Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி வெற்றி பெற வாழ்த்துகள்

Posted: 16 Aug 2015 01:17 PM PDT

நமது ராராவின் ஜிப்பா ஜிமிக்கி வெற்றி பெற வாழ்த்துகள்

இந்த மாதம் நம் நண்பர் ராராவின் ஜிப்பா ஜிமிக்கி திரைப்படத்தின் இசை வெளியிடப்படுகிறது.

செப்டம்பரில் திரைப்படம் வெளியிடப்படும்.

படம் அமோக வெற்றி பெற வாழ்த்துகள்.

நாளைய கலாம்கள்..!

Posted: 16 Aug 2015 01:15 PM PDT

- கரூர் அருகே இருக்கும் ஆச்சிமங்கலம் அரசுப்பள்ளி மாணவர்கள் மண் நிரப்பிய பிளாஸ்டிக் பாட்டில்களால் சுற்றுச்சுவர் அமைத்திருக்கிறார்கள். – இந்த புதிய முயற்சி அவர்களுக்கு மெக்சிகோவில் நடைபெறவிருக்கும் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. நாளைய கலாம்கள்..! – ——————————— நன்றி- குங்குமம்

சும்மா

Posted: 16 Aug 2015 01:00 PM PDT

வாசலில் நிழலாடியது. யாரென்று பார்த்தேன். பக்கத்துத்தெரு பத்மநாபன் கையில் ஒரு பையுடன் நின்றுகொண்டு இருந்தார். " வாங்க! பத்மநாபன்! என்ன இவ்வளவு தூரம்?" " ஒண்ணுமில்ல சார்! சும்மா உங்கள பாத்துட்டுப் போலாம்ணு வந்தேன் " " அதென்ன கையில பை ?" " பெரியவங்களைப் பார்க்கப் போகும்போது சும்மா கைய வீசிக்கிட்டுப் போகக்கூடாது. ஏதாவது பழங்கள் வாங்கிக்கிட்டுப் போ! " ன்னு அப்பா சொன்னார்.அதான் ஆப்பிள் வாங்கியாந்தேன்." என்று சொல்லிவிட்டுப் பையிலிருந்த பழங்களை எடுத்து மேஜையின் மீது வைத்தார்.மொத்தம் 13 பழங்கள் ...

திரை விமர்சனம்: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

Posted: 16 Aug 2015 12:58 PM PDT

ஆண்களின் நட்பு திருமணத்துக்குப் பிறகும் தொடர்வது சாத்தியமா? நட்புக்கும் திருமண / காதல் வாழ்க் கைக்கும் இருக்கும் முரண்களைத் தீர்க்கவே முடியாதா? இந்தக் கேள்விக் கான பதில்தான் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க'. வாசுவும் (சந்தானம்) சரவணனும் (ஆர்யா) பால்யம் முதலே நண்பர்கள். இருவரில் வாசுவுக்குக் கல்யாணம் நடக்கிறது. சரவணன் செய்யும் முட்டாள் தனமான குறும்புகளால் வாசுவின் மனைவி செல்லம்மா (பானு) எரிச்சல் அடைகிறாள். சரவணனுடனான நட்பை வெட்டிவிட்டு வந்தால்தான் தாம்பத்திய வாழ்க்கை என்கிறாள் செல்லம்மா. ...

படித்ததில் பிடித்தது :) --சமூக அக்கறை கொண்ட தலைமையாசிரியர்!

Posted: 16 Aug 2015 12:55 PM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

விசுவாசம்!

Posted: 16 Aug 2015 12:48 PM PDT

ஒரு ஆண்டுக்கு பின், நண்பன் பிரதாப்பை சந்திக்கிறேன்;கை குலுக்கி, கட்டிப் பிடித்து, நலம் விசாரித்துக் கொண்டோம். மனைவி, குழந்தைகள், வீடு, வாகனம், பேங்க் பேலன்ஸ் என எல்லாவற்றிலும் இருவருமே நன்றாக இருப்பதாக நினைத்துக் கொண்டேன், அவனுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில்! ஆனால், என்னிடம் இருந்த மன நிறைவு, அவனிடம் இல்லை என்பது அவன் வார்த்தைகளின் மூலம் தெரியவந்தபோது கொஞ்சம் திகைத்துப் போனேன். நானும், பிரதாப்பும் பால்ய சினேகிதர்கள். எங்கு போனாலும், வந்தாலும் சேர்ந்து தான் போவோம்; வருவோம். படிப்பிலும் ...

அக்கம் பக்கம் ..............

Posted: 16 Aug 2015 12:47 PM PDT

''என்னங்க... என்னங்க...'' என, மார்க்கெட்டில் இருந்து ஓடோடி வந்த ரத்னா, வாசலில் செருப்பை அரைகுறையாய் உதறிவிட்டு உள்ளே வந்தாள். படித்துக் கொண்டிருந்த பேப்பரை, நிதானமாய் மடித்து, டீப்பாயின் மீது வைத்து, அவள் சொல்லப் போகும் விஷயத்தில், எந்த சுவாரசியமும் இல்லை என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான் சுப்புணி. ''சுகன்யாவ மார்க்கெட்ல பாத்தேங்க,'' என்றாள் மொட்டையாக! ''எந்த சுகன்யாவ பாத்த?'' ''அதாங்க, உங்க அக்காவோட பெரிய மாமனார் மக... வேளச்சேரியில டிராவல்ஸ் வச்சிருந்தாங்களே...'' கண்ணை கட்டியது சுப்புணிக்கு. ''ஆமா... ...

தெரிஞ்சுக்கோங்க!..இந்த 'ஜியா ஜியா' தான் சீனியர்!

Posted: 16 Aug 2015 12:22 PM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

உலகின் மிகச்சிறிய பறவை?

Posted: 16 Aug 2015 12:13 PM PDT

- உலகின் உயரமான ஏரி? டிடிகாகா (பெரு-பொலிவியா) – உலகின் மிகப்பெரிய வளைகுடா? மெக்சிகோ வளைகுடா – உலகின் மிகப்பெரிய மசூதி? ஜாமா மசூதி (டில்லி) – நள்ளிரவில் சூரியன் உதிக்கும் பூமி? நார்வே – உலகின் மிக நீளமான ரயில்வே? டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே – உலகின் மிக நீளமான சுவர்? சீரப் பெருஞ்சுவர் (சீனா) – உலகின் மிகச்சிறிய பறவை? ஹம்மிங் பறவை – உலகின் மிகச்சிறிய நாடு (பரப்பளவில்)? வாடிகன் நகரம் – மிக உயரமான விலங்கு? ஒட்டகச்சிவிங்கி – உலகின் உயரமான மலைத்தொடர்?. இமயமலைத்தொடர் – ——————————————

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 16 Aug 2015 11:57 AM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

பெருமை சொல்லும் புராதனம்!

Posted: 16 Aug 2015 11:57 AM PDT

- நம் தேசத்தின் பாரம்பரியம் மறக்கக் கூடிய தல்ல. அது நமக்கு பெருமை தரக்கூடியது. நம்மை உலக அரங்கில் தலை நிமிர்ந்து கர்வப் பட வைப்பது. – ரூபாய் நோட்டுகளில் இந்தியாவில் உலக புராதன சின்னங்களாக ஹம்பி, கல் தேர், டெல்லி செங்கோட்டை, ஒடிசா கோனார்க் சூரிய கோவில், தாஜ்மஹால், கோவா தேவாலயம், அஜந்தா ஓவியங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. – கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம் ஹொஸ்பேட்டில், உலக புராதன சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஹம்பி, கல் தேர் ஆகியவை ரிசர்வ் வங்கி அச்சிட உள்ள 10 ரூபாய் நோட்டில் ...

மூளைக்குணவு

Posted: 16 Aug 2015 11:55 AM PDT

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

உலகச் செய்திகள்!

Posted: 16 Aug 2015 11:51 AM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

ஆபிஸ் வாசல்ல கனவு இல்லம்-னு போர்டு தொங்குதே…!

Posted: 16 Aug 2015 11:44 AM PDT

உங்கள் வாழ்க்கையில்…

Posted: 16 Aug 2015 11:42 AM PDT

- உங்கள் கைகளில் ஒன்றுமில்லையா? தேய்த்துப் பாருங்கள் நம்பிக்கை தெரியும்! – உங்கள் கால்களில் ஒன்றுமில்லையா? ஓடியாடிப் பாருங்கள் உழைப்பு தெரியும்! – உங்கள் கண்களில் ஒன்றுமில்லையா? விழித்துப் பாருங்கள் வெளிச்சம் தெரியும்! – உங்கள் விரல்களில் ஒன்றுமில்லையா? எண்ணிப் பாருங்கள் பலம் தெரியும்! – உங்கள் நெஞ்சினில் ஒன்றுமில்லையா? போராடிப் பாருங்கள் உறுதி தெரியும்! – உங்கள் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லையா? உழைத்துப் பாருங்கள் உயர்வு தெரியும்! – —————————– — வீ.சிவசங்கர், ...

டாக்டர், எனக்கு இது ஒண்ணாவது மாசம்....!

Posted: 16 Aug 2015 11:37 AM PDT

ஆகஸ்டு 22 சென்னையின் பிறந்தநாள்

Posted: 16 Aug 2015 11:28 AM PDT

தென்னிந்தியாவின் முதல் நகரமும், தொன்மையான கலாசாரமும் வரலாறும் கொண்ட தமிழ்நாட்டின் தலைநகரமுமான சென்னை மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது, புதிய நகரமே என்பது வியப்புக்கு உரியது. 17–ம் நூற்றாண்டில், ஜான் கம்பெனி என்ற கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ஆண்ட்ரூ கோகனும் பிரான்சிஸ் டேயும், மேலதிகாரிகளின் நம்பிக்கையின்மையை திடமாக புறக்கணித்து, வெங்கடப்பா, ஐயப்பா என்ற வந்தவாசியில் இருந்த உள்ளூர் நாயக்குகள்(ஆளுநர்கள்) பூந்தமல்லியில் அளித்த நிலத்தை, நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர். பிற்காலத்தில் சோழ மண்டல ...

அடிக்கடி பேசக்கூடாத வார்த்தைகளை பேசிவிடுகிறீர்களா?

Posted: 16 Aug 2015 11:24 AM PDT

'இந்த வார்த்தையை நான் சொல்லியிருக்கக் கூடாது. தெரியாமல் வாய் தவறி பேசிவிட்டேன்..' – இது, நம்மில் பலர் அடிக்கடி உச்சரிக்கும் வாசகம். தேவையற்ற அல்லது பிரச்சினைக்குரிய வார்த்தைகளை பேசிவிட்டு, அதனால் அடுத்தவர்கள் மனது புண்பட்ட பின்பு, நாக்கு மீது பழியை போட்டுவிட்டு தப்பிக்கப் பார்க்கிறோம். 'எதை பார்க்கக்கூடாது என்று நினைத்தேனோ அதை என் கண்கள் பார்த்துவிட்டன. என் மனதில் பதிந்துவிட்ட அந்த காட்சியை இனி மறப்பது சுலபம் அல்ல..' – என்று பிரச்சினைக்குரியதை பார்த்துவிட்டு, கண்கள் மீது பழியை போட்டுவிட்டு ...

உலகம் தேடும் தமிழன்!

Posted: 16 Aug 2015 11:21 AM PDT

உலகில் தமிழனுக்கு என்று ஒரு நாடு கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருக்கலாம். ஆனால், உலகில் எந்த மூலையில் இருப்பவரும் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள உதவி செய்திருப்பது ஒரு தமிழன்தான். ஆம், உலகின் பிரபல தேடுபொறியான கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் சுந்தர் பிச்சை (எ) பி.சுந்தர்ராஜன் ஒரு தமிழன். கூகுள் நிறுவனத்தின் தலைவர் லாரி பேஜ் கடந்த வாரம் தனது செய்திக்குறிப்பில், 'ஆல்ஃபபெட் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்படுவதால், கூகுளின் தலைமைப் பொறுப்பில் இருந்த நான், ...

உலகின் மிகப்பெரிய உயிரினம்? – பொது அறிவு தகவல்

Posted: 16 Aug 2015 11:16 AM PDT

- மிகப்பெரிய கடல் பறவை? அல்பட்ரோஸ் – உலகின் மிகப்பெரிய கோயில்? அங்கோர் வாட் கோயில் (கம்போடியா) – உலகின் மிகப்பெரிய சமுத்திரம்? பசிபிக் பெருங்கடல் – உலகின் மிகப்பெரிய குவிமாடம் (Dome)? கோல்கும்பாஸ் (இந்தியா) – உலகின் ஆழமான ஏரி? பாய்க்கால் ஏரி (ரஷ்யா) – உலகின் மக்கள்தொகை மிகுந்த நாடு? சீனா – மிகப்பெரிய பறவை? நெருப்புக் கோழி – உலகின் மிகப்பெரிய உயிரினம்? நீல திமிங்கலம் – உலகில் மிக அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடு? இந்தியா – .உலகின் மிகப்பெரிய கழிமுகம் (Delta)?. சுந்தரவனம் ...

போலீஸ் ஸ்டேஷனுக்கா சார் போன் பண்றீங்க..? -

Posted: 16 Aug 2015 11:13 AM PDT

- திருடன்: போலீஸ் ஸ்டேஷனுக்கா சார் போன் பண்றீங்க..? - ஆமா... - திருடன்: எங்கேஜ்டு சவுண்டு கேட்டிருக்குமே...வரும்போது நான்தான் ரிசீவரை எடுத்து கீழே வச்சிட்டு வந்தேன்..! - வி.ரேவதி - ----------------------------------------- - படம் முழுக்க ஹீரோ ஏன் ஒரு டெம்போவுல சுத்திக்கிட்டு இருக்காரு..? - நீங்கதானே சார், கதையில ஒரு டெம்போ இருக்கணும்னு சொன்னீங்க..! - நா.கி.பிரசாத் - --------------------------- - தலைவர்கிட்டே உண்மை அறியும் சோதனையை எப்படி நடத்தினாங்க? - கொஞ்சம் காஸ்ட்லி ...

செப்.15-ல் திமுக முப்பெரும் விழா: மனுஷ்யபுத்திரனுக்கு விருது

Posted: 16 Aug 2015 11:09 AM PDT

- கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோருக்கு திமுக முப்பெரும் விழா விருதுகள் வழங்கப்படவுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதியன்று திமுக முப்பெரும் விழா ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அந்த, வகையில், இந்தாண்டு முப்பெரும் விழா மற்றும் முப்பெரும் விழா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடக்கவுள்ளது. இந்த விழாவில், ...

#வாவ்.. லைப் இஸ் பியுட்டிபுள்.

Posted: 16 Aug 2015 11:07 AM PDT

@Ganesukumar தெரு கிரிக்கெட்டில் ஒரு ரன் அவுட்டுக்கு சாட்சி சொல்லி வாங்கி கட்டிக்கொண்டிருக்கிறேன். சின்ன பசங்க சாவுகாசமே ஆகாது ! – ———————————- @Shanthhi என்பையன் ஸ்கூல் போயிருக்கும்போது அவன் டாயஸ்க்கு கார்டூன் டிவி எல்லாம் போட்டு காட்டணுமாம் #ரைட்டு :-) – ——————————————– – @sridharvkl தமிழனின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சாதனங்களில் ஒன்று வண்டியின் ஹாரன்! – ——————————————- @thoatta முன்பெல்லாம் கொசு கடித்தால் 'டார்ட்டாய்ஸ்' போடுவார்கள், இப்போ Facebookல் ஸ்டேடஸ் போடுகிறார்கள்.! – ———————————————- @thimirru புத்தர் ...

காப்பகம்

Posted: 16 Aug 2015 11:04 AM PDT

பணிக்கு செல்வதோ உன்னை தனியே விட்டு செல்வதோ கவனிக்க ஆளில்லையோ தின காப்பகத்தில் விட்டு செல்வதோ? உன் வயதொத்தவர் பலர் கவனிக்க திறம் மிக்க ஊழியர் செவிலியர் மருத்துவரும் உளர் ஆரோக்கியமான காலை உணவும் சுவையான மதிய உணவும் மகிழ்ச்சி தரும் பயிற்சிகள் பலவும் திட்டமிடப்பட்ட சுற்றுலாவும் பொழுதை இனிதே நகர்த்தும் தனியே வீட்டில் விட்டு செல்லும் பயம் இல்லை உண்டாயோ உறங்கினாயோ தொலைக்காட்சி தான் கண்டாயோ, இல்லை உடற்பயிற்சி செய்தாயோ சிறிதே நடந்தாயோ என்ற கவலையும் இல்லை ... புறப்படுவாயே ...

கனவின் உபநடிகன் - ஆத்மார்த்தி கவிதைகள் மின்னூல் வடிவில் .

Posted: 16 Aug 2015 10:21 AM PDT

தன் இருப்பு குறித்த நிம்மதியின்மையும் இந்த வாழ்க்கை குறித்த நிச்சயமின்மையும்தான் இந்தக் கவிதைகளின் ஆதார விசையாக இருக்கிறது. அனபையும்ன் காதலையும் தேடி அலையும் மனிதனின் பதட்டங்ககளிலிருந்து பிறக்கும் இக் கவிதைகள் அதன் விஷத்தின் ஒரு துளியை அருந்தும்போது கிடைக்கும் ஆழமான கசப்பையும் சேர்த்தே வெளிப்படுத்துகின்றன. ஆத்மார்த்தி கவிதைகள் மின்னூல் வடிவில் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/rm7ci52icy2k1e0/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+BY++%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.pdf

வாழ்ந்தவர் கெட்டால் - கா.ந. சுப்ரமண்யனின் நாவல் வரிசை - 5.

Posted: 16 Aug 2015 10:20 AM PDT

கா.ந. சுப்ரமண்யம் - வாழ்ந்தவர் கெட்டால் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/slay286gi9o4kee/Valnthavar+kettaal+KA.NA.SU+.pdf

யாரோ ஒருவனுக்காக - சுந்தர ராமசாமியின் கவிதைகள் மின்னூல் வடிவில் .

Posted: 16 Aug 2015 10:18 AM PDT

சுந்தர ராமசாமியின் கவிதைக் காலத்தின் இரண்டாம் பருவத்தில் வெளியான நூல் இது. 'ஜென்மத்தைப் பொருள்படுத்தும் ஒரு கவிதை'யைத் தேடும் மனதின் நம்பிக்கை அல்லது கவிதையை நம்பிக்கைக்குறியதாக்கும் வாழ்வின் சமிக்ஞை இந்தத் தொகுப்பு. http://www.mediafire.com/download/cscw30olvqxvzxw/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF.pdf

உஷார்: 'வாட்ஸ் அப் குழு'வை நிர்வகிப்பவரா நீங்கள்?

Posted: 16 Aug 2015 07:51 AM PDT

புதுப்புதுச் செய்திகளாக உலவும் வதந்திகளையோ, உளறல்களையோ விட்டுவிடாமல், நிஜ உலகத்தோடு அவற்றை சம்பந்தப்படுத்துகிறோம். "ஹேய் மச்சி, வாட்ஸ் அப் இன் வாட்ஸப்?" என்பதுதான் பெரும்பாலான இளைஞர்களின் முதல் கேள்வியாக இருக்கிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், நமக்குத் தெரியாமலே நம்மை இணைத்துக் கொள்ளும் ஏராளமான வாட்ஸப் க்ரூப்பில், நாமும் இணைந்தே இருக்கிறோம். புற்றீசல் கணக்காய்ப் பெருகிக் கிடக்கும் குழுக்கள் பலவற்றில் இருந்து ஏராளமான செய்திகள் குப்பைகளாகத் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. புதுப்புதுச் ...

உலக பேட்மிண்டனில் இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால் வெள்ளிப்பதக்கம் வென்றார்

Posted: 16 Aug 2015 07:49 AM PDT

உலக பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால் வெள்ளிப்பதக்கம் வென்றார். 22-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால், நம்பர் ஒன் வீராங்கனையும், நடப்பு சாம்பியனான கரோலினா மரினுடன் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்துகிறார். போட்டியின் தொடக்கத்தில் இரு வீராங்கனைகளும் அதிரடியாக விளையாடினர். இருப்பினும் கரோலினா மரின், தனதுநேர்த்தியான ஆட்டம் மூலம் ...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது

Posted: 16 Aug 2015 07:38 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் 'கோவிந்தா, கோபாலா, கிருஷ்ணா' என்ற கோஷமிட்டபடியே தேரை இழுத்தனர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிபூரத் திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று தேரோட்டம் நடக்கும். இந்த ஆண்டு கடந்த 8–ந்தேதி கொடியேற்றத்துடன் ஆடிப்பூர திருவிழா தொடங்கியது. ஆண்டாள் ...

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நிறுத்தம்

Posted: 16 Aug 2015 07:26 AM PDT

அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அடையாள அட்டை தேவையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்கும் பணியை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கள்ள ஓட்டைத் தடுக்கவும், போலி வாக்காளர்களைக் களையெடுக்கவும்,வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன்மூலம், ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தனது பெயரைப் பதிவு செய்வதைத் தடுக்க முடியும். ஆகையால், இந்தியாவில் உள்ள அனைத்து ...

பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு!

Posted: 16 Aug 2015 07:26 AM PDT

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரில் கொல்லப்படவில்லை என்றும் சிங்கள ராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பிச் சென்றார் என்றும் இலங்கையில் வெளியான புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது, சிங்கள ராணுவத்தினர், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் துணையோடு விடுதலைப்புலிகளை எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டனர். 30 ஆண்டுகளுக்கும் ...

தேசியச் செய்திகள்

Posted: 16 Aug 2015 07:21 AM PDT

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம் பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™