Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தகவல்கள்: அகிம்சை என்னும் அமைதி வழியில்...
- அவசர அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்: தில்லி துணை நிலை ஆளுநருக்கு பாஜக கோரிக்கை
- லோக்பால் சட்டம் இயற்ற ஆம் ஆத்மி அரசுக்கு அச்சம்: காங்கிரஸ் சாடல்
- பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: காவல் ஆணையர் பஸ்ஸிக்கு தில்லி மகளிர் ஆணையம் கடிதம்
- தில்லியில் சூடுபிடிக்கும் போஸ்டர் விவகாரம்: ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக பாஜக விளம்பரம்
- தில்லி தொழில்நுட்பப் பல்கலை.யில் சர்வதேச தரத்தில் பாடத் திட்டங்கள்
- ஸ்டீபன் கல்லூரி முதல்வர் மீது கணிதப் பேராசிரியர் குற்றச்சாட்டு
- ஏழைகளுக்காக மருந்துகளை வழங்கும் "மெடிசின் பாபா'!: எம். வெங்கடேசன்
- உச்ச நீதிமன்ற வளாகத்தில் கடை வைக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி
- சசிபெருமாள் உடலைப் பெற உறவினர்கள் மறுப்பு:மது விலக்கு அறிவிப்பை வெளியிடுமாறு வேண்டுகோள்
- டிடிஏ துணைத் தலைவராக அருண் கோயல் பதவியேற்பு
- ரவி சுப்ரமணியத்துக்கு சிற்பி இலக்கிய விருது
- சிகிச்சையில் அலட்சியம் காட்டியதால் காலை இழந்த சிறுவன்: தில்லி மருத்துவர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்
- நீதி விசாரணை தேவை:கருணாநிதி வலியுறுத்தல்
- கலாமுக்கு எதிராக பாகிஸ்தான் விஞ்ஞானி கருத்து: தில்லியில் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
- தாது மணல் விவகாரம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை
- வாட் வரி மாற்ற எதிரொலி பாத்திரங்கள், மரச்சாமான்கள் விலை குறைகிறது
- செம்மரக் கட்டைகளை மீட்கக் குழு: ஆந்திர அரசு
- அரக்கோணம் அருகே சரக்கு ரயிலில் திடீர் தீ
- "16 நிமிடங்களில் 20 கி.மீ. கடந்த இதயம்'
- பணியின் போது உயிரிழந்த காவலர்கள் 10 பேரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி
- எஸ்.பட்டாபிராமன், என்.ஏ.ராமச்சந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
- முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி
- அனைத்துக் கட்சிக் கூட்டம்: காங்கிரஸ் நிபந்தனை
- ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை அனுப்பிய முதல் நாடு இந்தியா:இஸ்ரோ விஞ்ஞானி பெருமிதம்
- மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்
- பரவை முனியம்மாவுக்கு ரூ. 6 லட்சம் நிதியுதவி
- ஐ.எஸ். பயங்கரவாதத்தைத் தடுக்க புதிய உத்திகள்
- ஆக. 4 முழு அடைப்பு: வணிகர் சங்கம் ஆதரவு
- ஆட்சியர் அலுவலகத்தில் கலாம் உருவச் சிலை: பாமக வலியுறுத்தல்
- மீத்தேன் எதிர்ப்பு: காவிரி பாதுகாப்பு இயக்க ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
- டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி :கலிங்கப்பட்டியில் வைகோ தாய் தலைமையில் முற்றுகைப் போராட்டம்
- லொயோலா பள்ளி விளையாட்டுப் போட்டி
- தமிழக ரயில்வே திட்டங்கள்: அமைச்சரிடம் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
- அகில இந்திய தொழில்நுட்பத் தேர்வு: 140 பேர் பங்கேற்பு
- ரூ. 15 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகள் திருட்டு
- தங்கம் விலை:பவுனுக்கு ரூ.168 உயர்வு
- சசிபெருமாள் இறந்ததை காவல் துறை வேடிக்கைப் பார்த்தது: வைகோ குற்றச்சாட்டு
- தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு
- மதுரை, பாளையங்கோட்டையில் 101 டிகிரி வெயில்
- மாமல்லபுரம் கடற்கரை கோயில் அமைப்பின் புதிய வரைபடம் தயாரிக்கும் பணி தொடக்கம்
- காஞ்சிபுரம்
- தமிழிலக்கியத்தில் அறிவியல் கோட்பாடுகள்
- அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய 4 பேர் கைது
- சசிபெருமாள் மறைவு: வீரவணக்க அமைதிப் பேரணி
- ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
- ஆடிப்பெருக்கும் பன்னிரு தமிழ் மாதங்களும்!
- பெண் சிசு சாவு: அரசு மருத்துவமனை முற்றுகை
- இளம்பெண் மாயம்
- பயிர் அறுவடைப் பரிசோதனை: களப் பணியாளர்களுக்குப் பயிற்சி
- இந்தவாரம் கலாரசிகன்
- லாரி மீது மோதியதில் கார் ஓட்டுநர் சாவு
- பொது இ- சேவை மையங்களில் மின் கட்டணத்தைச் செலுத்தலாம்
- சொல் தேடல் -19
- கூடப்பாக்கம்
- நியமனம்
- புதை சாக்கடைப் பணிகள் தாமதம்: திருவள்ளூர் ஜே.என்.சாலையில் விபத்துகள் அதிகரிப்பு
- கிரிவல பக்தரின் கார் திருட்டு
- ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை
- திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
- முழு மது விலக்கை அமல்படுத்தக் கோரி தமிழகத்தில் ஆக.4-இல் முழு அடைப்பு
- விவசாயிகளுக்கு பயிற்சி
- இலவச பல் சிகிச்சை முகாம்
- கட்சிக்கு நான் ஆற்றிய பணிகள் பாராட்டப்படவில்லை :சோனியா காந்திக்கு சசி தரூர் கடிதம்
- தனியார் நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- நாடாளுமன்றத்தை இயங்கவிடாமல் தடுப்பது பாஜகதான்
- வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு
- நவீன நகரங்களுக்கான முதல் பட்டியல் இந்த மாதத்துக்குள் இறுதி செய்யப்படும்
- ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
- யாகூப் மேமன் மனைவிக்கு எம்.பி. பதவி கோரிய சமாஜவாதி மூத்த தலைவர் இடைநீக்கம்
- 732 பேருக்கு பட்டங்கள் வழங்கல்
- ஆக.12 முதல் ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு :பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
- பக்தர்களுக்கு அன்னதானம் அளிப்பு
- ஒன்றியக் குழு கூட்டம்
- 29 வி.ஏ.ஓ.வினருக்கு மடிக்கணினிகள் அளிப்பு
- நடமாடும் மருத்துவமனை வாகனம் மோதியதில் தம்பதி சாவு
- வந்தவாசி
- மோடியுடன் ஆதித்ய தாக்கரே சந்திப்பு
- முத்துமாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா
- மணிப்பூரில் நிலச்சரிவு: 20 பேர் பலி
- விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்
- மும்பை பயங்கரவாதத் தாக்குதல்:குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்:அமெரிக்கா வலியுறுத்தல்
- "ராஜீவ் கொலை வழக்கில் அவசரம் காட்டாதது ஏன்?'
- தில்லி சாலைக்குகலாமின் பெயர்: பாஜக எம்.பி. கோரிக்கை
- நகரக் கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவர் தேர்வு
- கலாமுக்கு அஞ்சலி: சனிக்கிழமை இயங்கிய சட்டப்பேரவை
- விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு உழவர் காப்பீட்டுத் திட்ட நிதி அளிப்பு
- மேற்கு வங்கத்தில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- பிளஸ் 2 மாணவர் தற்கொலை
- ராணுவ வீரர் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை
- இந்தியாவில் நிலம் கையகம் எளிதல்ல:பனகரியா பேச்சு
- நீதிபதியின் கார் தீ வைத்து எரிப்பு
- வாகனம் மோதியதில் கூட்டுறவு வங்கி ஊழியர் சாவு
- உ.பி. அரசு- ஆளுநர் இடையே வலுக்கிறது மோதல் போக்கு
- மேகி நூடுல்ஸ் மீண்டும் விற்பனைக்கு வரும்: நெஸ்லே இந்தியா நிறுவனம் உறுதி
- அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
- தேர்தல் வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி கேஜரிவால் மனு
- மூதாட்டியிடம் நகை பறிப்பு
- பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்
- வெங்காயம்இறக்குமதி செய்ய ஆந்திர அரசு திட்டம்
தகவல்கள்: அகிம்சை என்னும் அமைதி வழியில்... Posted: 02 Aug 2015 12:53 AM PDT உலகெங்கும் நடைபெற்ற போர்களில் வெற்றியை ஈட்டிய நீங்கள், இந்தியாவில் ஏன் வெற்றி பெற இயலவில்லை என பிரிட்டிஷ் பார்லி மெண்ட்டில் |
அவசர அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்: தில்லி துணை நிலை ஆளுநருக்கு பாஜக கோரிக்கை Posted: 01 Aug 2015 12:36 PM PDT தில்லி அரசுக்கும், அதன் உயர் அதிகாரிகளுக்கும் இடையேயான சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், அவசர அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு, தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா கோரிக்கை விடுத்துள்ளார். |
லோக்பால் சட்டம் இயற்ற ஆம் ஆத்மி அரசுக்கு அச்சம்: காங்கிரஸ் சாடல் Posted: 01 Aug 2015 12:35 PM PDT ஊழலுக்கு எதிரான "தில்லி லோக்பால்' சட்டத்தை இயற்ற முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான "ஆம் ஆத்மி' அரசு அச்சப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. |
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: காவல் ஆணையர் பஸ்ஸிக்கு தில்லி மகளிர் ஆணையம் கடிதம் Posted: 01 Aug 2015 12:33 PM PDT பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை விவரங்களை அளிக்கும்படி, தில்லி காவல் ஆணையர் பி.எஸ்.பஸ்ஸிக்கு தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இரு கடிதங்களை எழுதியுள்ளார். |
தில்லியில் சூடுபிடிக்கும் போஸ்டர் விவகாரம்: ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக பாஜக விளம்பரம் Posted: 01 Aug 2015 12:33 PM PDT பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்ட விளம்பர பேனர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தில்லி அரசுக்கு எதிராக நகரின் முக்கியச் சாலையோரங்களில் பாஜகவும் விளம்பர பேனர்களை வைத்துள்ளது. |
தில்லி தொழில்நுட்பப் பல்கலை.யில் சர்வதேச தரத்தில் பாடத் திட்டங்கள் Posted: 01 Aug 2015 12:32 PM PDT "தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில், சர்வதேச தரத்துக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது' என்று அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிரதீப் குமார் தெரிவித்தார். |
ஸ்டீபன் கல்லூரி முதல்வர் மீது கணிதப் பேராசிரியர் குற்றச்சாட்டு Posted: 01 Aug 2015 12:31 PM PDT தன் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக, புனித ஸ்டீபன் கல்லூரியின் முதல்வர் வல்சன் தாம்பு மீது அக்கல்லூரியின் கணிதப் பேராசிரியரும், தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் (டியூடிஏ) தலைவருமான நந்திதா நரேன் குற்றம்சாட்டியுள்ளார். |
ஏழைகளுக்காக மருந்துகளை வழங்கும் "மெடிசின் பாபா'!: எம். வெங்கடேசன் Posted: 01 Aug 2015 12:30 PM PDT மாறி வரும் உலகமயமாதலால் பாரம்பரிய விவசாயம் கைவிடப்பட்டு பூச்சிக் கொல்லி மருந்துகள், ரசாயன உரங்கள் ஆகியவற்றால் மனிதர்கள் புதுப் புது நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். ஏழை-பணக்கரன் என்ற வித்தியாசமின்றி ஒரு காலத்தில், வசதிபடைத்தவர்களுக்கு வந்த நோய்கள், இப்போது ஏழைகளையும் விட்டுவைப்பதில்லை. |
உச்ச நீதிமன்ற வளாகத்தில் கடை வைக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி Posted: 01 Aug 2015 12:29 PM PDT உச்ச நீதிமன்ற வளாகத்தில் கடை வைக்க அனுமதி கோரிய மனு பாதுகாப்பு காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டது. |
சசிபெருமாள் உடலைப் பெற உறவினர்கள் மறுப்பு:மது விலக்கு அறிவிப்பை வெளியிடுமாறு வேண்டுகோள் Posted: 01 Aug 2015 12:29 PM PDT தமிழகத்தில் படிப்படியாக முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் வரை சசிபெருமாளின் உடலைப் பெறப் போவதில்லை என்று அவரது உறவினர்கள் சனிக்கிழமை தெரிவித்தனர். |
டிடிஏ துணைத் தலைவராக அருண் கோயல் பதவியேற்பு Posted: 01 Aug 2015 12:28 PM PDT தில்லி வளர்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) துணைத் தலைவராக, பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். |
ரவி சுப்ரமணியத்துக்கு சிற்பி இலக்கிய விருது Posted: 01 Aug 2015 12:28 PM PDT இந்த ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருதுக்கு கவிஞர் ரவி சுப்ரமணியம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
சிகிச்சையில் அலட்சியம் காட்டியதால் காலை இழந்த சிறுவன்: தில்லி மருத்துவர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் Posted: 01 Aug 2015 12:28 PM PDT பதினோரு வயது சிறுவன் தனது காலை இழக்கும் வகையில் அலட்சியத்துடன் சிகிச்சை அளித்ததாகக் கூறி, உறைவிட மருத்துவர்கள் 4 பேரை தில்லி மருத்துவக் கவுன்சில் ஒரு மாதத்துக்கு பணியிடை நீக்கம் செய்துள்ளது. |
நீதி விசாரணை தேவை:கருணாநிதி வலியுறுத்தல் Posted: 01 Aug 2015 12:27 PM PDT காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார். |
Posted: 01 Aug 2015 12:27 PM PDT மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு எதிராக பாகிஸ்தான் விஞ்ஞானி அப்துல் காதர் கானின் கருத்துக்கு எதிராகவும், பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலை கண்டித்தும் தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை இளைஞர் காங்கிரஸார் சனிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
தாது மணல் விவகாரம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை Posted: 01 Aug 2015 12:27 PM PDT தாது மணல் அள்ளுவதற்கு விதித்த தடை செல்லாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். |
வாட் வரி மாற்ற எதிரொலி பாத்திரங்கள், மரச்சாமான்கள் விலை குறைகிறது Posted: 01 Aug 2015 12:26 PM PDT தில்லியில் உலோகப் பாத்திரங்கள், மரச்சாமான்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி (வாட்) குறைக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக, அப்பொருள்களின் விலை குறைகிறது. |
செம்மரக் கட்டைகளை மீட்கக் குழு: ஆந்திர அரசு Posted: 01 Aug 2015 12:26 PM PDT சேஷாசல வனப் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட செம்மரக் கட்டைகளை மீட்டுவர ஆந்திர அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது |
அரக்கோணம் அருகே சரக்கு ரயிலில் திடீர் தீ Posted: 01 Aug 2015 12:25 PM PDT அரக்கோணம் அருகே சனிக்கிழமை காலை நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் திடீர் தீ ஏற்பட்டு புகை மண்டலம் உருவானது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். |
"16 நிமிடங்களில் 20 கி.மீ. கடந்த இதயம்' Posted: 01 Aug 2015 12:25 PM PDT தில்லியில், மூளைச் சாவு அடைந்தவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட இதயம் உள்ளிட்ட உறுப்புகள், போக்குவரத்து போலீஸாரின் உதவியுடன் சனிக்கிழமை 16 நிமிடங்களில் 20 கி.மீ. தூரத்தை கடந்து கொண்டு செல்லப்பட்டு உரிய நபர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. |
பணியின் போது உயிரிழந்த காவலர்கள் 10 பேரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி Posted: 01 Aug 2015 12:25 PM PDT பணியின் போது உயிரிழந்த காவலர்கள் 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். |
எஸ்.பட்டாபிராமன், என்.ஏ.ராமச்சந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது Posted: 01 Aug 2015 12:24 PM PDT தில்லி தமிழர்களின் நலன்களுக்காக சிறந்த பங்களிப்பு ஆற்றிவரும் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சேவா சமாஜ தலைவர் எஸ்.பட்டாபிராமன், காயத்ரி நுண்கலை அமைப்பின் செயலாளர் என்.ஏ.ராமச்சந்திரன் ஆகியோருக்கு தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) வழங்கப்பட உள்ளது. |
Posted: 01 Aug 2015 12:24 PM PDT அதிமுக சார்பில், சரியான நேரத்தில் நிதி உதவியளித்ததற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாக நாட்டுப்புற பாடகியும், திரைப்பட நடிகையுமான "பரவை' முனியம்மா தெரிவித்தார். |
அனைத்துக் கட்சிக் கூட்டம்: காங்கிரஸ் நிபந்தனை Posted: 01 Aug 2015 12:23 PM PDT நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மத்திய அரசு சார்பில் திங்கள்கிழமை (ஆக.3) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பாஜக தலைவர்கள் மீதான ஊழல், சர்ச்சை தொடர்பான புகார்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிபந்தனை விதித்துள்ளது. |
ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை அனுப்பிய முதல் நாடு இந்தியா:இஸ்ரோ விஞ்ஞானி பெருமிதம் Posted: 01 Aug 2015 12:23 PM PDT ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பிய முதல் நாடு இந்தியா என்று இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் தெரிவித்தார். |
மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் Posted: 01 Aug 2015 12:23 PM PDT கோயில் திருவிழாவின்போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். |
பரவை முனியம்மாவுக்கு ரூ. 6 லட்சம் நிதியுதவி Posted: 01 Aug 2015 12:23 PM PDT உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மாவுக்கு அதிமுக சார்பில் ரூ. 6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கட்சியின் பொ |
ஐ.எஸ். பயங்கரவாதத்தைத் தடுக்க புதிய உத்திகள் Posted: 01 Aug 2015 12:22 PM PDT ஐ.எஸ். பயங்கரவாத சக்திகளுக்கு ஆதரவான போக்கு இந்திய இளைய தலைமுறையினரிடையே பரவாமல் தடுக்க புதிய உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநில காவல் துறை இயக்குநர்களுக்கு மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. |
ஆக. 4 முழு அடைப்பு: வணிகர் சங்கம் ஆதரவு Posted: 01 Aug 2015 12:22 PM PDT முழு மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வரும் 4-ஆம் தேதி நடைபெற உள்ள முழு அடைப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. |
ஆட்சியர் அலுவலகத்தில் கலாம் உருவச் சிலை: பாமக வலியுறுத்தல் Posted: 01 Aug 2015 12:21 PM PDT மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிலை அமைக்க வேண்டும் என பாமக கூட்டத்தில் அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
மீத்தேன் எதிர்ப்பு: காவிரி பாதுகாப்பு இயக்க ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு Posted: 01 Aug 2015 12:21 PM PDT மீத்தேன் எதிர்ப்பு தொடர்பாக, தஞ்சையில் நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். |
டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி :கலிங்கப்பட்டியில் வைகோ தாய் தலைமையில் முற்றுகைப் போராட்டம் Posted: 01 Aug 2015 12:21 PM PDT சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சனிக்கிழமை மதிமுக பொதுச் செயலர் வைகோவின் தாய் தலைமையில் 500 பேர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
லொயோலா பள்ளி விளையாட்டுப் போட்டி Posted: 01 Aug 2015 12:21 PM PDT உத்தரமேரூரை அடுத்த குப்பையநல்லூர் லொயோலா மேல்நிலைப் பள்ளியில் 21-ஆம் ஆண்டு விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
தமிழக ரயில்வே திட்டங்கள்: அமைச்சரிடம் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல் Posted: 01 Aug 2015 12:20 PM PDT தமிழக ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு, மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவிடம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினர். |
அகில இந்திய தொழில்நுட்பத் தேர்வு: 140 பேர் பங்கேற்பு Posted: 01 Aug 2015 12:20 PM PDT அகில இந்தியதொழில் நுட்பத் தேர்வு காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
ரூ. 15 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகள் திருட்டு Posted: 01 Aug 2015 12:19 PM PDT கல்பாக்கம் நகரியத்தில் அமைந்துள்ள கூட்டுறவுப் பண்டகசாலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகள், கணினிகள் திருடு போயின. |
தங்கம் விலை:பவுனுக்கு ரூ.168 உயர்வு Posted: 01 Aug 2015 12:19 PM PDT ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.168 உயர்ந்து, சனிக்கிழமை ரூ.19,016-க்கு விற்பனையானது. |
சசிபெருமாள் இறந்ததை காவல் துறை வேடிக்கைப் பார்த்தது: வைகோ குற்றச்சாட்டு Posted: 01 Aug 2015 12:19 PM PDT காந்தியவாதி சசிபெருமாள் 200 அடி உயரமுள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராடியபோது அதைக் காவல் துறை வேடிக்கை பார்த்தது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். |
தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு Posted: 01 Aug 2015 12:19 PM PDT தமிழகம், புதுவையின் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
மதுரை, பாளையங்கோட்டையில் 101 டிகிரி வெயில் Posted: 01 Aug 2015 12:18 PM PDT தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை, பாளையங்கோட்டையில் 101 டிகிரி வெயில் சனிக்கிழமை பதிவானது. |
மாமல்லபுரம் கடற்கரை கோயில் அமைப்பின் புதிய வரைபடம் தயாரிக்கும் பணி தொடக்கம் Posted: 01 Aug 2015 12:18 PM PDT உலக பாரம்பரியச் சின்னமான மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலின் தற்போதைய அமைப்பை அளவிட்டு புதிய வரைபடம் தயாரிக்கும் பணியை மத்திய தொல்லியல் துறையினர் தொடங்கியுள்ளனர். |
Posted: 01 Aug 2015 12:17 PM PDT |
தமிழிலக்கியத்தில் அறிவியல் கோட்பாடுகள் Posted: 01 Aug 2015 12:17 PM PDT ஒவ்வொரு இலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டு திகழ்கிறது. அறிஞர்களும், "இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி' என்கிறார்கள். எந்த ஓர் இலக்கியமும் தான் தோன்றிய அச்சமுதாயத்தின் |
அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய 4 பேர் கைது Posted: 01 Aug 2015 12:17 PM PDT திருப்போரூர் உள்ளிட்ட 3 இடங்களில் அனுமதியின்றி மதுக்கூடம் நடத்தியதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். |
சசிபெருமாள் மறைவு: வீரவணக்க அமைதிப் பேரணி Posted: 01 Aug 2015 12:16 PM PDT மது விலக்கை அமல்படுத்தக் கோரும் போராட்டக் களத்தில் உயிர் நீத்த காந்தியவாதி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், காஞ்சிபுரத்தில் அமைதிப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. |
ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா Posted: 01 Aug 2015 12:16 PM PDT வேடவாக்கம் ஸ்ரீ ஆதிசக்தி முத்துமாரியம்மன் பிரம்மச்சாரியார் ஞானபீடத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. |
ஆடிப்பெருக்கும் பன்னிரு தமிழ் மாதங்களும்! Posted: 01 Aug 2015 12:15 PM PDT காவிரி நதி பாயும் மாவட்டங்களில் காலங்காலமாக "ஆடிப்பெருக்கு' விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கும் புதுப்புனல் கண்டு எங்கும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் கலந்து கொள்வார்கள்; புனித நீராடி மகிழ்வார்கள். |
பெண் சிசு சாவு: அரசு மருத்துவமனை முற்றுகை Posted: 01 Aug 2015 12:15 PM PDT காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பெண் சிசு உயிரிழந்ததைத் தொடர்ந்து மருத்துவர்களைக் கண்டித்து உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
Posted: 01 Aug 2015 12:15 PM PDT திருத்தணியில் உறவினர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி சென்ற இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
பயிர் அறுவடைப் பரிசோதனை: களப் பணியாளர்களுக்குப் பயிற்சி Posted: 01 Aug 2015 12:14 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் பயிர் அறுவடை பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் குறித்து களப் பணியாளர்களுக்குப் புத்தூட்டப் பயிற்சி முகாமை, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அண்மையில் தொடக்கி வைத்தார். |
Posted: 01 Aug 2015 12:14 PM PDT கலாம் சாரின் மறைவு "தினமணி'யைப் பொருத்தவரையிலும், எனக்குத் தனிப்பட்ட முறையிலும் பெரும் இழப்பு. வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதியில் நடக்க இருந்த "தினமணி தமிழ் இலக்கியத் திருவிழா'வின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர் இல்லை. |
லாரி மீது மோதியதில் கார் ஓட்டுநர் சாவு Posted: 01 Aug 2015 12:14 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார். |
பொது இ- சேவை மையங்களில் மின் கட்டணத்தைச் செலுத்தலாம் Posted: 01 Aug 2015 12:13 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பொது இ-சேவை மையங்களில் பொதுமக்கள் மின் கட்டணத்தைச் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். |
Posted: 01 Aug 2015 12:13 PM PDT நாம் அஞ்சலில் அனுப்பும் பதிவுக் கடிதங்களை அரக்கு முத்திரையிட்டு அனுப்புகிறோம். சில சமயம் அதிகாரிகள் சில கட்டடங்களைப் பூட்டி யாரும் திறக்கக்கூடாது என்று அறிவிக்கும் வகையில் மேலே முத்திரையிட்டுச் செல்கிறார்கள். கடையில் வாங்கும் சில பொருள்கள் தகரப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு மெல்லிய தகடு போர்த்தப்பட்டு மூடப்பட்டிருக்கின்றன. |
Posted: 01 Aug 2015 12:13 PM PDT |
Posted: 01 Aug 2015 12:12 PM PDT தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளுர் வடக்கு மாவட்டப் பொதுச் செயலாளராக இ.எஸ்.ஆர். செந்தில் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். |
புதை சாக்கடைப் பணிகள் தாமதம்: திருவள்ளூர் ஜே.என்.சாலையில் விபத்துகள் அதிகரிப்பு Posted: 01 Aug 2015 12:11 PM PDT திருவள்ளூர் நகராட்சி ஜே.என். சாலையில் (பூந்தமல்லி நெடுஞ்சாலை) புதை சாக்கடைப் பணிக்கு தோண்டியப் பள்ளங்களை சரியாக மூடாததால் விபத்துகள் அதிகரித்துள்ளன. |
Posted: 01 Aug 2015 12:11 PM PDT திருவண்ணாமலையில் கிரிவல பக்தரின் காரை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
Posted: 01 Aug 2015 12:10 PM PDT திருவண்ணாமலையில் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
Posted: 01 Aug 2015 12:10 PM PDT தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற திருக்குறள் ஒப்பித்தல் வாய்மொழித் தேர்வு அண்மையில் நடைபெற்றது. |
முழு மது விலக்கை அமல்படுத்தக் கோரி தமிழகத்தில் ஆக.4-இல் முழு அடைப்பு Posted: 01 Aug 2015 12:10 PM PDT பூரண மதுவிலக்கை அமலாக்கக் கோரி, தமிழகம் முழுவதும் வரும் 4 ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்புப் போராட்டத்துக்கு மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. |
Posted: 01 Aug 2015 12:09 PM PDT ஆத்மா திட்டம் சார்பில் விதை பண்ணை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. |
Posted: 01 Aug 2015 12:09 PM PDT ஆரணி கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பல் சிகிச்சை முகாம் ஆரணி சிஎஸ்ஐ உயர்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
கட்சிக்கு நான் ஆற்றிய பணிகள் பாராட்டப்படவில்லை :சோனியா காந்திக்கு சசி தரூர் கடிதம் Posted: 01 Aug 2015 12:09 PM PDT ""காங்கிரஸ் கட்சிக்கு நான் ஆற்றிய பணிகள் கண்டுகொள்ளப்படவோ அல்லது பாராட்டப்படவோ இல்லை'' என்று கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு, அக்கட்சியின் எம்.பி. சசி தரூர் கடிதம் எழுதியுள்ளார். |
தனியார் நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 01 Aug 2015 12:08 PM PDT தனியார் மென்பொருள் நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஆரணியைச் சேர்ந்த கல்லூரி மாணவரிடம் சைபர் க்ரைம் போலீஸார் சென்னைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். |
நாடாளுமன்றத்தை இயங்கவிடாமல் தடுப்பது பாஜகதான் Posted: 01 Aug 2015 12:08 PM PDT நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுப்பதற்கு பாஜகவே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டினார். |
வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு Posted: 01 Aug 2015 12:07 PM PDT செங்கம் பகுதியில் நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
நவீன நகரங்களுக்கான முதல் பட்டியல் இந்த மாதத்துக்குள் இறுதி செய்யப்படும் Posted: 01 Aug 2015 12:07 PM PDT நவீன நகரங்கள் திட்டத்தில் முதல் கட்டமாக மேம்படுத்தப்படவுள்ள நகரங்களின் பட்டியல் இந்த மாதத்துக்குள் இறுதி செய்யப்படும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். |
ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு Posted: 01 Aug 2015 12:07 PM PDT தண்டராம்பட்டு அருகே ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டில் 8 பவுன் தங்க நகை, பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
யாகூப் மேமன் மனைவிக்கு எம்.பி. பதவி கோரிய சமாஜவாதி மூத்த தலைவர் இடைநீக்கம் Posted: 01 Aug 2015 12:06 PM PDT மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட நிலையில், அவரது மனைவியை, மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு முன்னிறுத்த வேண்டும் என சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங்குக்கு, அக்கட்சியின் மூத்த தலைவர் ஃபரூக் கோஸி கோரிக்கை விடுத்தார். |
732 பேருக்கு பட்டங்கள் வழங்கல் Posted: 01 Aug 2015 12:06 PM PDT திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் 18-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 732 பேர் பட்டம் பெற்றனர். |
ஆக.12 முதல் ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு :பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு Posted: 01 Aug 2015 12:04 PM PDT பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான பணியிடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஆகஸ்ட் 12 முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. |
பக்தர்களுக்கு அன்னதானம் அளிப்பு Posted: 01 Aug 2015 12:04 PM PDT ஆடி மாதம் 3-ஆம் வெள்ளியை முன்னிட்டு, போளூரை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. |
Posted: 01 Aug 2015 12:03 PM PDT போளூர் ஒன்றியக் குழுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. |
29 வி.ஏ.ஓ.வினருக்கு மடிக்கணினிகள் அளிப்பு Posted: 01 Aug 2015 12:03 PM PDT கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) 29 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. |
நடமாடும் மருத்துவமனை வாகனம் மோதியதில் தம்பதி சாவு Posted: 01 Aug 2015 12:02 PM PDT வந்தவாசி அருகே அரசு நடமாடும் மருத்துவமனை வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி இறந்தனர். |
Posted: 01 Aug 2015 12:01 PM PDT |
மோடியுடன் ஆதித்ய தாக்கரே சந்திப்பு Posted: 01 Aug 2015 12:01 PM PDT பிரதமர் நரேந்திர மோடியை, தில்லியில் சிவசேனைக் கட்சியின் இளைஞரணித் தலைவர் ஆதித்ய தாக்கரே சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அவருடன், சிவசேனை எம்.பி.க்கள் அடங்கிய குழுவினரும் மோடியை சந்தித்தனர். |
முத்துமாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா Posted: 01 Aug 2015 12:01 PM PDT திருவண்ணாமலையை அடுத்த கீழ்நாத்தூர், ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தீமிதித் திருவிழாவில், திரளான பக்தர்கள் விரதம் இருந்து தீ மிதித்தனர். |
மணிப்பூரில் நிலச்சரிவு: 20 பேர் பலி Posted: 01 Aug 2015 12:00 PM PDT மணிப்பூர் மாநிலத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 20 பேர் பலியாகினர். |
விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 01 Aug 2015 12:00 PM PDT ஆம்பூர் அருகே ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதியில் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு ரயில்வே போலீஸார் புதன்கிழமை விநியோகம் செய்தனர். |
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்:குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்:அமெரிக்கா வலியுறுத்தல் Posted: 01 Aug 2015 12:00 PM PDT மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. |
"ராஜீவ் கொலை வழக்கில் அவசரம் காட்டாதது ஏன்?' Posted: 01 Aug 2015 12:00 PM PDT யாகூப் மேமன் விவகாரத்தைப் போல் ராஜீவ் கொலை வழக்கில் மத்திய அரசு அவசரம் காட்டாதது ஏன்? என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கேள்வியெழுப்பினார். |
தில்லி சாலைக்குகலாமின் பெயர்: பாஜக எம்.பி. கோரிக்கை Posted: 01 Aug 2015 11:59 AM PDT தில்லியில் உள்ள ஒளரங்கசீப் சாலைக்கு, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பெயரை வைக்க வேண்டும் என்று கிழக்கு தில்லி தொகுதி பாஜக எம்.பி. மகேஷ் கிரி வலியுறுத்தினார். |
நகரக் கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவர் தேர்வு Posted: 01 Aug 2015 11:59 AM PDT குடியாத்தம் நகரக் கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவராக எஸ்.என்.சுந்தரேசன் தேர்வு செய்யப்பட்டார். |
கலாமுக்கு அஞ்சலி: சனிக்கிழமை இயங்கிய சட்டப்பேரவை Posted: 01 Aug 2015 11:59 AM PDT குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராஜஸ்தான் சட்டப்பேரவை விடுமுறை நாளான சனிக்கிழமை இயங்கியது. |
விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு உழவர் காப்பீட்டுத் திட்ட நிதி அளிப்பு Posted: 01 Aug 2015 11:59 AM PDT அரக்கோணத்தை அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் சாலை விபத்தில் இறந்த விவசாயியின் குடும்பத்துக்கு உழவர் காப்பீட்டுத் திட்ட நிதியான ரூ.1.02 லட்சத்தை அரக்கோணம் எம்.எல்.ஏ. சு.ரவி வெள்ளிக்கிழமை வழங்கினார். |
மேற்கு வங்கத்தில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 01 Aug 2015 11:58 AM PDT மேற்க வங்கத் தலைநகர் கொல்கத்தா உள்பட மாநிலத்தின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால், அங்கு இயல்பு வாழ்க்கை |
Posted: 01 Aug 2015 11:58 AM PDT ஒடுக்கத்தூர் அருகே பூச்சி மருந்து குடித்து பிளஸ் 2 மாணவர் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
ராணுவ வீரர் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை Posted: 01 Aug 2015 11:58 AM PDT வாலாஜா அருகே ராணுவ வீரர் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். |
இந்தியாவில் நிலம் கையகம் எளிதல்ல:பனகரியா பேச்சு Posted: 01 Aug 2015 11:57 AM PDT நாட்டில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான சட்டங்கள் கடினமாக உள்ளன என்று மத்திய கொள்கைக் குழுவின் (நீதி ஆயோக்) துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா தெரிவித்தார். |
நீதிபதியின் கார் தீ வைத்து எரிப்பு Posted: 01 Aug 2015 11:57 AM PDT ஆற்காடு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியின் கார் மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ வைத்து எரிக்கப்பட்டது. |
வாகனம் மோதியதில் கூட்டுறவு வங்கி ஊழியர் சாவு Posted: 01 Aug 2015 11:57 AM PDT அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற ரயில்வே கூட்டுறவு வங்கி ஊழியர் இறந்தார். |
உ.பி. அரசு- ஆளுநர் இடையே வலுக்கிறது மோதல் போக்கு Posted: 01 Aug 2015 11:57 AM PDT உத்தரப் பிரதேச அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு வலுத்து வருவதால், அங்கு மேலவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. |
மேகி நூடுல்ஸ் மீண்டும் விற்பனைக்கு வரும்: நெஸ்லே இந்தியா நிறுவனம் உறுதி Posted: 01 Aug 2015 11:56 AM PDT "மேகி நூடுல்ûஸ மீண்டும் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கம்' என்று நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவர் சுரேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். |
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு Posted: 01 Aug 2015 11:56 AM PDT ஆற்காடு அருகே கல் குவாரியை ஒட்டி கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
தேர்தல் வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி கேஜரிவால் மனு Posted: 01 Aug 2015 11:56 AM PDT கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில், வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். |
Posted: 01 Aug 2015 11:56 AM PDT மூதாட்டியிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் Posted: 01 Aug 2015 11:56 AM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையில் அமைக்கப்பட்டுள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் சோதனைச் சாவடிகள் மீது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவத்தினர் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தினர். |
வெங்காயம்இறக்குமதி செய்ய ஆந்திர அரசு திட்டம் Posted: 01 Aug 2015 11:55 AM PDT விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, வெங்காயம் இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஆந்திரப் பிரதேச அரசு தெரிவித்தது |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |