும், அங்கேயே தனது உண்ணாவிரதத்தை அவர் தொடர்ந்தவர். - இந்நிலையில், மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை ... |
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் Posted: 31 Jul 2015 02:24 PM PDT அப்துல் கலாமின் கறைபடாக் கரங்கள் கடமையின் வரங்கள் கண்ணியத்தின் உரங்கள் கட்டுப்பாட்டின் சிகரங்கள் இந்திய மாணாக்கர்களைக் கண்ணீரில் மிதக்கச் செய்ய இயற்கையே உனக்கு ஏன் இந்த அவசரம் ?! - புலவர் தஞ்சை ஆழி நேற்றைய இந்திய சுதந்திரகால சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், அதன் பக்கங்களில் தேசத் தலைவர்கள் மகாத்மா காந்தி போன்றோரின் பெயர் மேலோங்கி இருக்கும். ஆனால், தற்கால இந்திய சரித்திரத்தைப் புரட்டினால் அதில் கலாம் என்ற வார்த்தையும் வைரம்போல் ... |
அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொடர்ந்து மக்கள் அஞ்சலி Posted: 31 Jul 2015 02:18 PM PDT அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொடர்ந்து மக்கள் அஞ்சலி: 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது உடல் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது. ராமேசுவரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த ... |
Posted: 31 Jul 2015 02:10 PM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பொன்மொழிகள் Posted: 31 Jul 2015 01:59 PM PDT நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும். இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்! இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்! அல்லாவின் ஆணை இல்லாமல் எதுவுமே நமக்குக் கிடைக்காது! அவரே நமது பாதுகாவலன்! ... |
Posted: 31 Jul 2015 01:53 PM PDT ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும். - விவேகானந்தர். மனிதன் முன்னேற ஏழு பாதைகள் பகுத்தறிவு கல்வி சிந்தனையில் உண்மை அன்புடமை நன்னடத்தை கட்டுப்பாடு உள்ள குடும்பம் நல்ல ஆட்சி - சீன அறிஞர் கன்பூசியஸ் "வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க" - தாகூர் ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன். -அண்ணல் காந்தி புதியதோர் ... |
பச்சோந்திகள் நிறம் மாறும் விதம் Posted: 31 Jul 2015 01:38 PM PDT பச்சோந்திகள் இடத்திற்கு ஏற்றவாறு தம் நிறத்தை மாற்றிக்கொண்டு எதிரிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்கின்றன. அதே வேளையில் தமக்கு வேண்டிய இரையை பிடிப்பதற்கு மறைந்து கொள்ள வசதியாகவும் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன. பச்சோந்திகள் எல்லாவற்றாலும் நினைத்தவுடன் நிறம் மாற முடியாது. சிலவகை பச்சோந்திகள் தான் நிறம் மாறும் குணம் கொண்டவை. பிங்க், நீலம், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, கருப்பு, பிரவுன், மஞ்சள் என்று நினைத்த நொடியில் நிறத்தை மாற்றிக் கொள்ளும். பச்சோந்திகள் இடத்துக்கு தகுந்த மாதிரி நிறத்தை மாற்றிக்கொள்ளும் ... |
கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 31 Jul 2015 01:36 PM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
வாழ்வின் புதிர்களும் ஞானியின் திறவுகோலும் - சத்குரு ஜக்கி வாசுதேவ். Posted: 31 Jul 2015 01:28 PM PDT சத்குரு ஜக்கி வாசுதேவ் - வாழ்வின் புதிர்களும் ஞானியின் திறவுகோலும் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும் . http://www.mediafire.com/download/52lb8xkr7ouogi5/valvin+puthirgalum+janiyin+thiravukolum+sathguru.pdf |
Posted: 31 Jul 2015 12:17 PM PDT பரிட்சையில் பாஸுன்னு மகனுக்கு பள்ளி மடல் எனக்கு முன்னரே வந்தது கட்டண மடல் ஒன்றாம் வகுப்பு ஓறாயிர விளக்கங்கள் கொட்ட கொட்ட எழுத்தில் கட்டணங்கள் குதிரையேற்றம் நீச்சல், குருப் டான்ஸ் சோலே நடனம் கிடார், மிருதங்கம் பக்க வாத்தியங்கள் பக்காவாய் கட்டணங்கள் பள்ளி நிதி பருவ நிதி பாடங்கள் எடுக்க நிதி சாப்பாட்டு கட்டண நிதி இதுக்கெல்லாம் ஏது நீதி? ஒத்தையிலே போகையிலே கத்தி காட்டி மிரட்டுவது போல் ஜுன் மாசம் வந்தாலே ஜீரம் வருது சாமிகளே கரங்களிலே கசங்கிய கரன்சி - கட்டி பில்லு ... |
பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே Posted: 31 Jul 2015 12:06 PM PDT நண்பர்களே, எனக்கு பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை. ஈகரையில் தேடினேன். கிடைத்தது. ஆனால் கடைசி பாகத்தின் அரை பகுதி மட்டுமே உள்ளது. யாராவது எனக்கு முழு புத்தகமும் கிடைக்கும் படி செய்வீர்களா? நன்றி. |
Posted: 31 Jul 2015 12:04 PM PDT ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
Posted: 31 Jul 2015 12:03 PM PDT ![]() வேண்டும் என்று விரும்பி ஏற்ற உறவு வேதனையைத் தந்தால், விதியே என்று இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை..! |
கணினியைத் தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்: இளவல்களுக்கு இளையராஜா அறிவுரை! Posted: 31 Jul 2015 12:00 PM PDT இன்றைய இசை மிகவும் கேவலமான பாதையில் போய் கொண்டிருக்கிறது என்று இசையமைப்பாளர் இளையராஜா காட்டமாக தெரிவித்தார். மறைந்த பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு புகழஞ்சலி செய்யும் வகையில் இளையராஜா ஒரு இசைநிகழ்ச்சி நடத்தினார். 'என்னுள்ளில் எம்.எஸ்.வி' என்று பெயரில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியின் மூலம் வசூலான தொகையினை எம்.எஸ்.வியின் குடும்பத்தினருக்கு அளித்தார் இளையராஜா. இந்நிகழ்ச்சியில் இளையராஜா பேசியது, "எம்.எஸ்.வி அண்ணா உலகமகா இசையமைப்பாளர்தான் ,உலகப்புகழ் பெற்ற எந்த இசையமைப்பாளருக்கும் ... |
சம்போ சிவ சம்போ -சத்குருவுடன் கைலாஷ் மானசரோவர் உற்சாக யாத்திரை . Posted: 31 Jul 2015 11:53 AM PDT ப்ரியா கல்யாணராமன்-சம்போ சிவ சம்போ நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . நண்பர்களே...இது வலைதளத்தின் மறு பதிவு .. ப்ரியா கல்யாணராமன் அவர்களின் படைப்பாக குமுதத்தில் வெளிவந்த சம்போ சிவ சம்போ...!-என்ற கட்டுரை தொகுப்பு மின்நூல் வடிவில் உங்களுக்காக... பதிவிறக்கி படித்து மகிழுங்கள்... தெளிவான புதிய டவுன்லோட் லிங்க் கீழே இணைத்துள்ளேன் . http://www.mediafire.com/download/je1z7v2r70j1h3u/sambo+siva+sambo+priya+kalyana+raman+.pdf |
Posted: 31 Jul 2015 11:52 AM PDT - புரதச் சத்து பற்றிப் பேசும்போதே, புலால் உணவின் புரதத்தைப் பற்றிதான் அதிகம் சொல்கிறார்கள். சமீபகாலத்தில், செய்யாறு பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தேன். அப்போது ஒரு சிறுவன், மரத்தடி நிழலில் முளைத்த காளான்களைப் பறித்துக்கொண்டு, எதிரில் இருந்த அவனுடைய குடிசைக்குள் புகுந்தான். இதை எதற்குப் பறிக்கின்றாய் என்று அவனைக் கேட்க, 'அம்மா பறிக்கச் சொன்னாங்க. கூட்டு செய்யத்தான்' என்று பதிலளித்தான். மலைவாழ் மக்களும், சில கிராம மக்களும் பல காலமாக ... |
Posted: 31 Jul 2015 11:11 AM PDT - கோவையில் இருந்து பெங்களூரு நோக்கி அந்த வேன் சென்று கொண்டு இருந்தது. – வேனிற்குள் மனநலம் பாதிக்கப்பட்ட 28 பேர் இருந்தார்கள், அவர்களில் ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு. – பிறந்த இடம் வளர்ந்த இடம் இருந்த இடம் இப்போது போகும் இடம் என்று எதுவும் தெரியாதவர்கள். – இதில் பலரை பார்த்தால் இவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களா?என்று நினைக்குமளவிற்கு தௌிவான முகத்துடனும் அமைதியாகவும் காணப்படுகின்றனர். – எதனாலோ யாரோலா ஏற்பட்ட மனஅழுத்தம் தாங்காமல் மனநோயாளியானவர்கள் இவர்கள். – கோவையில் பல ... |
சம்யுக்தா - யத்தனபூமி சுலோசனாராணி - மொழி பெயர்ப்பு நாவலை டவுன்லோட் செய்ய. Posted: 31 Jul 2015 10:58 AM PDT யத்தனபூமி சுலோசனாராணி - சம்யுக்தா மொழி பெயர்ப்பு நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . தமிழில் -கெளரி கிருபானந்தன் டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/u1mtbsquwsv2trk/YSR-Samuktha.pdf |
கண்ணாமூச்சி விளையாட்டு - படுதலம் சுகுமாரன் நாவலை டவுன்லோட் செய்ய. Posted: 31 Jul 2015 10:57 AM PDT |
28-7-2015 - அவள் விகடன் + 22-7-2015- ஆனந்த விகடன் + 25-7-2015- டைம் பாஸ் விகடன் Posted: 31 Jul 2015 10:57 AM PDT http://www.mediafire.com/download/rm91kwny7mtny51/aval+vikatan+28-7-2015%282%29.படப் http://www.mediafire.com/download/oz155y387jalu2j/AV22-07-2015.படப் http://www.mediafire.com/download/5k9qg0svksfjl31/T25-07-2015.pdf |
தெற்கத்தி தெய்வங்கள் - ப்ரியா கல்யாணராமன் நூலினை டவுன்லோட் செய்ய. Posted: 31 Jul 2015 10:56 AM PDT ப்ரியா கல்யாணராமன் - தெற்கத்தி தெய்வங்கள் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . தெற்கத்தி தெய்வங்கள், ப்ரியா கல்யாணராமன் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/crdlmemid1578kt/Theivangal+priya+kalyanaraman.pdf |
உயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும் - வெ .தமிழழகன் நூல். Posted: 31 Jul 2015 10:56 AM PDT கீரைகளும், கிழங்குகளும் இயற்கை அளித்த கொடை. நம் உடம்பு சூடு, குளிர் ஆகியவற்றை மையமாக வைத்து இயங்குகிறது. கீரைகள் மற்றும் கிழங்குகளின் தன்மையும் இத்தகையதே. சில கீரைகள் உடலுக்கு குளிர்ச்சியையும், சில சூட்டையும் தரவல்லது. எது எப்படி இருந்தாலும் கீரைகளும், கிழங்குகளும் ஊட்டச் சத்துக்களை அள்ளித் தருபவை; வைட்டமின்களை அளித்து நோய்களைத் தீர்க்கும் வல்லமை படைத்தவை. உதாரணமாக, அகத்திக்கீரை வைட்டமின் 'ஏ' சத்து நிறைந்தது. இதைச் சாப்பிடுவதால் ஜலதோஷம், பித்தம் நீங்கும் என்கிறார் நூலாசிரியர் வெ.தமிழழகன். ... |
350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக . Posted: 31 Jul 2015 10:54 AM PDT 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ... |
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல் 1 Posted: 31 Jul 2015 10:00 AM PDT ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன் ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய் சைவ மரபில் மாணிக்கவாசகர் ஒளி சரீரம் அடைந்தவர் என்பதை பலர் அறிவார்கள் நாயன்மார்கள் அனைவரும் ஒளி சரீரம் பெற்று மரணமில்லா பெருவாழ்வை பெற்றவர்கள் அல்லர் ஆனால் மாணிக்கவாசகர் ... |
Posted: 31 Jul 2015 09:17 AM PDT நுனிப் புல் திண்போமா ? அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ... |
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு Posted: 31 Jul 2015 05:09 AM PDT ஏவுகணை எழுந்ததொன்று இராமசு ரத்தில் எக்காள மிட்டவரின் இடுப்பொ டிக்க சாவுகணை வந்ததென்று எதிரி எல்லாம் சரணடைந்தார் ஆயுதத்தை மூடி வைத்தார் நோவுகளே தீண்டியவன் இளமை எல்லாம் நோகாமல் நோற்பதல்ல வெற்றி என்னும் பாவுகளை அவன்நூற்றான்; படகு ஓட்டும் பரதவனே பாரதத்தின் தலைவ னானான் சுக்கலாகச் சிதறவிட்டீர் பொக்ரான் சக்தி சோதனையில் வல்லரசு நாட்டை யெல்லாம் கக்கனைத்தான் எளிமை என்பார் அப்துல் கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர் நிக்காவே செய்யாமல் பிள்ளை பெற்று நேசமுடன் வளர்த்திட்ட கணியன் நீரே விக்கலெல்லாம் ... |
வங்கதேச நிலப்பகுதியில் வசிக்கும் 37 ஆயிரம் மக்கள் இனிமேல் இந்தியர்கள்! Posted: 31 Jul 2015 02:56 AM PDT டெல்லி: இந்தியா-வங்கதேசம் நடுவேயான நில எல்லை ஒப்பந்தம் சுமார் 40 வருடங்களுக்கு பிறகு செயல்படுத்தப்பட தொடங்கியுள்ளது. எனவே, இந்திய குடிமக்களாக 37 ஆயிரம்பேர் புதிதாக வர உள்ளனர். இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலை பெற்றபோது 'கிழக்கு பாகிஸ்தான்' என்று அழைக்கப்பட்ட பகுதியுடனான நில எல்லை, சர்ச்சைக்கிடமான வகையில் பிரிக்கப்பட்டது. - இந்திய நிலப் பகுதிக்குள் கிழக்கு பாகிஸ்தானுக்குச் சொந்தமான நிலத் திட்டுகளும், கிழக்கு பாகிஸ்தானுக்குள் இந்தியப் பகுதித் திட்டுகளும் சிக்கின. இதனால், பரஸ்பரம் இரு நாடுகளுமே ... |
Posted: 31 Jul 2015 01:21 AM PDT இந்த திரியில் உங்களுக்கு தெரிந்த உங்கள் குலதெய்வம் களின் வரலாற்றை பதிவு செய்யலாம் குலதெய்வங்களைப் பற்றி அறிய முற்பட்ட போது கிடைத்த பழையனூர் நீலியின் கதை. இந்தக் கதையுடன் வெள்ளாலர்களைப் பற்றிய தகவலும் வருகிறது என்பது கவணிக்கத் தக்கது. நீலியை இசக்கி என சில இனத்தவர் வழிபட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் திருவாலங்காட்டிலிருந்து பழையனூர் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதும் செய்தி. காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக ... |
உயிரற்ற ஆட்டக்களத்தில் வெளுத்துக் கட்டும் சூரர்களா ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள்? Posted: 31 Jul 2015 01:18 AM PDT ஆஷஸ் தொடர் 3-வது டெஸ்ட் போட்டியில், நேற்று முதல் நாளில் 37-வது ஓவரிலேயே 136 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா. இதனால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களின் உண்மையான திறமை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. ஆண்டர்சன் நேற்று ஆஸ்திரேலியாவின் பேட்டிங் உத்திகளின் போதாமையை அம்பலப்படுத்தினார். பந்துகள் ஸ்விங் ஆனால் இங்கிலாந்தில் ஆடினாலும் அல்லது தன் சொந்த மண்ணில் ஆடினாலும் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வும் என்றே தெரிகிறது. புள்ளி விவரங்களும் அவ்வாறே தெரிவிக்கின்றன. பொதுவாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பயணம் ... |
Posted: 31 Jul 2015 12:49 AM PDT எழுத இயலவில்லை நீ எழுந்து வா அய்யா உன் ஏவுகணையை என் இதயத்துள் பாய்த்து விட்டு சென்றாயே மதங்கள் எல்லாம் ஒன்று கூடி மனிதம் போற்றுகிறது பார் எழுந்து ஒரு முறை பார் எதை நீ சாதித்தாய் என ஆசிரியரை கண்டால் எழுந்தோடும் மாணவர்கள் கால் வலிக்க காத்திருக்கும் அதிசயத்தை ஒரு முறை எழுந்து பார் நீ எதை சாதித்தாய் என அரசியலுக்கு கூடி ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் எல்லாம் அமைதியாக வீற்றிருக்கும் கோலத்தை ஒருமுறை பார் நீ எதை சாதித்தாய் என எதிரியே இல்லா மனிதனாய் ... |
சொத்துக் குவிப்பு வழக்கு : முன்னேற்றமா ? பின்னேற்றமா ? Posted: 31 Jul 2015 12:49 AM PDT ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு என்ற நாடகத்தின் இறுதிக்காட்சி, கடந்த திங்களன்று புது தில்லியில் அரங்கேறியது. இந்த நாடகத்தின் சூத்திரதாரியான ஜெயலலிதா, இது குறித்து எந்த கவலையும் இல்லாமல், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கிக் கொண்டிருந்தார். _MG_1679new எப்போதும் போல, தங்கள் விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, அதிமுக வழக்கறிஞர்கள், சம்பந்தமே இல்லாமல், நீண்ட வரிசையில் நின்று, பார்வையாளர் அனுமதிச் சீட்டு வாங்கி நீதிமன்ற அறை எண் 12க்குள் முண்டியடித்துக் கொண்டு நின்றிருந்தார்கள். உயர்நீதிமன்றத்தில் ... |
என்னுடைய தமிழ் ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :) Posted: 30 Jul 2015 11:03 PM PDT நான் என்னுடைய தமிழ் ரெசிபிகளின் 'PDF' களை இங்கு பகிர்கிறேன்............ ..............நீங்கள் இவற்றை சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். பிள்ளை பெற்றவர்களுக்கான பத்திய சமையல் ! DOWNLOAD |
நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! Posted: 30 Jul 2015 07:49 PM PDT நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! மந்திரங்களில் தலை சிறந்தது காயத்ரி மந்திரம். 27 நட்சத்திரத்திற்குரிய காயத்ரி மந்திரத்தில் அவரவருக்குரிய காயத்ரி மந்திரத்தை தேர்ந்தெடுத்து தினம் காலையில் எழுந்து குளித்து பூஜையறையில் உட்கார்ந்து 108 முறை உங்கள் நட்சத்திரத்திற்குரிய காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும். சொல்லி முடித்ததும் நீர் அல்லது இளநீர் அருந்தவேண்டும். இந்த திரி இல் எல்லா நட்சத்திரங்களுக்கும் காயத்ரி மந்திரங்கள் போடுகிறேன், படித்து பலன் பெறுங்கள் |
Posted: 30 Jul 2015 02:42 PM PDT குலதெய்வ வழிபாடு என்பது குருபாராம்பரியம் போன்றதே . ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறக்கும் ஒரு ஆத்மா – மனிதனுக்கு அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனை கண்காணித்து பாதுகாப்பதில் அந்த குடும்பத்தின் காவல் தெய்வம் போல ஒரு ஆவி மண்டல சக்தி பொறுப்பெடுத்துக்கொள்கிறது . குடும்ப ஆண்டவர் என்பதாகவும் இந்த ஆவி மண்டலசக்தி அறியப்படும் . குரான் 13:11. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள் (மலக்குகள் ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |