மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- படுக்கை, குளியல் அறைகளில் ரூ.24 கோடி லஞ்ச பணம் பதுக்கல்: கொல்கத்தா என்ஜினீயர் வீட்டில் சோதனை
- கவர்னர் அளித்த தேனீர் விருந்து: ஆந்திரா–தெலுங்கானா முதல்–மந்திரிகள் புறக்கணிப்பு
- டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
- தாஜ்மகால் பெயரில் டுவிட்டரில் கணக்கு தொடக்கம்: 2 ஆயிரம் பேர் இணைந்தனர்
- கேரளஅரசு தலைமை செயலகம் முன்பு மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் 5 பேர் கைது
- சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய பஞ்சாப் மந்திரி
- 34 ஆண்டுகளுக்கு பின்னர் 2 நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் செல்லும் முதல் இந்திய பிரதமர்
- ஜனாதிபதி மாளிகை விருந்து நிகழ்ச்சி இடம் மாறியது: மோடி, சோனியா பங்கேற்பு
- காஷ்மீரில் சுதந்திர தின விழா: முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- வேளாண்மை அமைச்சகத்துக்கு புதிய பெயர் சூட்டிய மோடி
- ஒரு பக்கம் வாழ்த்து - மறுபக்கம் தாக்குதல்: பாகிஸ்தான் குண்டு வீச்சில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
- ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் - மோடி: தேதி அறிவிக்க வேண்டும் - முன்னாள் வீரர்கள்
- சுதந்திர தின விழா: மீண்டும் சர்ச்சையில் அரவிந்த் கெஜ்ரிவால்
- அரிசிகெரே அருகே கரடி தாக்கி விவசாயி படுகாயம்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
- எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சுதந்திர தின கொண்டாட்டம்: பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கவில்லை
- சுதந்திர தின நாளில் இந்திய எல்லைப்பகுதி கிராமங்கள் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு: 3 பேர் பலி
- சுதந்திர தின விழாவில் வெடிகுண்டு தாக்குதல்: 2 மாணவிகள் படுகாயம்
- ஜார்க்கண்டில் சூனியம் வைத்து சிறுவனைக் கொன்றதாக கூறி 2 பேர் அடித்துக் கொலை
- பணவீக்கத்தை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும்: மோடி
- பிரதமர் பேச்சு பற்றி நாளை தெரிவிப்பேன், இன்று அரசியலுக்கான நாள் அல்ல: ராகுல்காந்தி கருத்து
| படுக்கை, குளியல் அறைகளில் ரூ.24 கோடி லஞ்ச பணம் பதுக்கல்: கொல்கத்தா என்ஜினீயர் வீட்டில் சோதனை Posted: 15 Aug 2015 10:53 PM PDT மேற்கு வங்காள மாநிலம் அவுரா மாவட்டத்தில் உள்ள பெல்லி நகராட்சியில் உதவி என்ஜினீயராக பணிபுரிந்து வருபவர் பிரணாப் அதிகாரி. இவர் காண்டிராக்டர்களிடம் லஞ்சம் வாங்கி ஏராளமான பணம், நகை மற்றும் பொருட்களை வாங்கி குவித்து வைத்து இருப்பதாக மாநில லஞ்ச ஒழிப்பு |
| கவர்னர் அளித்த தேனீர் விருந்து: ஆந்திரா–தெலுங்கானா முதல்–மந்திரிகள் புறக்கணிப்பு Posted: 15 Aug 2015 10:39 PM PDT ஆந்திரா–தெலுங்கானா மாநிலங்களின் கவர்னராக நரசிம்மன் உள்ளார். சுதந்திரதின விழாவை முன்னிட்டு நேற்று மாலை அவர் ஐதராபாத்தில் உள்ள தனது மாளிகையில் தேனீர் விருந்து அளித்தார். இதில் பங்கேற்க ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா |
| டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து Posted: 15 Aug 2015 10:03 PM PDT டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியதாகவும், அவர் நீண்ட காலம் நல்ல |
| தாஜ்மகால் பெயரில் டுவிட்டரில் கணக்கு தொடக்கம்: 2 ஆயிரம் பேர் இணைந்தனர் Posted: 15 Aug 2015 09:39 PM PDT அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் சமூக வலை தளங்களான பேஸ்புக், டுவிட்டரில் கணக்கு தொடங்கி தங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்கள். |
| கேரளஅரசு தலைமை செயலகம் முன்பு மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் 5 பேர் கைது Posted: 15 Aug 2015 09:08 PM PDT கேரளாவில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் சமீப காலமாக பல இடங்களில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் போலீசார் உஷார்படுத்தப்பட்டு மாவோயிஸ்டுகள் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள். போலீசாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக மாவோயிஸ்டுகள் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கோவையில் பதுங்கி |
| சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய பஞ்சாப் மந்திரி Posted: 15 Aug 2015 08:26 PM PDT பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் அமைந்துள்ள குருநானக் அரங்கத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாநில அரசு சார்பில் நடந்த இந்த விழாவில் மந்திரி பிக்ராம் சிங் மஜிதியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். அப்போது தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டு இருந்தது. |
| 34 ஆண்டுகளுக்கு பின்னர் 2 நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் செல்லும் முதல் இந்திய பிரதமர் Posted: 15 Aug 2015 08:12 PM PDT பிரதமர் நரேந்திர மோடி அபுதாபி, துபாயில் இன்று முதல் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதன்மூலம் 34 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை அவர் பெறுகிறார். |
| ஜனாதிபதி மாளிகை விருந்து நிகழ்ச்சி இடம் மாறியது: மோடி, சோனியா பங்கேற்பு Posted: 15 Aug 2015 07:50 PM PDT சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி மாளிகையில் உள்ள திறந்தவெளி பகுதியான முகலாய தோட்டத்தில் ஜனாதிபதி விருந்து அளிப்பது வழக்கம். அதுபோல், நேற்று அங்கு விருந்துக்கு ஏற்பாடாகி இருந்தது. ஆனால், பலத்த மழை பெய்ததால், உள் அரங்கமான அசோகா மண்டபத்துக்கு விருந்து நிகழ்ச்சி மாற்றப்பட்டது. |
| காஷ்மீரில் சுதந்திர தின விழா: முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 15 Aug 2015 07:14 PM PDT இந்தியாவின் 69-வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பாக்சி மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கிடையில் காஷ்மீரில் பிரிவினை வாத கட்சிகள் ஹுரியத் மாநாட்டு கட்சியினர் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். |
| வேளாண்மை அமைச்சகத்துக்கு புதிய பெயர் சூட்டிய மோடி Posted: 15 Aug 2015 07:08 PM PDT பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் விவசாயிகள் நலன் குறித்தும் பேசினார். அவர் கூறியதாவது:- வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை பெருக்கவேண்டியது அவசியமாகும். இதை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேளாண்துறையின் அனைத்து |
| ஒரு பக்கம் வாழ்த்து - மறுபக்கம் தாக்குதல்: பாகிஸ்தான் குண்டு வீச்சில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு Posted: 15 Aug 2015 04:06 PM PDT நாடு முழுவதும் சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி இந்திய நிலைகள் மற்றும் எல்லைப்பகுதி கிராமங்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. |
| Posted: 15 Aug 2015 02:34 PM PDT 'ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்' திட்டம் விரைவில் முடிவு செய்யப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பில் அதிருப்தி அடைந்த முன்னாள் ராணுவ வீரர்கள் பிரதமர் மோடி குறிப்பிட்ட தேதியை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். |
| சுதந்திர தின விழா: மீண்டும் சர்ச்சையில் அரவிந்த் கெஜ்ரிவால் Posted: 15 Aug 2015 10:34 AM PDT சர்ச்சைகளையும் அரவிந்த் கெஜ்ரிவாலையும் பிரிக்க முடியாது போல. இன்று நடந்த சுதந்திர தின விழாவில் நடைப்பெற்ற ஒரு சம்பவம் காரணமாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். சுதந்திர தின விழாவில், டெல்லி மைதானத்தில் மாணவர்கள் முன் 40 |
| அரிசிகெரே அருகே கரடி தாக்கி விவசாயி படுகாயம்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Posted: 15 Aug 2015 08:40 AM PDT ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா ஜே.சி.புரா கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது தோட்டத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் இருந்த காட்டுப் பகுதியில் இருந்து வந்த கரடி, நாகராஜன் மீது பாய்ந்து |
| Posted: 15 Aug 2015 07:33 AM PDT நாட்டின் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் முக்கிய பண்டிகைகளின் போது எல்லையில் காவல் பணியில் ஈடுபடும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களும், இந்திய ராணுவ வீரர்களும் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது வழக்கம். சமீபத்தில் இதுபோல் ரம்ஜான் பண்டிகையின்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் வாகா எல்லையில் உள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு |
| சுதந்திர தின நாளில் இந்திய எல்லைப்பகுதி கிராமங்கள் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு: 3 பேர் பலி Posted: 15 Aug 2015 06:48 AM PDT நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி இந்திய நிலைகள் மற்றும் எல்லைப்பகுதி கிராமங்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. |
| சுதந்திர தின விழாவில் வெடிகுண்டு தாக்குதல்: 2 மாணவிகள் படுகாயம் Posted: 15 Aug 2015 05:15 AM PDT பீகார் மாநிலத்தில் இன்று சுதந்திர தின விழா நடந்தபோது சமூக விரோதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 மாணவிகள் காயம் அடைந்தனர். சுதந்திர தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதிச்செயலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததால் நாடு முழுவதும் |
| ஜார்க்கண்டில் சூனியம் வைத்து சிறுவனைக் கொன்றதாக கூறி 2 பேர் அடித்துக் கொலை Posted: 15 Aug 2015 01:41 AM PDT ஜார்க்கண்ட் மாநிலம் லோகர்டகா மாவட்டத்தில் சூனியம் வைத்ததாகக் கூறி 2 பேரை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஞ்சியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கய்ரோ காவல் சரகத்திற்குட்பட்ட ஹிது கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 8 வயது சிறுவன் ஒருவன் திடீரென இறந்துவிட்டான். இவனது சாவுக்கு, அப்பகுதியில் மாந்திரீக வேலைகள் செய்து வரும் மன்னா பகத் (40) மற்றும் புத்ராம் |
| பணவீக்கத்தை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும்: மோடி Posted: 15 Aug 2015 01:09 AM PDT நாட்டில் பணவீக்கத்தை மேலும் குறைப்பதற்கான முயற்சிகள் தொடரும் எனவும், பொருளாதாரத்தை மேம்படுத்தி சாமானிய மக்கள் பயன்பெறும் நடவடிக்கையாக விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். |
| பிரதமர் பேச்சு பற்றி நாளை தெரிவிப்பேன், இன்று அரசியலுக்கான நாள் அல்ல: ராகுல்காந்தி கருத்து Posted: 15 Aug 2015 12:55 AM PDT காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். துணைத் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் உள்ளிட்ட |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |