Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பிரம்டனில் பெண் மரணம் – மகன் கைது

Posted: 15 Aug 2015 07:33 PM PDT

yu

yuபிரம்டன் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரின் மகனை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரம்டனின் தென் பகுதியில் கெனடி வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்துக்கு விரைந்த போது அங்கே குறித்த அந்த பெண் நினைவிழந்த நிலையில் காணப்பட்டதாகவும், சம்பவ இடத்திலேயே அவரின் மகனை கைது செய்ததாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரும் கைது செய்யப்படடவரும் தாயும் மகனும் என்பதனை உறுதிப்படுத்தியுள்ள காவல்த்துறையினர் அவர்களின் பெயர் விபரங்கள் எவற்றையும் வெளியிடவில்லை. மரணத்திற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.yu

கைது செய்யப்பட்டவரை தாம் இன்னமும் விசாரணை செய்யவேண்டியுள்ளதாகவும், விசாரணைகளின் போது பல்வேறு தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்ப்பதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அந்த நபர் கொலைக் குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் மீது இன்னமும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

The post பிரம்டனில் பெண் மரணம் – மகன் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கல்லறைகளில் பூக்களை திருடும் பெண்ணை தேடும் கனேடிய காவல்த்துறை

Posted: 15 Aug 2015 07:28 PM PDT

iu

iuகல்லறைகளில் காணப்படம் பூக்களை மீண்டும் மீண்டும் திருடிவரும் பெண் ஒருவரை ஒன்ராறியோவின் காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.

குறித்த ஒரு கல்லறை வளாகத்தில் வைக்கப்படும் பூக்களையும், நினைவுப் பரிசுப் பொருட்களையும் அந்த பெண் கடந்த 3 மாதகாலமாக தொடர்ச்சியாக திருடி வருவதான முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், அந்த பெண்ணை இனங்காண்பதற்கு பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

தமது உறவினர்களின் கல்லறைகளில் வைக்கப்படும் பூக்கள் தொடர்ச்சியாக காணாமல் போகின்றமை தொடர்பில் சிலர் முறைப்பாடு செய்துள்ள அதே வேளையில், அவற்றை ஒருவர் எடுத்துச் செல்வது போன்ற சம்பவத்தினை காட்டும் ஒளிப்பதிவுகளும் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

iu

மூன்று மாதங்களின் பின்னர் அவற்றை திருடும் நபர் தொடர்பிலான ஒளிப்பதிவு கிடைத்துள்ள நிலையில், அவரை இனங்காண உதவுமாறு பாதக்கப்பட்ட பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கெளகேசிய இனத்தைச் சேர்ந்தவர் போல தோற்றமளிக்கும் அந்த பெண் சுமார் ஐந்து அடி ஐந்து அங்குல உயரமுள்ள, மெல்லிய உடல்வாகு கொண்ட, 20 வயது மதிக்கத்தக்கவர் என காவல்த்துறையினர் அடையாளம் வெளியிட்டுள்ளனர்.

The post கல்லறைகளில் பூக்களை திருடும் பெண்ணை தேடும் கனேடிய காவல்த்துறை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Mimico பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்கானவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்

Posted: 15 Aug 2015 03:19 PM PDT

m

mரொரன்ரோவின் Mimico பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்த நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Mimco Avenue மற்றும் Lakeshore Boulevard பகுதியில் இன்று இரவு 7.15 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலக்கம் 2378, Lakeshore Boulevard இல் அமைந்துள்ள தொடரூந்து நிலைய உணவகம் ஒன்றிற்கு சென்ற வேளையில், குறித்த அந்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது அடி வயிற்று பகுதியிலும், உடலின் பக்கங்களிலும் பல்வேறு கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டதாகவும், உடனடியாவே அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆண் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post Mimico பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்கானவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடிய படைகளின் விமானத் தாக்குதல்கள் தொடர்பில் அரசியல் கட்சிகள் மெளனம்

Posted: 15 Aug 2015 11:39 AM PDT

mgmm

mgmmஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் நிலைகளுக்கு எதிராக கனேடிய படைகளின் விமானத் தாக்குதல்கள் தொடரந்து இடம்பெற்று வருகின்ற போதிலும், அரசியல் கட்சிகள் அது தொடர்பில் மெளனம் காத்து வருகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து தமது தாக்குதல்கள் குறித்த ஊடக மாநாடுகளை தவிர்த்து வருவதாக தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்பு திணைக்களம், தாக்குதல் விபரங்கள் தமது இணையத் தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த யூலை மாதம் 9ஆம் திகதியின் பின்னர் சிரியா உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்ட ஐ.எஸ் நிலைகள் மற்றும் இலக்குகள் மீது கனேடிய போர் விமானங்கள் 29 தடவைகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.mgmm

கனேடிய விமானங்களில் தாக்குதல்கள் முன்னர் அதிக அளவில் காணப்பட்ட போதிலும், கடந்த இரண்டாம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தாக்குதல்களில் எண்ணிக்கையில் விழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், 2ஆம் திகதியின் பின்னர் ஐந்து தாக்குதல்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் பரப்புரைகள் இடம்பெற்றுவரும் நிலையில், நாட்டின் சனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், தேசிய பாதுகாப்ப திணைக்கம் உள்ளிட்ட அரசாங்கத்தின் பொது விவகாரத் துறைசார் அறிவிப்புகளுக்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post கனேடிய படைகளின் விமானத் தாக்குதல்கள் தொடர்பில் அரசியல் கட்சிகள் மெளனம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வன்கூவரில் காவல்த்துறையினருடான மோதலில் ஒருவர் உயிரிழப்பு

Posted: 15 Aug 2015 10:53 AM PDT

j,jb,m b,

j,jb,m b,வன்கூவரில் காவல்த்துறையினருடான மோதல் சம்பவம் ஒன்றில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு காவல்த்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 அளவில் வன்கூவர் நகரின் தென்கிழக்கு பகுதியில் ஒருவர் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து தாம் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதலாவது காவலத்துறை உத்தியோகத்தர் சம்பவ இடத்தினை சென்றடைந்து அவரை கைது செய்ய முற்பட்ட போது, குறித்த அந்த நபர் முரண்டுபிடிக்க ஆரம்பித்ததை அடுத்து மேலதிக அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.j,jb,m b,

இரசாயன பொருட்கள் மூலம் அவரை கட்டுப்பாட்டினுள் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனற்று போனதை அடுத்து, கைகலப்பு மோதல் நிலைமை ஏற்பட்டதாகவும், அதன் போது அவர் படுகாயமடைந்தாகவும் காவல்த்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் காரணமாகவே அவர் உயிரிழக்க நேரிட்டதாகவும், சம்பவத்தில் படுகாயடமடைந்த இரண்டு உத்தியோத்தர்களும், சிறு காயங்களுக்கு உள்ளான 4 உத்தியோகத்தர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சிறப்பு சுயாதீன் விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வன்கூவரில் காவல்த்துறையினருடான மோதலில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம் – ஸ்டீபன் ஹார்ப்பர் கருத்து

Posted: 15 Aug 2015 10:16 AM PDT

hbcdbvb

hbcdbvbஅமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சர்ச்சைக்குரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பாதுகாப்புத் இட்டத்தில் இணைந்துகொள்ளும் முனைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சில வருடங்களின் முன்னரும் இந்த விடயம் பேசப்பட்ட போதிலும், இதில் போடப்பட்டிருந்த இந்த விவகாரம், தற்போது தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.

நேற்றைய தினம் நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், இந்த தேர்தலில் தாம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.hbcdbvb

எனினும் கனடாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படுவதாக தாம் உணரும் பட்சத்திலேயே அதனை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது நிலையினை எப்போதுமே மதிப்பீடு செய்தவாறே உள்ளதாகவும், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக உணரும் வேளையில், இவ்வாறான ஒரு பாதுகாப்பு தேவைப்படும் நிலையில் அதனை தாம் கையிலெடுக்க வேண்டிய நிலை உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம் – ஸ்டீபன் ஹார்ப்பர் கருத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உங்கள் உடம்பில் என்னென்ன நோய்கள் உள்ளன? இதோ காட்டிக்கொடுக்கும் நகங்கள்

Posted: 15 Aug 2015 08:24 AM PDT

kl

klநகங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு, உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம்.

இதனால், நகங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றன. கெரட்டின் எனும் உடல்கழிவு தான், நகமாக வளர்கிறது.

நகத்தில், மேட்ரிக்ஸ், நெயில் ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு.

இதில், மேட்ரிக்ஸ் என்பது நகத்தின் இதயப்பகுதியை போன்றது. இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கின்றன.

மேட்ரிக்ஸ் பாதித்தால், தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும். வெளிபுற நகங்களாக இருக்கும், நெயில் பிளேட் கழிவுபொருள் என்பதால், அது வளர ஆக்ஸிஜன் தேவையில்லை.

ஆனால், உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு, ஆக்ஸிஜன் அவசியம்.

இது, சுவாசிப்பதன் மூலம் பெறும் ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறது. இதில், கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.

நகத்தில், 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே, நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றுகின்றன. நகங்கள் நமது உடலின் நிலையை வெளிகாட்டும் மானிட்டர் போல செயல்படுகின்றன.

நகங்கள், விரலுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தை கொண்ட நகங்கள், விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும்.kl

நோய்களை எடுத்துக்காட்டும் நகங்கள்

பொதுவாக, நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நிறம் மாறுபடும் பட்சத்தில், நோய் அறிகுறிகளை அறியலாம். ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்.

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால், நகங்களின் வளர்ச்சி குறைந்து, பாதி சிவப்பாக இருக்கும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு, நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.

நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு, நகங்கள் வளைந்து இருக்கும். இரத்த சோகை ஏற்பட்டு, இரும்புசத்து குறைவாக இருந்தால், நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.

சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால், நகங்கள் வெண்திட்டுக்களாக காணப்படும்.

மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால், மூட்டுவலி உள்ளதாக காட்டும். நகங்களின் நுனிப்பகுதிகளை முழுமையாக வெட்டக்கூடாது. அப்படி வெட்டினால், நகத்தை மூடி சதை வளர்ந்து, அதிக வலியினை ஏற்படுத்தும்.

hj

செய்யவேண்டியவை

நகத்தினை பற்களால், கடிக்க கூடாது. இதனால் உடைந்து போக அதிக வாய்ப்புகள் உள்ளன.

சாப்பிட்ட பின்பு, கைகளை கழுவும் போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுபோக்கு உண்டாகும்.

பளபளப்பாக இருக்க வேண்டுமெனில், காய், கனிகள் உட்கொள்ள வேண்டும். இரவில் குளிர்ந்த நீரால், கை மற்றும் கால்நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகிறது.

இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது மருத்துவரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி -12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.fg

The post உங்கள் உடம்பில் என்னென்ன நோய்கள் உள்ளன? இதோ காட்டிக்கொடுக்கும் நகங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வேகவைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்!

Posted: 15 Aug 2015 07:36 AM PDT

o

oஎண்ணெய்யில் வறுத்த உணவுகளை விட, வேகவைத்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.

ஏனெனில் வேகவைத்த உணவுகளில் உள்ள சத்துக்களே உடலில் சேரும்,

அந்தவகையில் வேகவைத்து சாப்பிடவேண்டிய உணவுகள் சில,

1. கேரட்டை குளிர்ந்த நீரில் கழுவிய பின்னர் உப்பு சேர்ந்து வேகவைத்து சாப்பிடவேண்டும், வேகவைத்த கேரட் தான் கண்களுக்கு நல்லது.

2.தினமும் ஓர் வேகவைத்த பீட்ரூட்டை சாப்பிடுவதன் மூலம் இரத்த ஓட்டம் சீர்படும். மேலும், பீட்ரூட்டை 3 நிமிடங்கள்தான் வேகவைக்க வேண்டும்.o

3.வேகவைத்த உருளைக்கிழங்கில் கலோரிகள் குறைவு, இதனால் உடல் எடை போடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

5.பீன்ஸை வேகவைத்து அதில் கொஞ்சம் உப்பு, மிளகு சேர்த்து சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.

6.சோளத்தில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்கு போய் சேரவேண்டுமெனில் இதனை வேகவைத்து சாப்பிடுவது நல்லது.

7.காலிபிளவர், ப்ராக்கோலி போன்றவற்றை எண்ணெய்யில் வதக்கி சாப்பிடுவதை விட, வேகவைத்து சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

The post வேகவைத்து சாப்பிட வேண்டிய உணவுகள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™